Monday 28 April 2014 | By: Menaga Sathia

திராமிசு பர்ஃபே / Tiramisu Parfait | Italian Desserts Recipe

 திராமிசு மிகவும் பிடித்த இத்தாலியன் டெசர்ட்.இதனை  மிக சுலபமாக சிறிய கப்களில் செய்து பரிமாறலாம்.ஸ்பாஞ்ச் கேக் அல்லது Lady Fingers Biscuit செய்யலாம்.

ஏற்கனவே ஸ்பாஞ்ச் கேக்கில் திராமிசு செய்திருக்கேன்.

பரிமாறும் அளவு - 3 நபர்
தயாரிக்கும் நேரம் -15 நிமிடங்கள்
குளிரவைக்கும் நேரம் - 4 மணிநேரங்கள்

தே.பொருட்கள்

Lady Fingers Biscuit  - 15
மஸ்கார்போன் சீஸ் - 1 கப்
வெனிலா எசன்ஸ் -1 டீஸ்பூன்
ஐசிங் சர்க்கரை -1/2 கப்
பால்+சர்க்கரை கலக்காத காபி -1/2 கப்
கோகோ பவுடர் - மேலே தூவ

செய்முறை

*பிஸ்கட்டினை Food Processor  அல்லது மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும்.


 *ஒரு பவுலில் சர்க்கரை+மஸ்கார்போன் சீஸை சேர்த்து நன்கு கலக்கவும்.
 *பின் எசன்ஸ்+ 1/4 கப் காபி சேர்த்து கலக்கவும்.
 *இது பார்ப்பதற்கு கண்டண்ஸ்ட் மில்க் போல இருக்கும்.
 *சிறிய Ramkin கப்களில் 1 1/2 டேபிள்ஸ்பூன் அளவு பொடித்த பிஸ்கட் சேர்க்கவும்.
 *அதன் மேல் 1 டீஸ்பூன் காபியை பரவலாக ஊற்றவும்.
 *அதன் மீது 2 டேபிள்ஸ்பூன் சீஸ் கலவையை வைக்கவும்.
 *இதே போல் இன்னொரு லேயர் செய்யவும்.
 *கடைசியாக சீஸ் கலவை வருமாறு பார்த்துக்கொள்ளவும்.

*இதனை அப்படியே ப்ரிட்ஜில் 4 மணிநேரம் குளிரவைக்கவும்.நான் முதல் நாள் இரவே செய்து குளிரவைத்தேன்.

*பரிமாறும் போது கோகோ பவுடரை தூவி பரிமாறவும்.

Thursday 24 April 2014 | By: Menaga Sathia

பொட்டுக்கடலை குருமா/ Pottukadalai (Fried Gram Dal ) Kurma | Side dish for Idli,Dosa & Chapathi

தே.பொருட்கள்

வெங்காயம் -1
தக்காளி -1
மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை -சிறிது
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

அரைக்க

தேங்காய்த்துறுவல் -2 டேபிள்ஸ்பூன்
பொட்டுக்கடலை - 5 டீஸ்பூன்
பட்டை -சிறுதுண்டு
கிராம்பு - 3
ஏலக்காய் -1
காய்ந்த மிளகாய் -3
சோம்பு - 1 டீஸ்பூன்

செய்முறை

* அரைக்க கொடுத்துள்ள பொருட்களை நைசாக அரைக்கவும்.வெங்காயம்+தக்காளியை பொடியாக நறுக்கவும்.

*பாத்திரத்தில் எண்ணெய் விட்டு வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
*வதங்கியதும் தக்காளி+உப்பு+மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும்.
*தேவைக்கு நீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
*பின் அரைத்த விழுது + சிறிது நீர் சேர்த்து சிறுதீயில் கொதிக்கவிடவும்.
*இடையிடையே கிளறிவிடவும்.பொட்டுக்கடலை சேர்த்திருப்பதால் குருமா சீக்கிரம் அடிபிடிக்கும் மற்றும் கெட்டியாகிவிடும்.

*பச்சை வாசனை அடங்கியதும் கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.

பி.கு

தேங்காய்த்துறுவல் அதிகம் சேர்த்தாலும் சுவை மாறிவிடும்.

Sending to Priya's Vegan Thursday

Monday 21 April 2014 | By: Menaga Sathia

முனியாண்டி விலாஸ் ஸ்டைல் சிக்கன் குழம்பு /Madurai (Muniyandi Vilas ) Style Chicken Kuzhambu |Restaurant Recipes


இந்த குழம்பின் ஸ்பெஷல் மசாலா அரைத்து செய்வதும்,நல்லெண்ணெயில் தாளிப்பதும் தான்..

Recipe Source : Spiceindiaonline

தே.பொருட்கள்

சிக்கன் - 3/4 கிலோ
வெங்காயம் - 2 பொடியாக நறுக்கியது
தக்காளி - 1 பொடியாக நறுக்கியது
இஞ்சி பூண்டு -1 டேபிள்ஸ்பூன் நசுக்கியது
மஞ்சள்தூள் -1/2 டீஸ்பூன்
அரைத்த தேங்காய் விழுது -1 டேபிள்ஸ்பூன்
கொத்தமல்லித்தழை -அலங்கரிக்க
உப்பு+நல்லெண்ணெய் =தேவைக்கு

தாளிக்க

பிரியாணி இலை - 2
காய்ந்த மிளகாய் -2
கடுகு -1/2 டீஸ்பூன்

வறுத்துப் பொடிக்க

காய்ந்த மிளகாய் -3
கொத்தமல்லிவிதை -1 டேபிள்ஸ்பூன்
பச்சரிசி - 3/4 டீஸ்பூன்
மிளகு+சீரகம் -தலா 3/4 டீஸ்பூன்
சோம்பு -1/2 டீஸ்பூன்
கசகசா -1/4 டீஸ்பூன்
பொட்டுக்கடலை -1/2 டீஸ்பூன்
பட்டை -சிறுதுண்டு
ஏலக்காய் -1
கிராம்பு -2
கொப்பரைத்துறுவல் - 1 டீஸ்பூன்

செய்முறை

*வறுத்து பொடிக்க கொடுத்துள்ளவைகளை வெறும் கடாயில் வறுத்து பொடிக்கவும்.

*குக்கரில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ளவைகளை சேர்த்து தாளிக்கவும்.
*பின் வெங்காயம்+நசுக்கிய இஞ்சி பூண்டு +தக்காளி+உப்பு சேர்த்து வதக்கவும்.
*வதங்கியதும் சிக்கன் சேர்த்து மேலும் 5 நிமிடங்கள் வதக்கி மஞ்சள்தூள்+அரைத்த பொடி சேர்த்து வதக்கவும்.
*மசாலா நன்கு வதங்கியதும் 1 கப் நீர்+அரைத்த தேங்காய் விழுது சேர்த்து கிளறவும்.
*மூடி போட்டு  வேகவைக்கவும்.சிக்கன் நன்கு வெந்து எண்ணெய் பிரிந்து வரும் போது கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.
பி.கு

*அவரவர் காரத்திற்கேற்ப காய்ந்த மிளகாயினை சேர்க்கவும்.

*தேவைக்கேற்ப  நீர் தேங்காய் விழுதினை சேர்த்த பின் சேர்க்கவும்.

*கொப்பரைத்துறுவல் இல்லையெனில் ப்ரெஷ் தேங்காய்த்துறுவலை வெறும் கடாயில் நன்கு பொன்னிறமாக வறுத்து சேர்க்கலாம்.

*தாளிக்கும் போது சிறிது கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.என்னிடம் இல்லாததால் சேர்க்கவில்லை.
Thursday 17 April 2014 | By: Menaga Sathia

சிவகாசி சிக்கன் பிரியாணி /Sivakasi Chicken Biryani





இந்த பிரியாணியில் தயிர் மற்றும் பச்சை மிளகாய் சேர்க்க கூடாது.காரத்திற்கு வரமிளகாய்த்தூள் மட்டுமே சேர்க்கவேண்டும்.அதுவே பிரியாணிக்கு தனி கலர் கொடுக்கும்.

மற்றும் இஞ்சி பூண்டினை ஹோல் கரம் மசாலா தாளித்த பின் வதக்க வேண்டும்.பட்டை,கிராம்பு,ஏலக்காய்,சோம்பு ,கசகசா இவற்றை வறுத்து பொடித்து சேர்க்கவேண்டும்.

தே.பொருட்கள்

சிக்கன் -1/2 கிலோ
பாஸ்மதி -3 கப்
தேங்காய்ப்பால் -1 1/2 கப்
நறுக்கிய வெங்காயம் -1 பெரியது
நறுக்கிய தக்காளி -1 பெரியது
இஞ்சி பூண்டு விழுது -1 டேபிள்ஸ்பூன்
வரமிளகாய்த்தூள் - 2 1/2 டேபிள்ஸ்பூன்
எலுமிச்சை சாறு -2 டீஸ்பூன்
புதினா,கொத்தமல்லி -தலா 1/4 கப்
நெய் - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

வறுத்து பொடிக்க

பட்டை -1 சிறுதுண்டு
கிராம்பு -3
ஏலக்காய் - 2
சோம்பு - 1 டீஸ்பூன்
கசகசா - 1/2 டீஸ்பூன்

தாளிக்க

பிரிஞ்சி இலை -2
கிராம்பு -2
ஏலக்காய் -1
சோம்பு - 1/2 டீஸ்பூன்
பட்டை -சிறுதுண்டு

செய்முறை

*அரிசியைக் கழுவி 15 நிமிடம் ஊறவைக்கவும்.பொடிக்க கொடுத்துள்ளவைகளை வெறும் கடாயில் வறுத்து பொடிக்கவும்.

*குக்கரில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளை  சேர்த்து தாளித்து இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும்.

*பின் வெங்காயம்+தக்காளி+உப்பு சேர்த்து வதக்கவும்.
*மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு வதக்கியதும்,சிக்கனை சேர்த்து 5 நிமிடங்கள் வதக்கவும்.
*பின் வறுத்து பொடித்த பொடியை சேர்த்து நன்கு கிளறவும்.
*பின் தேங்காய்ப்பால்+ 1 1/2 கப் நீர் சேர்த்து கொதிக்க விடவும்.
*நீர் கொதித்ததும் புதினா கொத்தமல்லி+அரிசி+எலுமிச்சை சாறு சேர்க்கவும்.
*தண்ணீர் சுண்டி வரும் போது தோசை கல்லை வைத்து அதன் மீது பாத்திரத்தை வைத்து மூடி 20 நிமிடங்கள் சிறுதீயில் தம்மில் போடவும்.
*சாதம் வெந்ததும் உடையாமல் கிளறி வறுவல் மற்றும் பச்சடியுடன் பரிமாறவும்.
Monday 14 April 2014 | By: Menaga Sathia

தமிழ் புதுவருட தாளி / Tamil New Year Thali | Thali Recipe


அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!!

தமிழ் புத்தாண்டு அன்று இனிப்பு, கசப்பு,புளிப்பு,காரம்,துவர்ப்பு,உப்பு என அனைத்து சுவைகளையும் செய்து படைப்பார்கள்.வாழ்வில் மனிதன் அனைத்து வகை சுவைகளையும் பெற்று சமநிலையாக வாழ் வேண்டும் என்பதே இதன் அர்த்தம்.

தலைவாழை இலையில் இடது பக்கம் ஓரத்தில் உப்பு முதலாக வைத்த பின்பே அனைத்து பதார்த்தங்களையும் பரிமாறுவார்கள்.

இதில் நான் பரிமாறியிருப்பது இடமிருந்து வலமாக

பொங்கல் - இனிப்பு

உருளை வறுவல் -காரம்

பார்பிள் கோஸ் பொரியல்

வாழைப்பூ பொரியல் -துவர்ப்பு

மாங்காய் பச்சடி - இதில் அனைத்து வகை சுவையும் இருக்கு.வேப்பம்பூ சேர்த்தும் செய்வார்கள்

வேப்பம்பூ ரசம் - கசப்பு

அப்பளம்

சாதம்+முருங்கைக்காய் வெண்டைக்காய் மாங்காய் சாம்பார்

மெதுவடை

ஜவ்வரிசி பாயாசம்.

இதில் உருளை வறுவல்+கோஸ் பொரியலில் பட்டாணி சேர்க்காமலும்,வாழைப்பு பொரியலில் முருங்கைக்கீரை சேர்க்காமலும் மற்றும் முருங்கைக்காய் வெண்டைக்காய் மாங்காய் சாம்பாரில் கத்திரிக்காய் பதில் வெண்டைக்காய் சேர்த்து செய்துள்ளேன்.இந்த காம்பினேஷன் சாம்பார் வித்தியாச சுவையில் இருக்கும்.

இனி பாயாசம் செய்முறையை பார்க்கலாம்..

ஜவ்வரிசி பாயாசம்


தே.பொருட்கள்

ஜவ்வரிசி - 1/4 கப்
சுண்டக்காய்ச்சிய பால் -1/2  கப்
கண்டண்ஸ்ட் மில்க் -4 டேபிள்ஸ்பூன்
சர்க்கரை - 1/4 கப்
ஏலக்காய்த்தூள் -1/4 டீஸ்பூன்
உப்பு -1 சிட்டிகை
நெய்யில் வறுத்த முந்திரி,திராட்சை - தேவைக்கு

செய்முறை

*ஜவ்வரிசியை வெறும் கடாயில் நன்கு பொரியும் வரை வறுக்கவும்.இப்படி செய்வதால் சீக்கிரம் வேகும்.

*பாத்திரத்தில்  3/4 நீர் வைத்து கொதிக்கவிடவும்.கொதித்ததும் வருத்த ஜவ்வரிசி சேர்த்து வேகவிடவும்.

*வெந்ததும் பால்+சர்க்கரை+கண்டண்ஸ்ட் மில்க் சேர்க்கவும்.

*சர்க்கரை கரைந்ததும் ஏலக்காய்த்தூள்+வருத்த முந்திரி திராட்சை சேர்த்து  இறக்கவும்.

பி.கு

ஜவ்வரிசி பாயாசம் ஆரியதும் கெட்டியாகிவிடும்.அப்போழுது குளிர்ந்த நீர் சேர்த்து கலக்கி பரிமாறவும்.
Thursday 10 April 2014 | By: Menaga Sathia

நெல்லை ஸ்பெஷல் வெஜ் தாளி | Nellai ( Tirunelveli ) Spl Veg Thali | Thali Recipe

 இதில் நான் சமைத்திருப்பது

கறுப்பு உளுந்து சாதம்
வத்தக்குழம்பு
அவியல்
தேங்காய் துவையல்
உளுந்து பால்

நெல்லையில் இந்த ஸ்பெஷல் சமையலை பூப்பெய்திய பெண்களுக்கு சமைத்துக் கொடுப்பார்கள். இதில் நான் வத்தக்குழம்பு செய்து சாப்பிட்டேன்.உளுந்து சாதத்திற்கு வத்தக்குழம்பு பெஸ்ட் காம்பினேஷன்.

தேங்காய் துவையலுக்கு பதில் எள் துவையல் செய்து தருவார்கள்.

உளுந்து மற்றும் எள் உடலுக்கும் ,இடுப்பு எலும்புக்கும் வலுமைதரும் உணவு என்பதால் அப்பகுதியில் இந்த சமையல் மிக பிரபலம்.

உளுந்துப்பால் / Ulundhu Paal | Urad Dal Payasam
 தே.பொருட்கள்

வெள்ளை உளுந்து - 1/2 கப்
பால் -2 கப்
சர்க்கரை - 3 டேபிள்ஸ்பூன்
ஏலக்காய்த்தூள் -1/4 டீஸ்பூன்
சுக்குப்பொடி - 1/8 டீஸ்பூன்

செய்முறை

* உளுந்தினை முழ்குமளவு நீர் விட்டு குக்கரில் வேகவைத்து மசிக்கவும்.

*பாலை காய்ச்சி மசித்த உளுந்தினை சேர்த்து 5 நிமிடங்கள் கைவிடாமல் கிளறவும்.

*பின் சர்க்கரை+ஏலக்காய்த்தூள்+சுக்குப்பொடி சேர்த்து கலக்கி 5 நிமிடன்களில் இறக்கவும்.

*மிகவும் வித்தியாசமான சுவையில் இருக்கும் இந்த பாயாசம்.

தேங்காய்த்துவையல் | Coconut Thuvaiyal

தே.பொருட்கள்

கறுப்பு அல்லது வெள்ளை உளுந்து - 2 டேபிள்ஸ்பூன்
தேங்காய்த்துறுவல் - 1/3 கப்
புளி - நெல்லிக்காயளவு
பெருங்காயத்தூள் -1/4 டீஸ்பூன்
வரமிளகாய் -2
உப்பு - தேவைக்கு

செய்முறை
*உளுந்தினை வெறும் கடாயில் வாசனை வறும் வரை வறுத்து ஆறக்கவும்.

*மிக்ஸியில் உளுந்து + மிளகாய்+உப்பு சேர்த்து நீர் விடாமல் அரைக்கவும்.

*பின் தேங்காய்த்துறுவல் +புளி சேர்த்து கொரகொரப்பாக அரைத்தெடுக்கவும்.

பி.கு

*நான் கறுப்பு உளுந்தினை சேர்த்து செய்திருக்கேன்.

*இந்த துவையலை  இட்லி,தோசைக்கும் தொட்டு சாப்பிடலாம்.

Monday 7 April 2014 | By: Menaga Sathia

கந்தரப்பம் / Kandarappam - Traditional Chettinad Sweet | Guest Post By Sathya Priya


சத்ய ப்ரியா - இவரை எனக்கு சிலநாட்களுக்கு முன்புதான் தெரியும்.பழுவதற்கு இனிமையானவர். அன்போடு என்னை அக்கா ந்னு கூப்பிடும் நல்ல சகோதரி.

போன மாதம் என்னுடைய வலைப்பூவில் கெஸ்ட் போஸ்ட் போடலமான்னு கேட்டதற்கு நானும் உடனே சம்மதித்து கந்தரப்பம் ரெசிபி கேட்டேன்.ஏன்னா இவரின் வலைப்பூவில் பாரம்பரியமிக்க செட்டிநாடு குறிப்புகளை நிறைய பகிர்ந்திருக்கிறார்.

நான் வேறு வீடு மாறியதால் குறிப்பினை பகிர தாமதமாகிவிட்டது.நான் விரும்பிய குறிப்பினை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி சத்ய ப்ரியா!!

இனி இவர் எனக்கு அனுப்பிய மெயிலில் எழுதியதை அப்படியே காப்பி பேஸ்ட் செய்கிறேன்.

Menaga  akka is one of my fellow blogger  and a good friend of mine .She has a tamil blog and its been like 6 years now she started blogging .She usually explains her recipes very easy and to the point .You can see many chettinad recipes as well in her blog like "kavuni arisi payasam","nandu masala".Among them i like her quick "kothumai halwa" very much and waiting to try it because i don't get Whole wheat here .

One fine day i asked my co blogger and friend menaga akka "can i do a guest post on your blog ?".Immediately she said yes and she said "anything is fine ,but if you give me kadarappam i will be more than happy ".Then i asked my mom about the recipe and did it immediately .But akka was busy  shifting her house.After a month of wait now its time to enjoy the beauties in her space .I guess menaga akka will like it .

Coming to the recipe .This is another chettinad delicacy and its loved by all ,especially kids because they are sweet .These cuties you can see in festivals or chettinad marriages .When you go to karaikudi for a marriage next time be sure to ask them kandarappam.

There are many different versions of this and this one is my moms recipe .

To get a true taste you have to deep fry it with coconut as well.If you are a diet kindof person then you have to stay away from it .But you can make like sweet appam(dosa) and enjoy this.Guess unniappam will  taste like this .This is the first time i am making it so haven't got a proper shape .

இனி கந்தரப்பம் செய்முறையை பார்க்கலாம்.

தே.பொருட்கள்

பச்சரிசி -2 கப்
புழுங்கலரிசி -1 கைப்பிடி
வெள்ளை உளுந்து - 1/2 கப்  1/4 கப்பிலிருந்து 1/2 கப் வரை சேர்க்கலாம்
வெந்தயம் - 1 டீஸ்பூன்
தேங்காய்த்துறுவல் -2 டேபிள்ஸ்பூன்
துருவிய வெல்லம் -1 3/4 கப்
எண்ணெய் - பொரிக்க

செய்முறை

*பச்சரிசி+புழுங்கலரிசி+உளுந்து இவற்றை ஒன்றாக 3 மணிநேரமும்,வெந்தயத்தை தனியாக 6 மணிநேரமும் ஊறவைக்கவும்.

 *நன்றாக ஊறியதும் இவற்றினை ஒன்றாக அரைக்கவும்.
 *மாவினை மிக நைசாகவோ அல்லது கொரகொரப்பாகவோ அரைக்ககூடாது.
 *90 சதவிகிதம் மாவு அரைப்பட்டதும் துருவிய வெல்லத்தினை சேர்த்து அரைக்கவும்.

*பின் தேங்காய்த்துறுவல் சேர்த்து கலந்து தோசை மாவு பதத்திற்கு கலக்கவும்.
 *அகலமான கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ,மாவினை பெரிய குழிக்கரண்டியால் ஊற்றவும்.

*மாவினை ஊற்றும் போது ஒரே இடத்தில் ஊற்றாமல் பரவலாக ஊற்றவும்.
 *மாவு வெந்து பொன்னிறமாக மேலே வந்ததும் மறுபக்கம் திருப்பி வேகவைத்து எடுக்கவும்.
 *பொன்னிறமான அப்பத்தை கரண்டியால் எடுக்கும் போது இன்னோரு கரண்டியால் அமுக்கி எடுக்கவும்.

*இப்படி செய்யும் போது அதிகப்பட்ச எண்ணெய் வந்துவிடும்.அதிரசத்திற்கு செய்வது போல செய்ய வேண்டும்.
 *டிஷ்யூ பேப்பரில் வைத்து எடுத்து மாலை நேர சிற்றுண்டியாக பரிமாறவும்.

பி.கு

*இதில் விரும்பினால் புழுங்கலரிசியை அதிகம் சேர்க்கலாம்.அப்படி சேர்க்கும் போது பச்சரிசி+புழுங்கலரிசி -தலா 1 கப் விகிதத்தில் சேர்க்கலாம்.

*விரும்பினால் இதனை குழிப்பணியாரத்தில் சுட்டு எடுக்கலாம்,அப்படி செய்யும் போது மறுநாள் அப்பம் காய்ந்து போன மாதிரி இருக்கும்.

*தேங்காய்த்துறுவல் விரும்பினால் மட்டும் சேர்க்கலாம்.

*வாசனைக்காக ஏலக்காய்த்தூள் சேர்த்தால் இன்னும் சுவை கூடும்.

*மாவு பதம் தண்ணியாக இருந்தால் அப்பம் எண்ணெய் குடிக்கும்,அதனை ப்ரிட்ஜில் 1/2 மணிநேரம் வைத்திருந்து செய்யலாம்.

*வெந்தயம் சேர்ப்பது  அப்பத்திற்கு நல்ல சுவை கொடுக்கும்,மேலும் பொரிக்கும் போது பொன்னிறமாக இருக்கும்.

*மீதமான மாவு இருந்தால் ஆப்ப சட்டியில் ஊற்றி இனிப்பு ஆப்பமாக சுட்டெடுக்கலாம்.

*விரும்பினால் வெல்லத்தை சிறிது நீர் விட்டு காய்ச்சி வடிகட்டி ஆறியதும் மாவில் கலக்கலாம்.

*பணியாரம் பந்துப்போல் உருண்டையாக வந்தால்  அதை எப்படி சரியாக செய்வது என்று இங்கே பார்க்கவும்.


Thursday 3 April 2014 | By: Menaga Sathia

திருநெல்வேலி ( மாப்பிள்ளை ) சொதி /Tirunelveli Sodhi - Maappillai Sodhi


இந்த சொதியின் சிறப்பே காய்களை தேங்காய்பாலில் தக்காளி சேர்க்காமல் செய்வது தான். சிலர் பாசிப்பருப்பு +மஞ்சள்தூள் சேர்க்காமல் செய்வார்கள்.

இதனை செய்த அன்றே உபயோகப்படுத்துவது நல்லது.மறுபடியும் சூடுபடுத்தி சாப்பிடும் போது சொதியின் சுவை மாறிவிடும்.

தே.பொருட்கள்

வேகவைத்த பாசிப்பருப்பு - 1/4 கப்
நீளமாக அரிந்த வெங்காயம் - 1
பூண்டுப்பல் - 5
எலுமிச்சை சாறு - 1 டேபிள்ஸ்பூன்
கேரட்  - 2
பீன்ஸ் - 10
உருளைகிழங்கு  - 2 பெரியது
மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
தேங்காய் - 1/2 மூடி
கறிவேப்பிலை - 1 கொத்து
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க‌

பட்டை - 1 சிறுதுண்டு
கிராம்பு - 3
பிரிஞ்சி இலை  -1
ஏலக்காய் - 2

எண்ணெயில் வதக்கி அரைக்க‌

இஞ்சி துண்டுகள் - 2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 4

செய்முறை

*எண்ணெயில் வதக்கி அரைக்க கொடுத்துள்ள பொருட்களை நைசாக அரைக்கவும்.
*தேங்காயை துருவி முதல் பால் 1/2 கப்,2ஆம் பால் 3/4 கப் மற்றும் 3ஆம் பால் 1 கப் எடுக்கவும்.

*காய்களை நடுத்தர துண்டுகளாக நறுக்கவும்.

*பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தாலிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து வெங்காயம் +பூண்டுப்பல் சேர்த்து வதக்கவும்.


*பின் காய்கள் சேர்த்து வதக்கி மஞ்சள்தூள்+உப்பு+3 ஆம் பால் சேர்த்து வேகவிடவும்.

*3/4 பாகம் காய்கள் வெந்ததும் 2ஆம் பால் சேர்த்து வேகவிடவும்.

*காய்கள் முழுவதும் வெந்ததும் அரைத்த பச்சை மிளகாய் விழுது+வேகவைத்த பாசிபருப்பு சேர்த்து மேலும் சிறிது நேரம் கொதிக்கவிடவும்.

*பச்சை வாசனை அடங்கியதும் 1ஆம் பால் சேர்த்து நுரை வரும் போது இறக்கவும்.

*சூடு சிறிது அடங்கியதும் எலுமிச்சை சாறு + கறிவேப்பிலை சேர்க்கவும்.

*இதனை சாதத்துடன் சாப்பிட நன்றாக இருக்கும்.
பி.கு

*1ஆம் பால்  சேர்த்ததும் சொதியை கொதிக்கவிடக்கூடாது.

This is off to Priya's Vegan Thursday
01 09 10