Showing posts with label செட்டிநாடு சமையல். Show all posts
Showing posts with label செட்டிநாடு சமையல். Show all posts
Saturday, 14 March 2015 | By: Menaga Sathia

செட்டிநாடு மீன் வறுவல் / CHETTINAD FISH FRY | CHETTINAD MEEN VARUVAL | CHETTINAD RECIPES

print this page PRINT IT
எப்போழுதும் வறுவல் செய்யும் போது சிறிது கடலைமாவு சேர்த்து வறுத்தால் கடாயில் ஒட்டாது.

ஒரிஜினல் ரெசியில் எலுமிச்சை சாறுக்கு பதில் புளிதண்ணீர் சேர்த்து செய்துள்ளேன்.

இந்த முறையில் மசாலா சேர்த்து வறுக்கும் போது மீன் வாடையும் வராது.

Recipe Source : Spiceindiaonline

மசாலா செய்ய தே.பொருட்கள்

கிராம்பு- 4
பட்டை- 1 துண்டு
ஏலக்காய்- 3
மிளகு- 10
சீரகம் -1/2 டீஸ்பூன்
சோம்பு- 1/2 டீஸ்பூன்
ஜாதிக்காய்த்தூள்- 1/2 டீஸ்பூன்
அன்னாச்சிப்பூ -1

தே.பொருட்கள்

சுத்தம் செய்த மீன் துண்டுகள்- 1 கிலோ
வரமிளகாய்த்தூள் -2 1/2 டேபிள்ஸ்பூன்
தனியாத்தூள் -2 டீஸ்பூன்
மஞ்சள்தூள்- 1/2 டீஸ்பூன்
இஞ்சி -சிறுதுண்டு
பூண்டுப்பல் -5
கறிவேப்பிலை- 1 கொத்து
புளிதண்ணீர் -2 டீஸ்பூன்
கடலைமாவு -1 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய்= தேவைக்கு

செய்முறை

*மசாலா செய்ய கொடுத்துள்ள பொருட்களை நைசாக பொடிக்கவும்.

*அதனுடன் வரமிளகாய்த்தூள்+தனியாத்தூள்+மஞ்சள்தூள் சேர்த்து பொடிக்கவும்.

*கடைசியாக இஞ்சி+பூண்டு+கறிவேப்பிலை சேர்த்து பல்ஸ் மோடில் 2 சுற்றி எடுக்கவும்.

*பாத்திரத்தில் மீன் துண்டுகள்+உப்பு+மசாலா பொருட்கள்+புளி தண்ணீர் சேர்த்து பிசறி 1/2 மணிநேரம் வைக்கவும்.

*வறுப்பதற்கு முன் கடலைமாவு சேர்த்து பிசறி ,கடாயில் எண்ணெய் ஊற்றி மீனை சேர்த்து 2 பக்கமும் பொன்னிறமாக வறுத்தெடுக்கவும்.

பி.கு

*இதே போல் வாழைக்காய்,சேனைக்கிழங்கும் வறுக்கலாம்.

*அவரவர் காரத்திற்கேற்ப மிளகாய்த்தூளை சேர்க்கவும்,நான்  அதிகம் சேர்த்து செய்துள்ளேன்.
Saturday, 21 February 2015 | By: Menaga Sathia

செட்டிநாடு சிக்கன்/CHETTINAD CHICKEN | CHICKEN RECIPES


print this page PRINT IT
இந்த செட்டிநாடு சிக்கன் காரசாரமாக இருக்கும்.

Recipe Source : Here

தே.பொருட்கள்

சின்ன வெங்காயம் -25
தக்காளி -2
பூண்டுப்பல்- 15
உப்பு+எண்ணெய்= தேவைக்கு

அரைக்க 1
இஞ்சி -சிறுதுண்டு
சின்ன வெங்காயம் -8
பூண்டுப்பல்- 8
பச்சை மிளகாய் -2
வரமிளகாய்த்தூள்- 3/4 டேபிள்ஸ்பூன்
தனியாத்தூள்- 1 1/2 டேபிள்ஸ்பூன்

அரைக்க 2
தேங்காய்த்துறுவல் -4 டேபிள்ஸ்பூன்
முந்திரி -4 அல்லது கசகசா- 1 டீஸ்பூன்
சோம்பு -1/2 டீஸ்பூன்

சிக்கனில் ஊறவைக்க‌
சிக்கன்- 1/2 கிலோ
தயிர் -1/4 கப்
இஞ்சி பூண்டு விழுது  -1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் -2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் -1/2 டீஸ்பூன்

தாளிக்க‌
பட்டை -சிறுதுண்டு
ஏலக்காய் -3
கிராம்பு- 4
பிரியாணி இலை -2
சோம்பு- 1டீஸ்பூன்
கறிவேப்பிலை -1 கொத்து
புதினா -1 கைப்பிடி

செய்முறை
*சிக்கனில் ஊறவைக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து 1 மணிநேரம் ஊறவைக்கவும்.

*பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளிக்கவும்.
*அரைக்க கொடுத்துள்ள பொருட்களை  அரைக்கவும்.

*பின் நறுக்கிய சின்ன  வெங்காயம் +பூண்டுப்பல் சேர்த்து வதக்கவும்.
*வதங்கியதும் அரைத்த விழுது 1 சேர்த்து வதக்கிய பின் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.
*தக்காளி வதங்கியதும் ஊறவைத்த சிக்கன் சேர்த்து வதக்கவும்.
*சிக்கனில் இருந்து வரும் நீரே போதுமானது,சிக்கன் வெந்ததும் அரைத்த விழுது 2  சேர்க்கவும்.


*நன்கு எண்ணெய் பிரியும் வரை சுருள கிளறி இறக்கவும்.
Monday, 17 November 2014 | By: Menaga Sathia

செட்டிநாடு ஸ்டைல் அசைவ தாளி/CHETTINAD STYLE NON VEG THALI | THALI RECIPES


print this page PRINT IT 

நீண்ட நாட்களாக செட்டிநாடு ஸ்டைல் அசைவ தாளி உணவு செய்ய வேண்டும் என்று இருந்தேன். போட்டோ எப்பவோ எடுத்தது என்றாலும் பதிவு செய்ய இப்போழுது தான் நேரம் கிடைத்தது.

இதில் நான் செய்திருப்பது

செட்டிநாடு சிக்கன் பிரியாணி
மிளகு சிக்கன் வறுவல்
சாதம்
தக்காளி ரசம்
தக்காளி தித்திப்பு
வெள்ளரிக்காய் பச்சடி
கவுனி அரிசி பாயாசம்.

வேலை செய்ய சுலபமாக முடிய தக்காளி தித்திப்பு மர்றும் கவுனி அரிசி பாயாசம் இவற்றினை முதல்நாளே செய்து வைக்கலாம்.

மேற்கூரிய 2 சமையலை தவிர மீதி அனைத்தையும் செய்து முடிக்க 1 மணிநேரமே ஆகும்.
Friday, 18 July 2014 | By: Menaga Sathia

செட்டிநாடு சிக்கன் பிரியாணி /Chettinad Chicken Biryani | Chicken Recipes



print this pagePRINT IT

செட்டிநாடு மட்டன் பிரியாணி செய்ததைப்போல் சிக்கனில் செய்துள்ளேன்.

தே.பொருட்கள்

பாஸ்மதி  -4 கப்
நீளமாக அரிந்த வெங்காயம் -2 பெரியது
தக்காளி- 2 பெரியது
நெய் -1/4 கப்
உப்பு+எண்ணெய் =தேவைக்கு

அரைக்க‌
காய்ந்த மிளகாய் -2
பச்சை மிளகாய்- 2
புதினா -1 கைப்பிடி
சின்ன வெங்காயம்- 12
பூண்டுப்பல்- 8
இஞ்சி-  சிறுதுண்டு
சோம்பு -1 டீஸ்பூன்
கிராம்பு- 2
ஏலக்காய் -3

சிக்கனில் ஊறவைக்க‌

சிக்கன் 3/4 கிலோ
அரைத்த விழுது சிறிதளவு
தயிர் 2 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் 1/2 டீஸ்பூன்
வரமிளகாய்த்தூள் 1 டேபிள்ஸ்பூன்

தாளிக்க‌

பட்டை  -சிறுதுண்டு
கிராம்பு- 3
ஏலக்காய் -3
பிரிஞ்சி இலை- 3
கறிவேப்பிலை -2 கொத்து
சோம்பு -3/4 டீஸ்பூன்

செய்முறை

*அரிசியை கழுவி 10நிமிடங்கள் ஊறவைக்கவும்.

*அரைக்க கொடுத்துள்ள பொருட்களை நைசாக அரைக்கவும்.


*சிக்கனில் ஊறவைக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து 1 மணிநேரம் ஊறவைக்கவும்.
*அரிசியை சிறிது நெய்யில் 2 -3 நிமிடங்கள் வறுத்து எடுக்கவும்.

*பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து வெங்காயம்+தக்காளி+அரைத்த விழுது என ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து நன்கு வதக்கவும்.

*பின் ஊறவைத்த சிக்கனை சேர்த்து 5 நிமிடம் வதக்கி 5 1/2 கப் நீர்+உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.


*தண்ணீர் கொதிக்கும் போது அரிசியை சேர்த்து மூடி போட்டு சிறுதீயில் வேகவிடவும்.

*தண்ணீர் வற்றி சுண்டி வரும்போது தோசைகல்லை காயவைத்து அதன்மீது பிரியாணி பாத்திரதை வைத்து சிறுதீயில் 15 நிமிடங்கள் தம்மில் போடவும்.

*பிரியாணி வெந்ததும் மீதமுள்ள நெய்ய்யை ஊற்றி கிளறி கத்திரிக்காய் அல்லது ராய்த்தாவுடன் பரிமாறவும்.

Tuesday, 15 July 2014 | By: Menaga Sathia

செட்டிநாடு வாழைக்காய் கோலா உருண்டை/ Chettinad Vazhakkai Kola Orundai | Vegetarian Balls|Vegetarian Appetizer Recipes

வாழைக்காய் கோலா உருண்டையை ,நான் வாழைக்காயை வேகவைத்து தோலுரித்து வெங்காயம் பச்சை கறிவேப்பிலை சோம்புத்தூள் இவற்றை மற்றும் பொடியாக நருக்கி சேர்த்து எண்ணெயில் பொரிப்பேன்.இதில் பொருட்களை வதக்கி அரைத்து செய்வததில் நன்றாக இருந்தது.

இதில் வாசனைக்காக நான் கிராம்பும் பட்டையும் சேர்த்து செய்துள்ளேன்.

Recipe Source : Cook Like Priya

தே.பொருட்கள்

வாழைக்காய் -3 நடுத்தர அளவு
மஞ்சள்தூள் -1/2 டீஸ்பூன்
பொட்டுக்கடலை மாவு -1/4 கப்
உப்பு -தேவைக்கு
எண்ணெய் -பொரிக்க‌

எண்ணெயில் வதக்கி அரைக்க‌

எண்ணெய் -1 டீஸ்பூன்
சின்ன வெங்காயம் -10
பச்சை மிளகாய்- 2
காய்ந்த மிளகாய்- 2
சோம்பு- 1 டீஸ்பூன்
கசகசா -1 டீஸ்பூன்
தேங்காய்த் துறுவல் -2 டேபிள்ஸ்பூன்
இஞ்சி -1 சிறுதுண்டு
பூண்டுப்பல்- 4
கறிவேப்பிலை -1 கொத்து
பட்டை -சிறுதுண்டு
கிராம்பு -2


செய்முறை
*1 வாழைக்காயை 4ஆக நறுக்கி மஞ்சள்தூள் +முழ்குமளவு நீர் சேர்த்து வேகவைக்கவும்.

*கத்தியில் குத்தி பார்த்தால் ஒட்டாமல் வரும் போது இறக்கி ஆறியதும் தோலுரித்து மசித்துக் கொள்ளவும்.

*அரைக்க கொடுத்துள்ள பொருட்களை எண்ணெயில் வதக்கி ஆறியதும் நைசாக அரைக்கவும்.

*இதனை மசித்த வாழைக்காயுடன் சேர்த்து உப்பு+பொட்டுக்கடலை மாவு சேர்த்து பிசையவும்.

*மாவு தளர்த்தியாக இருந்தால் மேலும் பொட்டுக்கடலை மாவு சேர்த்து பிசையவும்.

*உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

பி.கு

*பொட்டுக்கடலை மாவுக்கு பதில் கடலைமாவினை வறுத்து சேர்க்கலாம்.

*பட்டை கிராம்பு சேர்ப்பது வாசனையாக இருக்கும்.
Thursday, 15 May 2014 | By: Menaga Sathia

செட்டிநாடு கோழி ரசம் /Chettinad Kozhi Rasam | Chettinad Recipes


இந்த ரசம் சளி மற்றும் காய்ச்சல் வரும் போது குடித்தால் உடனே சரியாகிவிடும்.

தே.பொருட்கள் 

சிக்கன் எலும்பு துண்டு -100 கிராம்
நறுக்கிய சின்ன வெங்காயம் -6
நறுக்கிய தக்காளி -1 பெரியது
மஞ்சள்தூள் -1/2 டீஸ்பூன்
வரமிளகாய்த்தூள் -1டீஸ்பூன்

ரசப்பொடிக்கு

மிளகு+சீரகம் - தலா 1 டீஸ்பூன்
தனியாத்தூள் -1/2 டீஸ்பூன்
சோம்பு -1/4 டீஸ்பூன்
சின்ன வெங்காயம் -3
பூண்டுப்பல் -3

தாளிக்க
எண்ணெய் -1/4 டீஸ்பூன்
சீரகம் - 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து

செய்முறை
*குக்கரில் மேற்கூறிய பொருட்களை சேர்த்து 4 கப் நீர்  வைத்து  சிறிது உப்பு சேர்த்து 4 விசில் வரை வேகவைக்கவும்.

*ரசப்பொடிக்கு கொடுத்துள்ள பொருட்களை கொரகொரப்பாக பொடிக்கவும்.
*குக்கர் ப்ரெஷர் அடங்கியதும்  எலும்புதுண்டுகளை மட்டும் தனியாக எடுத்து வைக்கவும்.
*வேறொரு பாத்திரத்தில் தாலிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து வடிகட்டிய  நீரினை சேர்க்கவும்.
*ரசப்பொடி மற்றும் தேவைக்கு உப்பு சேர்த்து கொதிக்க வைத்து இறக்கவும்.
*சூப்பாகவோ குடிக்கலாம்அல்லது சாதத்தில் பிசைந்து சாப்பிட நன்றாக இருக்கும்.

பி.கு

*வேகவைத்த எலும்பு துண்டுகளை வறுத்து சாப்பிடலாம்,அல்லது குழம்பில் கடைசியாக சேர்க்கலாம்.
Monday, 7 April 2014 | By: Menaga Sathia

கந்தரப்பம் / Kandarappam - Traditional Chettinad Sweet | Guest Post By Sathya Priya


சத்ய ப்ரியா - இவரை எனக்கு சிலநாட்களுக்கு முன்புதான் தெரியும்.பழுவதற்கு இனிமையானவர். அன்போடு என்னை அக்கா ந்னு கூப்பிடும் நல்ல சகோதரி.

போன மாதம் என்னுடைய வலைப்பூவில் கெஸ்ட் போஸ்ட் போடலமான்னு கேட்டதற்கு நானும் உடனே சம்மதித்து கந்தரப்பம் ரெசிபி கேட்டேன்.ஏன்னா இவரின் வலைப்பூவில் பாரம்பரியமிக்க செட்டிநாடு குறிப்புகளை நிறைய பகிர்ந்திருக்கிறார்.

நான் வேறு வீடு மாறியதால் குறிப்பினை பகிர தாமதமாகிவிட்டது.நான் விரும்பிய குறிப்பினை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி சத்ய ப்ரியா!!

இனி இவர் எனக்கு அனுப்பிய மெயிலில் எழுதியதை அப்படியே காப்பி பேஸ்ட் செய்கிறேன்.

Menaga  akka is one of my fellow blogger  and a good friend of mine .She has a tamil blog and its been like 6 years now she started blogging .She usually explains her recipes very easy and to the point .You can see many chettinad recipes as well in her blog like "kavuni arisi payasam","nandu masala".Among them i like her quick "kothumai halwa" very much and waiting to try it because i don't get Whole wheat here .

One fine day i asked my co blogger and friend menaga akka "can i do a guest post on your blog ?".Immediately she said yes and she said "anything is fine ,but if you give me kadarappam i will be more than happy ".Then i asked my mom about the recipe and did it immediately .But akka was busy  shifting her house.After a month of wait now its time to enjoy the beauties in her space .I guess menaga akka will like it .

Coming to the recipe .This is another chettinad delicacy and its loved by all ,especially kids because they are sweet .These cuties you can see in festivals or chettinad marriages .When you go to karaikudi for a marriage next time be sure to ask them kandarappam.

There are many different versions of this and this one is my moms recipe .

To get a true taste you have to deep fry it with coconut as well.If you are a diet kindof person then you have to stay away from it .But you can make like sweet appam(dosa) and enjoy this.Guess unniappam will  taste like this .This is the first time i am making it so haven't got a proper shape .

இனி கந்தரப்பம் செய்முறையை பார்க்கலாம்.

தே.பொருட்கள்

பச்சரிசி -2 கப்
புழுங்கலரிசி -1 கைப்பிடி
வெள்ளை உளுந்து - 1/2 கப்  1/4 கப்பிலிருந்து 1/2 கப் வரை சேர்க்கலாம்
வெந்தயம் - 1 டீஸ்பூன்
தேங்காய்த்துறுவல் -2 டேபிள்ஸ்பூன்
துருவிய வெல்லம் -1 3/4 கப்
எண்ணெய் - பொரிக்க

செய்முறை

*பச்சரிசி+புழுங்கலரிசி+உளுந்து இவற்றை ஒன்றாக 3 மணிநேரமும்,வெந்தயத்தை தனியாக 6 மணிநேரமும் ஊறவைக்கவும்.

 *நன்றாக ஊறியதும் இவற்றினை ஒன்றாக அரைக்கவும்.
 *மாவினை மிக நைசாகவோ அல்லது கொரகொரப்பாகவோ அரைக்ககூடாது.
 *90 சதவிகிதம் மாவு அரைப்பட்டதும் துருவிய வெல்லத்தினை சேர்த்து அரைக்கவும்.

*பின் தேங்காய்த்துறுவல் சேர்த்து கலந்து தோசை மாவு பதத்திற்கு கலக்கவும்.
 *அகலமான கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ,மாவினை பெரிய குழிக்கரண்டியால் ஊற்றவும்.

*மாவினை ஊற்றும் போது ஒரே இடத்தில் ஊற்றாமல் பரவலாக ஊற்றவும்.
 *மாவு வெந்து பொன்னிறமாக மேலே வந்ததும் மறுபக்கம் திருப்பி வேகவைத்து எடுக்கவும்.
 *பொன்னிறமான அப்பத்தை கரண்டியால் எடுக்கும் போது இன்னோரு கரண்டியால் அமுக்கி எடுக்கவும்.

*இப்படி செய்யும் போது அதிகப்பட்ச எண்ணெய் வந்துவிடும்.அதிரசத்திற்கு செய்வது போல செய்ய வேண்டும்.
 *டிஷ்யூ பேப்பரில் வைத்து எடுத்து மாலை நேர சிற்றுண்டியாக பரிமாறவும்.

பி.கு

*இதில் விரும்பினால் புழுங்கலரிசியை அதிகம் சேர்க்கலாம்.அப்படி சேர்க்கும் போது பச்சரிசி+புழுங்கலரிசி -தலா 1 கப் விகிதத்தில் சேர்க்கலாம்.

*விரும்பினால் இதனை குழிப்பணியாரத்தில் சுட்டு எடுக்கலாம்,அப்படி செய்யும் போது மறுநாள் அப்பம் காய்ந்து போன மாதிரி இருக்கும்.

*தேங்காய்த்துறுவல் விரும்பினால் மட்டும் சேர்க்கலாம்.

*வாசனைக்காக ஏலக்காய்த்தூள் சேர்த்தால் இன்னும் சுவை கூடும்.

*மாவு பதம் தண்ணியாக இருந்தால் அப்பம் எண்ணெய் குடிக்கும்,அதனை ப்ரிட்ஜில் 1/2 மணிநேரம் வைத்திருந்து செய்யலாம்.

*வெந்தயம் சேர்ப்பது  அப்பத்திற்கு நல்ல சுவை கொடுக்கும்,மேலும் பொரிக்கும் போது பொன்னிறமாக இருக்கும்.

*மீதமான மாவு இருந்தால் ஆப்ப சட்டியில் ஊற்றி இனிப்பு ஆப்பமாக சுட்டெடுக்கலாம்.

*விரும்பினால் வெல்லத்தை சிறிது நீர் விட்டு காய்ச்சி வடிகட்டி ஆறியதும் மாவில் கலக்கலாம்.

*பணியாரம் பந்துப்போல் உருண்டையாக வந்தால்  அதை எப்படி சரியாக செய்வது என்று இங்கே பார்க்கவும்.


01 09 10