Saturday 21 February 2015 | By: Menaga Sathia

செட்டிநாடு சிக்கன்/CHETTINAD CHICKEN | CHICKEN RECIPES


print this page PRINT IT
இந்த செட்டிநாடு சிக்கன் காரசாரமாக இருக்கும்.

Recipe Source : Here

தே.பொருட்கள்

சின்ன வெங்காயம் -25
தக்காளி -2
பூண்டுப்பல்- 15
உப்பு+எண்ணெய்= தேவைக்கு

அரைக்க 1
இஞ்சி -சிறுதுண்டு
சின்ன வெங்காயம் -8
பூண்டுப்பல்- 8
பச்சை மிளகாய் -2
வரமிளகாய்த்தூள்- 3/4 டேபிள்ஸ்பூன்
தனியாத்தூள்- 1 1/2 டேபிள்ஸ்பூன்

அரைக்க 2
தேங்காய்த்துறுவல் -4 டேபிள்ஸ்பூன்
முந்திரி -4 அல்லது கசகசா- 1 டீஸ்பூன்
சோம்பு -1/2 டீஸ்பூன்

சிக்கனில் ஊறவைக்க‌
சிக்கன்- 1/2 கிலோ
தயிர் -1/4 கப்
இஞ்சி பூண்டு விழுது  -1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் -2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் -1/2 டீஸ்பூன்

தாளிக்க‌
பட்டை -சிறுதுண்டு
ஏலக்காய் -3
கிராம்பு- 4
பிரியாணி இலை -2
சோம்பு- 1டீஸ்பூன்
கறிவேப்பிலை -1 கொத்து
புதினா -1 கைப்பிடி

செய்முறை
*சிக்கனில் ஊறவைக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து 1 மணிநேரம் ஊறவைக்கவும்.

*பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளிக்கவும்.
*அரைக்க கொடுத்துள்ள பொருட்களை  அரைக்கவும்.

*பின் நறுக்கிய சின்ன  வெங்காயம் +பூண்டுப்பல் சேர்த்து வதக்கவும்.
*வதங்கியதும் அரைத்த விழுது 1 சேர்த்து வதக்கிய பின் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.
*தக்காளி வதங்கியதும் ஊறவைத்த சிக்கன் சேர்த்து வதக்கவும்.
*சிக்கனில் இருந்து வரும் நீரே போதுமானது,சிக்கன் வெந்ததும் அரைத்த விழுது 2  சேர்க்கவும்.


*நன்கு எண்ணெய் பிரியும் வரை சுருள கிளறி இறக்கவும்.

4 பேர் ருசி பார்த்தவர்கள்:

'பரிவை' சே.குமார் said...

செட்டிநாடு சிக்கன் சூப்பர்....
செட்டிநாட்டு சிக்கன் ஸ்பெஷலே வரமிளகாய்தான்..
அருமை..

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
விளக்க குறிப்புடன் நல்ல சமையல் பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

துரை செல்வராஜூ said...

இந்த வாரம் முழுதும் வலைச்சரத்தில் நல்ல பல தளங்களை அறிமுகம் செய்ததுடன் எமது தளத்தையும் அறிமுகம் செய்து உற்சாகப்படுத்தினீர்கள்..

தேர்ந்ததொரு நடை தங்களின் கைவண்ணம்!..

மேலும் பல சிறப்புகளை எய்துதற்கு மனமார வாழ்த்துகின்றேன்!.. வாழ்க நலம்!.

மனோ சாமிநாதன் said...

அருமையான குறிப்பு! புகைப்படமும் அழகு!

01 09 10