Thursday, 27 August 2015 | By: Menaga Sathia

பாலடை பாயாசம் / Palada Payasam | Onam Sadya Recipes | Payasam recipes

print this page PRINT IT 
ஒணம் சத்யாவின் போது செய்யபடும் முக்கியமான பாயசம்.

பாயசம் என்பது பால்+சர்க்கரை சேர்த்து செய்வது.ப்ரதமன் என்பது தேங்காய்பால்+வெல்லம் சேர்த்து செய்வது.

அடை ப்ரதமன் மற்றும் பாலடை ப்ரதமன் இவ்விரண்டுமே ஒணசத்யாவின் மெனுவில் இடம்பெறும்.

அரிசிஅடை ரெடிமேடாக இருந்தால் கொதிக்கும் நீரில் 10 நிமிடம் ஊறவைத்து பின் குளிர்ந்த நீரில் 2 -3 முறை அலசி நீரை வடிக்கவும்.

நான் பயன்படுத்தியிருப்பது ப்ரெஷ் அடை என்பதால் நேரடியாக அப்படியே பயன்படுத்தலாம்.

தே.பொருட்கள்

அரிசி அடை- 1/2 கப்
பால்- 2 1/2 கப்
சர்க்கரை -1/3 கப்
உப்பு- 1 சிட்டிகை
நெய் -2 டீஸ்பூன்
ஏலக்காய்த்தூள்- 1/4 டீஸ்பூன்
முந்திரி+திராட்சை- தேவைக்கு

செய்முறை

*கடாயில் 1 டீஸ்பூன் நெய் விட்டு முந்திரி+திராட்சை வறுத்தெடுக்கவும்.

*பின் மீதமுள்ள நெய் விட்டு சிறிது சர்க்கரை சேர்த்து,கரையும் வரை கலக்கவும்.

*அரிசி அடையை சேர்த்து லேசாக பொன்முறுவலாக வறுக்கவும்.

*பாலினை பாத்திரத்தில் ஊற்றி பாதியளவு சுண்டும் வரை காய்ச்சியபின் வறுத்த அடையினை சேர்த்து வேகவிடவும்.

*அடை வெந்ததும் உப்பு+சர்க்கரை சேர்த்து கரைந்து 2 நிமிடங்கள் கழித்து இறக்கவும்.

*பின் ஏலக்காய்த்துள்+முந்திரி திராட்சை சேர்த்து பரிமாறவும்.

*இந்த பாயாசம் மிகுந்த சுவையாக இருக்கும்.

Wednesday, 26 August 2015 | By: Menaga Sathia

ஒணம் சத்யா - 2 | Onam Sadya -2 | Kerala Lunch Recipes | Onam Sadya Recipes

print this page PRINT IT 

இந்த முறை ஒணம் சத்யா மெனுவை போனமுறை செய்ததை விட அதிகமாகவே செய்துள்ளேன்.

ஒணம் சத்யா - 1 மெனுவை இங்கே பார்க்கவும்.

சிப்ஸ் மட்டுமே கடையில் வாங்கினேன்.

நான் செய்திருப்பவை

நேந்திரன் சிப்ஸ் (கடையில் வாங்கியது)
இஞ்சி புளி
இன்ஸ்டண்ட் மாங்காய் ஊறுகாய்
எலுமிச்சை ஊறுகாய்
குறுக்கு காளன்
எரிசேரி
ஒலன்
கூட்டுக் கறி
அவியல்
கோஸ் தோரன்
கேரட் பீன்ஸ் தோரன்
பீட்ரூட் பச்சடி
இஞ்சி கிச்சடி
பருப்புக் கறி
கேரளா சாம்பார்
தக்காளி ரசம்
சேமியா பாயசம்
பருப்பு ப்ரதமன்
மோர்
பப்படம்

இதில் இஞ்சி புளி மற்றும் மாங்காய் ஊறுகாய் மட்டும் முதல் நாள் இரவே செய்துவிட்டேன்.

மறுநாள் மற்றவைகளை செய்து முடிக்க 3 மணிநேரம் ஆனது.

இதனை எப்படி சுலபமாக செய்தேன் என்பதை மட்டும் சொல்கிறேன்.

என்ன மெனுக்களை செய்ய போகிறோம் என முடிவு செய்து அதற்கேற்ப காய்களை வாங்கிக் கொள்ளவும்.

எரிசேரி மற்றும் ஓலன் செய்ய காரமனியை முதல் நாள் இரவே ஊறவைக்கவும்.

இந்த முறை எரிசேரியை பூசணிக்காயில் செய்தேன்.அதே போல் கூட்டுக்கறிக்கு கறுப்புக் கடலைக்கு பதில் கடலைப்பருப்பில் செய்தேன்.

கூட்டுக்கறி,அவியல்,காளன் செய்ய சேனைக்கிழங்கை நறுக்கி முதலில் மஞ்சள்தூள் சேர்த்து அரைக்வேக்காடு வேகவைத்து நீரை வடிக்கவும்.இப்படி செய்வது சேனைக்கிழங்கின் காரலை போக்கும்.பின் அதனை மூன்று பாகமாக பிரித்து பயன்படுத்தவும்.

பாசிப்பருப்பை பருப்பு கறி மற்றும் ப்ரதமன் செய்ய வறுக்கவும்.

குக்கரில் சாம்பாருக்கு துவரம்பருப்பினை அடியில் வைத்தும் மேலே சிறிய கிண்ணத்தில் பாசிப்பருப்பினை வேக வைத்து எடுக்கவும்.

பின் வேறொரு குக்கரில் காராமணியை அடியிலும் அதன் மேல் சிறிய கிண்ணத்தில் கடலைப்பருப்பையும் வேகவைத்தேன்.

காய்களை அவியலுக்கு நீளமாகவும் மற்றும் அனைத்து சைட் டிஷ் செய்யவும் நறுக்கி வைத்தேன்.


கேரட்,முருங்கை,வெள்ளை பூசணி சேர்த்து சாம்பார் செய்தேன்.

ஒலன் மற்றும் பிரதமன் தேங்காயை முதல் மற்றும் 2 ஆம் பால் எடுக்கவும்.

இஞ்சி கிச்சடி செய்ய பாகற்காய்க்கு பதில் இஞ்சியை பொன்முறுவலாக வறுத்து செய்ய வேண்டும்.

எல்லா குறிப்புகளுக்கும் தேங்காய் முக்கியம் என்பதால் தேங்காய்+சீரகம்+பச்சை மிளகாயை அவியல்,காளன்,எரிசேரி,கூட்டு கறி ,பருப்புக்கறி செய்ய நிறைய அரைத்து வைத்தேன்.

பொரியல் செய்ய கேரட்+பீன்ஸ்+கோஸ் நறுக்கிய பின் பீட்ரூட்டினை பச்சடி செய்ய கொஞ்சம் துருவிக் கொண்டேன்.

இவைகள் அனைத்தும் செய்து முடித்த பின் கடைசியாக சாதம்,சேமியா பாயசம்,ரசம் வைத்தேன்.

இப்படி திட்டமிட்டு செய்து முடிக்கவே 3 மணிநேரம் ஆனது.

அப்புறம் என்ன,கடைசியாக இலையில் பரிமாறவேண்டியதுதான்.

அனைவருக்கும் இனிய ஒணம் நல்வாழ்த்துக்கள்!!

Monday, 24 August 2015 | By: Menaga Sathia

கேரட் பீன்ஸ் தோரன்/Beans Carrot Thoran | Onam sadya Recipes


print this page PRINT IT 
தே.பொருட்கள்

துருவிய கேரட் - 1/2 கப்
பொடியாக நறுக்கிய பீன்ஸ் - 1/2 கப்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 1
தேங்காய் துறுவல் - 1/2 கப்
மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க‌

கடுகு+உளுத்தம்பருப்பு - தலா 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து


செய்முறை

*துருவிய கேரட்+பீன்ஸ்+வெங்காயம்+பச்சை மிளகாய்+உப்பு+தேங்காய்துறுவல் இவற்றை ஒன்றாக கலந்து நன்கு பிசைந்து 15 நிமிடம் வைக்கவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளை போட்டு தாளித்து பிசைந்து வைத்த கலவையை சேர்த்து சிறிது நீர் தெளித்து சிறு தீயில் மூடி போட்டு வேகவிடவும்.

* இடையிடையே கிளறி விட்டு  வெந்ததும் இறக்கவும்.

பி.கு

அதிகளவு நீர் சேர்க்க வேண்டாம்,1 1/ 2 டேபிள்ஸ்பூன் நீர் சேர்த்தால் போதும்.
Friday, 21 August 2015 | By: Menaga Sathia

கூட்டு கறி / Kootu Curry | Onam Sadya Recipes

print this page PRINT IT 
இதில் தேங்காயை பொன்முறுவலாக வறுத்து சேர்ப்பது தனி சுவை.சேனைகிழங்கு,வாழைக்காய்,கறுப்புக்கடலைச் சேர்த்து செய்வது இதன் ஸ்பெஷல்
Recipe Source :
Here

தே.பொருட்கள்

சேனைக்கிழங்கு‍ துண்டுகள் -1 கப்
துண்டுகளாகிய வாழைக்காய்- 1 கப்
கறுப்புக் கடலை‍ -1/2 கப்
மஞ்சள்தூள்- 1/2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள்- 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை- 1 கொத்து
வெல்லம் -1டேபிள்ஸ்பூன்
உப்பு -தேவைக்கு

அரைக்க‌
தேங்காய்த்துறுவல் -3/4 கப்
மிளகு- 1 டீஸ்பூன்
சீரகம்- 1/2 டீஸ்பூன்

தாளிக்க‌
தே.எண்ணெய்- 1டீஸ்பூன்
கடுகு- 1/4 டீஸ்பூன்
பொடித்த மிளகு- 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை- 1 கொத்து
காய்ந்த மிளகாய்- 2
தேங்காய்த்துறுவல்- 1/2 கப்
நெய்- 1 டேபிள்ஸ்பூன்

செய்முறை
*அரைக்க கொடுத்துள்ள பொருட்களை நைசாக அரைக்கவும்.


*கடலையை முதல்நாள் இரவே ஊறவைத்து மறுநாள் உப்பு சேர்த்து வேகவைக்கவும்.

*பாத்திரத்தில் நீர்+சிறிது மஞ்சள்தூள் சேர்த்து சேனைகிழங்கினை 1/2 வேக்காடு வேகவைத்து நீரை வடிக்கவும்.இப்படி செய்வது கிழங்கின் காரலை போக்கும்.

*மீண்டும் பாத்திரத்தில் நீர்+சேனைக்கிழ்னக்கு+வாழைக்காய்+மஞ்சள்தூள்+மிளகாய்த்தூள்+உப்பு+கறிவேப்பிலை+வெல்லம் சேர்த்து வேகவிடவும்.

*வெந்ததும் வேகவைத்த கடலை+ அரைத்த விழுதினை சேர்த்து மேலும் பச்சை வாசனை போக கொதிக்கவைத்து இறக்கவும்.

*இது சற்று கெட்டியாக இருக்க வேண்டும்.

*கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு+காய்ந்த மிளகாய்+கறிவேப்பிலை சேர்த்து தாளித்து தேங்காயை சேர்த்து பொன் முறுவலாக வறுத்து சேர்க்கவும்.

*கடைசியாக நெய் சேர்த்து கலந்து பரிமாறவும்.


Tuesday, 18 August 2015 | By: Menaga Sathia

தக்காளி சூப் / Restaurant Style Tomato Soup | Soup Recipes


print this page PRINT IT 
தக்காளி சூப்பில் சிறிதளவு பீட்ரூட் சேர்ப்பது ஹோட்டல் சூப் போல‌ நல்ல கலர் கொடுக்கும்.அதிகமாக சேர்த்தால் சூப் பர்ப்பிள் கலரில் மாறிவிடும்.

தே.பொருட்கள்

குக்கரில் வேக வைக்க‌

தக்காளி- 4 பெரியது
பீட்ரூட் துண்டுகள் -1/4 கப்
கிராம்பு -2
பிரியாணி இலை- 1
பட்டை -சிறு துண்டு
பூண்டுப்பல்- 2
நறுக்கிய இஞ்சி- 1/2 டீஸ்பூன்

சூப் செய்ய‌
வெண்ணெய்- 1 டேபிள்ஸ்பூன்
சோளமாவு -2 டீஸ்பூன்
பால்- 1/4 கப்
உப்பு -தேவைக்கு
மிளகுத்தூள் -1/2 டீஸ்பூன்

செய்முறை

*குக்கரில் வேகவைக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தேவைக்கு நீர் ஊற்றி 2 விசில் வரை வேகவைக்கவும்.
*ப்ரெஷர் அடங்கியதும் கிராம்பு,பட்டை,பிரியாணி இலை எடுத்து விட்டு அரைத்து சூப் வடிகட்டியில் வடிகட்டிக் கொள்ளவும்.
*பாத்திரத்தில் வெண்ணெய் சேர்த்து உருகியதும் சோளமாவு சேர்த்து சிறுதீயில் இடைவிடாமல் கிளறவும்.
*பச்சை வாசனை போனதும் பாலினை ஊற்றி கட்டியில்லாமல் கலக்கவும்.

*பின் வடிகட்டிய சூப்+உப்பு சேர்த்து கொதிக்கவைத்து இறக்கவும்.
*பரிமாறும் போது மிளகுதூள் மற்றும் குரூட்டன்ஸ் சேர்த்து பரிமாறவும்.

பி.கு 
*விரும்பினால் வேகவைக்கும் போது 3 சிறிய வெங்காயம் சேர்க்கலாம்.

*இன்னும் சிறப்பாக இருக்க,பரிமாறும் போது க்ரீம் சேர்த்து பரிமாறலாம்.
Saturday, 15 August 2015 | By: Menaga Sathia

எலுமிச்சை ஊறுகாய் /Naranga Achar |Kerala Style lemon Pickle | Onam Sadya Recipes

print this page PRINT IT 
ஓணம் சத்யாவின் போது பரிமாறப்படும் முக்கிய மெனு.நார்த்தங்காயில் இந்த ஊறுகாய் செய்வார்கள்.கிடைக்கவில்லை எனில் சாதரண எலுமிச்சையில் செய்யலாம்.

ப்ரிட்ஜில் 2 வாரங்கள் வரை வைத்திருக்கலாம்.
Recipe Source : Here
தே.பொருட்கள்

எலுமிச்சை 1 பெரியது
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் -5
கறிவேப்பிலை- 2 கொத்து
மிளகாய்த்தூள்- 2 டேபிள்ஸ்பூன்
வெந்தயப்பொடி+பெருங்காயப்பொடி- தலா 1/4 டீஸ்பூன்
உப்பு -தேவைக்கு
கடுகு- 1/2 டீஸ்பூன்
நல்லெண்ணெய்- 2 டேபிள்ஸ்பூன்

செய்முறை
*எலுமிச்சையை  பொடியாக நறுக்கி கறிவேப்பிலை+பச்சை மிளகாய்+கறிவேப்பிலை கலந்து வைக்கவும்.

*பாத்திரத்தில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு சேர்த்து தாளித்து கலந்து வைத்த எலுமிச்சை சேர்த்து கிளறவும்.


*பின் 1 கப் நீர் ஊற்றி கொதிக்கவிடவும்.மிளகாய்த்தூள்+வெந்தயப்பொடி+பெருங்காயப்பொடி+உப்பு சேர்க்கவும்.

*நன்றாக வெந்து கெட்டியாக வரும் போது இறக்கவும்.

*ஆறியதும் சுத்தமான பாட்டிலில் வைத்திருந்து பயன்படுத்தவும்.
Wednesday, 12 August 2015 | By: Menaga Sathia

மாம்பழ புளிசேரி / Mambazha Pulissery | Side Dish For Idiyappam | Onam Sadya Recipes

print this page PRINT IT
நம்ம ஊர் மோர்குழம்பு போலதான்.இதே போல் பைனாப்பிளிலும் செய்யலாம்.

புளிப்பு,இனிப்பு,காரம் கலந்த சுவையுடன் இருக்கும்.சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம் அல்லது இடியாப்பத்திற்கு தொட்டு சாப்பிடலாம்.செம காம்பினேஷன்.

இதனை குட்டியாக இருக்கும் மாம்பழங்களில் தோலை சீவி பயன்படுத்துவார்கள்.நான் பெரிய மாம்பழத்தை துண்டுகளாகி செய்துள்ளேன்.

Recipe Source :
Here

தே.பொருட்கள்

மாம்பழம்- 2 பெரியது
கெட்டி தயிர்- 1 கப்
பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம்- 2
உப்பு -தேவைக்கு

அரைக்க‌
தேங்காய்த்துறுவல் -3/4 கப்
மஞ்சள்தூள்- 1/4 டீஸ்பூன்
மிளகாய்த்தூள்- 1/2 டீஸ்பூன்
சீரகம்- 1/2 டீஸ்பூன்

தாளிக்க‌
தே.எண்ணெய்- 1டீஸ்பூன்
கடுகு- 1/4 டீஸ்பூன்
வெந்தயம்- 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை- 1 கொத்து

செய்முறை
*அரைக்க கொடுத்துள்ள பொருட்களை நைசாக அரைக்கவும்.


*பாத்திரத்தில் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்.


*பின் உப்பு  மாம்பழத்தை தோலுடன் பெரிய துண்டுகளாக நறுக்கி முழ்குமளவு நீர் ஊற்றி வேகவிடவும்.

*வெந்ததும் அரைத்த விழுதினை சேர்த்து மேலும் கொதிக்கவைத்து இறக்கவும்.

*ஆறியதும் கடைந்த தயிரினை சேர்த்து கலக்கவும்.

பி.கு

*இது ஊற்றி சாப்பிடும் பதத்தில் இருக்க வேண்டும்.அதனால் நீரின் அளவை அதற்கு ஏற்றாற்போல் சேர்க்கவும்.
Monday, 10 August 2015 | By: Menaga Sathia

பாகற்காய் கிச்சடி / Bitter Gourd Kichadi | Onam Sadya Recipes


print this page PRINT IT 
Recipe Source:Here

தே.பொருட்கள்

பாகற்காய் -3 பெரியது
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் -2
கடைந்த தயிர் -1 கப்
கறிவேப்பிலை- 1 கொத்து
உப்பு -தேவைக்கு
எண்ணெய்- 2 டேபிள்ஸ்பூன்

தாளிக்க‌
எண்ணெய்- 1 டீஸ்பூன்
கடுகு -1/2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய்- 1
கறிவேப்பிலை- 1 கொத்து

செய்முறை
*பாகற்காயை மிகப்பொடியாக நறுக்கிக்  கொள்ளவும்.

*கடாயில் 2 டேபிள்ஸ்பூன் ஊற்றி நறுக்கிய பாகற்காய்+ப.மிளகாய்+உப்பு+ கறிவேப்பிலை நன்கு பொன்னிறமாக தீய்ந்து விடாமல் வறுக்கவும். 

*ஆறியதும் தயிரினை பாகற்காயில் கலந்து தாளித்து சேர்க்கவும்.

பி.கு
*விரும்பினால் தேங்காய்த்துறுவல்+சீரகம் அரைத்து சேர்க்கலாம்.
Friday, 7 August 2015 | By: Menaga Sathia

பீட்ரூட் பச்சடி / Beetroot Pachadi | Onam Sadya Recipes


print this page PRINT IT 
Recipe Source: Here

தே.பொருட்கள்

பீட்ரூட்- 1 பெரியது
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய்- 2
கடைந்த தயிர் -1/2 கப்
உப்பு -தேவைக்கு

தாளிக்க‌
எண்ணெய்- 1 டீஸ்பூன்
கடுகு- 1/2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய்- 1
கறிவேப்பிலை -1 கொத்து

அரைக்க‌
தேங்காய்த்துறுவல் -1/2 கப்
கடுகு- 1/4 டீஸ்பூன்
சீரகம்- 1/4 டீஸ்பூன்

செய்முறை
*பீட்ரூட்டினை தோல் சீவி துருவிக் கொள்ளவும்.

*கடாயில் துருவிய பீட்ரூட்+ப.மிளகாய்+உப்பு+சிறிதளவு நீர் சேர்த்து வேகவைக்கவும்.

*வெந்த பீட்ரூடில் 3 டேபிள்ஸ்பூன் தனியாக எடுத்து வைக்கவும்.

*மிக்ஸியில் தேங்காய்த்துறுவல்+சீரகம்+3 டேபிள்ஸ்பூன் வேகவைத்த பீட்ரூட் சேர்த்து சிறிதளவு நீர் சேர்த்து மைய அரைக்கவும்.

*கடைசியாக கடுகு சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.


*அரைத்த விழுதினை வேகவைத்த பீட்ரூட்டில் சேர்த்து பச்சை வாசனை போக வேகவைத்து இறக்கவும்.
*இளஞ்சூடாக இருக்கும் போது தயிரினை பீட்ரூட்டில் கலந்து தாளித்து சேர்க்கவும்.

பி.கு
*தேங்காய் துறுவலில் பீட்ரூட் சேர்த்து அரைப்பது நம் விருப்பம் தான்,அப்படி அரைப்பது நல்ல கலரைக் கொடுக்கும்.

*கடுகு சேர்த்து அரைக்கும் ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்,மைய அரைத்தால் கசக்கும்.
01 09 10