Tuesday 4 August 2015 | By: Menaga Sathia

தீயல் / Theeyal | Onam Sadya Recipes

print this page PRINT IT 
இது நம்ம ஊர் காரகுழம்பு போல தான்.இதற்கு தேங்காயை நிறைய அரைத்து சேர்ப்பார்கள்

இதில் முருங்கைக்காய் சேர்த்து செய்துருக்கேன்.மற்றகாய்கள் சேர்த்து எப்படி செய்வதுன்னு பின் குறிப்பில் கீழே பார்க்கவும்.

Recipe Source : Here

தே.பொருட்கள்
புளி- எலுமிச்சை பழளவு
உப்பு -தேவைக்கு

தாளிக்க‌
நல்லெண்ணெய்- 2 டேபிள்ஸ்பூன்
கடுகு+வெந்தயம்- தலா 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை- 1 கொத்து

அரைக்க‌
தேங்காய்த்துறுவல்- 2 கப்
வெந்தயம்- 1/4 டீஸ்பூன்
மிளகு +சீரகம்-தலா 1/4 டீஸ்பூன்
சின்ன வெங்காயம்- 2
கறிவேப்பிலை- 1 கொத்து
தனியாப்பொடி-2 டீஸ்பூன்
மிளகாய்ப்பொடி-2 டேபிள்ஸ்பூன்
நல்லெண்ணெய்-1 டீஸ்பூன்

செய்முறை

*கடாயில் 1 டீஸ்பூன் எண்ணெய் விட்டு வெந்தயம்+மிளகு+சீரகம்+கறிவேப்பிலை+தேங்காய்த்துறுவல்+சின்ன வெங்காயம் இவற்றை ஒன்றன் பின் ஒன்றாக போட்டு தேங்காய் நன்கு பொன்னிறமாக சிவக்கும் வரை வறுக்கவும்.அதே சமயம் தீய்ந்து விடாமலும் இருக்க வேண்டும்.

*அடுப்பை அணைத்து விட்டு தனியா மற்றும் மிளகாய்பொடிகளை சேர்க்கவும்.கடாயின் சூட்டிலயே வறுப்பட்டுவிடும்.

*ஆறியதும் நன்கு நைசாக அரைத்துக் கொள்ளவும்.

*புளியை 2 கப் நீர் அளவில் கரைத்து அரைத்த விழுதினை உப்பு சேர்த்து கரைத்துக் கொள்ளவும்.

*முருங்கைக்காயை தனியாக நீர்+உப்பு சேர்த்து வேகவைத்துக் கொள்ளவும்.

*பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து புளிகரைசலை ஊற்றி கொதிக்க விடவும்.


*குழம்பு நன்றாக கொதிக்கும் போது வேகவைத்த முருங்கையை சேர்த்து எண்ணெய் பிரியும் வரை கொதித்து இறக்கவும்.

*இதற்கு பருப்புத்துவையல் பெஸ்ட் காம்பினேஷன்.

பி.கு

*வெண்டைக்காய்,பாகற்காய்,கத்திரிக்காய் சேர்க்கும் போது தாளிப்பின் போது எண்ணெயில் வதக்கி புளிகரைசலில் வேகவிட்ட பின் மசாலாவை சேர்க்கவும்.

*சேனை,முருங்கை,கொத்தவரங்காய் சேர்க்கும் போது தனியாக உப்பு சேர்த்து வேகவைத்த பின் புளிகரைசல்+மசாலா சேர்த்து தாளித்து சேர்க்கவும்.

*பூண்டு,வெங்காயம் சேர்க்கும் போது தாளிதத்தின் போதே எண்ணெயில் நன்கு வதக்கி புளிகரைசல்+மசாலா சேர்க்கவும்.

*எல்லா காய்களும் ஒன்றாக போட்டும் செய்யலாம்.அருமையாக இருக்கும்.ஆனால் பாகற்காயுடன் மற்ற காய்களை சேர்க்க வேண்டாம்.


1 பேர் ருசி பார்த்தவர்கள்:

great-secret-of-life said...

Love Deeyal esp the onion one yummm!

01 09 10