Tuesday 30 June 2015 | By: Menaga Sathia

குஜராத்தி தாளி / Gujarathi Thali | Thali Recipe

print this page PRINT IT 
ஏற்கனவே நான் ராஜஸ்தான்,சிந்தி,பஞ்சாபி தாளி வகைகள் செய்துள்ளேன்.குஜராத்தி தாளியும் நீண்ட நாட்களாக செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தது.சில நாட்களுக்கு முன் செய்தேன்.

நான் செய்திருப்பது

சாதம்
புல்கா/ரொட்டி
குஜராத்தி காதி
படாடா நு சாக்(உருளை வறுவல்)
திண்டோரா நு சாக் (கோவைக்காய் வறுவல்)
காந்த்வி
மசாலா சாஸ்
மைக்ரோவேவ் கேசர் பேடா

Recipe Source - Here
குஜராத்தி காதி
தே.பொருட்கள்
தயிர்- 3/4 கப்
கடலைமாவு -1 டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய் -2 பொடியாக நறுக்கியது
இஞ்சி விழுது -1/4 டீஸ்பூன்
சர்க்கரை -1 1/2 டீஸ்பூன்
உப்பு -தேவைக்கு
நீர் -1 1/2 கப்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை -தேவைக்கு

தாளிக்க‌
நெய்- 1 டீஸ்பூன்
கடுகு- 1/4 டீஸ்பூன்
சீரகம்- 1/4 டீஸ்பூன்
பெருங்காயத்தூள்- 1/4 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய்- 1
கிராம்பு- 2
பட்டை -சிறுதுண்டு
கறிவேப்பிலை -5 இலைகள்

செய்முறை

*பாத்திரத்தில் கொத்தமல்லிதழை தவிர மற்ற அனைத்து பொருட்களையும் கலந்து விஸ்க் மூலம் நன்கு கலக்கவும்.

*அதனை அப்படியே அடுப்பில் வைத்து சிறுதீயில் இடைவிடாமல் கலக்கி கொண்டே 5 6 நிமிடங்கள் வரை கலக்கவும்.

*பின் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து சேர்க்கவும்.

*கொத்தமல்லிதழை தூவி இறக்கவும்.

பி.கு
*விரும்பினால் மஞ்சள்தூள் சேர்க்கலாம்.
*சர்க்கரை சேர்ப்பது சுவை மேலும் நன்றாக இருக்கும்,அதனால் கண்டிப்பாக சேர்க்கவும்.

படாடா நு சாக் (உருளை வறுவல்)

தே.பொருட்கள்

வேகவைத்த உருளை -2 பெரியது
வரமிளகாய்த்தூள் -2 டீஸ்பூன்
எள் -1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள்- 1/4 டீஸ்பூன்
மஞ்சள்தூள்- 1/4 டீஸ்பூன்
கடுகு -1/4 டீஸ்பூன்
உப்பு+எண்ணெய்= தேவைக்கு

செய்முறை
*உருளையை துண்டுகளாக்கவும்.

*கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு+ பெருங்காயத்தூள்+வரமிளகாய்த்தூள்+மஞ்சள்தூள்+எள் சேர்த்து வதங்கியதும் துண்டுகளாகிய உருளை+உப்பு சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.

திண்டோரா நு சாக் (கோவைக்காய் வறுவல்)

தே.பொருட்கள்
கோவைக்காய் -1/4 கிலோ நீளவாக்கில் நறுக்கியது
கடுகு- 1/4 டீஸ்பூன்
பெருங்காயத்தூள்- 1/4 டீஸ்பூன்
வரமிளகாய்த்தூள்- 1 டீஸ்பூன்
சீரகபொடி- 1/2 டீஸ்பூன்
உப்பு+எண்ணெய்=தேவைக்கு

செய்முறை

*கடாயில் எண்ணெய் விட்டு கடுகு+பெருங்காயம் சேர்த்து தாளித்து
நறுக்கிய கோவைக்காய் சேர்த்து வதக்கவும்.

*பின் அனைத்து பொடி வகைகள்+உப்பு சேர்த்து 5 நிமிடங்கள் வதக்கி இறக்கவும்.

மசாலா சாஸ்

தே.பொருட்கள்
தயிர் -1/2 கப்
நீர் -1 கப்
உப்பு -தேவைக்கு
க்ரீம்- 1 டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய்- 1
நறுக்கிய இஞ்சி- 1/4 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் -1/4 டீஸ்பூன்

*அனைத்தையும் மிக்ஸியில் சேர்த்து அடித்து பரிமாறவும்.

Friday 26 June 2015 | By: Menaga Sathia

பஞ்சாபி சமோசா / PUNJABI SAMOSA | SAMOSA RECIPES

print this page PRINT IT 
நம்முடைய சாதாரண சமோசாவை விட இந்த சமோசா எங்கள் அனைவருக்கும் பிடித்த ஒன்று...

குறிப்பினை இங்கே பார்த்து செய்தது.

தே.பொருட்கள்

மேல் மாவுக்கு
மைதா மாவு -2 1/2 கப்
ஓமம்- 1 டீஸ்பூன்
உப்பு -1 டீஸ்பூன்
நெய் -4 டேபிள்ஸ்பூன்

*பாத்திரத்தில் மைதா+உப்பு+ஓமம்+நெய் சேர்த்து கலக்கவும்.பின் நீர் சேர்த்து கெட்டியாக சப்பாத்தி மாவு போல பிசையவும்.

*பிசைந்த மாவினை ஈரத்துணியால் மூடி குறைந்தது 2 அல்லது 3 மணிநேரங்கள் ஊறவிடவும்.

ஸ்டப்பிங் செய்ய‌

வேகவைத்து மசித்த உருளை -5 நடுத்தரளவு
ப்ரோசன் பச்சை பட்டாணி -1 கப்
ஆம்சூர் பவுடர் -1 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா+வரமிளகாய்த்தூள்+தனியாத்தூள் -தலா 1 டீஸ்பூன்
தனியா -1 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மாதுளை விதை -1 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய இஞ்சி- 1 டீஸ்பூன்
சீரகம்- 1 டீஸ்பூன்
உப்பு- தேவைக்கு
நெய் -2 டேபிள்ஸ்பூன்

*கடாயில் நெய் விட்டு சீரகம் சேர்த்து தாளித்து நறுக்கிய இஞ்சி சேர்த்து வதக்கவும்.

*பின் ஒன்றிரண்டாக மசித்த உருளை மற்றும் தூள் வகைகள்+உப்பு சேர்த்து வதக்கவும்.

*வேறொரு கடாயில் தனியா மற்றும் காய்ந்த மாதுளை விதையை வருத்து ஒன்றிரண்டாக பொடிக்கவும்.

*பொடித்த தனியா பொடியை உருளை மசாலாவில் சேர்த்து மேலும் சிறிது நேரம் வதக்கி பட்டாணியை சேர்க்கவும்.

*2 நிமிடங்கள் வதக்கி ஸ்டப்பிங் கலவையை ஆறவைக்கவும்.

*மைதா மாவினை சிறு உருண்டைகளாக எடுத்து சப்பாத்தி போல தேய்க்கவும்.

*அதனை நடுவில் கத்தியால் கீறவும்.

*வெட்டிய நீள பகுதியில் நீர் தடவி அதனை அப்படியே 2 முனைகளையும் நடுவில் சேர்த்தால் நீர் தடவிய பகுதி ஒட்டிக்கொள்ளும்.

*அப்படியே கையில் எடுத்து சிறிது ஸ்டப்பிங் கலவையை நன்கு  அழுத்தி வைக்கவும்.

*மேற்புறம் சுற்றிலும் சிறிது நீர் தடவி அப்படியே ஒட்டி விடவும்.

*இப்படியே அனைத்து உருண்டையிலும் செய்து சூடான எண்ணெயில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

*பார்ட்டிகளில் இந்த சமோசாவை செய்து அசத்தலாம்.

பி.கு

*மேல் மாவு தளர்த்தியாக இருந்தால் சமோசா மொறுமொறுப்பாக இருக்காது.அதனால் மாவினை கெட்டியாக பிசையவும்.

*எவ்வளவு நேரம் மாவினை ஊறவைக்கிறோமோ அவ்வளவுக்கும் சமோசா நன்றாக இருக்கும்.

*அனைத்து சமோசவையும் செய்து முடிக்கும் வரை காய்ந்து போகாமல் பேரால் மூடி வைக்கவும்.

Monday 22 June 2015 | By: Menaga Sathia

புடலங்காய் கூட்டு/SNAKE GOURD(PUDALANGAI) KOOTU


print this page PRINT IT
தே.பொருட்கள்
பொடியாக நறுக்கிய புடலங்காய் -1 கப்
கடலைப்பருப்பு - 1/2 கப்
மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு

அரைக்க‌
தேங்காய்த்துறுவல் -  1/4 கப்
பச்சை மிளகாய் - 2

தாளிக்க‌

கடுகு+உளுத்தம்பருப்பு - தலா 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
பெருஞ்சீரகத்தூள் - 1 டீஸ்பூன்
நசுக்கிய பூண்டுப்பல் - 3
எண்ணெய் - 1 டீஸ்பூன்

செய்முறை

*புடலங்காயில் சிறிது உப்பு+மஞ்சள்தூள் சேர்த்து பிசிறி 10 நிமிடங்கள் வைத்து நீரை பிழிந்தெடுத்து கழுவி வைக்கவும்.

*அரைக்க கொடுத்துள்ளவைகளை நைசாக அரைக்கவும்.

*கடலைப்பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து 3/4 பதமாக வேகவைத்து அதனுடன் புடலங்காய் சேர்த்து வேகவிடவும்.

*புடங்காய் நன்கு வெந்ததும் உப்பு+அரைத்த தேங்காய் விழுது சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விடவும்.

*தேங்காய் வாசனை அடங்கியதும் தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து சேர்த்து இறக்கவும்.

Wednesday 10 June 2015 | By: Menaga Sathia

இனிப்பு பூந்தி / SWEET BOONDI | SWEET RECIPES

print this page PRINT IT 
Add caption


இந்த பதிவு எனக்கு மிகவும் ஸ்பெஷல்,ஏனென்றால் இது என்னுடைய 1000 வது பதிவு !! நண்பர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி...


ஏற்கனவே நான் இனிப்பு பூந்தி செய்துருக்கேன்,லட்டுக்காக செய்த பூந்தி பாகு ஆறிவிட்டதால் உருண்டை பிடிக்க முடியவில்லை.அதனை அப்படியே இனிப்பு பூந்தியாக பயன்படுத்திவிட்டேன்.

இனிப்பு பூந்தி செய்வதற்கு ,சர்க்கரை பூத்து போனதுபோல் வருவதற்கு இரண்டு கம்பிபதம் மிக முக்கியம்.

இதில் ஆரஞ்சு மற்றும் பச்சை கலர் சேர்த்து செய்துள்ளேன்,கலர் சேர்க்காமல் ப்ளெயினாகவும் செய்யலாம்.

தே.பொருட்கள்

கடலைமாவு- 2 கப்
அரிசி மாவு- 1/4 கப்
பேக்கிங் சோடா -1 சிட்டிகை
சர்க்கரை- 2 கப்
ஏலக்காய் பொடி- 1/4 டீஸ்பூன்
பச்சை கற்பூரம்- 1 பிஞ்ச்
ஜாதிக்காய் பொடி -1/8 டீஸ்பூன்
கிராம்பு- 3
முந்திரி- 10
திராட்சை- 10
நெய்- 2 டீஸ்பூன்
ஆரஞ்சு மற்றும் பச்சை கலர் -1 துளி
எண்ணெய் பொரிக்க‌

செய்முறை

*கடலைமாவு+அரிசிமாவு+பேக்கிங் சோடா ஒன்றாக கலந்து நீர் சேர்த்து கரைத்து கெட்டியாக கொள்ளவும்.

*ஒரு பெரிய குழிக்கரண்டி மாவினை எடுத்து 2 கிண்ணங்களில் ஆரஞ்சு மற்றும் பச்சை கலர் கலந்து வைக்கவும்.

*எண்ணெய் காயவைத்து பூந்திகரண்டி அல்லது ஜல்லிகரண்டி வைத்து அதன் மேல் ஒரு கரண்டி மாவினை ஊற்றி தேய்த்து பூந்திகளாக பொரித்தெடுக்கவும்.

*இதேபோல் மற்ற ஆரஞ்சு மற்றும் பச்சை கலர் மாவினை செய்துக் கொள்ளவும்.

*ஒரு பாத்திரத்தில் சர்க்கரை சேர்த்து 1 கப் நீர் சேர்த்து சர்க்கரை கரையும் வரை கொதிக்கவிடவும்.

*சர்க்கரை கரைந்து இரண்டு கம்பி பதம் வரும் போது இறக்கிவிடவும்.(இரண்டு கம்பி பதம் என்பது பாகினை 2 விரல்களுக்கிடையே தொட்டு பார்த்தால் 2 நூலிழைபோல வரும்).

*இப்போழுது பூந்தி+பச்சை கற்பூரம்(நொறுக்கி சேர்க்கவும்)+ஏலக்காய்த்தூள் சேர்க்கவும்.

*நெய்யில் முந்திரி+திராட்சை+கிராம்பு+ஜாதிக்காய்த்தூள் இவற்றை வறுத்து பூந்தியில் சேர்த்து நன்றாக கிளறவும்.

*சர்க்கரை பாகு ஆறம்போது பூந்தி பூத்து போய் உதிர் உதிராக வரும்.

*நன்றாக ஆறியதும் காற்றுபுகாத பாத்திரத்தில் வைத்து பயன்படுத்தவும்.

பி.கு

*கடலைமாவில்,கரண்டியின் பின் பக்கத்தில் தோய்த்து எண்ணெயில் விட்டால் பூந்தியில் வால் போல வந்தால் மாவு கெட்டியாக இருக்கிறது என அர்த்தம்,1 டீஸ்பூன் அளவு நீர் சேர்த்து கரைத்து செய்யவும்.

*பூந்தி தட்டையாக வந்தால் மாவு நீர்க்க இருக்கிறது,1 டீஸ்பூன் கடலைமாவு சேர்த்து கரைக்கவும்.

*பூந்திகளை மொறுமொறுவென பொரிக்க தேவையில்லை,லட்டுகளுக்கு செய்வது போல லேசாக வெந்தாலே போதும்.

*பச்சை கற்பூரத்தை சிறிதளவே சேர்க்கவும்.

Monday 8 June 2015 | By: Menaga Sathia

ஃபலூடா / Falooda Recipe With Homemade Falooda Sev | Homemade Falooda


print this page PRINT IT 
ஃபலூடா செய்வதற்கு சேவ் & சப்ஜா விதை முக்கியமானது.கடையில் விற்கும் சேவ் ஜவ்வரிசி மாவில் செய்து விற்பார்கள்.இங்கு நான் செய்திருப்பது சோளமாவு.இனி சேவ் எப்படி செய்வதென்று பார்க்கலாம்.

தே.பொருட்கள்

சோளமாவு- 1/2 கப்
நீர்- 1 1/2 கப்
சர்க்கரை- 2 டேபிள்ஸ்பூன்

செய்முறை

*ஒரு பாத்திரம் நிறை ஐஸ் கட்டிகளை போட்டு வைக்கவும்.

*வேறொரு பாத்திரத்தில் சோளமாவு+சர்க்கரை+நீர் சேர்த்து கட்டியில்லாமல் கரைக்கவும்.

*அப்படியே அடுப்பில் வைத்து கட்டியில்லாமல் கலக்கி கொண்டே இருக்கவும்.

*கெட்டியாக கலர் சற்று வெளிர் நிறத்தில் மாறி வரும் போது ஓமப்பொடி அச்சியில் போட்டு ஐஸ்கட்டி போட்டிருக்கும் பாத்திரத்தில் அப்படியே பிழியவும்.



*பயன்படுத்தும் வரை சேவ்வினை ஐஸ்தண்ணிரிலேயே வைத்திருக்கவும்.

பி.கு
*இதில் விரும்பிய பிலேவர்ஸ் அல்லது கலர் சேர்க்கலாம்.நான் பிலெயினாகவே பயன்படுத்திருக்கேன்.

*கலர் சேர்ப்பதாக இருந்தால் சோளமாவு கெட்டியாக நிறம் மாறி வரும் போது சேர்த்து பயன்படுத்தவும்.

பலூடா செய்ய தே.பொருட்கள்

பலூடா சேவ் - 1/3 கப்
சப்ஜா விதை - 1/2 டேபிள்ஸ்பூன் (இதனை நீரில் 1/2 மணிநேரம் ஊறவைக்கவும்,ஊறிய பிறகு 2 டேபிள்ஸ்பூன் அளவில் வரும்)
ரோஸ் சிரப் -4 டேபிள்ஸ்பூன்
குளிர்ந்த பால்- 2 கப்
வெனிலா ஐஸ்கீரிம்- 1 ஸ்கூப்
பொடியாக நறுக்கிய பிஸ்தா -1 டீஸ்பூன் (அலங்கரிக்க)

செய்முறை

*மிக உயரமான கண்ணாடி டம்ளரில் 2 டேபிள்ஸ்பூன் சிரப் ஊற்றவும்.

*பின் 1 டீஸ்பூன் ஊறவைத்த சப்ஜா விதை சேர்க்கவும்.

*அதன் மீது 2 டேபிள்ஸ்பூன் பலூடா சேவ் போடவும்.

*நான் மிக உயரமான டம்ளர் பயன்படுத்தியிருப்பதால் 2 லேயராக போட்டுள்ளேன்.

*சிறிய டம்ளர் என்றால் 1 லேயர் போதும்.பின் அதன் மீது பொறுமையாக பாலினை ஊற்றவும்.

*அதன் மூது ஒரு ஸ்கூப் ஐஸ்க்ரீம்+பிஸ்தா தூவி உடனடியாக பரிமாறவும்.
Thursday 4 June 2015 | By: Menaga Sathia

பாவ் பாஜி / Pav Bhaji | Authenthic Pav Bhaji Recipe From Mumbai Juhu Beach

print this page PRINT IT 

நானும் பாவ் பாஜி செய்து போஸ்ட் செய்துருக்கேன்,ஆனால் அதை  விட இந்த குறிப்பு பிள்ளைகளிடம் செம ஹிட் .

இந்த குறிப்பு மும்மை ஜுஹு பீச் பகுதியில் செய்யப்படும் ரெசிபி.

இதில் உருளை,பட்டாணி மட்டும் சேர்த்தால் போதும்.அதேபோல் அதிக அளவு வெண்ணெய் சேர்க்க வேண்டும்.

நாம் பன்னை வெறும் வெண்ணெய் மட்டும் சேர்த்து டோஸ்ட் செய்வோம்,ஆனால் இதில் சில மசாலாக்க‌ளை சேர்த்து டோஸ்ட் செய்ததில் செம சுவை.

பின் இதில் மிக முக்கியமானது பாவ் பாஜி மசாலா பொடி.

தே.பொருட்கள்

பொடியாக நறுக்கிய குடமிளகாய் -1/4 கப்
நறுக்கிய தக்காளி- 2
பொடியாக நறுக்கிய வெங்காயம் -1 பெரியது
இஞ்சி பூண்டு விழுது -1 டேபிள்ஸ்பூன்
வேகவைத்த உருளை- 2 பெரியது
வேகவைத்த பச்சை பட்டாணி- 1/2 கப்
பாவ் பாஜி மசாலா- 2 டீஸ்பூன்
வரமிளகாய்த்தூள்- 1 டீஸ்பூன்
தனியாத்தூள்- 1/2 டீஸ்பூன்
மஞ்சள்தூள்- 1/4 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை -சிறிதளவு
உப்பு -தேவைக்கு
எலுமிச்சை சாறு -1 டேபிள்ஸ்பூன்
வெண்ணெய்- 1/2 கப்

செய்முறை

*கடாயில் குடமிளகாய்+நீர் சேர்த்து வேகவைக்கவும்.


*பின் அதனுடன் நறுக்கிய தக்காளி+வேக வைத்த உருளை (கையால் மசித்து சேர்க்கவும்)+பச்சை பட்டாணி+இஞ்சி பூண்டு விழுது+மஞ்சள்தூள்+சிறிது வெண்ணெய் சேர்த்து மேலும் நீர் ஊற்றி வேகவைக்கவும்.

*இதனை Potato Masher நன்றாக மசித்து விடவும்.தேவைக்கு சிறிது நீர் சேர்க்கவும்.

*இப்போழுது பாவ் பாஜி மசாலா+உப்பு+சிறிது கொத்தமல்லிதழை சேர்க்கவும்.

*மேலும் சிறிது நீர் ஊற்றி Potato Masher நன்றாக மசித்து விட்டு,வெண்ணெய் மற்றும் வெங்காயம் சிறிது சேர்க்கவும்.

*சிறிது இஞ்சி பூண்டு விழுது+வரமிளகாய்த்தூள்+பாவ் பாஜி மசாலா+உப்பு சிறிது சேர்க்கவும்.


*பின் எலுமிச்சை சாறு சேர்க்கவும்.

*இவை அனைத்தையும் ஒன்றாக சேரும்படி கலந்து மீண்டும் Potato Masher மசித்து விடவும்.

*கலவை  நன்றாக கெட்டியாக வரும் போது இறக்கவும்.

பன் டோஸ்ட் செய்ய‌

பாவ் பன்- 4
வெண்ணெய்- 1/4 கப்
வரமிளகாய்த்தூள் -1 டீஸ்பூன்
பாவ் பாஜி மசாலா- 1/2 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லிதழை -சிறிது

செய்முறை

*கடாயில் பன்னை தவிர மேற்கூறிய பொருட்களை சேர்த்து லேசாக வதக்கி,பன்னை 2 ஆக வெட்டி டோஸ்ட் செய்யவும்.


பரிமாறும் முறை

*தட்டில் பாவ் மாசாலா ஊற்றி அதன் மேல் கொத்தமல்லிதழை+சிறிது வெண்ணை சேர்க்கவும்.

*சிறியதுண்டு எலுமிச்சை பழம் மற்றும் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் டோஸ்ட் செய்த பன்னை வைத்து பரிமாறவும்.

*இதே முறையில் செய்து பாருங்கள்,சுவை மிக அருமையாக இருக்கும்.

பி.கு

இதில் கேரட்+காலிபிளவர் என மற்ற காய்களை சேர்க்க வேண்டாம்.சுவை மாறிவிடும்.
Monday 1 June 2015 | By: Menaga Sathia

பிஸிபேளாபாத் மசாலா பொடி / Bisi Bele Bath Masala Powder | Authentic Mysore BBB Masala Powder


print this page PRINT IT 

நானும் பிஸிபேளாபாத் மசாலா பொடி போட்டு சாதம் செய்துருக்கேன்,எதுவும் சரியாக வரவில்லை.கடைசியாக இந்த வீடியோவில் சொல்லியபடியே செய்தேன்.செம வாசனை,சாதமும் மிக அருமை.

சாதரணமாக இந்த பொடியில் கொப்பரைத்துறுவல் சேர்த்து அரைப்பாங்க,ஆனால் இந்த செய்முறையில் சேர்க்க தேவையில்லை.சாதம் செய்யும் போது சேர்த்தால் போதுமானது.

அதனால் தேங்காய் சேர்க்காததால் இந்த பொடியை 3 மாதம்வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.

இதே பொடியை உருளை மற்றும் கத்திரிக்காய் வறுவல் செய்தால் மிக அருமை.

மேலும் இதில் காஷ்மிரி மிளகாயை பயன்படுத்துவது ந‌ல்ல நிறைத்தை கொடுக்கும்.

வறுக்கும் போதும் கொடுத்துள்ள முறைப்படியே பொருட்களை சேர்த்து வதக்கவும்.

தே.பொருட்கள்
உளுத்தம்பருப்பு - 1 1/2 டேபிள்ஸ்பூன்
கடலைப்பருப்பு- 1 1/2 டேபிள்ஸ்பூன்
தனியா- 1/4 கப்+1/8 கப்
காய்ந்த மிளகாய் -10
காஷ்மிரி மிளகாய்- 22
1 இஞ்ச் அளவு பட்டை- 6
கடுகு- 1/2 டீஸ்பூன்
கசகசா- 1/2 டேபிள்ஸ்பூன்
கிராம்பு -3
வெந்தயம்- 1/8 டீஸ்பூன்
சீரகம்- 1/2 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் -1டேபிள்ஸ்பூன்

செய்முறை

*கடாயில் எண்ணெய் ஊற்றி உளுத்தம்பருப்பு+கடலைப்பருப்பு+கடுகு+கிராம்பு+வெந்தயம்+பட்டை+கா.மிளகாய்+காஷ்மிரி மிளகாய் இவற்றை ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வறுக்கவும்.

*கடைசியாக தனியா+கசகசா சேர்த்து வதக்கவும்.

*நன்கு ஆறியதும் மிக்ஸியில் நைசாக பொடிக்கவும்.

*அரைத்த பொடியை சிறிது நேரம் ஆறவைத்து காற்றுபுகாத டப்பாவில் வைத்திருந்து பயன்படுத்தவும்.

01 09 10