Friday 28 February 2014 | By: Menaga Sathia

கவுனி அரிசி புட்டு / Black Rice ( Kavuni Arisi ) Puttu | 7 Days Breakfast Menu # 6


தே.பொருட்கள்

கவுனி அரிசி - 1 கப்
சர்க்கரை -3/4 கப்
தேங்காய்த்துறுவல் - 1/4 கப்
ஏலக்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன்
நெய் - 1 டேபிள்ஸ்பூன்

செய்முறை

*கவுனி அரிசியை முதல் நாள் இரவே ஊறவைத்து மறுநாள் நீரை வடிகட்டி ஈரம் போக உலர்த்தவும்.

*உலர்ந்த பின் அரிசியை மிக்ஸியில் நைசாக பொடிக்கவும்.

*அதன் வெறும் கடாயில் ஈரம் போக வறுத்து ஆறவைத்து சலிக்கவும்.
*சலித்த மாவில் 1 சிட்டிகை உப்பு சேர்த்து சிறிது சிறிது நீர் சேர்த்து பிசிறவும்.

*மாவை கையால் பிடித்தால் பொலபொலவென்று உதிரவேண்டும்.

*அதனை இட்லி பாத்திரத்தில் ஆவியில் 15 நிமிடம் வேகவைத்து எடுக்கவும்.
*அதனுடன் மேற்கூறிய பொருட்களை ஒன்றாக கலந்து  பரிமாறவும்.
print this page
Thursday 27 February 2014 | By: Menaga Sathia

சாமை இட்லி /Saamai ( Little Millet ) Idli | Millet Recipes | 7 Days Breakfast Menu # 5


தே.பொருட்கள்

சாமை அரிசி -2 கப்
வெள்ளை முழு உளுந்து -1/2 கப்
வெந்தயம் -1/4 டீஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன்

செய்முறை

*அரிசி மற்றும் உளுந்து+வெந்தயம் இவற்றை கழுவி தனித்தனியாக 2 மணிநேரம் ஊறவைக்கவும்.

*ஊறியதும் இட்லிக்கு அரைப்பது போல் அரைத்து உப்பு சேர்த்து கரைத்து  8 மணிநேரம் புளிக்கவிடவும்.

*புளித்ததும் இட்லிகளாக ஊற்றி ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.

*சட்னி அல்லது பொடியுடன் பரிமாறவும்.

பி.கு

இதே போல் சாமை அரிசிக்கு பதில் மற்றசிறுதானியங்களிலும் செய்யலாம்.

This is off to Priya's Vegan Thursday
print this page
Wednesday 26 February 2014 | By: Menaga Sathia

மினி ஊத்தாப்பம் / Mini Uthappam (3 Tastes) | 7 Days Breakfast Menu # 4


தே.பொருட்கள்

இட்லிமாவு - 2 கப்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1/4 கப்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - 2 டேபிள்ஸ்பூன்
இட்லிபொடி - தேவைக்கு
எண்ணெய் அல்லது நெய் - சுடுவதற்கு

செய்முறை

*தோசைக்கல்லை காயவைத்து எண்ணெய் தடவி ஒரு கரண்டி மாவை ஊற்றவும்.

*மாவை தோசைக்கு தேய்ப்பது போல் மெலிதாக தேய்க்ககூடாது.மாவு தானாகவே பரவிக்கொள்ளும்.
*அதன்மேல் நறுக்கிய வெங்காயம் அல்லது இட்லி பொடி அல்லது கொத்தமல்லித்தழை தூவிவிடவும்.

*சுற்றிலும் நெய் அல்லது எண்ணெய் விட்டு மறுபுறம் திருப்பி போடவும்.

*குறைந்த தீயில் வேகவைத்து எடுக்கவும்.

பி.கு
*அதிக தீயில் வேகவைத்தால் ஊத்தாப்பம் நடுவில் வேகாமல் மாவாக இருக்கும்.

*இட்லிக்கு ஊற்றுவதுப்போல் மாவு கெட்டியாக இருக்கவேண்டும்.

*இதன் மேல் பொடியாக நறுக்கிய தக்காளி அல்லது கேரட் துறுவல் அல்லது துறுவிய கோஸ் சேர்க்கலாம்.
print this page
Tuesday 25 February 2014 | By: Menaga Sathia

இடியாப்பம் &தேங்காய்ப்பால் /Idiyappam &Coconut Milk | 7 Days Breakfast Menu # 3

தே.பொருட்கள்:

அரிசிமாவு - 1 கப்
கொதிநீர் - 1 1/2 கப்
உப்பு - தேவைக்கு

தேங்காய் பால் செய்ய

தேங்காய்த்துறுவல் - 1 கப்
ஏலக்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன்
சர்க்கரை - இனிப்பிற்கேற்ப
 
செய்முறை:
*இடியாப்ப மாவில் உப்பு கலந்து கொதி நீர் சேர்த்து கரண்டியால் கெட்டியாக கிளறவும்.



*இடியாப்ப அச்சில் மாவை பிழிந்து ஆவியில் வேகவைத்தெடுக்கவும்.



*தேங்காய்த்துறுவலில் ஏலக்காய்த்தூள் +வெதுவெதுப்பான நீர் சேர்த்து அரைத்து கெட்டியாக பால் எடுக்கவும்.

*அதனுடன்  சர்க்கரை கலந்து இடியாப்பத்துடன் பரிமாறவும்.

பி.கு:
*இடியாப்ப மாவு பிசையும் போது தண்ணீர் நன்கு கொதித்திருந்தால் தான் மாவு பிழிய வரும்.
print this page
Monday 24 February 2014 | By: Menaga Sathia

வரகரிசி மிளகு பொங்கல் (நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோவில் ஸ்டைல்) / Varagarisi (Kodo Millet) Milagu Pongal |Nanganallur Anjaneyar Kovil Style | Millet Recipes |7 Days Breakfast Menu # 2


நாம் சாதரணமாக வெண்பொங்கலில் மிள்கு சீரகத்தினை முழுதாக தாளித்து சேர்ப்போம்.இந்த ஸ்பெஷல் கோவில் வெண்பொங்கலில் மிள்கு சீரகத்தினை கரகரப்பாக பொடித்து தாளித்து சேர்ப்பார்கள்.

அரிசிக்கு பதில் இந்த பொங்கலை வரகரிசியில் செய்திருக்கேன்.இதே போல் வரகரிசிக்கு பதில் மற்ற சிறுதானியங்களிலும் செய்யலாம்.

Recipe Source : Prema's Culinary

தே.பொருட்கள்

வரகரிசி - 1 கப்
பாசிப்பருப்பு - 1/4 கப்
நீர் - 3 1/2 கப்
உப்பு- தேவைக்கு

தாளிக்க

நெய் - 2 டேபிள்ஸ்பூன்
முந்திரி - 10
மிளகு+சீரகம் - தலா 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்

செய்முறை

*வரகரிசி+பாசிப்பருப்பு இவற்றை  கழுவி 3 1/2 கப் நீரில் 15 நிமிடங்கள் ஊறவைத்து உப்பு சேர்த்து குக்கரில் 3-4 விசில் வரை வேகவைக்கவும்.

 *வெந்ததும் நன்கு மசித்துக் கொள்ள்வும்.
*மிளகு+சீரகத்தினை கரகரப்பாக பொடிக்கவும்.

*பின் நெய்யில் முந்திரி+பொடித்த மிளகு சீரகம்+பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்து சேர்க்கவும்.


print this page
Sunday 23 February 2014 | By: Menaga Sathia

ரவா உப்புமா/Rava Upma | 7 Days Breakfast Menu # 1


தே.பொருட்கள்

ரவை - 1 கப்
நீர் - 2 கப்
வெங்காயம் -1 சிறியது
பச்சை மிளகாய் -2
நெய் -1 டீஸ்பூன்
எண்ணெய் + உப்பு = தேவைக்கு

தாளிக்க

கடுகு+உளுத்தம்பருப்பு - தலா 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை -1 கொத்து
கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்

செய்முறை

*ரவையை லேசாக வெறும் கடாயில் வறுத்தெடுக்கவும்.வெங்காய்த்தை மெலிதாக நீளவாக்கில் நறுக்கவும்,பச்சை மிளகாயை கீறவும்.

*பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளை சேர்த்து தாளித்து வெங்காயம்+பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி 2 கப் நீர்+உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.

*நீர் கொதிக்கும் போது வருத்த ரவை கொஞ்ச கொஞ்சமாக சேர்த்து கெட்டிபடாமல் கிளறவும்.

*தண்ணீர் சுண்டிவரும் போது நெய் சேர்த்து இறக்கி மூடி போட்டு 10 நிமிடம் வைக்கவும்.

*சிறிது நேரம் கழித்து கிளறினால் ரவை வெந்து பொலபொலவெனவும் நெய் வாசனையுடனும் நன்றாக இருக்கும்.

*சட்னி/ சர்க்கரை உடன் சாப்பிட நன்றாக இருக்கும்.
print this page
Wednesday 19 February 2014 | By: Menaga Sathia

கோவை ஹோட்டல் அங்கனன் ஸ்டைல் சிக்கன் பிரியாணி /Kongu Style Chicken Biryani | Kovai Hotel Anganan Style Chicken Biryani | Restaurant Style Recipes



கோயம்புத்தூரில் வெஜ் ஹோட்டலுக்கு அன்னபூரணா எப்படி பிரபலமோ,நான் -வெஜ் ஹோட்டலுக்கு அங்கனன் மிக பிரபலம்.இங்கு அசைவ பிரியாணி மிக சுவையாக இருக்கும்.

இந்த பிரியாணியின் ஸ்பெஷல் தக்காளி சேர்க்க தேவையில்லை.பூண்டை முழுதாகவும்,இஞ்சியை அரைத்தும் சேர்க்கவேண்டும்.காரத்திற்கு பச்சை மிளகாய் மட்டும் சேர்க்கவேண்டும்.கொத்தமல்லி மற்றும் அதனுடன் சில மசாலா சேர்த்து அரைத்தால் அழகான கலர் இந்த பிரியாணிக்கு கிடைக்கும்.

Recipe Source: Ramyacooks

தே.பொருட்கள்

சிக்கன் -1/2 கிலோ
பாஸ்மதி - 3 கப்
வெங்காயம் -2 பெரியது
கீறிய பச்சை மிளகாய் -3
முந்திரி -10
பூண்டுப்பல் -15
புதினா -1 கைப்பிடி
தயிர் - 2 டேபிள்ஸ்பூன்
நெய் -5 டேபிள்ஸ்பூன்
எலுமிச்சை சாறு -2 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் -2 டீஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

அரைக்க

இஞ்சி - 1 அங்குலத்துண்டு
பச்சை மிளகாய் - 4
பட்டை -1சிறுதுண்டு
கிராம்பு -3
ஏலக்காய் -3
கசகசா -1 டீஸ்பூன்
நறுக்கிய வெங்காயம் - 1 கைப்பிடி
கொத்தமல்லித்தழை - 1/4 கப்

செய்முறை

* அரைக்க கொடுத்துள்ளவைகலை மைய அரைக்கவும்.அரிசியை கழுவி 20 நிமிடம் ஊறவைக்கவும்.

*பாத்திரத்தில் நெய்+எண்ணெய் விட்டு முந்திரி+பூண்டுப்பல்+வெங்காயம் +புதினா என ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வதக்கவும்.

*பின் தயிர்+அரைத்த விழுதினை சேர்த்து நன்கு வதக்கவும்.
*சிக்கன்+மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும்.
*இதனுடன் ஊறவைத்த அரிசியை நன்கு வடிகட்டி இதனுடன் சேர்த்து கிளறி 4 1/2 நீர் +உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.
*அரிசி முக்கால் பாகம் வெந்து வரும் போது  கீறிய பச்சை மிளகாய் +எலுமிச்சை சாறு சேர்க்கவும்.
*குக்கரில் 3 விசில் வரை வேகவைத்து எடுக்கவும் அல்லது 20 நிமிடம் தம் போடவும்.

*சாதம் வெந்ததும் மீதமுள்ள நெய் சேர்த்து கிளறி ராய்த்தாவுடன் பரிமாறவும்.

பி.கு
*காரம் அதிகம் வேண்டுமெனில் பச்சை மிளகாயை கூடுதலாக சேர்க்கவும்.

Monday 17 February 2014 | By: Menaga Sathia

சட்னி & பொடி வகைகள்/ Chutney & Podi Varieties | 40 Types Of Side Dish For Idli & Dosa |Collection Of Recipes

Chutney Varieties

Idli Sambhar
Saravana Bhavan Hotel Sambhar
Kara Chutney
Kara Chutney
Coconut Chutney
Coconut Chutney -2

Tindora Chutney
Tindora Chutney
Tomato Chutney -6
Tomato Chutney -6
Drumstick Thokku
Drumstick Thokku


Tomato Chutney -5
Tomato Chutney -5
Tomato sambhar
Tomato Sambhar
Onion Tomato Chutney
Onion Tomato Chutney


Coconut Chutney
Coconut Chutney
Kadappa
Kadappa
Garlic Smoked Tomato Chutney
Garlic Smoked Tomato Chutney


Vengaya Kosu
Vengaya Kosu
Coriander Chutney
Coriander Chutney
Tomato Kurma
Tomato Kurma


Tomato Kotsu
Tomato Kotsu
Easy Chutney
Easy Chutney
Mannargudi Kotsu
Mannarkudi Kotsu


Smoked Brinjal Chutney
Smoked Brinjal Chutney
Peanut Chutney
Peanut Chutney
Small Onion Chutney -2
Smal Onion Chutney -2


Vegetable Chutney
Vegetable Chutney
Channa Dal Chutney
Channa Dal Chutney
Idli Sambhar
Idli Sambhar


Tomato Chutney -4
Tomato Chutney -4
Tomato Chutney - 3
Tomato Chutney -3
Mango Ginger Coconut Chutney
Mango Ginger Coconut Chutney


Garlic Chutney
Garlic Chutney
Vada Curry
Vada Curry
Small Onion Chutney
Small Onion Chutney


Tomato Chutney -2
Tomato Chutney -2
Tomato Chutney
Tomato Chutney
Brinjal Chutney
Brinjal Chutney


Tomato Mint Chutney
Tomato Mint Chutney
Brinjal Kotsu
Brinjal Kotsu

Podi Varieties

Idli Podi
Idli Podi -2
Idli Podi -2
Garlic Chilli Podi
Garlic Chilli Podi

 Flax Seeds Idli Podi
Flax Seeds Idli Podi
  MTR Style Idli Milagai Podi
MTR Style Idli Milagai Podi

01 09 10