Showing posts with label புட்டு வகைகள்/கிராமத்து சமையல். Show all posts
Showing posts with label புட்டு வகைகள்/கிராமத்து சமையல். Show all posts
Saturday, 10 January 2015 | By: Menaga Sathia

கேழ்வரகு அடை/Ragi Adai | 7 Days Dinner Menu # 5

தே.பொருட்கள்

கேழ்வரகு மாவு - 1 கப்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 3 டேபிள்ஸ்பூன்
முருங்கை இலை - 1/2 கப்
காய்ந்த மிளகாய் -1
உப்பு + எண்ணெய் = தேவைக்கு

செய்முறை

* கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்த மிளகாயை 2ஆக கிள்ளி போட்டு தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கிய பின் முருங்கை இலை சேர்த்து வதக்கி இறக்கவும்.

*மாவில் உப்பு+வதக்கிய வெங்காய கலவை சேர்த்து நீர் தெளித்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசையவும்.

*சிறு உருண்டைகளாக எடுத்து மெலிதாக தட்டி தவாவில் எண்ணெய் விட்டு இருபுறமும் வேகவைத்து எடுக்கவும்.
Friday, 28 February 2014 | By: Menaga Sathia

கவுனி அரிசி புட்டு / Black Rice ( Kavuni Arisi ) Puttu | 7 Days Breakfast Menu # 6


தே.பொருட்கள்

கவுனி அரிசி - 1 கப்
சர்க்கரை -3/4 கப்
தேங்காய்த்துறுவல் - 1/4 கப்
ஏலக்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன்
நெய் - 1 டேபிள்ஸ்பூன்

செய்முறை

*கவுனி அரிசியை முதல் நாள் இரவே ஊறவைத்து மறுநாள் நீரை வடிகட்டி ஈரம் போக உலர்த்தவும்.

*உலர்ந்த பின் அரிசியை மிக்ஸியில் நைசாக பொடிக்கவும்.

*அதன் வெறும் கடாயில் ஈரம் போக வறுத்து ஆறவைத்து சலிக்கவும்.
*சலித்த மாவில் 1 சிட்டிகை உப்பு சேர்த்து சிறிது சிறிது நீர் சேர்த்து பிசிறவும்.

*மாவை கையால் பிடித்தால் பொலபொலவென்று உதிரவேண்டும்.

*அதனை இட்லி பாத்திரத்தில் ஆவியில் 15 நிமிடம் வேகவைத்து எடுக்கவும்.
*அதனுடன் மேற்கூறிய பொருட்களை ஒன்றாக கலந்து  பரிமாறவும்.
print this page
Wednesday, 30 October 2013 | By: Menaga Sathia

வரகரிசி முறுக்கு / Varagarisi Murukku | Kodo Millet Rice Murukku | Millet Recipes

வரகு - சிறுதானியங்களில் ஒன்று. இதன் விதை 1000 வருடங்கள் வரைக்கும் முளைப்பு திறன் கொண்டது.

பயன்கள் - - வரகினை அரிசிக்கு பதிலாக இட்லி,தோசைக்கு பயன்படுத்தலாம்.
இதில் புரதம்,கால்சியம்,வைட்டமின் பி மற்றும் தாதுப்பொருட்கள்  இருக்கு.விரைவில் செரிமானம் ஆவதுடன்  உடலுக்கு தேவையான  சக்தியைக் கொடுக்கும்.

அரிசி கோதுமையைக் காட்டிலும்  வரகில் நார்ச்சத்து மிக அதிகம்.மாவுசத்தும் குறைவு..

வரகினை கோவில் கும்பத்தில் வைத்து பத்திரப்படுத்துவதற்கு காரணம் அதற்கு இடியைத்தாங்கும் சக்தி உண்டு.

இதை உணவில் சேர்ப்பதால் சர்க்கறை அளவை குறைக்கிறது,மூட்டுவலியைக் குறைக்க உதவுகிறது,மாதவிடாய் கோளாறு கொண்ட பெண்கள் வரகினை சமைத்து சாப்பிடுவது மிக நல்லது.கண் நரம்பு  நோய்களை தடுக்கும் சக்தி கொண்டது...

இதில் முறுக்கு செய்வதை பார்க்கலாம்..

தே.பொருட்கள்

வரகரிசி -1 கப்
பொட்டுக்கடலை மாவு -1 கப்
வறுத்த உளுத்தமாவு -1/4 கப்
பெருங்காயத்தூள் -1/4 டீஸ்பூன்
வெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
ஓமம் -1 டீஸ்பூன்
எள் -1 டீஸ்பூன்
உப்பு -1 டீஸ்பூன்
எண்ணெய் -பொரிக்க

செய்முறை
வரகரிசி


*வரகினை கழுவி 2 மணிநேரம் ஊறவைத்து  மைய அரைக்கவும்.

*அதனுடன் எண்ணெய் நீங்கலாக மேற்கூறிய பொருட்கள் சேர்த்து நன்றாக பிசையவும்.


*பின் தேவைக்கு நீர் சேர்த்து பிசையவும்.


*முறுக்கு அச்சில் மாவினை கொஞ்சமாக போட்டு எண்ணெயில் பிழிந்து பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

*இந்த முறுக்கு மிக சுவையாக இருக்கும்.

Sending to Asiya akka's WTML event Gayathri & Gayathri's Diwali Spl  Event& Diwali Delicacies  Event Priya & Sangee
Friday, 9 August 2013 | By: Menaga Sathia

வெல்ல புட்டு/Vella Puttu



தே.பொருட்கள்

மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு - 1/8 டீஸ்பூன்
நீர் - 3/4 கப் + 1/4 கப்
வெல்லம் - 3/4  கப்
தேங்காய்த்துறுவல் - 3 டேபிள்ஸ்பூன்
ஏலக்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன்
நெய் - 1 டேபிள்ஸ்பூன்

செய்முறை

*அரிசிமாவை வெறும் கடாயில் லேசாக வறுக்கவும்.


*3/4 கப் நீரில் மஞ்சள்தூள் + உப்பு சேர்த்து மைக்ரோவேவில் 1 நிமிடம் சூடு செய்து வறுத்த மாவில் கொஞ்சகொஞ்சமாக தெளித்து கட்டியில்லாமல் உதிரியாக பிசையவும்.

*மாவை கையால் எடுத்தால் உருண்டை பிடிக்க வரவேண்டும்,அழுத்தினால் பொலபொலவென கொட்டவேண்டும்.அதுவே சரியான பதம்.

*அதனை ஆவியில் 30-45 நிமிடங்கள் வேகவைத்து ஆறவைக்கவும்.

*வெல்லத்தை 1/4 கப் நீரில் சூடு செய்து,கரைந்ததும் வடிகட்டி மீண்டும் கொதிக்கவைக்கவும்.


*பாகை நீரில் விட்டால் உருண்டை எடுக்கும் பதத்தில் வரவேண்டும்.

*அந்த பதத்தில் பாகை மாவில் கொட்டி கிளறி 5 நிமிடங்கள் வைக்கவும்.



* அதனுடன் தேங்காய்த்துறுவல்+ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு கிளறவும்.


Monday, 22 July 2013 | By: Menaga Sathia

கோதுமை புட்டு - 2 /Wheat Puttu - 2


ஏற்கனவே நான் கோதுமை புட்டினை மாவில் செய்துருக்கேன்.அந்த பதிவின் கமெண்டில் உமா முழுக்கோதுமை  ஊறவைத்து செய்தால் நன்றாக இருக்கும் என சொன்னபோது அதன்படி செய்து பார்த்ததில் மிக அருமையாக இருந்தது.
தே.பொருட்கள்

முழுக்கோதுமை - 1/2 கப்
உப்பு - 1/8 டீஸ்பூன்
சர்க்கரை - 1/4 கப்
நெய் - 1 டீஸ்பூன்
ஏலக்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன்
தேங்காய்த்துறுவல் - 2 டேபிள்ஸ்பூன்

செய்முறை

*கோதுமையை முதல்நாள் இரவே ஊறவைத்து மறுநாள் கழுவி நீரை வடிகட்டி துணியில் ஈரம்போக உலர்த்தவும்.



*உலர்ந்ததும் மிக்ஸியில் அரைக்கவும்.விப்பரில் ஒரேடியாக அரைக்காமல் விட்டு விட்டு அரைத்தால் நன்றாக அரைக்கமுடியும்.


*அதனை ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.

*கொஞ்சம் சூடாக இருக்கும் போதே மிக்ஸியில் வேகவைத்த கோதுமையை 1 சுற்று சுற்றி எடுத்தால் பொலபொலவென இருக்கும்.


*அதனுடன் மேற்கூறிய அனைத்து பொருட்களும் ஒன்றாக கலந்து பரிமாறவும்.

Monday, 29 April 2013 | By: Menaga Sathia

சுரைக்காய் முருங்கை கீரை அடை/Bottle Gourd Drumstick leaves Adai

தே.பொருட்கள்

கொண்டைக்கடலை + பச்சை பயிறு+மைசூர் பருப்பு - தலா 1/2 கப்
முருங்கை கீரை - 1 கப்
துருவிய சுரைக்காய் - 1/2 கப்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1
காய்ந்த மிளகாய் -4
சோம்பு - 1 டீஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க

கடுகு +உளுத்தம்பருப்பு - தலா 1/2 டீஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்

செய்முறை

*பருப்பு வகைகளை குறைந்தது 6 மணிநேரம் ஊறவைத்து  காய்ந்த மிளகாய்+உப்பு+ சோம்பு சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.

*தாளிக்க கொடுத்துள்ளவைகளை பொருட்களை தாளித்து வெங்காயம்+முருங்கை இலை சேர்த்து வதக்கி அரைத்த மாவில் சேர்க்கவும்.

*துருவிய சுரைக்காய் சேர்த்து நன்கு கலக்கவும்.கெட்டியாக இல்லாமலும் தண்ணியாக இல்லாமலும் மாவு இருக்கவேண்டும்.

*தவாவில் எண்ணெய் விட்டு அடைகளாக வார்த்து இருபுறமும் வேகவைத்து எடுக்கவும்.

Monday, 27 August 2012 | By: Menaga Sathia

கோதுமை புட்டு /Wheat Flour Puttu

நாம் வழக்கமாக கேழ்வரகு,அரிசிமாவில் தான் புட்டு செய்வோம்.ஒரு மாறுதலுக்காக கோதுமை மாவில் புட்டு செய்தேன்.மிகவும் நன்றாக இருந்தது.நன்றி சங்கீதா!!

தே.பொருட்கள்

கோதுமை மாவு - 1 கப்
சர்க்கரை - 1/2 கப்
ஏலக்காய்த்தூள்+உப்பு  -தலா 1/4 டீஸ்பூன்
தேங்காய்த்துறுவல் -1/4 கப்
நெய் - 1 டேபிள்ஸ்பூன்

செய்முறை

*கோதுமைமாவை கடாயில் வாசனை வரும் வரை வறுத்து ஆறவைக்கவும்.

*ஆறியதும் உப்பு கலந்து வெந்நீர் சேர்த்து தெளித்து உதிரியாக வரும் வரை பிசையவும்.

*கையால் உருண்டை  பிடித்தால் உதிரியாக விழவேண்டும்,அதுவே பதம்.

*அதனை ஆவியில் 10 நிமிடம் வேகவைத்தெடுக்கவும்.

*மாவை கட்டியில்லாமல் பிசையவும். கட்டியுள்ள மாவை இளஞ்சூடாக இருக்கும் போதே மாவினை மிக்ஸியில் போட்டு விப்பரில் 1 சுற்று சுற்றி எடுத்தால் நன்கு உதிரியாக இருக்கும்.

*பின் அதனுடன் மீதமுள்ள பொருட்களை ஒன்றாக கலந்து பரிமாறவும்.

பி.கு
*சர்க்கரை பதில் ப்ரவுன் சர்க்கரையை பயன்படுத்தினால் புட்டு இன்னும் சுவையாக இருக்கும்.

Thursday, 31 May 2012 | By: Menaga Sathia

கம்மங்கூழ் /Pearl Millet(Bajra) Koozh

 தே.பொருட்கள்


கம்பு - 1 கப்
தண்ணீர் -3 கப்


செய்முறை
*கம்பை சிறிது தண்ணீர் தெளித்து பிசிறி 10 நிமிடம் வைக்கவும்.


*பின் மிக்ஸியில் பல்ஸ் மோடில் 5 நிமிடம் போட்டு எடுத்தால் கம்பு ஒன்றும் பாதியுமாக இருக்கும் மேலிருக்கும் உமியும் வந்துவிடும்.


*உமி நீங்க கழுவி குக்கரில் 3 கப் நீர் சேர்த்து வேகவைத்து எடுக்கவும்.
*வெந்ததும் அதனை சாதம் போல காரசாரமான குழம்பு ஊற்றி சாப்பிடலாம்,நன்றாக இருக்கும்.

அல்லது கூழ் செய்து சாப்பிடவேண்டுமெனில்

*உருண்டைகளாக பிடித்து தண்ணீரில் போடவும்.தேவைக்கு ஏற்ப கூழ் கரைத்து குடிக்கலாம்.ஒவ்வொரு உருண்டையாக தினம் பயன்படுத்தும் போது நீரினை மாற்றவேண்டும்.

கூழ் செய்ய

மோர்- 1 கப்
கம்புசோறு  - 2 உருண்டைகள்
சின்ன வெங்காயம் - 5 பொடியாக நறுக்கியது
பொடியாக நறுக்கிய மாங்காய் - 2 டேபிள்ஸ்பூன்
கொத்தமல்லிதழை - சிறிது
இஞ்சி - சிறிய துண்டு
பச்சை மிளகாய் - 1

*பச்சை மிளகாய்+இஞ்சி+கொத்தமல்லித்தழை பல்ஸ் மோடில் ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.இதனுடன் உப்பு+மோர்+2 உருண்டை கம்புசோறு+சின்ன வெங்காயம்+மங்காய் சேர்த்து கரைத்துக் குடிக்கவும்.
Tuesday, 21 June 2011 | By: Menaga Sathia

ஒட்ஸ் அவல் புட்டு / Oats Aval Puttu

தே.பொருட்கள்

ஒட்ஸ் - 1/2  கப்
அவல் - 1 /2 கப்
சர்க்கரை - 3/4 கப்
ஏலக்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு - 1 சிட்டிகை
தேங்காய்த்துருவல் - 1/2 கப்

செய்முறை
*அவல்+ஒட்ஸை மிக்ஸியில் கரகரப்பாக பொடிக்கவும்.

*பின் உப்பு சேர்த்து லேசாக தண்ணீர் தெளித்து பிசைந்து 10 நிமிடம் வைத்திருக்கவும்.கையால் உருண்டை பிடித்தால் உதிரும் பதத்திற்க்கு இருக்கவேண்டும்.

*பின் ஆவியில் வேகவைத்து சர்க்கரை+தேங்காய்த்துறுவல்+ஏலக்காய்த்தூள் சேர்த்து கலந்து பரிமாறவும்.


Tuesday, 25 January 2011 | By: Menaga Sathia

சேமியா புட்டு/Semiya Puttu

தே.பொருட்கள்

சேமியா - 1 கப்
சர்க்கரை - 1/2 கப்
நெய் - 1/2 டேபிள்ஸ்பூன்
நெய்யில் வறுத்த முந்திரி - தேவைக்கு
உப்பு - 1 சிட்டிகை
ஏலக்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன்
தேங்காய்த்துறுவல் - 1/4 கப்

செய்முறை

*சேமியாவை நெய் விட்டு லேசாக வறுக்கவும்.புட்டு செய்வதற்க்கு மெல்லிய சேமியாதான் ஏற்றது.

*அதனுடன் உப்பு+நீர் தெளித்து புட்டுக்கு பிசைவதுப்போல் பிசைந்து 10 நிமிடம் வைக்கவும்.

*பின் ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.

*சூடாக இருக்கும் போதே அதனுடன் மீதமுள்ள பொருட்களை கலந்து பரிமாறவும்.


Monday, 29 November 2010 | By: Menaga Sathia

ப்ரெட் புட்டு/ Bread Puttu

தே.பொருட்கள்:
ப்ரெட் ஸ்லைஸ் - 5
சர்க்கரை+தேங்காய்த்துறுவல் - தலா 1 டேபிள்ஸ்பூன்
ஏலக்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன்
நெய் - 2 டீஸ்பூன்
முந்திரி - 5

செய்முறை:
*ப்ரெட்டின் ஓரங்களை கட் செய்து,மிக்ஸியில் ஒரு சுற்று சிற்றி எடுக்கவும்.

*கடாயில் நெய் விட்டு முந்திரியை வறுக்கவும்,பின் உதிர்த்த ப்ரெட்டினை போட்டு லேசாக பிரட்டவும்.

*சர்க்கரை+தேங்காய்த்துறுவல்+ஏலக்காய்த்தூள் சேர்த்து கிளறி உடனே இறக்கவும்.

*இல்லையெனில் புட்டு க்ரிஸ்பியாக இருக்கும்.
Friday, 27 August 2010 | By: Menaga Sathia

இனிப்பு புட்டு /Sweet Puttu


தே.பொருட்கள்:
புட்டு மாவு - 1 கப்
சர்க்கரை - 1/2 கப்
தேங்காய்த்துறுவல் - 1/4 கப்
ஏலக்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன்
நெய் - 1 டேபிள்ஸ்பூன்
நெய்யில் வறுத்த முந்திரி - தேவைக்கு
பேரிச்சம்பழம் - 4
உப்பு - தேவைக்கு
 
செய்முறை:
*புட்டு மாவில் உப்பு சேர்த்து கலந்து சிறிது சிறிதாக நீர் சேர்த்து பிசையவும்.கையால் எடுக்கும் போது உதிரி உதிரியாக பிசைந்த மாவு இருக்க வேண்டும்.

*இட்லி பாத்திரத்தில் அதனை ஆவியில் வேகவைக்கவும்.இடைஇடையே மாவை கிளறி விடவும்.வெந்ததும் இறக்கவும்.

*ஒரு கடாயில் 1 கை நீர் தெளித்து சர்க்கரையை போட்டு கரைய விடவும்.கரைந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி நெய்+ஏலக்காய்த்தூள் சேர்த்து கலந்து வெந்த மாவை அதில் கொட்டி தேங்காய்த்துறுவல்+முந்திரி+நறுக்கிய பேரிச்சம்பழம் சேர்த்து கிளறி விடவும்.

Tuesday, 20 July 2010 | By: Menaga Sathia

வடை கறி/Vada Curry

தே.பொருட்கள்:
கடலைப்பருப்பு - 1 கப்
சோம்பு - 1 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 2
பொடியாக நறுக்கிய தக்காளி - 1
தேங்காய்ப்பால் - 1 1/2 கப்
மிளகாய்த்தூள் - 1 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை,புதினா,கொத்தமல்லி -சிறிதளவு
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

அரைக்க:
இஞ்சி - 1 சிறுதுண்டு
பூண்டுப்பல் - 5
பச்சை மிளகாய் - 4
கிராம்பு - 3
பட்டை - 1 சிறுதுண்டு
ஏலக்காய் - 2
தாளிக்க:
பிரியாணி இலை - 2
கிராம்பு - 3
பட்டை - 1 துண்டு
 
செய்முறை :
*அரைக்க கொடுத்துள்ளவைகளை மைய அரைக்கவும்.கடலைப்பருப்பை 3/4 மணிநேரம் ஊறவைத்து சோம்பு+உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.

*கடலைப்பருப்புடன் அரிந்து வைத்துள்ள சிறிது வெங்காயம்+அரைத்த சிறிதளவு மசாலா விழுது சேர்த்து பிசைந்து பகோடாகளாக எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

*பாத்திரத்தில் எண்ணெய் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களைப் போட்டு தாளித்து வெங்காயம்+அரைத்த மசாலா விழுது+தக்காளி+மிளகாய்த்தூள்+மஞ்சள்தூள்+புதினா கொத்தமல்லி கறிவேப்பிலை,உப்பு சேர்த்து அனைத்தையும் நன்றாக வதக்கவும்.

*வதங்கியதும் தேங்காய்ப்பாலை ஊற்றி கொதிக்கவிடவும்.கொதித்ததும் பொரித்த பகோடாகளை போட்டு 5 நிமிடம் கழித்து இறக்கவும்.

Sending this recipe to Sidedishes other than dal/subzis Event by Suma & Iftar Moments Hijri 1431 Event Ayeesha.
Sunday, 18 July 2010 | By: Menaga Sathia

கேழ்வரகு கூழ்

தே.பொருட்கள்:
கேழ்வரகு மாவு - 2கப்
நொய்யரிசி - 1/4 கப்
பொடியாக அரிந்த வெங்காயம் - 1
தயிர் - 1 கப்
உப்பு -தேவைக்கு

செய்முறை:
*கேழ்வரகை மாவை முதல் நாள் இரவே சிறிது நீர் விட்டு தளர்த்தியாக கரைத்து புளிக்க வைக்கவும்.

*மறுநாள் 3 கப் நீரில் ஒரு பாத்திரத்தில் நொய்யரிசியை வேகவைக்கவும்.

*அரிசி வெந்ததும் புளித்த கேழ்வரகு மாவை கரைத்து ஊற்றி கெட்டிபடாமல் நன்கு கிளறிகோண்டே இருக்கவும்.மாவு கையில் ஒட்டாமல் வந்தால் வெந்துவிட்டது என்று அர்த்தம்.

*அப்போழுது இறக்கி ஆறவைக்கவும்.ஆறியதும் மாவை சிறிது நீர்விட்டு உப்பு போட்டு கரைத்து அதன்மேல் தயிரை ஊற்றி வெங்காயத்தை தூவி பருகவும்.

Tuesday, 25 August 2009 | By: Menaga Sathia

ரவை புட்டு

தே.பொருட்கள்:

ரவை - 1 கப்
சர்க்கரை - 1/2 கப்
தேங்காய்த் துறுவல் - 1/2 கப்
ஏலக்காய் -2
உப்பு - 1சிட்டிகை
நெய் - 1 1/2 டீஸ்பூன்

செய்முறை :

*ரவையை சிறிது நெய்விட்டு பிசிறி கடாயில் வறுக்கவும்.ஏலக்காயை பொடிக்கவும்.

*உப்பு கரைத்த நீரை சிறிது சிறிதாக தெளித்து புட்டுமாவு பதத்தில் பிசிறி ஆவியில் வேகவிடவும்.

*வெந்ததும் நெய் தொட்டு கையால் கட்டியில்லாமல் உதிர்த்து ஏலக்காய்ப்பொடி+சர்க்கரை+தேங்காய்த்துருவல் சேர்த்து நன்றாக கலக்கவும்.

பி.கு:

இந்த புட்டு செய்வது மிகவும் எளிது.விருப்பட்டால் முந்திரியை நெய்யில் வறுத்து சேர்க்கலாம்.
01 09 10