தே.பொருட்கள்
முருங்கைக்கீரை - 2 கப்
தேங்காய்த்துறுவல் - 1/2 கப்
நசுக்கிய பூண்டுப்பல் - 2
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1 சிறியது
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
தாளிக்க
கடுகு,உளுத்தம்பருப்பு - தலா 1/4 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
துவரம்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
செய்முறை
*கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கி உப்பு+சிறிது நீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
*நீர் கொதித்ததும் கீரையை சேர்த்து நீர் சுண்டும் வரை கிளறவும்.
*பின் தேங்காய்த்துறுவல்+நசுக்கிய பூண்டுப்பல் சேர்த்து கிளறி இறக்கவும்.
Sending to Priya's Vegan Thursday & Gayathri's WTML @ Nivedhanam