PRINT IT
இந்த குறிப்பினை ப்ரியா சுரேஷ் முகநூலில்
Fondbites,Bake Along குரூப்பில் போஸ்ட் செய்த போது ரொம்ப அழகா இருந்தது.
இங்கே பார்த்து செய்தேன்.பார்க்கவே மிக அழகாக இருந்தது.
அவர்கள் கொடுத்துள்ள அளவில் பாதி போட்டு செய்தேன்.மேலும் ரெட் கலருக்கு பதில் பீட்ரூட் வேகவைத்து அரைத்து செய்துள்ளேன்.
ரெட் வெல்வெட் ப்ரவுணீ செய்ய
மைதா- 1 1/2 கப்+1/8 கப்
சர்க்கரை -1 கப்+1/8 கப்
கோகோ பவுடர் -1 1/2 டேபிள்ஸ்பூன்
உப்பு- 1/2 டீஸ்பூன்
பேக்கிங் பவுடர் -1/4 டீஸ்பூன்
முட்டை -1
வெஜிடபிள் எண்ணெய் -1/2 கப்
பால்- 1டேபிள்ஸ்பூன்+1 டேபிள்ஸ்பூன்
வெனிலா எசன்ஸ்- 1/2 டேபிள்ஸ்பூன்
வேகவைத்து அரைத்த பீட்ரூட் விழுது -1/4 கப்(அ) ரெட் கலர் -1/2 டேபிள்ஸ்பூன்
வெள்ளை வினிகர்- 1 டீஸ்பூன்
க்ரீம் சீஸ் லேயர் செய்ய
க்ரீம் சீஸ்- 1/2 கப்
சர்க்கரை -1/4 கப்+1/8 கப்
முட்டை -1
வெனிலா எசன்ஸ்- 1 டீஸ்பூன்
செய்முறை
*அவனை 180°C முற்சூடு செய்யவும்.
*பேக்கிங் டிரேயில் எண்ணெய் தடவி பட்டர் பேப்பர் வைத்து அதன் மீது எண்ணெய் தடவி வைக்கவும்.
*மைதா+கோகோ பவுடர்+உப்பு+சர்க்கரை+பேக்கிங் பவுடர் இவற்றை நன்றாக கலந்து நடுவில் குழி போல் செய்துக் கொள்ளவும்.
*ஒரு பாத்திரத்தில் முட்டை ஊற்றி நன்கு கலக்கவும்.
*அதில் எண்ணெய்+வெனிலா எசன்ஸ்+1 டேபிள்ஸ்பூன் பால்+பீட்ரூட் விழுது +வினிகர் சேர்த்து நன்கு கலக்கவும்.
*இந்த கலவையை மாவில் ஊற்றி மிருதுவாக கலக்கவும்.
*இந்த கலவையில் 1/3 கப் அளவு எடுத்து அதில் 1 டேபிள்ஸ்பூன் பால் கலந்து வைக்கவும்.
*திக்கான ப்ரவுணீ கலவையை பேக்கிங் டிரேயில் ஊற்றி சமபடுத்தி வைக்கவும்.
*வேறொரு பாத்திரத்தில் க்ரீம் சீஸ் கலவை சேர்த்து பீட்டரால் மிருதுவாக அடிக்கவும்.
*அதில் சர்க்கரை சேர்த்து 2 -3 நிமிடங்கள் கலக்கவும்.
*பின் முட்டையை ஊற்றி நன்கு பீட்டரால் அடித்து வெனிலா எசன்ஸ் சேர்க்கவும்.
*இந்த கலவையை ப்ரவுனியின் மீது பரவலாக ஊற்றி சமபடுத்தவும்.
*இப்போழுது THIN ப்ரவுணீ கலவையை க்ரீம் சீஸ் லேயர் மீது ஸ்பூனால் இடைவெளி விட்டு ஊற்றவும்.
*டூத்பிக்கினால் SWIRL ( மார்பிள் கேக்கிற்கு செய்வது )போல செய்யவும்.
*இதனை முற்சூடு செய்த அவனில் 30 நிமிடங்கள் வரை பேக் செய்து நன்கு ஆறவிடவும்.
*இதனை அப்படியே பரிமாறலாம்(அ)இதய வடிவ குக்கீ கட்டரால் கட் செய்து பரிமாறலாம்.