காளன்**சேனை மற்றும் வாழைக்காய் சேர்த்து செய்வது.ஒணம் சத்யாவின் மிக முக்கியமாக இடம்பெறும் மெனு இது.
தே.பொருட்கள்
சேனைகிழங்கு 1/4 கப் நறுக்கியது
வாழைக்காய் 1/2 கப் நறுக்கியது
மஞ்சள்தூள் 1/2 டீஸ்பூன்
மிளகுதூள் 1/4 டீஸ்பூன்
வரமிளகாய்த்தூள் 1/2 டீஸ்பூன்
உப்பு தேவைக்கு
நெய் 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை 1 கொத்து
புளித்த தயிர் 2 கப்
வறுத்து பொடித்த வெந்தயப்பொடி 1/4டீஸ்பூன்
அரைக்க
தேங்காய்த்துறுவல் 1 கப்
சீரகம் 1 டீஸ்பூன்
தாளிக்க
தேங்காய் எண்ணெய் 1 டீஸ்பூன்
கடுகு 1/2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் 1
கறிவேப்பிலை 1 கொத்து
செய்முறை
*அரைக்க கொடுத்துள்ள பொருட்களை நைசாக அரைத்து ,புளித்த தயிரில் கலந்து ,உப்பு+1/4 டீஸ்பூன் மஞ்சள்தூள் சேர்த்து கட்டியில்லாமல் கலக்கி வைக்கவும்.
*சேனையை முதலில் 1/4 மஞ்சள்தூள் சேர்த்து 1/4 பாகம் வரை வேகவைத்து நீரை வடிக்கவும்.இது சேனையின் காரல் தன்மையை போக்கும்.
*மீண்டும் சேனையை சிறிது நீர் ஊற்றி மிளகுதூள்+மிளகாய்தூள் சேர்த்து வேகவைக்கவும்.
*பாதியளவு வெந்ததும் கறிவேப்பிலை+வாழைக்காயை சேர்த்து வேகவைக்கவும்.
*காய்கள் நீர் சுண்டும் அளவு வேகவைத்த பின் லேசாக மசிக்கவும்.
*பின் தயிர் கலவையை சேர்த்து,இடைவிடாமல் கலக்கி கொண்டே இருக்கவும்.
*லேசாக கொதித்து வரும் போது இறக்கி நெய் மற்றும் வெந்தயப்பொடி சேர்க்கவும்.
*கடைசியாக தாளித்து சேர்க்கவும்.
பி.கு
*தயிர் கலவையை ஊற்றியபின் சிறுதீயில் கலக்கிகொண்டே இருக்கவும்,இல்லையெனில் தயிர் திரிந்துவிடும்.