Wednesday 27 August 2014 | By: Menaga Sathia

கொழுக்கட்டை மாவு பிள்ளையார் / HOMEMADE KOZHUKATTAI FLOUR GANESH | VINAYAGAR CHATHURTHI RECIPES

 அனைவரும் விநாயகர் சதுர்த்திக்கு ரெடியாகிட்டு இருப்பீங்க நினைக்கிறேன்.ஊரில் அம்மா களிமண் பிள்ளையார் வாங்கி ,அபிஷேகம் செய்து மதியம் சாம்பார்,வறுவல்,வடை, பாயாசம்,கொழுக்கட்டை,சுண்டல்  என படையல் செய்வாங்க..

மாலையில் ஏதாவது நைவேத்தியம் செய்வாங்க.இதே பிள்ளையாரை நீரில் கரைக்கும் வரை இருவேளையும் நைவேத்தியம் செய்து படைப்பாங்க.

இங்க நான் மஞ்சள் பிள்ளையார் பிடித்து அம்மா செய்வது போல் செய்வேன்,போன வருடம் சித்ராவின் ப்ளாகில் இந்த கொழுக்கட்டை மாவு பிள்ளையார் பார்த்து செய்தேன்.

ஏதோ ஒரளவிற்கு ஒழுங்காக வந்தது.இப்போ எப்படி செய்வதுன்னு  பார்க்கலாம்

தே.பொருட்கள்

அரிசி மாவு - 1/2 கப்
நீர் - 1 கப்
நல்லெண்ணெய் - 1 டீஸ்பூன்
உப்பு - சிறிது

செய்முறை

*கொதிநீரில் உப்பு+எண்ணெய் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.

 *நீர் கொதித்ததும் மாவில் கொஞ்ச கொஞ்சமாக ஊற்றி மரக்கரண்டியால் கிளறி 10 நிமிடம் மூடி வைக்கவும்.
 *ஒரு பெரிய அளவில் மாவை எடுத்து படத்தில் உள்ளவாரு உருளை வடிவில் நீளமாக உருட்டவும்.
 *பின் 2 பக்கமும்  மெலிதாக அழுத்தினால் காது போல வரும்.
 *காது வைத்த பின் முக உருவம் கிடைக்கும் அப்படியே நீளமாக அழுத்தி வலது அல்லது இடது பக்கமாக வளைத்தால் தும்பிக்கை ரெடி.
 *சிறிய அளவில் மாவு எடுத்து காலாக செய்து அழுத்தி ஒட்டவும்.
 *பின் கை செய்து நன்கு அழுத்தவும்.
 *மிளகினை எடுத்து கண்களாக பயன்படுத்தவும்.
*இப்போ பிள்ளையார் ரெடி.விருப்பம் போல அலங்காரம் செய்ய வேண்டியதுதான்.

*மீதி இருக்கும் மாவில் அம்மிணி கொழுக்கட்டை அல்லது பால் கொழுக்கட்டை செய்யலாம்.

பி.கு

*நான் பயன்படுத்தியிருப்பது சிவப்பரிசி மாவு.

*இந்த பிள்ளையாரை படைக்கும் சிறிது நேரத்திற்கு முன் தயார் செய்யவும்.

*4 - 5 மணிநேரம் தான் பிள்ளையார் உருவம் சரியாக இருக்கும்,மாவு காய தொடங்கியபின் கை,கால் பகுதி உதிர ஆரம்பிக்கும்.
Monday 25 August 2014 | By: Menaga Sathia

அப்பம் / SWEET APPAM | VINAYAGAR CHATHURTHI RECIPES

அப்பத்திற்க்கு மாவினை கரைத்ததும் ஊற்றக்கூடாது.மாலையில் சுடுவதாக இருந்தால் காலையிலேயே மாவினை கரைத்து வைத்து மாலையில் ஊற்றவேண்டும்.

காலையில் ஊற்றுவதாக இருந்தால் முதல்நாள் இரவே மாவினை கரைத்து வைக்கவும்.இப்படி செய்வது அப்பம் மிக மிருதுவாக இருக்கும்.

தே.பொருட்கள்
கோதுமை மாவு -1/2 கப்
மைதா மாவு - 1/4 கப்+1/8 கப்
வெல்லம் -1/2 கப்
கனிந்த வாழைப்பழம் -1
பேக்கிங் சோடா+உப்பு  - தலா 1 சிட்டிகை
ஏலக்காய்த்தூள் -1/4 டீஸ்பூன்
தேங்காய்த்துறுவல் -2 டேபிள்ஸ்பூன்
நெய் - சுடுவதற்கு

செய்முறை

*வெல்லத்தில் முழ்குமளவு நீர்விட்டு கரைத்து வடிகட்டவும்.

* பாத்திரத்தில் வெல்லம்+நெய் தவிர அனைத்தையும் சேர்த்து ஒன்றாக கலக்கவும்.
 *வெல்லநீரை சேர்க்கவும்.பின் தேவைக்கு நீர் சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைத்து வைக்கவும்.
 *மாலையில் மாவு லேசாக பொங்கி இருக்கும்.
 *குழிபனியார கல்லில் நெய்யை ஊற்றி சூடாக்கவும்.
 *கரண்டியால் மாவினை எடுத்து ஊற்றவும்.
 *5 நிமிடம் கழித்து மறுபக்கம் திருப்பி நெய் ஊற்றி வேகவைக்கவும்.
*2 பக்கமும் பொன்னிறமானதும் எடுக்கவும்.
Thursday 21 August 2014 | By: Menaga Sathia

மைக்ரோவேவ் கேசர் பேடா / MICROWAVE KESAR PEDA WITH INSTANT KHOYA | MICROWAVE RECIPES


print this page PRINT IT

தயாரிக்கும் நேரம் : 7 நிமிடங்கள்

தே.பொருட்கள்

இன்ஸ்டன்ட் கோவா - 1/2  கப்
பொடித்த சர்க்கரை - 1/2 கப்
வெதுவெதுப்பான பால் - 2 டீஸ்பூன்
குங்குமப்பூ -சிறிது
பிஸ்தா துண்டுகள் - அலங்கரிக்க

செய்முறை

* பால் பவுடரில் இங்கு கொடுக்கபட்டுள்ள செய்முறையில் மைக்ரோவேவில் கோவா தயாரித்துக் கொள்ளவும்.

*பாலில் குங்குமப்பூவை கரைக்கவும்.

 *குங்குமப்பூ பாலை கோவாவில் கலந்து மேலும் 1 நிமிடம் ஹையில் மைக்ரோவேவில் வைக்கவும்.
 *இப்போழுது கோவா டிரையாக இருக்கும்.இதனை ஆறவிடவும்.
 *ஆறியதும் பொடித்த சர்க்கரை சேர்த்து கிளறவும்.
 *கையில் நெய் தடவி சிறு உருண்டையாக உருட்டி சிறிது பிஸ்தா துண்டுகளை நடுவில் வைத்து அழுத்தவும்.
பி.கு

*கோவா சூடாக இருக்கும் போது சர்க்கரை சேர்க்ககூடாது.

*இதையே அடுப்பில் வைத்து செய்வதாக இருந்தால் கோவாவை கைவிடாமல் கிளறி செய்யவும்.
Tuesday 19 August 2014 | By: Menaga Sathia

வேகன் கோதுமை ப்ரெட் / No Knead Light Wheat Bread | Vegan No Knead Wheat Bread | Bread Recipes

  ப்ரியாவிடம்பேசியபோது  பேக்கிங் பற்றிய டிப்ஸ்களை சொன்னபோது அதன்படி இந்த ப்ரெட் செய்ததில் நன்றாக வந்தது.நன்றி ப்ரியா !!

பொதுவாக ஈஸ்ட் சேர்த்து செய்யும் குறிப்பில் மாவினை வெப்பமான இடத்தில் வைத்து 2 - 3 முறை அதற்கு ப்ரூப் கொடுக்கவேண்டும்.எவ்வளவுக்கு அதிகமாக ஈஸ்ட்டிற்கு ப்ரூப் கொடுக்கிறமோ அவ்வளவுக்கு ப்ரெட் நன்றாக சாப்ட்டாக இருக்கும்.

இன்ஸ்டன் ஈஸ்டாக இருந்தால் மாவில் அப்படியே சேர்த்து பிசையலாம்.ஆக்டிவ் ஈஸ்ட்டாக இருந்தால் வெதுப்பான நீரில் அதாவது நம் கைவிரல் பொறுக்கும் சூட்டில் நீர் இருக்கவேண்டும்.அதனுடன் எப்போழுதும் சர்க்கரை சேர்த்தால் தான் ஈஸ்ட் பொங்கி வரும்.

ஆனால் இந்த ப்ரெட்டில் அப்படி 2 -3 முரை ப்ரூப் செய்யத் தேவையில்லை.முதல்நாள் இரவே மாவினை தயாரித்து வெப்பமான இடத்தில் வைத்து மறுநாள் பேக் செய்யலாம்.

Recipe Source : Priyas Versatile Recipes

தே.பொருட்கள்

கோதுமை மாவு - 2 கப்
ப்ரெட் மாவு - 1 கப்
ஆக்டிவ் டிரை ஈஸ்ட் - 2 டீஸ்பூன்
சர்க்கரை - 3 டேபிள்ஸ்பூன்
உப்பு - 1 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன் ( I used Grapeseed Oil )

செய்முறை

* 1 கப் வெதுவெதுப்பான நீரில் ஈஸ்ட் + சர்க்கரை சேர்த்து 5 நிமிடங்கள் வைக்கவும்.

*பாத்திரத்தில் 2 வகை மாவுகள்+உப்பு+ஈஸ்ட் கலவை சேர்க்கவும்.தேவைக்கு நீர் சேர்த்து மாவினை தளர்த்தியாக பிசையவும்.

*கையில் என்ணெய் தடவி மாவின் மேல் தடவி க்ளியர் கவரால் மூடி வெப்பமான இடத்தில்  இரவு முழுவதும் வைக்கவும்.

 *மறுநாள் மாவு கலவை நன்கு பொங்கி இருக்கும்.
 *பொங்கிய மாவை நன்றாக பிசையவும்.

*ப்ரெட் பானில் எண்ணெய் / வெண்ணெய் தடவி வைக்கவும்.

*மாவினை இருமடிப்பாக மடித்து ப்ரெட் பானில் வைத்து அதன் மேல் எண்ணெய் தடவி கத்தியால் 3 கோடுகள் கீறவும்.

* அதனை மறுபடியும் க்ளியர் ராப் கவரில் மூடி 1 மணிநேரம் வெப்பமான இடத்தில் மாவு பொங்கும் வரை வைக்கவும்.
 *அவனை 180°C 15 நிமிடங்கள் முற்சூடு செய்யவும்,பின் ப்ரெட் பானை அவனில் வைத்து 50-55 நிமிடங்கள் வரை பேக் செய்து எடுக்கவும்.
 *மேல் பாகம் வெந்து ப்ரவுன் கலரில் வந்தால் அலுமினியம் பாயில் கொண்டு மூடி பேக் செய்யவும்.
பி.கு

*இதில் மல்டிக்ரெயின் ஆட்டா உபயோகித்துள்ளேன். இதனை வெறும் கோதுமை மாவு அல்லது ப்ரெட் மாவு மட்டும் சேர்த்து செய்யலாம்.


Friday 15 August 2014 | By: Menaga Sathia

பால்கோவா /Palkova | Thirattu Paal | Gokulastami Recipes


தே.பொருட்கள்

பால் -2 லிட்டர்
தயிர் -1 டேபிள்ஸ்பூன்
சர்க்கரை- 3 டேபிள்ஸ்பூன்
நெய் -1 டீஸ்பூன்

செய்முறை

* பாத்திரத்தில் பாலை ஊற்றி நன்கு காய்ச்சவும்.
*சிறுதீயில் பால் தீய்ந்துவிடாமல் கரண்டியால் கிளறி விடவும்.
*பால் பாதி பாகம் வற்றி வரும் தயிர் சேர்க்கவும்.

*தயிர் சேர்த்ததும் பால் பனீர் மாதிரி திரிந்து இருக்கும்.

*அத்தண்ணியை மேலோடு எடுத்துவிடவும்,இல்லையெனில் தண்ணீர் வற்றும் வரை  கிளறவும்.


*அடிப்பிடிக்காமல் இருக்க நெய் சேர்த்து கிளறவும்.
*பின் சர்க்கரை சேர்த்து கரையும் வரை வைத்திருந்து அடுப்பிலிருந்து இறக்கிவிடவும்.
*ஆறியதும் நன்கு உதிர்ந்து பொலபொலவெண இருக்கும்.

பி.கு

*இதில் தயிர் சேர்ப்பதற்கு பதில் சிறிதளவு படிகாரம்( Alum) பொடித்து சேர்க்கலாம்.

*பால்  வற்றி வரும் போது குறைந்ததீயில் செய்யவும்.
Tuesday 12 August 2014 | By: Menaga Sathia

சிந்தி ஸ்டைல் வெஜ் தாளி / Sindhi Style Veg Thali | Thali Recipes


சிந்தி சமையல் - பாகிஸ்தான் மற்றும் சிந்து இரண்டும் சேர்ந்து கலந்தது.வெஜ் மற்றும் நான் வெஜ் சமையல் இரண்டும் கலந்தது.

இதில் நான் சமைத்திருப்பது சாதம்,சப்பாத்தி, டால் பாலக், ஸ்பைசி உருளை வறுவல் மற்றும்  டிரை ஸ்வீட் கோதுமை மாவு

டால் பாலக் / Dal Palak
Recipe Source : Cook With Love

இதன் ஸ்பெஷல் தயிர் மர்றும் இஞ்சி சேர்ப்பது தான்...

தே.பொருட்கள்

பாசிபருப்பு - 1/4 கப்
பொடியாக நறுக்கிய ஸ்பினாச் -3/4 கப்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1 சிறியது
பச்சை மிளகாய் -2
பூண்டுப்பல் -5
இஞ்சி -சிறியதுண்டு
மஞ்சள்தூள் -1/4 டீஸ்பூன்
தனியாத்தூள் -1/2 டீஸ்பூன்
வரமிளகாய்த்தூள் - 1/4 டீஸ்பூன்
தயிர் - 1/8 கப்
எலுமிச்சை சாறு -1 டீஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

செய்முறை

*குக்கரில் பாசிபருப்பு+வெங்காயம்+பூண்டுப்பல்+இஞ்சி+பச்சை மிளகாய் +மஞ்சள்தூள்+முழ்குமளவு நீர் சேர்த்து வேகவிடவும்.

*பருப்பு வெந்ததும் கீரை சேர்த்து வேகவிடவும்.ஆறியதும் தயிரை கடைந்து பருப்பு கலவையில் ஊற்றவும்.

*கடாயில் எண்ணெய் ஊற்றி தனியாத்தூள்+வரமிளகாய்த்தூள் சேர்த்ததும் பருப்பு கலவை +தேவையான நீர் ஊற்றி உப்பு சேர்த்து கொதிக்கவைத்து எலுமிச்சை சாறு சேர்த்து இறக்கவும்.


ஸ்பைசி உருளைகிழங்கு வறுவல்/ Spiced PotatoesRecipe Source : Cookwithlove

ஒரிஜினல் ரெசிபியில் ஸ்வீட் உருளையில் செய்திருந்ததை சாதாரண உருளையில் செய்துருக்கேன்.

தே.பொருட்கள்

துண்டுகளாகிய உருளை - 2 பெரியது
சீரகப்பொடி -1/4 டீஸ்பூன்
தனியாத்தூள் - 1/2 டீஸ்பூன்
வரமிளகாய்த்தூள் -1 டீஸ்பூன்
ஆம்சூர் பொடி -1/2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் -1/4 டீஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
பொடியாக நருக்கிய கொத்தமல்லித்தழை -சிறிது

செய்முறை

*கடாயில் எண்ணெய் விட்டு அனைத்து மசாலா பொடிகளையும் சேர்த்ததும் உருளை+உப்பு சேர்த்து மூடி போட்டு சிறுதீயில் வேகவிடவும்.

*வெந்ததும் கொத்தமல்லிதழை தூவி இறக்கவும்.

டிரை ஸ்வீட் கோதுமை மாவு - Churi / Dry Sweet Wheat Flour 

Recipe Source : Simply Sindhi Recipes

சத்யநாராயண பூஜையின் போது பிரசாதமாக செய்யப்படும் இனிப்பு இது.

தே.பொருட்கள்

கோதுமைமாவு - 1/4 கப்+1/8 கப்
நெய் -1/8 கப்
சர்க்கரை - 1/8 கப்

செய்முறை 

*கடாயில் நெய் ஊற்றி காய்ந்ததும் கோதுமை மாவு போட்டு  சிறு தீயில் பொன்னிறமாக வறுக்கவும்.

*மாவு நன்கு ஆறியதும் சர்க்கரை கலந்து பரிமாறவும்.

பி.கு

*மாவு நன்கு ஆறிய பிறகே சர்க்கரை சேர்க்க வேண்டும் இல்லையெனில் சீரா போல் ஆகிவிடும்.

*விரும்பினால் இதில் சர்க்கரை சேர்க்கும் போது வேர்கடலை மற்றும் நறுக்கிய பேரிச்சம்பழ துண்டுகள் சேர்க்கலாம்.


Friday 8 August 2014 | By: Menaga Sathia

எள்ளு பூரண கொழுக்கட்டை/ Ellu Poorna Kozhukattai | Vinayagar Chaturthi Recipes


print this page PRINT IT

தயாரிக்கும் நேரம் :20 நிமிடங்கள்
அளவு :10 உருண்டைகள்

தே.பொருட்கள்

அரிசி மாவு- 1/2 கப்
நீர் -1 கப்
கறுப்பு எள் -1/3 கப்
வெல்லம்- 1/3 கப்
நல்லெண்ணெய்- 1/2 டீஸ்பூன்
உப்பு- 1/2 டீஸ்பூன்

செய்முறை


*எள்ளை வெறும் கடாயில் வறுத்து ஆறியதும் பொடிக்கவும்.பின் அதனுடன் வெல்லத்தை துருவி 1 சுற்று சுற்றி எடுக்கவும்.*பாத்திரத்தில் 1 கப் நீர்+எண்ணெய்+உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

*கொதிததும் அதனை அரிசிமாவில் ஊற்றி கிளறி 10 நிமிடங்கள் ஈரத்துணியால் மூடி வைக்கவும்.
*பின் மிருதுவாக மாவை பிசைந்து சிறு உருண்டைகளாக எடுத்து  வட்டமாக தட்டி எள்ளு பூரணத்தை சிறிது வைத்து உருண்டையை மேல் நோக்கி மூடவும்.

*இதே போல் அனைத்து உருண்டையிலும் செய்த பின்னர் ஆவியில் 6 -7 நிமிடங்கள் வேகவைத்து எடுக்கவும்.

பி.கு

*உருண்டை வெந்ததின் அடையாளமாக பார்க்கும் போது மினுமினுப்பாக இருக்கும்.

*உருண்டை எடுத்து உருட்டும் போது நல்லெண்ணெய் தொட்டு தட்டவும்.
01 09 10