Thursday 17 January 2013 | By: Menaga Sathia

சரவணபவன் ஹோட்டல் டிபன் சாம்பார் /Saravana Bhavan Hotel Tiffin Sambhar

ஏற்கனவே இட்லி சாம்பார் காய்கள் சேர்த்து நான் செய்வதுண்டு.இந்த முறை ஹோட்டலில் செய்வதுபோல் செய்தேன்.

தே.பொருட்கள்

துவரம்பருப்பு - 2/3 கப்
மஞ்சள்தூள் -1/2 டீஸ்பூன்
வெங்காயம் - 1
தக்காளி - 2
கீறிய பச்சை மிளகாய் -2
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு

அரைக்க

தேங்காய்த்துறுவல் - 1 டேபிள்ஸ்பூன்
பொட்டுக்கடலை - 2 டீஸ்பூன்
தக்காளி - 1
சாம்பார் பொடி - 1 டேபிள்ஸ்பூன்
பெருங்காயப்பொடி -1/4 டீஸ்பூன்

தாளிக்க

கடுகு+ உளுத்தம்பருப்பு+சீரகம் - தலா 1/2 டீஸ்பூன்
நெய் - 2 டீஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
காய்ந்த மிளகாய் - 1

செய்முறை

*துவரம்பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து குழைய வேகவைக்கவும்.

*வெங்காயம்+தக்காளி பொடியாக நறுக்கவும்.அரைகக் கொடுத்துள்ளவைகளை நைசாக அரைக்கவும்.

*பாத்திரத்தில் 1 டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயத்தில் பாதி+தக்காளி+பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும்.

*பின் அரைத்த விழுது +உப்பு+1/2 கப் நீர் சேர்த்து கொதிக்கவிடவும்.

*பச்சை வாசனை அடங்கியதும் வேகவைத்த துவரம்பருப்பு சேர்த்து 5 நிமிடங்கள் கொதிக்க வைத்து கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.

*தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து மீதமுள்ள வெங்காயத்தை சேர்த்து வதக்கி சேர்க்கவும்.


*இந்த சாம்பார் இட்லி,தோசை,சப்பாத்தி,வெண்பொங்கல்,ஊத்தாப்பம் என  அனைத்திற்கும் நன்றாக இருக்கும்.

பி.கு

*சின்ன வெங்காயம் சேர்த்து செய்தால் இன்னும் நன்றாக இருக்கும்.

*சாம்பார் இன்னும் வாசனையாக இருக்க தாளிப்பில் சீரகத்தை மறக்காமல் சேர்க்கவும்.  நான் சேர்க்க மறந்துவிட்டேன்.

*2/3 கப் = 10 டேபிள்ஸ்பூன்+ 2 டீஸ்பூன்

*இதில் விரும்பி்னால் முருங்கைக்காய்,கத்திரிக்காய் சேர்த்து செய்யலாம்.

18 பேர் ருசி பார்த்தவர்கள்:

Rekha said...

nice & yummy combo..
http://www.indiantastyfoodrecipes.com/

'பரிவை' சே.குமார் said...

மற்ற ஐட்டமெல்லாம் எங்கள் அறை சாம்பாரில் இருக்கும். தேங்காய் துருவல் சேர்ப்பது புதிது...

Vimitha Durai said...

Love hotel style sambahr.. Would love to grab that plate

Unknown said...

ungal sambar nalla manakuthu siragam serkamaley...

Priya Suresh said...

Extrava idlya saapida vachidum inthe sambar, delicious.

Sangeetha Nambi said...

Wow ! Rocking sambar...
http://recipe-excavator.blogspot.com

divya said...

looks so delicious and yummy dear..

Kanchana Radhakrishnan said...

looks yummy

Sangeetha M said...

idly n sambar looks very inviting...kandippa try pannanum!

GEETHA ACHAL said...

ரொம்ப அருமையான சூப்பர்ப் காம்பினேஷன்...

Hema said...

Sambarum idliyum, always a favorite, I've never added pottu kadalai in the ground paste, next time will try this..

great-secret-of-life said...

looks so yummy! new to your site.. love it. Happy to follow u
http://great-secret-of-life.blogspot.com

Vijiskitchencreations said...

சாம்பார் ரெசிப்பி சூப்பர். நான் செய்து பார்க்கனும்.

Asiya Omar said...

நல்லாயிருக்கு.செய்து பார்க்கிறேன்.

MANO நாஞ்சில் மனோ said...

சாப்பாட்டுக்கு இன்னைக்கு கறி இல்லாம மோர் ஊத்தி சாப்பிடும் நேரம் பார்த்து இந்தப்படம் அவ்வவ்..

வல்லிசிம்ஹன் said...

நன்றி ஷஷிகா. தேடிக் கொண்டிருந்தேன். கிடைத்தது உங்கள் ரெசிபி.
வாசனை தூக்குகிறது!!!

விசு அய்யர் said...

சூப்பர்..
இட்லி படம் பார்த்தாலே சாப்பிட தோணுது..

meena said...

i was searching for this recipe ,bookmarked ,will try soon.

01 09 10