Friday 19 February 2010 | By: Menaga Sathia

வெந்தய சாம்பார் - 2

தே.பொருட்கள்:

துவரம்பருப்பு - 1 கப்
வெந்தயம் - 1 டேபிள்ஸ்பூன்
சின்ன வெங்காயம் - 10
பூண்டுப்பல் - 4
பெருங்காயம் - 1 சிறுதுண்டு
மஞ்சள்தூள் - 1 சிட்டிகை
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 1
சாம்பார் பொடி - 1டீஸ்பூன்
புளி - 1 கோலிகுண்டளவு
கொத்தமல்லித்தழை - சிறிது
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:

வடகம் - 1/2 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
 
செய்முறை :

*துவரம்பருப்பு+மஞ்சள்தூள்+பெருங்காயம்+வெந்தயம்+பூண்டுப்பல்+தக்காளி+பச்சை மிளகாய் இவை அனைத்தையும் குக்கரில் நன்கு வேக வைக்கவும்.

*புளியை தேவையான நீர்விட்டு கரைக்கவும்.

*பாத்திரத்தில் எண்ணெய் விட்டு வெங்காயம் போட்டு வதக்கி சாம்பார் பொடியை போட்டு லேசாக பிரட்டி புளி கரைசலை ஊற்றி கொதிக்க விடவும்.

*கொதித்ததும் வெந்த பருப்பு+உப்பு சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விட்டு கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.

*கடைசியாக தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து கொட்டவும்.

27 பேர் ருசி பார்த்தவர்கள்:

Pebble said...

//துவரம்பருப்பு - 1 கப்
வெந்தயம் - 1 டேபிள்ஸ்பூன்//

Neriya thuvaram paruppu pottutu, konjoondu vendhyama pottutu "vendhaya sambarnu" solreenga.....

Menaga Sathia said...

1 கப் து.பருப்புக்கு = 1 டேபிள்ஸ்பூன் வெந்தயம் சரியாக இருக்கும்.அதிகமானால் சாம்பார் கசக்கும்.நன்றி அனானி!!

ARUNA said...

Nice dish!

M.S.R. கோபிநாத் said...

Nice Sambar Receipie

kavisiva said...

வெந்தய சாம்பார் நல்லா இருக்கே! உங்க குறிப்புகளெல்லாம் பார்க்கும் போது ஃப்ரான்சுக்கு ஒரு ட்ரிப் அடிக்கலாம் போல இருக்கே :-)

Jaleela Kamal said...

ரொம்ப அருமையான வெந்தய சாம்பார்.

வெந்தயம் சேர்ப்பதால் சாம்பார் கொடாது,

//அனானி வெந்தயம் அதிகம் போட்டால் சாம்பார் கசந்து விடும், நார்மலாவைக்கும் சாம்பாரில், வெந்தயம் கலப்பதால் வெந்தய சாம்பார்///

Asiya Omar said...

வெந்தய சாம்பார் நல்ல மணமாக இருக்குமே,உடல் சூட்டிற்கு நல்லதும்கூட.

டவுசர் பாண்டி said...

அடடே , நம்பளுக்கு புட்ச்சது இது , ரொம்ப நல்லா இருக்கும் , எங்க மினிமா இத அடிக்கடி செய்யும் சகோதரி , உடம்புக்கும் நல்லது . நல்ல மேட்டரு போட்டீங்கோ !!

வடுவூர் குமார் said...

ப‌டிக்கும் போது சுல‌ப‌மாக‌த்தான் இருக்கு ஆனா செய்த‌ பிற‌கு எப்ப‌டி வ‌ந்த‌து என்று சொல்கிறேன்.

Thenammai Lakshmanan said...

Fine sambar SHASHIGA..

சாருஸ்ரீராஜ் said...

நல்லா இருக்கு மேனகா நானும் இந்த சாம்பார் செய்வேன். ஆனால் இந்த குழம்புக்கு வடகம் தாளிக்காமல் , கடுகு , உ.பருப்பு ஒரு காய்ந்த மிளகாய் போட்டு தாளித்து பாருங்கள் அது ஒரு ருசியாக இருக்கும்

நித்தி said...

நல்ல படைப்பு சகோதரி!!!!!

விடுமுறைக்கு இந்தியா சென்றிருந்ததால் இணையத்திற்க்கு அடிக்கடி வர இயலவில்லை என்பதனை தெரிவித்துக்கொள்கிறேன்...

Nithu Bala said...

Wow! I like to make sambar with fenugreek..I learnt this from my MIL but never knew, we can call it by this name too..love your recipe..have to give a try soon..

Menaga Sathia said...

நன்றி அருணா!!

நன்றி கோபி அண்ணா!!

Menaga Sathia said...

ப்ரான்ஸ்க்கு வாங்க,எப்போ வர்றீங்கன்னு சொல்லுங்க?செய்து தரேன்.நன்றி கவி!!


நன்றி ஜலிலா அக்கா!!

Menaga Sathia said...

உடல்சூட்டிற்க்கு நல்லதுதான் அக்கா இந்த சாம்பார்.நன்றி ஆசியாக்கா!!


நன்றி அண்ணாத்தே!!மினிமா ந்னா யாரு அம்மாவா அண்ணாத்தே?

Menaga Sathia said...

செய்து பார்த்து சொல்லுங்கள்.வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி சகோ!!

நன்றி தேனக்கா!!

Menaga Sathia said...

நீங்கள் சொல்வது போலவும் தாளிப்பேன்.அந்த டேஸ்ட்டும் நல்லாயிருக்கும்.எங்கம்மாகிட்டயிருந்து கத்துக்கிட்ட குறிப்பு இது.காய் எதுவும் இல்லன்னா இந்த சாம்பார்தான் செய்வாங்க.நன்றி சாரு அக்கா!!

Menaga Sathia said...

இந்தியாவிலிருந்து வந்துவிட்டீர்களா?கருத்துக்கு நன்றி சகோ!!

செய்து பாருங்கள்.எனக்கு பிடித்த சாம்பாரில் இதுவும் ஒன்று.நன்றி நிதுபாலா!!

Raghu said...

200க்கு வாழ்த்துக்க‌ள்:))

Shama Nagarajan said...

migavum arumaiyanadhu...love this

Menaga Sathia said...

உங்க வாழ்த்துக்கு மிக்க நன்றி சகோ!!


நன்றி ஷாமா!!

Priya Suresh said...

Naan ippo the venthaya paruppu post panninen, neegha sambar panni kalakitinga..

Menaga Sathia said...

உங்கள் போஸ்ட் இன்னும் பார்க்கலை.பார்த்து கருத்து சொல்கிறேன்.நன்றி ப்ரியா!!

நினைவுகளுடன் -நிகே- said...

புது புது சமையல் குறிப்புகள்
நன்றி தோழி

Menaga Sathia said...

வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி தோழி!!

Muruganandan M.K. said...

அழகான புகைப்படங்களுடன் உங்கள் புளக் சுவை தருகிறது.

01 09 10