Monday 31 January 2011 | By: Menaga Sathia

பொடி இட்லி / Podi Idly

தே.பொருட்கள்:
இட்லி - 5
இட்லி பொடி - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1டீஸ்பூன்
 
செய்முறை :

*இட்லியை கட் செய்யவும்.கடாயில் தாளிக்க கொடுத்துள்ளவைகளைப்போட்டு தாளித்து இட்லி+இட்லி பொடி சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டி இறக்கவும்.தேவையானால் மட்டும் உப்பு சேர்க்கவும்.

Sunday 30 January 2011 | By: Menaga Sathia

வெள்ளை பூசணி இனிப்பு அப்பம் / Pumpkin Sweet Appam

தே.பொருட்கள்:
துருவிய வெள்ளை பூசணிக்கய் - 3/4 கப்
கோதுமை மாவு - 1/2 கப்
மைதா - 1/4 கப்
அரிசி மாவு - 1/4 கப்
ஏலக்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன்
வெல்லம் - 3/4 கப்
தேங்காய்த்துறுவல் - 1/4 கப்
நெய் - 1 டீஸ்பூன்
எண்ணெய் = தேவைக்கு
 
செய்முறை:
*வெல்லத்தை ஒரு பாத்திரத்தில் போட்டு முழ்குமளவு நீர் விட்டு காய்ச்சி மண்ணில்லாமல் வடிகட்டவும்.

*வேறொரு பாத்திரத்தில் எண்ணெய் தவிர அனைத்தையும் ஒன்றாக கலந்து வடிகட்டி வெல்லத்தை ஊற்றி கலக்கவும்.

*ரொம்ப கெட்டியாக இல்லாமலும்,நீர்க்க இல்லாமலும் பதமாக கரைக்கவும்.

*கடாயில் என்ணெய் காயவைத்து ஒரு ஸ்பூனால் மாவை ஊற்றி 2பக்கமும் நன்கு வைகவைத்து எடுக்கவும்.
Thursday 27 January 2011 | By: Menaga Sathia

மாந்தோல் குழம்பு/ Dry Mangopeel Khuzhampu


இந்த குழம்பு புளி+தக்காளி இல்லாமல் செய்வது.மாந்தோலின் புளிப்பே போதுமானது.மாந்தோல் என்பது மாங்காயை உப்பில் ஊறவைத்து காயவைத்த மாங்காய்.

தே.பொருட்கள்:
மாந்தோல் - 1/2 கப்
சின்ன வெங்காயம் - 10
பூண்டுப்பல் - 6
சாம்பார் பொடி - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு + நல்லெண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:
வடகம் - 1/2 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை:
* மாந்தோலை சிறிது நேரம் வெந்நீரில் ஊறவைத்து குக்கரில் சிறிதளவு நீர் வைத்து நன்கு குழைய வேகவைக்கவும்.

*வெந்ததும் நன்கு மசித்துக்கொள்ளவும்.

*பாத்திரத்தில் எண்ணெய் விட்டு வடகம்+கறிவேப்பிலை போட்டு தாளித்து வெங்காயம்+பூண்டுப்பல் சேர்த்து வதக்கி மசித்த மாந்தோல்+சாம்பார்பொடி+தேவையானளவு நீர் சேர்த்து கொதிக்க விடவும்.

*நன்கு கொத்தித்து எண்ணெய் பிரிந்து வரும் போது இறக்கவும்.

பி.கு:
மாந்தோலில் நிறைய உப்பு இருப்பதால் உப்பின் அளவை பார்த்து போடவும்.
Wednesday 26 January 2011 | By: Menaga Sathia

வெங்காயத்தாள் சாதம்/ Spring Onion Rice

தே.பொருட்கள்:

உப்பு சேர்த்து உதிராக வடித்த சாதம் - 2 கப்
வெண்ணெய்- 1 டேபிள்ஸ்பூன்
ப்ரோசன் பட்டாணி - 1 கைப்பிடி
வெங்காயத்தாள் - 1 சின்ன கட்டு
சோயா சாஸ் - 1/2 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

அரைக்க:காய்ந்த மிளகாய் - 7
பூண்டுப்பல் - 3

செய்முறை :
*அரைக்க கொடுத்துள்ளவைகளை நைசாக அரைக்கவும்.

*வெங்காயத்தாளில் உள்ள வெங்காயத்தையும்,தாளையும் தனித்தனியாக நறுக்கி வைக்கவும்.

*பாத்திரத்தில் பட்டர்+சிறிது எண்ணெய் விட்டு அரைத்த விழுதை போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

*பின் வெங்காயம்+பட்டாணி சேர்த்து நன்கு வதக்கி வடித்த சாதத்தை போட்டு கிளறி சோயா சாஸ்+வெங்காயத்தாளை தூவி 5 நிமிடம் கழித்து இறக்கவும்.
Tuesday 25 January 2011 | By: Menaga Sathia

சேமியா புட்டு/Semiya Puttu

தே.பொருட்கள்

சேமியா - 1 கப்
சர்க்கரை - 1/2 கப்
நெய் - 1/2 டேபிள்ஸ்பூன்
நெய்யில் வறுத்த முந்திரி - தேவைக்கு
உப்பு - 1 சிட்டிகை
ஏலக்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன்
தேங்காய்த்துறுவல் - 1/4 கப்

செய்முறை

*சேமியாவை நெய் விட்டு லேசாக வறுக்கவும்.புட்டு செய்வதற்க்கு மெல்லிய சேமியாதான் ஏற்றது.

*அதனுடன் உப்பு+நீர் தெளித்து புட்டுக்கு பிசைவதுப்போல் பிசைந்து 10 நிமிடம் வைக்கவும்.

*பின் ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.

*சூடாக இருக்கும் போதே அதனுடன் மீதமுள்ள பொருட்களை கலந்து பரிமாறவும்.


Sunday 23 January 2011 | By: Menaga Sathia

ஒட்ஸ் கீரை கொழுக்கட்டை/ Oats Keerai Khozhukattai

தே.பொருட்கள்

ஒட்ஸ் - 1 கப்
முருங்கை கீரை - 1/2 கப்
வெங்காயம் - 1
வேகவைத்த பாசிப்பருப்பு - 1/4 கப்
தேங்காய்ப்பல் - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க

கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/4 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2

செய்முறை
*வெங்காயத்தை பொடியாக நறுக்கவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப்போட்டு தாளித்து வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

*சிறிது நீர் விட்டு உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.நன்கு கொதிக்கும் போது கீரையைப்போட்டு நன்கு சுருள கிளறி பாசிப்பருப்பு சேர்த்து இறக்கவும்.

*இதனுடன் ஒட்ஸ்+தேங்காய்ப்பல் சேர்த்து பிசையவும்.தேவையானால் மட்டும் நீர் சேர்த்து பிசையவும்.

*உருண்டைகளாக பிடித்து ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.

பி.கு
எந்த கீரை வேணுமானாலும் சேர்த்து செய்யலாம்.பருப்பை மலர வேகவைத்து சேர்க்கவும்.

Friday 21 January 2011 | By: Menaga Sathia

சின்ன வெங்காய சட்னி - 2/ Small Onion Chutney - 2

தே.பொருட்கள்:
சின்ன வெங்காயம் - 1 கப்
நறுக்கிய தக்காளி - 1/2 கப்
தேங்காய்த்துறுவல் - 1/4 கப்
இஞ்சி -1 சிறுதுண்டு
காய்ந்த மிளகாய் - 5
புளி - 1 நெல்லிக்காயளவு
தனியா- 1 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:
கடுகு - 1/4 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/2 டீஸ்பூன்
பெருங்காயம் - வாசனைக்கு
கறிவேபிலை - சிறிது

செய்முறை:
*கடாயில் எண்ணெய் விட்டு இஞ்சி+காய்ந்த மிளகாய்+தனியா இவற்றை தனித்தனியாக வறுத்து எடுக்கவும்.

*பின் அதே கடாயில் வெங்காயம்+தக்காளியை லேசாக வதக்கவும்.

*ஆறியதும் மிக்ஸியில் தேங்காய்+புளி+இஞ்சி+தனியா+காய்ந்த மிளகாய் இவற்றை முதலில் மைய அரைத்து பின் வெங்காயம்+தக்காளி+உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்தெடுக்கவும்.

*பின் தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து கொட்டவும்.

*இட்லி,தோசையுடன் சாப்பிட நன்றாகயிருக்கும்.
Thursday 20 January 2011 | By: Menaga Sathia

மார்பிள் கேக்/Marble Cake

தே.பொருட்கள்:ஆல் பர்பஸ் மாவு - 2 கப்
சர்க்கரை - 1 1/2 கப்
முட்டை - 3
வெனிலா எசன்ஸ் -1 டீஸ்பூன்
உருக்கிய பட்டர் - 3/4 கப்
பேக்கிங் பவுடர் - 1 டீஸ்பூன்
பேக்கிங் சோடா - 1/4 டீஸ்பூன்
கோகோ பவுடர் - 1 டேபிள்ஸ்பூன்

செய்முறை :
* முட்டையின் வெள்ளை மற்றும் மஞ்சள் கருக்களை தனியாக பிரிக்கவும்.
*வெள்ளைக் கருவை நன்கு வுரை வரும் வரை பீட் செய்யவும்.மாவில் பேக்கிங் சோடா+பேக்கிங் பவுடர் கலந்து வைக்கவும்.

*மஞ்சள் கருவுடன் சர்க்கரை சேர்த்து நன்கு கரையும் வரை பீட் செய்யவும்.பின் பட்டர் + மாவு சேர்த்து நன்கு கலந்து வெள்ளைக் கருவை சேர்க்கவும்.

*மாவை 2 பங்காக பிரித்து,ஒன்றில் வெனிலா எசன்ஸும் மற்றொன்றில் கோகோ பவுடரையும் கலக்கவும்.

*கேக் பானில் பட்டர் தடவி வெள்ளக் கலவையை ஊற்றவும்.அதன்மேல் கோகோ கலவையை ஊற்றவும்.

*ஒரு கத்தியால் மாவின் ஒரு பகுதிலிருந்து ஸ்வீர்ல் போல கலக்கவும்.ரொம்பவும் கலக்கி விடக்கூடாது.

*180°C முற்சூடு செய்த அவனில் 25-30 நிமிடம் பேக் செய்து எடுக்கவும்.
Wednesday 19 January 2011 | By: Menaga Sathia

தேங்காய் அவல்/Coconut Aval

தே.பொருட்கள்:
அவல் - 1 கப்
தேங்காய்த்துறுவல் - 1/4 கப்
பொடியாக அரிந்த வெங்காயம் - 1
உப்பு +எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:
கடுகு - 1/4 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/2 டீஸ்பூன்
பெருங்காயம் - வாசனைக்கு
கறிவேபிலை - சிறிது
கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
வேர்க்கடலை - 1 கைப்பிடி

செய்முறை:
*அவலைக் கழுவி நீரை வடிக்கட்டவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப் போட்டு தாளித்து வெங்காயம்+உப்பு+தேங்காய்த்துறுவல் அனைத்தையும் நன்கு வதக்கி வடிகட்டிய அவலை போட்டு நன்கு கிளறி இறக்கவும்.
Tuesday 18 January 2011 | By: Menaga Sathia

முளைக்கீரை கடைசல்/ Amarnath Leaves Kadaisal

தே.பொருட்கள்:
முளைக்கீரை - 1 கட்டு
பூண்டுப்பல் - 10
வெங்காயம் - 1 சிறியது
தக்காளி - 1 சிறியது
பச்சை மிளகாய் - 3
கடுகு+உளுத்தம்பருப்பு - தலா 1/2 டீஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
 
செய்முறை:
*கீரையை மட்டும் ஆய்ந்து மண்ணில்லாமல் அலசி நீரை வடியவிடவும்.

*பாத்திரத்தில் கீரை+பூண்டுப்பல்+நறுக்கிய வெங்காயம் தக்காளி+பச்சை மிளகாய்+உப்பு சேர்த்து கீரை முழ்குமளவு நீர் விட்டு வேகவிடவும்.

*மூடிபோட்டு வேகவிடகூடாது இல்லையெனில் கீரை கருத்து விடும்.

*கீரை வெந்ததும் ஆறவிட்டு கடைந்து கடுகு+உளுத்தம்பருப்பு சேர்த்து தாளித்துக் கொட்டவும்.

பி.கு:
*கீரையின் தண்டு இளசாக இருந்தால் கீரையுடன் சேர்த்து வேகவைக்கலாம்.இல்லையெனில் தண்டை தனியாக எடுத்து பொரியல்,சாம்பார்,கூட்டு என செய்யலாம்.

*இக்கீரை மிகவும் குளிர்ச்சியானது,குழந்தைகளுக்கு கொடுக்கும்போது இன்னும் நிறைய பூண்டு சேர்த்து கொடுக்கவும்.

*இதில் தக்காளிக்கு பதில் புளி சேர்த்தும் செய்யலாம்.புளி சேர்த்து செய்யும் போது கீரையின் நிறம்மாறிவிடும்.
Sunday 16 January 2011 | By: Menaga Sathia

மட்டன் வெள்ளை குருமா/Mutton White Kurma

தே.பொருட்கள்:
மட்டன் - 1/2 கிலோ
வெங்காயம் - 1 பெரியது
தக்காளி - 1 பெரியது
பச்சை மிளகாய் - 10
இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்
பொடியாக அரிந்த புதினா,கொத்தமல்லி - சிறிதளவு
தயிர் - 1/2 கப்
தனியாத்தூள் - 1 டேபிள்ஸ்பூன்
எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

அரைக்க:
தேங்காய்த்துறுவல் - 1/2 கப்
சோம்பு - 1 டீஸ்பூன்
கசகசா - 1/2 டீஸ்பூன்

தாளிக்க:
பட்டை - 1 சிறுதுண்டு
கிராம்பு - 3
பிரியாணி இலை - 2

செய்முறை:
*அரைக்க கொடுத்துள்ளவைகளை நைசாக அரைக்கவும்.வெங்காயம்+தக்காளியை அரியவும்.பச்சை மிளகாயை நைசாக அரைக்கவும்.

*குக்கரில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து வெங்காயம்+தக்காளி+பச்சை மிளகாய் விழுது+இஞ்சி பூண்டு விழுது+தனியாத்தூள்+புதினா கொத்தமல்லி+மட்டன் என அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கி உப்பு+தேவையானளவு நீர் வைத்து 3 விசில் வரை வேக வைக்கவும்.

*வெந்ததும் தயிர்+தேங்காய் விழுது சேர்த்து பச்சை வாசனை அடங்கியதும் எலுமிச்சை சாறு சேர்த்து இறக்கவும்.
Friday 14 January 2011 | By: Menaga Sathia

வேர்க்கடலை ஜாமூன்( Peanut /Ground nut Jamun)



தே.பொருட்கள்:

வேர்க்கடலை - 1 கப்
மைதா - 2 டேபிள்ஸ்பூன்
ரவை - 1 டீஸ்பூன்
பால் பவுடர் - 1/4 கப்
நெய் -1 டீஸ்பூன்
சர்க்கரை - 3/4 கப்
தண்ணீர் - 1கப்
ரோஸ் எசன்ஸ் - 2 துளி
எண்ணெய் = பொரிக்க

செய்முறை:

* வேர்க்கடலையை தோல் நீக்கி 1மணிநேரம் ஊறவைத்து நைசாக கெட்டியாக அரைக்கவும்.

*அதனுடன் ரவை+மைதா+பால் பவுடர்+நெய் சேர்த்து பிசையவும்.தேவைப்பட்டால் மட்டும் பால் சேர்த்து பிசையவும்.

*சிறு உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

*ஒரு பாத்திரத்தில் சர்க்கரை+நீர் வைத்து கொதிக்கவிடவும்.பிசுபிசுப்பு பதம் வந்ததும் எசன்ஸ்+பொரித்த ஜாமூன்களை சேர்க்கவும்.

*1 மணிநேரம் கழித்து பரிமாறவும்.வித்தியாசமான சுவையில் இருக்கும் இந்த ஜாமூன்.


அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!!
Thursday 13 January 2011 | By: Menaga Sathia

சிவப்பு குடமிளகாய் சட்னி/Red Bell pepper (Capsicum) Chutney

தே.பொருட்கள்:
சிவப்பு குடமிளகாய் - 1
வெங்காயம் - 1
உளுத்தம் பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
புளி - 1 நெல்லிக்காயளவு
காய்ந்த மிளகாய் - 3
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:
கடுகு - 1/4 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/4டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை :
*மிளகாய் + வெங்காயம் இவற்றை துண்டங்களாக நறுக்கவும்.
*உளுத்தம்பருப்பை வெறும் கடாயில் வறுக்கவும்.

*வெங்காயத்தையும்+காய்ந்த மிளகாயை எண்ணெயில் வதக்கவும்.குடமிளகாயை லேசாக வதக்கவும்.

*முதலில் உளுத்தம்பருப்பு+காய்ந்த மிளகாயை அரைத்த பின் வெங்காயம்+குடமிள்காய்+புளி+உப்பு சேர்த்து மைய அரைத்து தாளித்துக் கொட்டவும்.
Wednesday 12 January 2011 | By: Menaga Sathia

ஆலு பராத்தா/Aloo(Potato) Paratha

தே.பொருட்கள்:கோதுமை மாவு - 2 கப்
வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு - 2 பெரியது
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1
பொடியாக நறுக்கிய மல்லித்தழை - சிறிதளவு
கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
 
செய்முறை:
*கோதுமைமாவில் உப்பு கலந்து நீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து 1/2 மணிநேரம் ஊறவைக்கவும்.
*உருளைக்கிழங்கில் உப்பு+வெங்காயம்+கரம்மசாலா+மல்லித்தழை நைத்தையும் ஒன்றாக கலந்து வைக்கவும்.
*கோதுமைமாவிலிருந்து ஒரு உருண்டை எடுத்து லேசாக உருட்டி அதனுள் சிறிதளவு உருளை கலவையை வைத்து மூடி லேசாக மெலிதாக தேய்க்கவும்.
*ஸ்டப்பிங் செய்த பாகத்தை அடிப்பக்கமாக வைத்து தேய்த்து உருட்டினால் கலவை வெளியே வராது.
*தவாவில் தேய்த்த சப்பாத்தியை எண்ணெய் விட்டு இருபக்கமும் வேகவைத்து எடுக்கவும்.
Saturday 1 January 2011 | By: Menaga Sathia

கினோவா தவலை அடை/Quinoa Thavalai Adai


தே.பொருட்கள்
ப்ரவுன் ரைஸ் - 3/4 கப்
கினோவா - 1/2 கப்
கடலைப்பருப்பு - 1/4 கப்
காய்ந்த மிளகாய் - 4
சோம்பு - 1 டீஸ்பூன்
தேங்காய்ப்பல் - 1/4 கப்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1
உப்பு + எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
கடலைப்பருப்பு - 1/2 டேபிள்ஸ்பூன்

செய்முறை

*ப்ரவுன் ரைஸ்+கடலைப்பருப்பு+கினோவா இவற்றை 1 மணிநேரம் ஊறவைத்து அதனுடன் சோம்பு+காய்ந்த மிளகாய்+உப்பு சேர்த்து கொரகொரப்பாக இல்லாமலும்,நைசாக இல்லாமலும் கெட்டியாக அரைக்கவும்.

*க்டாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப்போட்டு தாளித்து வெங்காயம் போட்டு வதக்கி தேங்காய்ப்பல்லுடன் மாவில் சேர்த்து கலக்கவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு 1 கரண்டி மாவை விட்டு மெலிதாக இல்லாமலும்,தடிமனாக இல்லாமலும் ஊற்றி 2 பக்கமும் வேகவிட்டு எடுக்கவும்.

*தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.அப்படியே கூட சாப்பிடலாம்.

01 09 10