Wednesday 30 October 2013 | By: Menaga Sathia

வரகரிசி முறுக்கு / Varagarisi Murukku | Kodo Millet Rice Murukku | Millet Recipes

வரகு - சிறுதானியங்களில் ஒன்று. இதன் விதை 1000 வருடங்கள் வரைக்கும் முளைப்பு திறன் கொண்டது.

பயன்கள் - - வரகினை அரிசிக்கு பதிலாக இட்லி,தோசைக்கு பயன்படுத்தலாம்.
இதில் புரதம்,கால்சியம்,வைட்டமின் பி மற்றும் தாதுப்பொருட்கள்  இருக்கு.விரைவில் செரிமானம் ஆவதுடன்  உடலுக்கு தேவையான  சக்தியைக் கொடுக்கும்.

அரிசி கோதுமையைக் காட்டிலும்  வரகில் நார்ச்சத்து மிக அதிகம்.மாவுசத்தும் குறைவு..

வரகினை கோவில் கும்பத்தில் வைத்து பத்திரப்படுத்துவதற்கு காரணம் அதற்கு இடியைத்தாங்கும் சக்தி உண்டு.

இதை உணவில் சேர்ப்பதால் சர்க்கறை அளவை குறைக்கிறது,மூட்டுவலியைக் குறைக்க உதவுகிறது,மாதவிடாய் கோளாறு கொண்ட பெண்கள் வரகினை சமைத்து சாப்பிடுவது மிக நல்லது.கண் நரம்பு  நோய்களை தடுக்கும் சக்தி கொண்டது...

இதில் முறுக்கு செய்வதை பார்க்கலாம்..

தே.பொருட்கள்

வரகரிசி -1 கப்
பொட்டுக்கடலை மாவு -1 கப்
வறுத்த உளுத்தமாவு -1/4 கப்
பெருங்காயத்தூள் -1/4 டீஸ்பூன்
வெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
ஓமம் -1 டீஸ்பூன்
எள் -1 டீஸ்பூன்
உப்பு -1 டீஸ்பூன்
எண்ணெய் -பொரிக்க

செய்முறை
வரகரிசி


*வரகினை கழுவி 2 மணிநேரம் ஊறவைத்து  மைய அரைக்கவும்.

*அதனுடன் எண்ணெய் நீங்கலாக மேற்கூறிய பொருட்கள் சேர்த்து நன்றாக பிசையவும்.


*பின் தேவைக்கு நீர் சேர்த்து பிசையவும்.


*முறுக்கு அச்சில் மாவினை கொஞ்சமாக போட்டு எண்ணெயில் பிழிந்து பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

*இந்த முறுக்கு மிக சுவையாக இருக்கும்.

Sending to Asiya akka's WTML event Gayathri & Gayathri's Diwali Spl  Event& Diwali Delicacies  Event Priya & Sangee
Monday 28 October 2013 | By: Menaga Sathia

மசால் வடை/Masal Vadai



தே.பொருட்கள்

கடலைப்பருப்பு  - 1 கப்
பொடியாக நறுக்கிய வெங்காயம்  - 1
பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை கொத்தமல்லி  - சிறிதளவு
காய்ந்த மிளகாய்  - 2
சோம்பு - 1 டீஸ்பூன்
பூண்டுப்பல்  - 1
கிராம்பு  - 1
பட்டை  - சிறுதுண்டு
உப்பு  - தேவைக்கு
எண்ணெய்  - பொரிக்க‌

செய்முறை

*கடலைப்பருப்பை கழுவி 1 மணிநேரம் ஊறவைத்து நீரை வடிக்கவும்.

*அதனுடன் காய்ந்த மிளகாய்+சோம்பு+கிராம்பு+பட்டை சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.கடைசியாக பூண்டுப்பல் சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.




*அரைத்த பருப்புடன் உப்பு+வெங்காயம்+கறிவேப்பிலை கொத்தமல்லி சேர்த்து வடைகளாக சுட்டெடுக்கவும்.

பி.கு
*பருப்பினை அதிகநேரம் ஊறவைத்தால் வடையின் மொறுமொறுப்பு தன்மை இருக்காது.

*மிக்ஸியில் அரைக்கும் போது ஒரேடியாக பருப்பை அரைக்காமல் விப்பரில் நிறுத்தி நிறுத்தி அரைக்கவும்.இப்படி செய்வதால் பருப்பு முழுவதும் அரைக்காமல் ஒன்றும்பாதியுமாக இருந்து வடை நன்றாக இருக்கும்.ஆறிப்போனாலும் மொறுமொறுப்புத்தன்மை குறையாது.

Sendint to Asiya akka's WTML event by Gayathri & Gayathri's Diwali Spl Event & Diwali Delicacies Event by Priya & Sangee
Thursday 24 October 2013 | By: Menaga Sathia

பாசிப்பருப்பு லட்டு/நெய் உருண்டை | Paasi Paruppu Laddoo | Moongdhal Laddoo | Nei Urundai |Diwali Sweets Recipe

 தே.பொருட்கள்

பாசிபருப்பு - 1 கப்
சர்க்கரை - 3/4 கப்
நெய் -1/4 கப்
ஏலக்காய் -2

செய்முறை

*கடாயில் பாசிபருப்பை போட்டு வாசனை வரும் வரை வறுக்கவும்.

*ஆறியதும் மிக்ஸியில் நைசாக பொடிக்கவும்.
 *சர்க்கரையுடன் ஏலக்காய் சேர்த்து நைசாக பொடிக்கவும்.
*மேற்கூறிய பொருட்களில் நெய்யை தவிர அனைத்தையும் ஒன்றாக கலக்கவும்.

*நெய்யை சூடாக்கி கைபொறுக்கும் சூட்டில் லட்டுகளாக பிடிக்கவும்.


Sending To Asiya akka's WTML Event By Gayathri &  Diwali Delicacies Event By Priya and Sangee & Diwali Announcement By Gayathri
Monday 21 October 2013 | By: Menaga Sathia

மைசூர் பாக் / Mysore Pak | Traditional South Indian Sweet | Diwali Sweets Recipe


மைசூர் பாகை 4-5 முறை செய்து பார்த்து,ஒருமுறைகூட சரியாக வரவில்லை.நானும் விடாது கறுப்பு போல, கடைசி முறை செய்து பார்ப்போம்னு செய்து பார்த்ததில் சரியாக வந்துவிட்டது.

கடலைமாவும்,நெய்யும் புதுசா இருந்தால்  மைசூர் பாகு நன்றாக இருக்கும்.நெய்யை சூடு படுத்தி செய்தால் தான் மைசூர் பாகு கலராக வரும்.

அக்காவின் நிச்சயதார்த்ததின் போது  வீட்டிலேயே சமையல்காரர் வரவைத்து மைசூர்பாக் செய்தாங்க,அதன் செய்முறை ஒரளவுக்கு ஞாபகம் வைத்து செய்து பார்த்தேன்.

எனக்கு நெய் மைசுர் பாக் விட க்ரிஸ்பியாக இருக்கும் மைசூர் பாக் தான் பிடிக்கும்.இதனை கைவிடாமல் கிளறிட்டே இருக்கனும்.கூடுபோல் வரும் போது அதவது நிறைய புள்ளிகள் போல சேர்ந்து வரும் போது இறக்கி சமப்படுதத வேண்டும்.அந்தளவுக்கு வரவில்லை எனினும்  அடுத்த முறை செய்யும் போது நிச்சயம் வந்துவிடும் என நம்பிக்கை வந்துவிட்டது.

தட்டில் வைத்து சமப்படுத்தி எடுக்கும் படத்தினை எடுக்க மறந்துவிட்டேன்...

தே.பொருட்கள்

கடலைமாவு - 1/2 கப்
நெய் - 1   கப்
சமையல் எண்ணெய் -1/2 கப்
சர்க்கரை - 1 கப்
தண்ணீர் - 1/2  கப்

செய்முறை
*கடலைமாவுன் 1/2 கப் எண்ணெய் கலந்து கட்டியில்லாமல் கலக்கவும்.

 *கடாயில் சர்க்கரையுடன் தண்ணீர் கலந்து 1 கம்பி பதம் எடுக்கவும்.

*1 கம்பி பதம் என்பது கட்டை விரலுக்கும்,ஆள்காட்டி விரலுக்கும் 1 இழை போல வரும்.அதுதான் சரியான பதம்.

*இன்னொரு அடுப்பில் சிறுதீயில் நெய்யை சூடு படுத்தவும்.

 *1 கம்பி பதம் வந்ததும் கடலைமாவினை ஊற்றி நன்கு கலக்கவும்.
 *கொஞ்ச கொஞ்சமாக சூடுபடுத்திய நெய்யை ஊற்றவும்.மாவு நல்லா பொங்கி வரும்.கவனமாக செய்யவும்.
 *கடைசியாக மாவு ஓரங்களில் ஒட்டாமல் கூடு போல வரும் போதும்  ,நெய் பிரிந்து வரும் போதும், இறக்கி நெய் தடவிய தட்டில் கொட்டி இளஞ்சூடாக இருக்கும்போது துண்டுகள் போடவும்.

Sending  to Asiya akka's WTML event By Gayathri & Diwali Delicacies Event By Priya and Sangee & Diwal Announcement By Gayathri

Friday 18 October 2013 | By: Menaga Sathia

அக்காரவடிசல் / Akkaravadisal



அக்காரவடிசல்  = அக்காரை+வடிசல்.அக்காரை என்றால் சர்க்கரை,வடிசல் என்றால் நன்றாக குழைந்து வெந்த சாதம்.சர்க்கரை பொங்கல் போலதான் என்றாலும் இதற்கும் சர்க்கரை பொங்கலுக்கும் நிறைய வித்தியாசம் உண்டு.

இதில் பாலும்+நெய்யும் தான் அதிகம் சேர்க்க வேண்டும்.பாரம்பரியமாக செய்யபடும் அக்காரவடிசலில் முந்திரி திராட்சை  சேர்ப்பதில்லை.இதனை செய்யும் போது அடுப்பை ஒரே சீராக எரியவிட்டு சமைக்கவேண்டும்,இல்லையெனில் அடிப்பிடிக்கும்.

பச்சை கற்பூரத்தை சிறிதளவே சேர்க்கவும்,இல்லையெனில் கசக்கும்.

புரட்டாசி+மார்கழியில் பெருமாளுக்கும்,அம்பாளுக்கும்  நிவேதனம் செய்வது சிறப்பு.நவராத்தியின் 9ஆம் நாளன்று நிவேதனம் செய்வது மிகசிறப்பு!!

தே.பொருட்கள்

பாஸ்மதி - 1/4 கப்
பாசிப்பருப்பு -1/8 கப்
ஏலக்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன்
பச்சை கற்பூரம்-சிறிதளவு
பால் - 3 கப்+மேலும்..
நெய் - 1/4 கப்
வெல்லம் - 1/4 கப்

செய்முறை

*அரிசி+பருப்பு இவ்விரண்டையும் கழுவி சிறிதுநேரம் துணியில் உலர்த்தவும்.

*பின் குக்கரில் 1 டீஸ்பூன் நெய்விட்டு உலர்ந்த அரிசி+பருப்பை வாசனை வரும் வரை வறுத்து 2 கப் பால் சேர்த்து வேகவிடவும்.

*பால் சுண்ட சுண்ட மேலும் பால்+நெய் சேர்த்து நன்கு குழைய வேகவிடவும்.

*மற்றொரு பாத்திரத்தில் வெல்லம்+சிறிது நீர் சேர்த்து கொதிக்க வைத்து வடிக்கட்டவும்.

*நன்கு குழைய வெந்த இளஞ்சூடான பொங்கலில் வெல்லகரைசலை சேர்த்து மேலும் சிறிதுநேரம் விடாமல் கிளறவும்.

*சூடான பொங்கலில் வெல்லத்தை ஊற்றினால் திரிந்துவிடும்,அதனால் சிறிது ஆறியபிறகு ஊற்றவும்.
*பின் ஏலக்காய்த்தூள்+பச்சை கற்பூரம் சேர்த்து இறக்கவும்.
*சுவையான அக்காரவடிசல் ரெடி!!
Wednesday 16 October 2013 | By: Menaga Sathia

மெட்ராஸ் மட்டன் பிரியாணி /Madras Mutton Biryani - A Guest Post for Geetha Achal

கீதாவை எனக்கு அறுசுவை.காம் வெப்சைட் மூலமாக தெரியும்.இன்றுவரை எங்கள் நட்பு 6 வருடங்களாக தொடர்கிறது. வாரத்தில் 1 முறையாவது போன் பேசிவிடுவோம்.அவர்களின் வலைப்பூவில்  கெஸ்ட் போஸ்ட்  போடுமாறு கேட்டுக் கொண்டதும் உடனே ஒப்புக்கொண்டேன்.நன்றி கீதா!!

அதுவும் ஸ்பெஷலாக மட்டன் ரெசிபி கேட்டதால்  என்ன ரெசிபி செய்யலாம் என யோசித்த போது இந்த பிரியாணி ஞாபகம் வந்தது.ஏற்கனவே எனக்கு தெரிந்த வரை என் வலைப்பூவில் மட்டன் ரெசிபிகள் போட்டுவிட்டேன்..

இந்த பிரியாணி கொஞ்சம் காரசாரமா இருக்கும் .இதன் ஸ்பெஷாலிட்டியே கசகசாவும்,சின்ன வெங்காயமும் சேர்த்து செய்வதுதான்.என் குடும்பத்திற்கேற்ப காரத்தை குறைத்து போட்டு செய்துள்ளேன்.

மேலும் விளக்கபடங்களுடன் ரெசிபியை பார்க்க இங்கே க்ளிக் செய்யவும்...

Tuesday 15 October 2013 | By: Menaga Sathia

தீபாவளி ஸ்பெஷல் ரெசிபிகள் / Diwali Sweets & Snacks Recipes - Collection Of Recipes!!


Diwali Recipes - Sweets & Snacks

Sweet  Bhoondi
Jaggery Adirasam
Sweet Somass

Moongdal Sugiyan
Laddoo
Kala jamun

Jangri
Badhusha
Jilabi

Dry Jamun
Arcot Makkan Peda
Rava Laddoo

OmaPodi
Murukku
Ribbon Pakoda

Thattai
Kara Bhoondi
Mixture

Karasev
Kai Murukku
Boiled Rice Murukku

01 09 10