Thursday 28 March 2013 | By: Menaga Sathia

பொன்னாங்கன்னி கீரை பொரியல்/Ponnangkanni Keerai(Dwarf Copperleaf) Poriyal

தே.பொருட்கள்

பொன்னாங்கன்னி கீரை - 1/2 கட்டு
பாசிபருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
தேங்காய்த்துறுவல் - 2 டேபிள்ஸ்பூன்
பொடியாக நறுக்கிய வெங்காயம் -1 சிறியது
உப்பு - தேவைக்கு

தாளிக்க
கடுகு + உளுத்தம்பருப்பு - தலா 1/4 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 3
எண்ணெய் - 1 டீஸ்பூன்

செய்முறை

*கீரையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கவும்.

*பாசிபருப்பை மஞ்சள்தூள் சேர்த்து 3/4 பதமாக வேகவைத்தெடுக்கவும்.

*கடாயில் தாளிக்க கொடுத்துள்ளவைகளைப் போட்டு தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

*வதங்கியதும் கீரை+ உப்பு சேர்த்து மூடி போட்டு வேகவிடவும்.தண்ணீர் ஊற்றவேண்டாம்.கீரையிருந்து வரும் நீரே போதுமானது.

*வெந்ததும் பாசிபருப்பு+தேங்காய்த்துறுவல் சேர்த்து கிளறி இறக்கவும்.
Sending to Vimitha's  Hearty n Healthy Event  & Easy to Prepare in 15 Minutes @ Aathithyam & Priya's CWS - Dals
Tuesday 26 March 2013 | By: Menaga Sathia

ஆரஞ்ச்,லெமன்,லைம் ஜூஸ் லெமனேட் /Vitamin C Lemonade

தே.பொருட்கள்

ஆரஞ்ச் ஜூஸ் -1/4 கப்
லெமன் ஜூஸ்,லைம் ஜூஸ் -தலா 1/4 கப்
சர்க்கரை -3/4 கப்
துருவிய ஆரஞ்ச்,லெமன் தோல் - தலா 1/4 டீஸ்பூன்

செய்முறை
*ஒரு பாத்திரத்தில் சர்க்கரை+1/4 கப் தண்ணீர் ஊற்றி சர்க்கரை கரைந்து வரும்வரை அடுப்பில் வைக்கவும்.

*கொஞ்சம் திக்கானதும் அடுப்பிலிருந்து இறக்கி துருவிய தோல்களை சேர்க்கவும்.

*சூடு ஆறியதும் எல்லா ஜூஸ்களையும் சர்க்கரையில் கலந்து வடிகட்டி ப்ரிட்ஜில் வைத்திருந்து தேவைக்கு நீர் சேர்த்து பருகவும்.

Sending To Vimitha's Hearty n Healthy Event &  Easy 2 Prepare in 15 minutes @Aathidhyam

Monday 25 March 2013 | By: Menaga Sathia

ப்ரூட் சாட் /Fruit Chaat


தே.பொருட்கள்

துண்டுகளாகிய பழக்கலவை ‍- 2 கப்
காஷ்மிரி மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்
சாட் மசாலா -1 டீஸ்பூன்
கறுப்பு உப்பு ‍- 1/2 டீஸ்பூன்
வறுத்து பொடித்த சீரகத்தூள் - 1/2 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு ‍- 1 டீஸ்பூன்
உப்பு - 1/4 டீஸ்பூன்

செய்முறை

*மேற்கூறிய அனைத்து பொருட்களையும் ஒன்றாக கலந்து பரிமாறவும்.

பி.கு
*நான் வாழைப்பழம்+ஸ்ட்ராப்பெர்ரி+மாம்பழம்+அன்னாச்சிப்பழம்+கிவி என சேர்த்து செய்துள்ளேன்.

Sending To Vimitha's Hearty n Healthy Event  & Easy To Prepare in 15 Minutes @Aathidhyam
Thursday 21 March 2013 | By: Menaga Sathia

கோதுமைமாவு போண்டா/Wheat Bonda

தே.பொருட்கள்:

கோதுமைமாவு - 1 கப்
இட்லிமாவு - 1/4 கப்

பொடியாக அரிந்த பச்சை மிளகாய் - 2
பொடியாக அரிந்த வெங்காயம் - 1
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
கறிவேப்பிலை - சிறிது
 
செய்முறை :

*கோதுமைமாவு+ இட்லிமாவு +வெங்காயம்+பச்சை மிளகாய்+உப்பு சேர்த்து போண்டா பதத்திற்க்கு கலக்கவும். (மாவில் உப்பு இருக்கும் அதனால் உப்பை கவனமாக சேர்க்கவும்.)

*கடாயில் எண்ணெய் காயவைத்து போண்டாவாக சுட்டெடுக்கவும்.

Sending To Gayathri's WTML Event @ Hema & Easy 2 Prepare in 15 minutes @Aathidhyam
Monday 18 March 2013 | By: Menaga Sathia

முருங்கை கத்திரிக்காய் சாதம்/Drumstick Brinjal Rice

 Recipe Source : Muthisidharal

தே.பொருட்கள்
அரிசி  - 2 கப்
அரிந்த சின்ன வெங்காயம் - 1 கப்
பூண்டுப்பல் - 2 டேபிள்ஸ்பூன்
முருங்கைகீரை - 1 கப்
முருங்கைகாய் - 3
நீளமாகவும் மெலிதாக அரிந்த பிஞ்சு கத்திரிக்காய் - 2 கப்
அரிந்த தக்காளி -2 கப்
சீரகம் - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை -1 கொத்து
மஞ்சள்தூள் -1/2 டீஸ்பூன்
தேங்காய் எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
நெய் - 4 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு

எண்ணெயில் வறுத்து பொடிக்க
தனியா+கடலைப்பருப்பு+சோம்பு - தலா 1 டீஸ்பூன்
கசகசா+மிளகு -தலா 1/2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் -5
பட்டை+கிராம்பு -தலா 1

செய்முறை

*அரிசியை கழுவி சிரிது நெய்யில் வறுத்து உப்பு+4 கப் நீர் சேர்த்து புலவு போல் செய்து கொள்ளவும்.

*கடாயில் எண்ணெய் +2 டேபிள்ஸ்பூன் நெய் விட்டு சீரகம்  சேர்த்து தாளித்து சின்ன வெங்காயம்+பூண்டு+தக்காளி+முருங்கைகீரை+கத்திரிக்காய்+துண்டுகளாகிய முருங்கைக்காய்+கரிவேப்பிலை+மஞ்சள்தூள் என அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து சிறுதீயில் சமைக்கவும்.

*முருங்கைக்காய் வெந்ததும் மசாலா கெட்டியாகி என்ணெய் மேலே மிதந்து வரும் போது பொடித்த பொடி +மீதமிருக்கும் நெய் சேர்த்து வதக்கவும்.

*இந்த கலவையில் சாதத்தை சேர்த்து சிறுதீயில் கிளறி இறக்கவும்.

*சுவையான இந்த சாதத்துக்கு உருளை வறுவல்+அப்பளம்+ஊறுகாய்  சூப்பர் காம்பினேஷன்.

Sending to Faiza's Passion On Plate  Event
Friday 15 March 2013 | By: Menaga Sathia

என்னுடைய பொக்கிஷங்கள்..../My Treasures


ஆசியா அக்கா அவர்கள் அழைத்த தொடர்பதிவு இது...மிக்க நன்றி அக்கா!!

நானும்,அக்காவும் சின்ன பிள்ளையாக இருக்கும் போது அப்பா அக்காவுக்கு ஒரு சமையல் புத்தகம் வாங்கி தந்தார்.அதில்  அனைத்து வகையான தெந்னிந்திய உணவு வகைகளும் நன்றாக இருக்கும்...அப்போதெல்லாம் எனக்கு சமைக்கும் ஆர்வம் இருந்ததில்லை.

முதல்முதலில் நான் சமையல் செய்தது ரசம் தான்.அதில் அஞ்சறைப் பெட்டியில் இருக்கும் எல்லா பொருட்களும் அந்த ரசத்தில் இருக்கும்.வீட்ல இருக்கறவங்க எல்லாம் இது ரசமான்னு கேட்கற அளவில் இருக்கும்,ஆனால் அப்பா மட்டும் தான் ஆஹா ஒஹோன்னு புகழுவார்,ரொம்ப அருமையா இருக்கு,நீ ரசம்  தாளிக்கிற வாசனை நான் வேலை செய்யும் இடம் வரைக்கும்  வந்தது,அதுலயே நான் கண்டு பிடிச்சுட்டேன் நீ ரசம் சமையல் செய்றேன்னு,எனக்கு ஒரே சந்தோஷமா இருக்கும்.

ஒருநாள் அம்மா அப்பாவும் பேசும் போது நான் ஏதோச்சையாக கேட்க நேர்ந்தது,எதுக்கு பொய் சொல்றீங்கன்னுஅம்மா கேட்கும் போது,அதற்கு அப்பா பிள்ளை மனசு சோர்ந்து போய்டும்,நாம  தட்டிக் கொடுக்கலான்னா எப்படி?? அதுமட்டுமில்ல நாம பாராட்டும் போதுதான் இன்னும் ஆர்வம் அதிகமாகும் இல்லன்னா வராதுன்னு அம்மாகிட்ட சொன்னார்.

பாராட்டுதானே ஒருத்தங்களை தட்டிக்கொடுக்கும்..நான் சொல்றது சரிதானே..அதிலிருந்து  சமையலை முறைப்படி ஒழுங்கா செய்ய கத்துக்கிட்டேன்.அப்போ என்னை தட்டிக்கொடுத்த அப்பா இப்போ என் சமையலை ரசித்து சுவைக்கற அளவுக்கு அவர் இல்லை.அப்பா பாராட்டின வார்த்தைகள் இப்பவும் என்மனசுல இருக்கு.அதுவும் ஒரு பொக்கிஷம் தானே....

பிறகு  அக்காவுக்கு திருமணம் ஆனதும் பிரச்சனை வந்தது அப்பா வாங்கி கொடுத்த புத்தகத்திற்காக..அம்மா அந்த புத்தகம் அக்காவுக்குதானே அப்பா வாங்கித்தந்தாங்க,அதனால அக்காவே எடுத்துக்கட்டும்ன்னு கொடுத்துட்டாங்க.விடுவேனா அம்மாகிட்ட அழுது சண்டைப்போட்டு என் தொல்லை தாங்கமுடியாம அக்காகிட்ட சொல்லி அதே மாதிரி புத்தகத்தை வாங்கி கொடுக்க சொன்னாங்க.அக்கா வாங்கி கொடுத்த பிறகுதான் நிம்மதியா இருந்தது.அந்த புத்தகத்தில் அப்பா பெய்ரை எழுதி வைத்திருப்பேன்.

திருமணமாகிவிட்டதால் பெண்களுக்கு இனிஷியல் மாறிவிடும்.எனக்கு அப்பாவின் இனிஷியல் மாறிவிடுமோ என்று பயம் இருக்கும்.ஆனால் கடவுள் அருளால் எனக்கும் அக்காவும் இனிஷியல் மாறவில்லை.அதே எஸ் இனிஷியல் தான் ,அதில் எனக்கு ரொம்பவே சந்தோஷம்.இதுவும் ஒரு பொக்கிஷம் எனக்கு...

அண்ணா முதன்முதலில் பிரான்ஸிருந்து பரேத் வாங்கிதந்தாங்க..சமிபத்தில் தான் அந்த ப்ரேட் உடைந்துவிட்டது.15 வருடமாக பத்திரமா வைத்திருந்தேன்,என் பொண்ணு எல்லாத்தையும் ஆராய்ச்சி செய்து உடைத்து விட்டாங்க...அக்காவும் நிறைய பொருட்கள் வாங்கி கொடுத்திருக்காங்க,சிலவற்றை பத்திரமாக வைத்திருக்கேன்...

அப்பாவுக்கு பிறகு அம்மா வாங்கி கொடுத்த வாட்ச்,இப்போ அந்த வாட்ச் வேலை செய்யவில்லையென்றாலும் பத்திரமா வைத்திருக்கேன்...


என் கணவர் முதன்முதலில் வாங்கி தந்த பரிசு சானல் மார்க் வாசனை திரவியம,.கைப்பை மற்றும் லிப் கலரில் லிப்ஷ்டிக்..எப்பவும் அதே வாசனை திரவியம்+லிப்ஷ்டிக் தான் வாங்க தருவார்.பிறகு என் விருப்பதிற்கே உறுத்தாத கலரில் லிப்ஷ்டிக் போடுன்னு சொல்லி விட்டுட்டார்...


அடுத்தது என் மகள் மற்றும் மகனின் ஸ்கேன் ரிப்போர்ட்..இப்போழுதும் பத்திரமா வைத்துருக்கேன்.வீட்டை சுத்தம் பண்ணும் போது எதுக்கு இந்த குப்பை கூளமெல்லாம் சேர்த்து வச்சிருக்க தூக்கி போடுன்னு சொல்லுவார்.ஆனால் இன்னுமும் தூக்கி போடாமல் பத்திரமா வச்சுருக்கேன்.


இது என்மகள் சாப்பிட ஆரம்பிக்கும் போது வாங்கிய சிறிய ஸ்பூன் மற்றும் முள்கரண்டி...இதையும் தூக்கி போடாமல் பத்திரமா வைத்திருக்கேன்.


இது என் பையன் ஆஸ்பிட்டலில் பிறந்திருக்கும் போது அவன் கையில் கட்டிய பேட்ஜ்..என் மகளுடையதும் பத்திரமா வைத்திருந்தேன் வீடு மாறியதில் தொலைந்துவிட்டது.

அப்புறம் புத்தகத்தில் எனக்கு பிடித்த குறிப்புகள் ,வாசகங்கள் இவற்றையெல்லாம் வெட்டி ஒரு பைல் நிறைய வைத்திருக்கேன்.

பதிவின் நீளம் கருதி இத்துடன் முடித்துக் கொள்கிறேன்.


Thursday 14 March 2013 | By: Menaga Sathia

ராகி கோதுமைரவை இட்லி/ Ragi Wheat Rava Idly


தே.பொருட்கள்

கேழ்வரகு மாவு - 1 கப்
கோதுமைரவை - 1 கப்
உளுந்து - 1/2 கப்
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு

செய்முறை
*உளுந்து+வெந்தயத்தை ஒன்றாக 1 மணிநேரம் ஊறவைத்து நன்குஅரைத்தெடுக்கவும்.

*அதனுடன் கோதுமைரவை+கேழ்வரகு மாவு+உப்பு கலந்து தேவையான நீர் சேர்த்து  கெட்டியாக கரைத்து புளிக்கவைக்கவும்.

*புளித்ததும் இட்லிகளாக ஊற்றி எடுக்கவும்.

பி.கு

*இதற்கு காரமான சட்னிதான் நன்றாக இருக்கும்.

*கோதுமைரவை பொடியாக இருந்தால் ஊறவைத்து அரைக்கதேவையில்லை.

Sending To Faiza's Passion on plate  & Priya's CWS -Dals & Vimitha's Hearty n Healthy Event
Tuesday 12 March 2013 | By: Menaga Sathia

செட்டிநாடு நண்டு வறுவல்/Chettinad Crab Varuval

தே.பொருட்கள்

சுத்தம் செய்த நண்டு - 7
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1
பொடியாக நறுக்கிய தக்காளி - 1
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
மஞ்சள்தூள் -1/2 டீஸ்பூன்
உப்பு+எண்ணெய் =தேவைக்கு

அரைக்க

தேங்காய்த்துறுவல் - 1/4 கப்
பெருஞ்சீரகம் -1 டீஸ்பூன்
கசகசா - 1 டீஸ்பூன்
கரம்மசாலா - 1/2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் -7

செய்முறை
*காய்ந்த மிளகாயை சிறிது நேரம் வெந்நீரில் ஊறவைத்து நைசாக அரைக்கவும்.தேங்காய்த்துறுவல்+கசகசா+பெருஞ்சீரகம்+கரம்மசாலா இவற்றையும் விழுதாக அரைக்கவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு கறிவேப்பிலை சேர்த்து தாளித்து வெங்காயம்+தக்காளி+இஞ்சி பூண்டு விழுது+காய்ந்த மிளகாய் விழுது என் ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வதக்கவும்.

*பின் மஞ்சள்தூள்+உப்பு+நண்டு சேர்த்து வதக்கி தேவையானளவு நீர் சேர்த்து வேகவிடவும்.

*நண்டு வெந்ததும் தேங்காய் மசாலா சேர்த்து கிளறி மேலும் 5 நிமிடங்கள் வரை வதக்கி இறக்கவும்.

பி.கு

*நண்டு சீக்கிரம் வெந்துவிடும் அதனால் குறைவான நீர் சேர்த்து மூடி போட்டு வேகவிடவும்.

*எப்போழுதும் நண்டை சமைக்கும் நேரத்தில்தான் சுத்தம் செய்து சமைக்கவேண்டும்.முன்பே சுத்தம் செய்துவிட்டால் நண்டின் சுவையே மாறிவிடும்.

*இதில் காய்ந்த மிளகாய் பதில் வரமிளகாய்த்தூள் 1 டேபிள்ஸ்பூன் சேர்க்கலாம்.

Sending to Faiza's Passion on plate 

Sunday 10 March 2013 | By: Menaga Sathia

சத்து மாவு/Homemade Health Mix (Sathu Maavu)


தே.பொருட்கள்

கம்பு - 4.5 டேபிள்ஸ்பூன்
கேழ்வரகு - 4.5 டேபிள்ஸ்பூன்
சோளம் - 3 டேபிள்ஸ்பூன்
புழுங்கலரிசி - 1.5 டேபிள்ஸ்பூன்
பார்லி + ஜவ்வரிசி +வேர்க்கடலை - தலா 1.5 டேபிள்ஸ்பூன்
பச்சைபயிறு+கோதுமை+கொள்ளு - தலா 1.5 டேபிள்ஸ்பூன்
பொட்டுக்கடலை - 1.5 டேபிள்ஸ்பூன்
பாதாம்+முந்திரி+ஏலக்காய் - தலா 4

செய்முறை

*அனைத்தையும் தனித்தனியாக வெறும் கடாயில் வறுத்து ஆறவைத்து மிக்ஸியில் நைசாக பொடிக்கவும்.
*2 டீஸ்பூன் சத்துமாவை பாலில் கலந்து கொதிக்கவைத்து சர்க்கரை சேர்த்து குடிக்கலாம்.

பி.கு
*இதில் கேழ்வரகுக்கு பதில் நான் கேழ்வரகு மாவை லேசாக வறுத்து இந்த மாவில் கலந்துக் கொண்டேன்.

*மேலும் இதில் சோயா பீன்ஸ் மற்றும் Jowar சேர்க்கலாம்.

*இந்த அளவில் 2.5 கப் மாவு வரும்.

Sending to  Priya's CWS- Dals
Wednesday 6 March 2013 | By: Menaga Sathia

சம் சம்/Cham Cham - Traditional Bengali Sweet


இந்த வாரம் தினகரன் வசந்தம் இதழில் மகளிர்  தின ஸ்பெஷலாக  இணையத்தைக் கலக்கும் இலக்கியப்  பெண்கள் என்னும் தலைப்பில் என் வலைப்பூ மற்றும் மற்ற தோழிகளின் வலைப்பூ இடம் பெற்றுள்ளது.இதில் இடம்பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்...இத்தகவலை முகநூலில் தெரிவித்த சாரு அக்கா மற்றும் ராமலஷ்மி அக்கா,கமெண்டில் தெரிவித்த ஸாதிகா அக்காவுக்கும் நன்றிகள்...மேலும் இப்பக்கத்தினை எனக்கு ஸ்கேன் செய்து அனுப்பிய ராமலக்ஷ்மி அக்காவுக்கு ஸ்பெஷல் நன்றி....

என் வலைப்பூ பத்திரிக்கைகளில் இடம்பெறுவது இது 2வது முறையாகும்.2009 ல் முதல்முறையாக ஆனந்த விகடன் புத்தகத்தில் ஆகஸ்ட் மாத இதழில் விகடன் வரவேற்பறையில் இடம்பெற்றுள்ளது.



இப்போழுது இந்த சம் சம் இனிப்பின் செய்முறையை பார்க்கலாம்.

தே.பொருட்கள்

பால் -2 லிட்டர்
சிட்ரிக் ஆசிட் -1 டீஸ்பூன்
மஞ்சள் கலர் - 1/2 டீஸ்பூன்
சர்க்கரை - 2 கப்
நீர் - 4 கப்
பொடியாக நறுக்கிய பிஸ்தா -அலங்கரிக்க

செய்முறை

*பாலை காயவைத்து சிட்ரிக் ஆசிட் சேர்கக்வும்.பல் நன்கு திரிந்ததும் மெல்லிய துணியால் நீரை வடிகட்டி பனீரை குளிர்ந்த நீரில் நன்கு அலசி நீரை நன்கு பிழியவும்.
*பனீரை மஞ்சள் கலர் சேர்த்து மிருதுவாக பிசைந்து சிறு உருண்டைகளாக எடுக்கவும்.

*அதனை ஒவல் வடிவத்தில் உருட்டி வைக்கவும்.

*ஒரு பாத்திரத்தில் சர்க்கரை+நீர் சேர்த்து கொதிக்க வைத்து பனீர் உருண்டைகளை சேர்த்து 10 நிமிடங்கள் மூடி போட்டு வேகவிடவும்.

*உருண்டைகள் இருமடங்காக உப்பியிருக்கும்,அதனை மெதுவாக திருப்பிவிட்டு மேலும் 2 நிமிடங்கள் வேகவிடவும்.

*உருண்டைகளில் சிறு சிறு புள்ளிகள் வந்திருந்தால் நன்கு வெந்துவிட்டது என்று அர்த்தம்.அடுப்பிலிருந்து இறக்கி நன்கு ஆறவிடவும்.

*ஆறியதும் ஒவ்வொரு துண்டுகளையும்  சர்க்கரை பாகிலிருந்து எடுத்து பிஸ்தா துண்டுகளை வைத்து அலங்கரித்து பரிமாறவும்.


பி.கு

*பிஸ்தா துண்டுகளில் அலங்கரிப்பதற்க்கு பதில் தேங்காய் பவுடரில் பிரட்டி எடுக்கலாம் அல்லது மலாய் சேர்த்து பரிமாறலாம்.ஆனால் இவைகளை உடனே பயன்படுத்த  வேண்டும்.

Sending to Faiza's Passion on plate & Gayathri's WTML  Event Hosted By  Hema
Monday 4 March 2013 | By: Menaga Sathia

வெள்ளை பணியாரம்&வரமிளகாய் சட்னி/Vellai Paniyaram & Vara Milagai Chutney

தலைப்புக்கும் இந்த படத்தும் சம்பந்தம் இல்லைன்னு தெரியும்.இதுதான் முதல்முறையாக இந்த பணியாரத்தை செய்து சாப்பிட்டேன்.லஷ்மி செய்ததுபோல் வெள்ளையாக இல்லையென்றாலும் சுவை செம சூப்பர்.எண்ணெயிலேயே பொரிப்பதால் எப்பவாவது இதுபோல் செய்து சாப்பிடலாம்.அவர்கள் கொடுத்த அளவிலிருந்து பாதிஅளவு போட்டு செய்து பார்த்தது...

Recipe Source - Classic Chettinad Kitchen

தே.பொருட்கள்

பச்சரிசி -1/2 கப்
புழுங்கலரிசி -1/8 கப்
வெள்ளை முழு உளுந்து -1/8 கப்
சர்க்கரை -1/2 டீஸ்பூன்
பால் -1/8 கப்
உப்பு -தேவைக்கு
எண்ணெய் -பொரிக்க

செய்முறை

*அரிசி+உளுந்து இரண்டையும் ஒன்றாக 1 மணிநேரம் ஊறவைத்து உப்பு+சர்க்கரை சேர்த்து நைசாக அரைக்கவும்.

*மிக கெட்டியாக இல்லாமலும் நீர்க்க இல்லாமலும் மாவு இருக்கவேண்டும்.

*கெட்டியாக இருந்தால் பால் சேர்த்து கலக்கவும்.

*எண்ணெய் காயவைத்து ஒரு கரண்டி மாவை ஊற்றினால் தானாகவே வெந்து மிதந்து வரும் போது திருப்பிவிட்டு  1-2 நிமிடங்கள் வேகவைத்து எடுக்கவும்.

பி.கு

*அவர்கள் கொடுத்துள்ள அளவுபடி செய்தால் பணியாரம் சரியான பூ வடிவத்தில் வரும்.

*பணியாரத்தை ஒவ்வொன்றாக ஊற்றி எடுக்கவேண்டும்.

வரமிளகாய் சட்னி

தே.பொருட்கள்

காய்ந்த மிளகாய் -5
வெங்காயம் - 1/2  சிறியது
தக்காளி - 1 சிறியது
பூண்டுப்பல் -1
புளி -1 ப்ளுபெர்ரி பழளவு
உப்பு -தேவைக்கு

தாளிக்க

கடுகு - 1/4 டீஸ்பூன்
எண்ணெய் -1/2 டீஸ்பூன்
பெருங்காயம் -1/4 டீஸ்பூன்

செய்முறை

*கொடுத்துள்ள அனைத்து பொருட்களையும் ஒன்றாக அரைத்து தாலித்து சேர்க்கவும்.
Sending To Faiza's Pasiion on plate & T and T  Event Chettinad Kitchen - Kitchen Chronicles & Priya 's CWS - Dals & Gayathri's WTML Event By Hema
Sunday 3 March 2013 | By: Menaga Sathia

செட்டிநாடு மட்டன் சுக்கா/Chettinad Mutton Chukka

Recipe Source:Solai's kitchen

தே.பொருட்கள்

மட்டன் - 1/2 கிலோ
நறுக்கிய சின்ன வெங்காயம் -20 எண்ணிக்கை
நறுக்கிய தக்காளி - 1
தனியாத்தூள் - 3 டீஸ்பூன்
வரமிளகாய்த்தூள் -3 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
நறுக்கிய பூண்டுப்பல் - 5
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

அரைக்க

தேங்காய்த்துறுவல் -2 டேபிள்ஸ்பூன்
கசகசா+சோம்பு - தலா 1 டீஸ்பூன்

தாளிக்க

பிரியாணி இலை - 2
கிராம்பு - 2
பட்டை - சிறுதுண்டு
கறிவேப்பிலை -10 இலைகள்
சோம்பு - 1 டீஸ்பூன்

செய்முறை

*குக்கரில் சிறிது எண்ணெய் விட்டு 1 டேபிள்ஸ்பூன் நறுக்கிய வெங்காயம்+பூண்டுப்பல்+மட்டன் சேர்த்து வதக்கி தனியாத்தூள்+1 டீஸ்பூன் வரமிளகய்த்தூள்+சிறிது உப்பு  சேர்த்து வதக்கி தேவையான நீர் சேர்த்து வேகவைக்கவும்.

*வெந்ததும் கறி+வேகவைத்த நீர் தனிதனியாக வைக்கவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளை போட்டு தாளித்து இஞ்சிப்பூண்டு விழுது+வெங்காயம்+தக்காளி+மீதமுள்ள தூள் வகைகள்+உப்பு சேர்த்து வதக்கவும்.

*பின் அரைத்த தேங்காய் விழுது+கறிவேகவைத்த நீர் சேர்த்து சிறுதீயில் கொதிக்கவிடவும்.

*அடிக்கடி கிளறி விடவும் இல்லையெனில் அடிப்பிடிக்கும்.

*கிரேவி திக்கானதும் வேகவைத்த கரியை சேர்த்து சுருள கிளறி இறக்கவும்.

Sending to Faiza's Passion on plate & T and T  Chettinad Cuisine  & Kitchen Chronicles!!
01 09 10