Monday 30 January 2012 | By: Menaga Sathia

தக்காளி சட்னி - 5/Tomato Chutney -5


அண்ணியிடம் கற்றுக்கொண்ட ரெசிபி...

தே.பொருட்கள்
பழுத்த தக்காளி - 3
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
மிளகுத்தூள் - 1/4 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க
கடுகு,உளுத்தம்பருப்பு,பெருங்காயத்தூள் - தலா1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை
*தக்காளியை பொடியாக நறுக்கி அதனுடன் இஞ்சி பூண்டு விழுது+மிளகுத்தூள்+மிளகாய்த்தூள்+உப்பு+1/4 கப் நீர் சேர்த்து நன்கு குழைய வேகவைக்கவும்.

*பின் தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து சேர்க்கவும்.

*எண்ணெய் பிரியும் வரை கெட்டியானதும் இறக்கவும்.

*இட்லி,தோசை,சப்பாத்திக்கு நன்றாக இருக்கும்.
Wednesday 25 January 2012 | By: Menaga Sathia

ஹைதராபாத் காலிபிளவர் 65/Hyderabad Cauliflower 65

ஹைதராபாத் சிக்கன் 65 குறிப்பில் சிக்கனுக்கு பதில் காலிபிளவரில்   செய்தது.

தே.பொருட்கள்
காலிபிளவர் - 1 சிறியது
சோளமாவு - 1 டேபிள்ஸ்பூன்
மைதாமாவு - 1/4 கப்
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
சிகப்பு கலர்,மஞ்சள் கலர் - தலா 1 சிட்டிகை
மிளகாய்த்தூள் - 1 1/2 டீஸ்பூன்
தயிர் - 1/2 கப்
மிளகுத்தூள் ,சீரகத்தூள்,கரம் மசாலா - தலா 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
கீறிய பச்சை மிளகாய் -2
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

செய்முறை
*காலிபிளவரை சிறிய பூக்களாக எடுத்து உப்பு கலந்த வெதுவெதுப்பான நீரில் 10 நிமிடம் போட்டு வைக்கவும்.

*பின் நன்கு அலசி நீரை வடிகட்டி அதனுடன் சோளமாவு+அரிசிமாவு+சிகப்பு கலர்+உப்பு+இஞ்சி பூண்டு விழுது+மிளகாய்த்தூள் என அனைத்தையும் ஒன்றாக கலந்து 1/2 மணிநேரம் வைக்கவும்.

*பின் எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

*ஒரு பவுலில் தயிர்+உப்பு+மஞ்சள் கலர்+மிளகுத்தூள்+சீரகத்தூள்+கரம்மசாலா என அனைத்தையும் ஒன்றாக கலக்கவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு பச்சை மிளகாய்+கறிவேப்பிலை போட்டு தாளித்து தயிர் கலவையை ஊற்றவும்.

*இதனுடன் பொரித்த காலிபிளவர் துண்டுகளை சேர்த்து நன்கு சுண்டும் வரை கிளறி இறக்கவும்.
Monday 23 January 2012 | By: Menaga Sathia

கத்திரிக்காய் கொத்தமல்லி பச்சடி / Brinjal Coriander Pachadi

திருமதி. சோலை அவர்களின் குறிப்பை பார்த்து செய்தது.

தே.பொருட்கள்
வேகவைத்த துவரம்பருப்பு - 1/4 கப்
பொடியாக நறுக்கிய கத்திரிக்காய் - 4
நறுக்கிய வெங்காயம் - 1
நறுக்கிய தக்காளி - 1
சாம்பார் பொடி - 1 டீஸ்பூன்
கீறிய பச்சை மிளகாய் - 2
புளிபேஸ்ட் - 1/4 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - 1 கப்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க
சீரகம் - 1 டீஸ்பூன்
உ.பருப்பு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை
*பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப் போட்டு தாளித்து வெங்காயம்+தக்காளி+பச்சை மிளகாய்+சாம்பார் பொடி+கத்திரிக்காய் சேர்த்து வதக்கி 1 கப் நீர்+உப்பு சேர்த்து வேகவைக்கவும்.

*5நிமிடத்திற்க்கு பின் புளிபேஸ்ட்+வேகவைத்த பருப்பு சேர்க்கவும்.

*பின் கொத்தமல்லித்தழை சேர்த்து 5 நிமிடம் கழித்து இறக்கவும்.

*கலவை கெட்டியாக இல்லாமலும்,நீர்க்க இல்லாமலும் இருக்கவேண்டும்.கத்திரிக்காய் அதிகநேரம் வேகவைக்கவேண்டாம்.

*இட்லி,தோசை,சாதம் அனைத்திற்க்கும் நன்றாக இருக்கும்.


Wednesday 18 January 2012 | By: Menaga Sathia

காலிபிளவர் பட்டாணி மசால் தோசை/Cauliflower Peas Masala Dosa

 வழக்கமாக நாம் மசால் தோசைக்கு உருளையை வைத்துதான் செய்வோம்.இந்தமுறை இந்தியாவுக்கு சென்றபோது ஹோட்டலில் இந்த தோசையை சாப்பிடும்போது ரொம்ப பிடித்துவிட்டது.செய்துபார்த்ததில் அதேமாதிரி சுவையுடன் இருந்தது....

காலிபிளவர் பட்டாணி மசாலா

தே.பொருட்கள்

காலிபிளவர் - 1 நடுத்தரசைஸ்
ப்ரோசன் பட்டாணி - 1/2 கப்
வெங்காயம் - 1 பொடியாக நறுக்கியது
தக்காளி - 2 விழுதாக அரைக்கவும்.
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
காஷ்மிரி மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
 செய்முறை

*காலிபிளவரை சிறிய பூக்களாக நறுக்கி உப்பு கலந்த நீரில் 10நிமிடம் வேகவைத்து நீரை வடிக்கவும்.


*கடாயில் எண்ணெய் விட்டு சீரகம் போட்டு தாளித்து வெங்காயம்+இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும்.


*பின் தக்காளி விழுது+மிளகாய்த்தூள்+உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.


*வேகவைத்த காலிபிளவர்+பட்டாணி சேர்த்து நன்கு கெட்டியாக வரும்வரை கிளறி இறக்கவும்.

மசால் தோசை செய்ய

இட்லி/தோசை மாவு - 3 கப்
காலிபிளவர் பட்டாணி மசாலா - தேவைக்கு
எண்ணெய்/ நெய் - தேவைக்கு

செய்முறை

*தோசைக்கல்லில் எண்ணெய் தடவி 1குழிக்கரண்டி மாவை விட்டு மெலிதாக வார்க்கவும்.
 *சுற்றிலும் எண்ணெய் ஊற்றவும்.தோசை 1பக்கம் வெந்தபிறகு மசாலாவை ஒருபக்கம் வைக்கவும்.
 *பின் அப்படியே மடித்து எடுத்து சட்னி,சாம்பாருடன் பரிமாறவும்.
பி.கு

*தோசை ஒருபக்கம் வெந்த பிறகு திருப்பிபோடகூடாது.

*மாவு கொஞ்சம் தண்ணியாக இருந்தால் தோசை மெலிதாக சுட வரும்.

*நான் தக்காளி சட்னி,காரகுழம்புடன் பரிமாறியுள்ளேன்..
Tuesday 17 January 2012 | By: Menaga Sathia

சக்கரைவள்ளிக்கிழங்கு போளி / Sweet Potato Poli


தே.பொருட்கள்

மைதா - 1 கப்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு+நெய் = தேவைக்கு

ஸ்டப்பிங் செய்ய

வேகவைத்து மசித்த கிழங்கு - 1 நடுத்தர அளவு
தேங்காய்த்துறுவல் - 1/4 கப்
வெல்லம் - இனிப்பிற்கேற்ப
ஏலக்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன்

செய்முறை

*மைதா+உப்பு+மஞ்சள்தூள் சேர்த்து ரொம்ப கெட்டியாக இல்லாமல் கொஞ்சம் தளர பிசைந்து வைக்கவும்.

*ஸ்டப்பிங் செய்ய கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாக பிசைந்து உருண்டைகள் போடவும்.மைதா உருண்டைகள்+ஸ்டப்பிங் 2ம் சம அளவில் இருக்க வேண்டும்.

*மைதா உருண்டையை உருட்டி அதனுள் ஸ்டப்பிங் வைத்து கைகளால் மெலிதாக தட்டி நெய் தடவி 2பக்கமும் சுட்டெடுக்கவும்.


Thursday 12 January 2012 | By: Menaga Sathia

பொங்கல் குழம்பு/Pongal Khuzhambu | Pongal Recipes

இந்த குழம்பிற்க்கு மஞ்சள் பூசணிக்காய்,சக்கரை வள்ளிக்கிழங்கு,அவரைக்காய்,வாழைக்காய் கொத்தவரை,செப்பகிழங்கு,சேனைக்கிழங்கு,உருளை,பச்சை மொச்சை (அ)கொண்டைக்கடலை,வெள்ளை பூசணி ,கத்திரிக்காய் என நாட்டுக்காய்கறிகள் சேர்த்து செய்வார்கள்.

தே.பொருட்கள்
காய்கள் - 1 கப்
வேகவைத்த துவரம்பருப்பு -1/4 கப்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
புளிகரைசல் - 1 கப்
கடுகு- 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

எண்ணெயில் வறுத்து பொடிக்க

காய்ந்த மிளகாய் - 4
தனியா - 1 டீஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
தேங்காய்த்துறுவல் - 1 டேபிள்ஸ்பூன்

செய்முறை

*பாத்திரத்தில் காய்கள் போட்டு முழ்குமளவு நீர் விட்டு உப்பு+மஞ்சள்தூள் சேர்த்து வேகவைக்கவும்.

*பொடிக்க கொடுத்துள்ளவைகளை நைசாக பொடிக்கவும்.

*காய்கள் வெந்ததும் புளிகரைசல்+பொடித்த பொடி +வேகவைத்த துவரம்பருப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.

*பச்சை வாசனை அடங்கியதும் தாளித்துக் கொட்டவும்.

*பால்பொங்கலுடன் இந்த குழம்பு சாப்பிட சூப்பர்ர்!!



Tuesday 10 January 2012 | By: Menaga Sathia

அவகோடா ஸ்பீனாச் சாலட் /Avacoda Spinach Salad


தே.பொருட்கள்
ஸ்பீனாச் இலை -10
அவகோடா -1
சிகப்பு முள்ளங்கி - 5
பேரிச்சை பழம் - 5
தக்காளி - 1
தேன் - 1/2 டேபிள்ஸ்பூன்
மிளகுத்தூள் - 1/4 டீஸ்பூன்

செய்முறை
*அவகோடா+தக்காளி+பேரிச்சை பழம்  விதை நீக்கி அரியவும்.முள்ளங்கியை வட்டமாக நறுக்கவும்.

*அனைத்தையும் ஒன்றாக கலந்து பரிமாறவும்.
Monday 9 January 2012 | By: Menaga Sathia

கோதுமைரவை கொழுக்கட்டை/Wheat Rava Khozhukattai

தே.பொருட்கள்
கோதுமைரவை - 1/2 கப்
பாசிபருப்பு,தேங்காய்ப்பல் - 1 டேபிள்ஸ்பூன்
சர்க்கரை - 3/4 கப்
நெய் - 1டீஸ்பூன்
ஏலக்காய்த்தூள் -1/4 டீஸ்பூன்
தண்ணீர் - 1 கப்

செய்முறை
*கோதுமைரவையை நெய்யில் லேசாக வறுக்கவும்.பாசிப்பருப்பு+தேங்காய்ப்பல் இவற்றையும் வெறும் கடாயில் போட்டு வதக்கவும்.

*தண்ணீர் தவிர அனைத்து பொருளையும் ஒன்றாக கலக்கவும்.

*ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்கவைக்கவும்.சர்க்கரை சேர்த்து கரைந்ததும் கலந்துவைத்துள்ள கோதுமைரவையை கொட்டி வேகும் வரை கிளறவும்.

*வெந்ததும் இறக்கி ஆறவைத்து கொழுக்கட்டைகளாக பிடித்து ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.



Wednesday 4 January 2012 | By: Menaga Sathia

இஞ்சி பூண்டு விழுது &புளி பேஸ்ட் செய்வதெப்படி?? /Homemade Ginger Garlic Paste & Tamarind Paste

இஞ்சி பூண்டு விழுது

தே.பொருட்கள்
இஞ்சி பூண்டு - தலா 100 கிராம்
உப்பு - 1 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் தேவைக்கு
செய்முறை
*இஞ்சி பூண்டை நறுக்கி உப்பு+எண்ணெய் சேர்த்து மைய அரைக்கவும்.

பி.கு
*தண்ணீர் சேர்த்து அரைக்ககூடாது,சீக்கிரம் கெட்டுவிடும்.கலரும் மாறிவிடும்.ப்ரிட்ஜில் வைத்திருந்து பயன்படுத்தவும்.

*எடுக்கும் போது ஈரமில்லாத கரண்டியால் எடுக்கவும்.

புளிபேஸ்ட்

தே.பொருட்கள்

புளி - 500 கிராம்
மஞ்சள்தூள் - 2 டீஸ்பூன்
உப்பு - 1 டேபிள்ஸ்பூன்
தண்ணீர் - 6 கப்
செய்முறை

*புளியை 6கப் நீர் சேர்த்து குக்கரில் 5 விசில் வரை வைக்கவும்.
*ஆறியதும் நன்கு கெட்டியாக கரைத்துக் கொள்ளவும்.

*பின் கடாயில் கரைத்த புளி+மஞ்சள்தூள்+உப்பு சேர்த்து நன்கு கெட்டியாகும் வரை கொதிக்கவைத்து ஆறியதும் பாட்டிலில் ஊற்றி ப்ரிட்ஜில் வைத்திருந்து பயன்படுத்தவும்.

பி.கு
*எடுக்கும்போது ஈரமில்லாத கரண்டியால் எடுக்கவும்.

*1 டேபிள்ஸ்பூன் புளிபேஸ்ட்க்கு தேவையானளவு நீர் சேர்த்து கரைத்து பயன்படுத்தவும்.
Monday 2 January 2012 | By: Menaga Sathia

அவல் பாயாசம் /Aval Payasam

தே.பொருட்கள்:
அவல் - 1 கப்
பால் - 3/4 கப்
கன்ஸ்டெண்ட் மில்க் - 3/4 கப்
ஏலக்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன்
நெய்யில் வறுத்த முந்திரி,திராட்சை - தேவைக்கு
நெய் - 1/2 டீஸ்பூன்
 
செய்முறை :
*அவலை கழுவி 10நிமிடம் ஊறவைத்து நீரை வடிக்கட்டவும்.பின் 3/4 கப் பாலில் வேகவிடவும்.

*வெந்ததும் கன்ஸ்டெண்ட் மில்கை  ஊற்றி சிறிது நேரம் கொதிக்கவிட்டு இறக்கவும்.


*பின் ஏலக்காய்த்தூள்+முந்திரி திராட்சை+நெய் சேர்த்து சூடாகவோ அல்லது குளிர வைத்து பரிமாறவும்.

01 09 10