Showing posts with label மஞ்சூரியன் வகைகள். Show all posts
Showing posts with label மஞ்சூரியன் வகைகள். Show all posts
Thursday, 4 April 2013 | By: Menaga Sathia

காலிபிளவர் மஞ்சூரியன் (டிரை) /Cauliflower Manchurian (Dry Version)



தே.பொருட்கள்

காலிபிளவர்‍‍  - 1 நடுத்தர அளவு
மைதா - 1/2 கப்
சோளமாவு - 1/8 கப்
மிளகுத்தூள்  - 1/2 டீஸ்பூன்
உப்பு-  தேவைக்கு
எண்ணெய் -  பொரிக்க+1 டீஸ்பூன்
தக்காளி சாஸ் - 2 டீஸ்பூன்
தக்காளி கெட்சப் -  1டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2
சோயா சாஸ்-  1/2 டீஸ்பூன்
வினிகர் -  1 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1/4 கப்
பொடியாக நறுக்கிய பூண்டு - 2 டீஸ்பூன்
சோளமாவு - 1 டீஸ்பூன்
சர்க்கரை - 1/2 டீஸ்பூன்
வெங்காயத்தாள் - 1

செய்முறை

*காலிபிளவரை சிறுப்பூக்களாக பிரித்து உப்பு கலந்த வெந்நீரில் 10 நிமிடம் போட்டு எடுக்கவும்.

*மைதா+சோளமாவு+மிளகுத்தூள்+உப்பு இவற்றை ஒன்றாக கலந்து தோசை மாவு பதத்தில் கரைத்து பூக்களை நனைத்து எண்ணெயில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

*கடாயில் 1 டீஸ்பூன் எண்ணெய் விட்டு பூண்டுப்பல்+ வெங்காயம்+பொடியாக நறுக்கிய வெங்காயத்தாளின் வெள்ளைப் பகுதி இவற்றை சேர்த்து வதக்கவும்.

*பின் பசை மிளகாய்+தக்காளி சாஸ்+தக்காளி கெட்சப்+சோயா சாஸ்+வினிகர்+1 டீஸ்பூன் சோளமாவு+சர்க்கரை+உப்பு என இவற்றை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வதக்கி பொரித்த காலிபிளவரை சேர்த்து நன்கு கிளறவும்.

*பின் பொடியாக நறுக்கிய வெங்காயத்தாளை தூவி பரிமாறவும்.

பி.கு
*காலிபிளவரை பொரிக்கும் போது பொன்னிறமாக பொரித்தால் தான் நீண்ட நேரம்வரை மொறுமொறுப்பாக இருக்கும்.

*பச்சை மிளகாய் பதில் 1 டீஸ்பூன் பூண்டு சில்லி சாஸ் சேர்க்கலாம்.

Wednesday, 25 January 2012 | By: Menaga Sathia

ஹைதராபாத் காலிபிளவர் 65/Hyderabad Cauliflower 65

ஹைதராபாத் சிக்கன் 65 குறிப்பில் சிக்கனுக்கு பதில் காலிபிளவரில்   செய்தது.

தே.பொருட்கள்
காலிபிளவர் - 1 சிறியது
சோளமாவு - 1 டேபிள்ஸ்பூன்
மைதாமாவு - 1/4 கப்
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
சிகப்பு கலர்,மஞ்சள் கலர் - தலா 1 சிட்டிகை
மிளகாய்த்தூள் - 1 1/2 டீஸ்பூன்
தயிர் - 1/2 கப்
மிளகுத்தூள் ,சீரகத்தூள்,கரம் மசாலா - தலா 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
கீறிய பச்சை மிளகாய் -2
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

செய்முறை
*காலிபிளவரை சிறிய பூக்களாக எடுத்து உப்பு கலந்த வெதுவெதுப்பான நீரில் 10 நிமிடம் போட்டு வைக்கவும்.

*பின் நன்கு அலசி நீரை வடிகட்டி அதனுடன் சோளமாவு+அரிசிமாவு+சிகப்பு கலர்+உப்பு+இஞ்சி பூண்டு விழுது+மிளகாய்த்தூள் என அனைத்தையும் ஒன்றாக கலந்து 1/2 மணிநேரம் வைக்கவும்.

*பின் எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

*ஒரு பவுலில் தயிர்+உப்பு+மஞ்சள் கலர்+மிளகுத்தூள்+சீரகத்தூள்+கரம்மசாலா என அனைத்தையும் ஒன்றாக கலக்கவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு பச்சை மிளகாய்+கறிவேப்பிலை போட்டு தாளித்து தயிர் கலவையை ஊற்றவும்.

*இதனுடன் பொரித்த காலிபிளவர் துண்டுகளை சேர்த்து நன்கு சுண்டும் வரை கிளறி இறக்கவும்.
Wednesday, 31 March 2010 | By: Menaga Sathia

சோயா மஞ்சூரியன்/ Soya Manchurian

தே.பொருட்கள்:

சோயா உருண்டைகள் - 30
மைதா மாவு - 1 1 /2 டேபிள்ஸ்பூன்
சோளமாவு - 1/2 டேபிள்ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1/2 டேபிள்ஸ்பூன்
புட் கலர் - சிறிது
இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1 சிறியது
பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் - 1 டேபிள்ஸ்பூன்
பொடியாக நறுக்கிய குடமிளகாய் - 1 டேபிள்ஸ்பூன்
பொடியாக நறுக்கிய பூண்டுப்பல் - 2
சோயாசாஸ் - 1 டீஸ்பூன்
எண்ணெய் - பொரிக்க
உப்பு - தேவைக்கு
 
செய்முறை :

*சோயாவை கொதிக்கும் நீரில் 5 நிமிடம் போட்டு பின் குளிர்ந்த நீரில் நன்கு அலசி நீரை நன்கு பிழிந்துக் கொள்ளவும்.

*அதனுடன் உப்பு+மைதா மாவு+சோளமாவு+இஞ்சி பூண்டு விழுது+புட் கலர்+மிளகாய்த்தூள் அனைத்தும் கலந்து 1/2 மணிநேரம் ஊறவைத்து எண்ணெயில் பொரிக்கவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு பொடியாக நறுக்கிய வெங்காயம்+பூண்டுப்பல்+குடமிளகாய் சேர்த்து வதக்கி பொரித்த சோயா உருண்டைகள்+சோயா சாஸ் சேர்த்து கிளறி வெங்காயத்தாள் தூவி இறக்கவும்.
Wednesday, 24 February 2010 | By: Menaga Sathia

ஒட்ஸ் மஞ்சூரியன்/ Oats Manchurian


தே.பொருட்கள்:

ஒட்ஸ் - 1 கப்
மைதா மாவு - 2 டேபிள்ஸ்பூன்
கார்ன் மாவு - 1/2 டேபிள்ஸ்பூன்
சோயா சாஸ் - 1 டீஸ்பூன்
புட் கலர் - 1 சிட்டிகை
பொடியாக அரிந்த வெங்காயம் - 1
பொடியாக அரிந்த பூண்டுப்பல் - 3
பொடியாக அரிந்த குடமிளகாய் - 1 சிறியது
பொடியாக அரிந்த பச்சை மிளகாய் - 1
மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
 
செய்முறை :
*ஒட்ஸை வெறும் கடாயில் வறுத்து பொடிக்கவும்.

*அதனுடன் சிறிது+நீர் சேர்த்து சப்பாத்தி மாவு போல் கெட்டியாக பிசைந்து சிறுசிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.

*ஒரு பாத்திரத்தில் மைதாமவு+உப்பு+கார்ன் மாவு+மிளகுத்தூள்+புட் கலர் சேர்த்து பஜ்ஜி மாவு போல் கரைக்கவும்.

*கடாயில் எண்ணெய் காயவைத்து ஒட்ஸ் உருண்டையை மைதா மாவில் தோய்த்து எண்ணெயில் பொரிக்கவும்.

*வேறொரு கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம்+பூண்டுப்பல்+குடமிளகாய் அனைத்தையும் ஒன்றன்பின் ஒன்றாக வதக்கவும்.

*பின் சோயாசாஸ் சேர்த்து சிறிது நீர் தெளித்து கொதித்த பின் பொரித்த ஒட்ஸ் உருண்டைகளை சேர்த்து நன்றாக கிளறி இறக்கவும்.

*அசத்தல் சுவையில் இருக்கும் இந்த மஞ்சூரியன்...
Monday, 21 September 2009 | By: Menaga Sathia

சிக்கன் மஞ்சூரியன்(டிரை)/ Chicken Manchurian (Dry)

தே.பொருட்கள்:

எலும்பில்லாத சிக்கன் - 1/2 கிலோ
ரெட் கலர் - 1 சிட்டிகை
மைதாமாவு - 2 டீஸ்பூன்
முட்டை - 1
சோளமாவு - 4 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1/2 டேபிள்ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 3/4 டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
வெங்காயம் - 1 சிறியது
குடமிளகாய் - 1 சிறியது
வெங்காயத்தாள் -4
சோயாசாஸ் - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

செய்முறை :

* சிக்கனை சுத்தம் செய்து அதில் உப்பு+மைதாமாவு+சோளமாவு+இஞ்சி பூண்டு விழுது+ரெட் கலர்+மிளகாய்த்தூள் கலந்து 1/2 மணிநேரம் ஊறவைத்து அவனில் க்ரில் செய்யவும் அல்லது எண்ணெயில் பொரிக்கவும்.
*வெங்காயம்+பச்சை மிளகாய்+குடமிளகாய்+வெங்காயத்தாள் அனைத்தையும் பொடியாக அரியவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம்+பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.

*பின் குடமிளகாய் போட்டு லேசாக வதங்கியதும் சோயா சாஸ் ஊற்றவும்.உப்பு சேர்க்கவும்.சாஸில் உப்பு இருக்கும்,கவனமாக போடவும்.பின் க்ரில் செய்த சிக்கனை போட்டு கிளறவும்.

*பின் வெங்காயத்தாள் தூவி இறக்கவும்.


பி.கு:

விரும்பினால் இதனுடன் தக்காளி கெட்சப்பை சோயாசாஸ் சேர்க்கும் போது சேர்க்கலாம்.இதில் சிக்கனை நான் க்ரில் செய்து செய்துள்ளேன்.
Monday, 1 June 2009 | By: Menaga Sathia

இட்லி மஞ்சூரியன்/ Idly Manchurian

தே.பொருட்கள்:

இட்லி - 5
சோளமாவு - 1 டேபிள்ஸ்பூன்
கடலை மாவு - 1 டேபிள்ஸ்பூன்
சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 1/2 டீஸ்பூன்
உப்பு -சுவைக்கு
எண்ணெய் - பொரிக்க
ஆரஞ்சு கலர் - 1 சிட்டிகை
செய்முறை:

*இட்லிகளை விரல் நீளத்துண்டுகளாக நறுக்கவும்.

*அதனுடன் எண்ணெய் தவிர அனைத்துப் பொருட்களும் கலந்து,சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு பிசிறவும்.

*எண்ணெய் காயவைத்து கலந்து வைத்துள்ள இட்லிகளை பொரித்தெடுக்கவும்.

*சுவையான் இட்லி மஞ்சூரியன் ரெடி.

பி.கு:குழந்தைகளுக்குப் பிடித்த ஸ்நாக்ஸ் என்பதால் விரும்பி சாப்பிடுவாங்க,மீந்து போன இட்லிகளை இதுபோல செய்து குடுக்கலாம்.


01 09 10