Thursday 28 April 2011 | By: Menaga Sathia

தக்காளி கொத்சு /Tomato Kotsu

தே.பொருட்கள்:
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1
பொடியாக நறுக்கிய தக்காளி - 3
மிளகாய்த்தூள் - 1 டேபிள்ஸ்பூன்
இட்லி மாவு - 1 குழிக்கரண்டி
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு
உப்பு +எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:
கடுகு - 1/4 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/2 டீஸ்பூன்
பெருங்காயம் - வாசனைக்கு
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை:
*பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப்போட்டு தாளித்து வெங்காயம்+தக்காளி சேர்த்து நன்கு குழைய வதக்கவும்.

*பின் மிளகாய்த்தூள் சேர்த்து லேசாக வதக்கி 2 கப் நீர்+உப்பு சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.

*நன்கு கொதித்ததும் இட்லிமாவு சேர்த்து 5 நிமிடம் கழித்து கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.

*அவசரத்திற்க்கு உடனடியாக செய்துவிடலாம்.இட்லி,தோசைக்கு நன்றாகயிருக்கும்.
Wednesday 27 April 2011 | By: Menaga Sathia

புளிசாதம் - 2 / Tamarind Rice -2

மீதமான சாதத்தை இரவு புளி ஊற்றி வைத்து மறுநாள் தாளித்து சாப்பிடும் சுவையோ சுவைதான்.எனக்கு இந்த முறையில் செய்த புளிசாதம் என்றால் உயிர்.

தே.பொருட்கள்:
மீதமான சாதம் - 2 கப்
புளி - 1 எலுமிச்சை பழளவு
உப்பு +எண்ணெய் =தேவைக்கு

தாளிக்க:கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1டீஸ்பூன்
பெருங்காயம் - வாசனைக்கு
கறிவேப்பிலை - சிறிது
காய்ந்த மிளகாய் - 2
மஞ்சள்தூள் - 1 சிட்டிகை
கடலைப்பருப்பு - 3/4 டேபிள்ஸ்பூன்

செய்முறை :

*மீதமான சாதத்தில் இரவே புளியை உப்பு கெட்டியாக கரைத்து கிளறி வைக்கவும்.

*மறுநாள்,பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து சாதத்தை கொட்டி நன்கு கிளறி இறக்கவும்.

*இதற்கு தொட்டுக்கொள்ள மசால்வடை இருந்தால் போதும் எனக்கு....

Tuesday 26 April 2011 | By: Menaga Sathia

ரோஸ்டட் கடலைப்பருப்பு / Oven Roasted Channa Dal

தே.பொருட்கள்

கடலைப்பருப்பு - 1 கப்
மிளகாய்த்தூள்,எண்ணெய் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு

செய்முறை

*கடலைப்பருப்பை 1 மணிநேரம் ஊறவைத்து நீரை வடிக்கட்டவும்.அதனுடன் மேறகூறிய அனைத்து பொருட்களும் ஒன்றாக கலக்கவும்.

*அவன் டிரேயில் அலுமினியம் பேப்பர் வைத்து எண்ணெய் தடவி கடலைப்பருப்பை பரப்பவும்.

*220°C முற்சூடு செய்த அவனில் 20 நிமிடம் பேக் செய்து எடுக்கவும்.இடையிடேயை கிளறி விடவும்.
Sunday 24 April 2011 | By: Menaga Sathia

கானாங்கெழுத்தி மீன் புட்டு / Mackerel Fish puttu


தே.பொருட்கள்

கானாங்கெழுத்தி மீன் - 5
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1 பெரியது
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2
மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
சோம்புத்தூள் - 1 1/2 டீஸ்பூன்
மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டேபிள்ஸ்பூன்
தேங்காய்த்துறுவல் - 1/2 கப்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிது
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க

கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை

*மீனை நன்கு சுத்தம் செய்து ஒரு பாத்திரத்தில் போட்டு முழ்குமளவு நீர்+மஞ்சள்தூள் சேர்த்து நீர்வற்றும் வரை கிளறி வேகவிடவும்.

*ஆறியதும் முள்ளில்லாமல் உதிர்க்கவும்.

*கடாயில் எணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப்போட்டு தாளித்து வெங்காயம்+பச்சைமிளகாய்+மிளகுத்தூள்+சோம்புத்தூள்+மிளகாய்த்தூள்+உப்பு என அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.

*வதங்கியதும் உதிர்த்த மீனை சேர்த்து நன்கு உதிரியாக வரும் வரை கிளறி தேங்காய்த்துறுவல்+கொத்தமல்லித்தழை சேர்த்து இறக்கவும்.

பி.கு

*இதனுடன் வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு சேர்த்து கட்லட் செய்யலாம்.
Thursday 21 April 2011 | By: Menaga Sathia

குடமிளகாய் சாதம் / Capsicum Rice

தே.பொருட்கள்
உதிராக வடித்த சாதம் - 2 கப்
துண்டுகளாகிய குடமிளகாய் - 1 கப்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1 சிறியது
நெய் - 1 டீஸ்பூன்
சீரகம் - 1/4 டீஸ்பூன்
உப்பு +எண்ணெய் - தேவைக்கு

வறுத்து பொடிக்க
காய்ந்த மிளகாய் - 4
தனியா - 1 டீஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
வேர்க்கடலை - 1 டேபிள்ஸ்பூன்

செய்முறை

*பொடிக்க கொடுத்துள்ளவைகளை வெறும் கடாயில் வறுத்துப் பொடிக்கவும். வேர்க்கடலையை தவிர மற்றவைகளை நைசாக பொடித்து கடைசியாக வேர்க்கடலையை சேர்த்து கரகரப்பாக பொடிக்கவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு சீரகம் போட்டு தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்.பின் குடமிளகாயை சேர்த்து லேசாக வதக்கினால் போதும்.

*பின் பொடித்த பொடி+சாதம்+உப்பு+நெய் சேர்த்து கிளறி இறக்கவும்.
Tuesday 19 April 2011 | By: Menaga Sathia

ஈஸி சட்னி/ Easy Chutney

தே.பொருட்கள்:வெங்காயம் - 1
தக்காளி - 2
புளி - 1 நெல்லிக்காயளவு
மிளகாய்த்தூள் - 3/4 டேபிள்ஸ்பூன்
உப்பு +எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:கடுகு - 1/4 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/2 டீஸ்பூன்
பெருங்காயம் - வாசனைக்கு
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை:*வெங்காயம்+தக்காளியை அரிந்து அதனுடன் புளி+மிளகாய்த்தூள்+உப்பு சேர்த்து நைசாக அரைக்கவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப்போட்டு தாளித்து அரைத்த விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி எடுக்கவும்.

மலர் காந்தி , விமிதா அவர்கள் கொடுத்த விருது.இருவருக்கும் மிக்க நன்றி !!




இந்த விருதினை ஸாதிகா அக்கா,தேனக்கா,ப்ரியாஸ்ரீராம் ,காயத்ரி,மகி,தெய்வசுகந்தி இவர்களுக்கு கொடுக்கிறேன்.

Sunday 17 April 2011 | By: Menaga Sathia

வாளைக்கருவாடு வறுவல்/ Dry Belt(Ribbon) Fish Varuval



தே.பொருட்கள்:
வாளைக்கருவாடு - 2
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1
பொடியாக நறுக்கிய தக்காளி - 1
கீறிய பச்சை மிளகாய் - 2
வரமிளகாய்த்தூள் - 1டேபிள்ஸ்பூன்
உப்பு +எண்ணெய் = தேவைக்கு
 
செய்முறை:
*கருவாட்டை முள்ளில்லாமல் சுத்தம் செய்யவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம்+தக்காளி+பச்சை மிளகாய்+மிளகாய்த்தூள் அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.

*வதங்கியதும் கருவாடு+1/4 கப் நீர்+உப்பு சேர்த்து நன்கு சுறுள கிளறி வறுக்கவும்.

ஜெய் ,விமிதா அவர்கள் கொடுத்த விருது.நன்றி ஜெய்,!விமிதா!!
ப்ரியா ,விமிதா மற்றும் ஸ்வர்ணவள்ளி சுரேஷ் அவர்கள் கொடுத்த விருது.மூவருக்கும் மிக்க நன்றி!!

இவ்விருதுகளை சங்கீதா விஜய்,சவீதா,ஷானவி,கல்பனா ,குறிஞ்சி, கிருஷ்ணவேணி ,ஆசியா அக்கா இவர்களுக்கு கொடுக்கிறேன்
Wednesday 13 April 2011 | By: Menaga Sathia

மாங்காய் பச்சடி / Mango Pachadi

தே.பொருட்கள்:
மாங்காய் - 1 பெரியது
வெல்லம் - 1/2 கப்
நெய்யில் வறுத்த முந்திரி,திராட்சை - தேவைக்கு
மஞ்சள்தூள் - 1 சிட்டிகை
நெய் - 1 டீஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:
கடுகு - 1/4 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/4டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை :
*மாங்காயை தோல் சீவி மெலிதாக நறுக்கி கொள்ளவும்.

*வெல்லத்தில் சிறிது நீர் விட்டு காய்ச்சி மண்ணில்லாமல் வடிகட்டி வைக்கவும்.

*பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து மாங்காய்துண்டுகள்+1 சிட்டிகை உப்பு+மஞ்சள்தூள்+சிறிதளவு நீர் சேர்த்து வேகவைக்கவும்.

*நன்கு வெந்ததும் வெல்லக்கரைசலை ஊற்றி கொதிக்கவிட்டு திக்காக வரும் போது இறக்கி நெய்+வறுத்த முந்திரி,திராட்சைகளை சேர்க்கவும்.

அனைவருக்கும் இனிய கர வருட தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!!
Tuesday 12 April 2011 | By: Menaga Sathia

பனீர் பிரியாணி / Paneer Biryani

தே.பொருட்கள்

பாஸ்மதி - 2 கப்
பனீர் துண்டுகள் - 1 1/2 கப்
அரிந்த வெங்காயம் - 1
அரிந்த தக்காளி - 1
நெய் - 1 டீஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

அரைக்க
கிராம்பு - 2
ஏலக்காய் - 2
பட்டை - சிறுதுண்டு
பச்சை மிளகாய் - 5
புதினா,கொத்தமல்லி - தலா 1 கைப்பிடி
இஞ்சி - சிறுதுண்டு
பூண்டு - 4 பல்
சோம்பு - 1 டீஸ்பூன்

தாளிக்க
பிரிஞ்சி இலை - 2
சோம்பு - 1/4 டீஸ்பூன்

செய்முறை
*அரைக்க கொடுத்துள்ளவைகளை நைசாக அரைக்கவும்.அரிசியை கழுவி 10 நிமிடம் ஊறவைத்து நீரை வடிக்கட்டவும்.

*பாத்திரத்தில் எண்ணெய் விட்டு சோம்பு+பிரிஞ்சி இலை போட்டு தாளித்து வெங்காயம்+தக்காளி+அரைத்த விழுது அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.

*பனீரை நான் ஸ்டிக் கடாயில் எண்ணெய் விட்டு வறுத்து குளிர்ந்த நீரில் 10 நிமிடம் போட்டு நீரை வடிகட்டவும்.

*வதங்கியதும் உப்பு+அரிசி+3 கப் நீர் விட்டு வேகவைக்கவும்.தண்ணீர் சுண்டியதும் பொரித்த பனீரை அதன் மேல் வைத்து 190°C டிகிரி முற்சூடு செய்த அவனில் 15 நிமிடம் வைத்து பனீர் உடையாமல் கிளறி பரிமாறவும்.
Sunday 10 April 2011 | By: Menaga Sathia

பனீர் செய்வது எப்படி?? / How To Prepare Paneer??

தே.பொருட்கள்:பால் - 2 லிட்டர்
எலுமிச்சை சாறு - 1/4 கப்

செய்முறை:
*பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி காய்ச்சவும்.
*காய்ந்ததும் எலுமிச்சை சாறை ஊற்றவும்.பால் திரிந்துவிடும்,இல்லையெனில் மேலும் சிறிது எலுமிச்சை சாறு சேர்க்கவும்.
*மெல்லிய வெள்ளைத்துணியில் ஊற்றி நீரை வடிகட்டவும்.பின் குளிர்ந்த நீரில் நன்கு அலசவும்.
*மூட்டையாக கட்டி 2 மணிநேரம் தொங்கவிடவும்.
*நீரெல்லாம் நன்கு வடிந்த பின் பனீரை வேறொரு துணியில் வைத்து மடித்து,ஒரு தட்டின் மேல் பனீரை வைத்து அதன்மேல் கனமுள்ள பாத்திரத்தில் நீரை ஊற்றி 3 மணிநேரம் வைக்கவும்.

*பனீர் நன்கு செட்டாகியதும் விருப்பமான அளவில் துண்டுகள் போட்டு ப்ரீசரில் வைத்து தேவைப்படும் போது பயன்படுத்தலாம்.

பி.கு:
எலுமிச்சை சாறு சேர்க்கும் போது தயிர் அல்லது ப்ரெஷ் க்ரீம் சேர்த்தால் பனீர் இன்னும் சாப்டாக இருக்கும்.பனீர் வடிகட்டிய நீரை(அதற்க்கு Whey Water என்று பெயர்) வீணாக்காமல்  பிரிட்ஜில் 4 நாட்கள் வரை வைத்திருந்து அடுத்த முறை பனீர் செய்யவும், சப்பாத்தி பிசையும் போது அந்த நீரை ஊற்றி பிசையவும் பயன்படுத்தலாம்
Thursday 7 April 2011 | By: Menaga Sathia

முட்டையில்லாத ஆரஞ்ச் கேக் ரஸ்க் / Eggless Orange Cake Rusk

மகியின் குறிப்பை பார்த்து சிலமாற்றங்களுடன் செய்தது.நன்றி மகி!! கேக்காக செய்திருந்தால் 3 நாள் வரை இருக்கும்.இது செய்தவுடன் பாதி கேக்காகவும்,மீதி ரஸ்காகவும் செய்தவுடன் நானும் என் பொண்ணும் காலிபண்ணிட்டோம்.

தே.பொருட்கள்
ஆல் பர்பஸ் மாவு - 2 கப்
ஆரஞ்ச் ஜூஸ் -1/2 கப்
துருவிய ஆரஞ்ச் தோல் - 1/4 டீஸ்பூன்
சர்க்கரை - 1 1/4 கப்
வெண்ணெய் -1/2 கப்
பேக்கிங் பவுடர் - 1/4 டீஸ்பூன்
விருப்பமான நட்ஸ் வகைகள் - 1/4 கப்
தயிர் - 125 கிராம்
எள் -மேலே தூவ

செய்முறை

*வெண்ணெயுடன் சர்க்கரை கலந்து நன்கு பீட் செய்யவும்.மைதாவுடன் பேக்கிங் சோடாவை கலக்கவும்.

*சர்க்கரை கரைந்ததும் தயிர்+ஆரஞ்ச் ஜூஸ்+ஆரஞ்ச் தோல்+மைதா+நட்ஸ் அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக கலக்கவும்.

*கேக் பாத்திரத்தில் கலவையை ஊற்றி எள்ளை தூவி,180°C முற்சூடு செய்த அவனில் 25 நிமிடம் பேக் செய்யவும்.

*கேக் ஆறியதும் துண்டுகளாகி அவன் டிரேயில் வைத்து மீண்டும் அவனில் 140°C ல் 1 1/4 மணிநேரம் பேக் செய்யவும்.

*ஆரஞ்ச் சுவையுடன் ரஸ்க் தயார்.காற்று புகாத டப்பாவில் வைத்திருந்து பயன்படுத்தலாம்.
Wednesday 6 April 2011 | By: Menaga Sathia

பேக்ட் ஒட்ஸ் மசால் வடை / Baked Oats Masal Vadai

தே.பொருட்கள்
கடலைப்பருப்பு - 1 கப்
பொடித்த ஒட்ஸ் -3/4 கப்
கிராம்பு - 2
பட்டை - சிறுதுண்டு
பூண்டுப்பல் - 2
சோம்பு - 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் -2
கறிவேப்பிலை,கொத்தமல்லி - சிறிதளவு
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

செய்முறை
*கடலைப்பருப்பை 1/2 மணிநேரம் மட்டும் ஊறவைத்து நீரை வடிகட்டவும்.அதனுடன் உப்பு+கிராம்பு+சோம்பு+பட்டை+பூண்டு+காய்ந்த மிளகாய் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.

*இதனுடன் பொடித்த+வெங்காயம்+கறிவேப்பிலை கொத்தமல்லி இவைகளை சேர்த்து  கெட்டியக பிசையவும்.

*அவன் டிரேயில் அலுமினியம் பேப்பர் வைத்து வடைகளாக தட்டி ,ஒவ்வொன்றின் மீதும் 1 துளி எண்ணெய் விடவும்.

*அதனை 220°C டிகிரி முற்சூடு செய்த அவனில் 25 நிமிடங்கள் பேக் செய்யவும்.இடையே 15 நிமிடங்களில் திருப்பி விட்டு மீண்டும் 1துளி எண்ணையை வடைகளில் தடவவும்.
Tuesday 5 April 2011 | By: Menaga Sathia

பார்லி பணியாரம்& லெமனி சட்னி /Barley Paniyaram & Lemony Chutney

தே.பொருட்கள்
பணியாரம் செய்ய
பார்லி - 1 கப்
ப்ரவுன் அரிசி - 1 கப்
உளுந்து - 1/2 கப்
வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு

தாளிக்க
கடுகு - 1/4 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/2 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 1
எண்ணெய் = தேவைக்கு

செய்முறை

*பார்லி+அரிசி+உளுந்து+வெந்தயம் அனைத்தையும் தனித்தனியாக ஊறவைத்து  அரைத்து உப்பு கலந்து புளிக்கவிடவும்.

*நன்கு புளித்த மாவை 2 கப் அளவு எடுத்து தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து  பணியாரக் குழியில் ஊற்றி பணியாரமாக சுட்டெடுக்கவும்.

*இந்த மாவில் தோசையும் சுடலாம்.

லெமனி சட்னி செய்ய

இந்த சட்னியை ராஜி அவர்களின் குறிப்பை பார்த்து செய்தது.நன்றி ராஜி!! பணியாரத்துக்கு பெஸ்ட் காம்பினேஷன்.

தே.பொருட்கள்
எலுமிச்சை பழம் - 1
கா.மிளகாய் -10
மிகவும் பொடியாக அரிந்த சின்ன வெங்காயம் - 2
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க
கடுகு - 1/4 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/2 டீஸ்பூன்;
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை

*மிளகாயை உப்பு+சிறிது தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.எலுமிச்சை பழத்தில் சாறு பிழியவும்.

*அதனுடன் புளிப்பிற்கேற்ப எ.சாறு கலக்கவும்.

*தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து வெங்காயத்தை சேர்த்து வதக்கி சட்னியில் கலக்கவும்.

*இந்த சட்னி இட்லி,தோசைக்கும் நன்றாகயிருக்கும்.

Saturday 2 April 2011 | By: Menaga Sathia

கோதுமைரவா அல்வா /Wheat Rava Halwa

இன்றையநாள் எனக்கு ரொம்ப மறக்கமுடியாதநாள்...என் ப்ளாக் ஜனவரியில் தொடங்கி 2 வருடங்கள் ஆகிவிட்டது,ஆனலும் குறிப்புகளை இந்த நாளில்தான் தர ஆரம்பித்தேன்..இன்னொன்று இந்திய அணி 28 வருடங்களுக்கு பிறகு சொந்த மண்ணில் கோப்பையை வென்றுள்ளது.மற்றொன்று உலகமே கொண்டாடும் இந்நாள் மறக்கமுடியாது....ஆகா ரொம்ப ஸ்பெஷல்நாள்.

கோதுமையில் தான் அல்வா செய்வோம்,ஒரு மாறுதலுக்காக கோதுமைரவையில் செய்தேன்.மிகவும் நன்றாகயிருந்தது...

தே.பொருட்கள்

கோதுமைரவை - 1 கப்
சர்க்கரை - 2 1/2 கப்
நெய் - 1 கப்
ஏலக்காய்தூள் -1/4 டீஸ்பூன்
நெய்யில் வறுத்த முந்திரி - தேவைக்கு

செய்முறை

*கோதுமைரவையை 3 மணிநேரம் ஊறவைக்கவும்.

*ஊறியதும் கிரைண்டரில் அரைத்து 2,3 முறை பால் பிழியவும்.சல்லடையில் பிழிந்தால் நன்றாக பிழிய வரும்.

*பிழிந்த பாலை 3 மணிநேரம் தெளியவைத்து மேலோடு இருக்கும் நீரை ஊற்றிவிடவும்.அடியில் கெட்டியான பால் தங்கியிருக்கும்.

*அடிகனமான நான் ஸ்டிக் கடாயில் சர்க்கரை+1 கப் நீர் விட்டு பிசுபிசுப்பு பதம் வரும் வரை கொதிக்கவிடவும்.

*பின் கோதுமைப்பாலை ஊற்றி கைவிடாமல் கிளறிக்கொண்டே இருக்கவும்.

*இடையிடேயே நெய்யை கொஞ்சகொஞ்சமா ஊற்றவும்.

*பின் ஏலக்காய்த்தூள்+முந்திரி சேர்த்து ஒன்றாக கிளறி கெட்டியாகி நெய் பிரிந்து வரும் போது இறக்கவும்.

*சுவையான அல்வா தயார்!!

பி.கு
விருப்பமுள்ளவர்கள் கேசரிகலர் சிறிது சேர்த்துக் கொள்ளலாம்.

Friday 1 April 2011 | By: Menaga Sathia

இட்லி பொடி - 2 / Idli Podi -2

தே.பொருட்கள்:
தனியா - 1 டேபிள்ஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
வெள்ளை எள் - 1 டீஸ்பூன்
பெருங்காயம் - 1சிறுகட்டி
காய்ந்த மிளகாய் - 6
உப்பு +எண்ணெய் = தேவைக்கு
செய்முறை:
*பெருங்காயத்தை தவிர அனைத்தையும் வெறும் கடாயில் வறுக்கவும்.பெருங்காயத்தை மட்டும் எண்ணெயில் பொரித்து மீதமுள்ள பொருட்களை கலந்து ஆறவிடவும்.

*உப்பு சேர்த்து கரகரப்பாக பொடிக்கவும்.கடைசியில் சிறு துண்டு வெல்லம் சேர்த்து அரைத்தெடுத்தால் நன்றாகயிருக்கும்.

பி.கு:
பொடி வகைகளை மட்டும் கொஞ்சமாக அரைப்பது சுவையாக நன்றாகயிருக்கும்.
01 09 10