Showing posts with label கருவாடு. Show all posts
Showing posts with label கருவாடு. Show all posts
Tuesday, 11 April 2017 | By: Menaga Sathia

பிடி கருணை கருவாட்டு குழம்பு/ Pidi Karunai Karuvattu(Dry Fish )Kuzhambu

தே.பொருட்கள்
பிடி கருனை -1/4 கிலோ
கருவாடு - 5 துண்டுகள்
நறுக்கிய வெங்காயம் -1
பூண்டுப்பல் -8
சாம்பார் பொடி -1 டேபிள்ஸ்பூன்
புளிபேஸ்ட் - 2 டேபிள்ஸ்பூன்
தக்காளி -1
உப்பு-தேவைக்கு

தாளிக்க
எண்ணெய் -1டேபிள்ஸ்பூன்
வடகம் -2 டீஸ்பூன்
கறிவேப்பிலை -1 கொத்து

செய்முறை
*பிடிகருணையை மண்ணில்லாமல் நன்கு கழுவி தேங்காய் ஒடு சேர்த்து 3 விசில் வரை வேக வைக்கவும்.

*தேங்காய் ஒடு சேர்த்து வேகவைப்பது கருணை கிழங்கு அரிப்பில்லாமல் இருக்கும்.

*புளிபேஸ்டினை 2 கப் நீர் ஊற்றி உப்பு,தக்காளி,சாம்பார் பொடி சேர்த்து கரைத்து வைக்கவும்.

*பாத்திரத்தில் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து வேங்காயம்,பூண்டு சேர்த்து வதக்கவும்.
*புளிகரைசலை ஊற்றி கொதிக்கவிடவும்.
*நன்கு கொதித்தபின் சுத்தம் செய்த கருவாடு,வேகவைத்த கிழங்கினை துண்டுகளாக அரிந்து சேர்த்து மேலும் சிறிது நேரம் கொதிக்கவிடவும்.

பி.கு
*நான் சேர்த்திருப்பது வஞ்சிரம் கருவாடு.

*கருவாடு சேர்க்காமல் இதேபோல் பிடிகருணை காரகுழம்பு செய்யலாம்.

*பிடிகருணை சேர்க்கும்போது வேறு எந்தகாயும் சேர்க்கவேண்டாம்.
Sunday, 7 February 2016 | By: Menaga Sathia

கருவாட்டு குழம்பு (கேரளா ஸ்டைல் ) / Dry Fish Kuzhambu ( Kerala Style)


print this page PRINT IT 
எந்த கருவாடு போட்டும் செய்யலாம்.இதில் நெத்திலி கருவாடு போட்டு செய்துருக்கேன்.

புளிக்கு பதில் மாங்காயினை புளிப்பிற்கேற்ப போட்டு செய்ய வேண்டும்.

தே.பொருட்கள்

நெத்திலி கருவாடு -2 கைப்பிடி
வாழைக்காய்- 1
மாங்காய்- 1
நீர் -3 கப்
வரமிளகாய்த்தூள்- 2 டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய்- 2
மஞ்சள்தூள் -1/4 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய இஞ்சி- 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை- 1 கொத்து
சின்ன வெங்காயம்- 10
தேங்காய்த்துறுவல் -1/2 கப்
உப்பு- தேவைக்கு

தாளிக்க‌
கடுகு- 1/2 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம்- 5
கறிவேப்பிலை- 1 கொத்து
தேங்காய் எண்ணெய்- 2 டீஸ்பூன்

செய்முறை

*வாழைக்காயினை தோல் சீவவும்.மாங்காய் மற்றும் வாழைக்காயினை அவியலுக்கு நறுக்குவதுபோல் நீளவாக்கில் நறுக்கி வைக்கவும்.

*தேங்காயினை மைய அரைத்து வைக்கவும்.

*கருவாட்டினை சுத்தம் செய்து 1/2 மணிநேரம் வெந்நீரில் ஊறவைக்கவும்.

*மண்சட்டியில் நீர்+உப்பு+மஞ்சள்தூள்+வரமிளகாய்த்தூள்+இஞ்சி+கீறிய பச்சை மிளகாய்+1 டீஸ்பூன் எண்ணெய்+நறுக்கிய சின்ன வெங்காயம்+சுத்தம் செய்த கருவாடு+நறுக்கிய வாழைக்காய் சேர்த்து கொதிக்க வைக்கவும்.


*நன்றாக கொதித்ததும் மாங்காய்+தேங்காய் விழுதினை சேர்த்து மேலும் நன்கு கொதிக்க வைக்கவும்.


*பச்சை வாசனை அடங்கியதும் மீதமிருக்கும் எண்ணெயில் தாளித்து சேர்க்கவும்.

Monday, 15 July 2013 | By: Menaga Sathia

கருவாடு தொக்கு/Dry Fish Thokku

கீதாவிடம் பேசிய போது அவர்களின் மாமியார் சமையலை என்னிடம் பகிர்ந்துகிட்டாங்க.அதன்படி இந்த கருவாடு தொக்கு செய்ததில் மிக அருமையாக இருந்தது.

இந்த தொக்கின் ஸ்பெஷாலிட்டி தக்காளி இல்லாமல் செய்வதும்,தேங்காயை நீர் சேர்க்காமல் அரைத்து செய்வதும் தான்.அதுபோல் இந்த தொக்கினை செய்யும்போது நீர் சேர்க்காமல் குறைந்த தீயில் செய்வதுதான் ஸ்பெஷல்.

மிக்க நன்றி கீதா!! இப்போதெல்லாம் க‌ருவாடு தொக்கினைதான் அதிகம் செய்கிறேன்.இதே போல் இறாலிலும் செய்யலாம்.

தே.பொருட்கள்

வஞ்சிர கருவாடு - 1 துண்டு
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 4 பெரியது
சோம்பு -1 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
வரமிளகய்த்தூள் - 1 டேபிள்ஸ்பூன்
தேங்காய்த்துறுவல் - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

செய்முறை

*கருவாட்டை சுத்தம் செய்து உப்பு+மஞ்சள்தூள்+மிளகாய்த்தூள்+சோம்பு சேர்த்து 15 நிமிடங்கள் ஊறவைக்கவும்.

*தேங்காயை நீர் சேர்க்காமல் நன்கு நைசாக அரைக்கவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம் சேர்த்து வதக்கவும்.வெங்காயம் நன்கு வதங்கி ப்ரவௌன் கலரில் வரும் போது ஊரவைத்த கருவாட்டினை சேர்த்து சிறுதீயில் வதக்கவும்.

*நன்கு வெந்து சுருண்டுவரும் போது வெங்காயத்தின் கலர் நன்கு பொன்முறுவலாக வரும் போது அரைத்த தேங்காயினை சேர்த்து மேலும் 3-  4 நிமிடங்கள் வரை கிளறி இறக்கவும்.

பி.கு

*தேவையெனில் தேங்காய் அரைக்கும்போது 1 டேபிள்ஸ்பூன் நீர் சேர்த்து அரைக்கலாம்.அதிகம்  நீர் சேர்த்து அரைத்து ஊற்றினால் தொக்கின் சுவை மாறுபடும்.
Sunday, 17 April 2011 | By: Menaga Sathia

வாளைக்கருவாடு வறுவல்/ Dry Belt(Ribbon) Fish Varuval



தே.பொருட்கள்:
வாளைக்கருவாடு - 2
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1
பொடியாக நறுக்கிய தக்காளி - 1
கீறிய பச்சை மிளகாய் - 2
வரமிளகாய்த்தூள் - 1டேபிள்ஸ்பூன்
உப்பு +எண்ணெய் = தேவைக்கு
 
செய்முறை:
*கருவாட்டை முள்ளில்லாமல் சுத்தம் செய்யவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம்+தக்காளி+பச்சை மிளகாய்+மிளகாய்த்தூள் அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.

*வதங்கியதும் கருவாடு+1/4 கப் நீர்+உப்பு சேர்த்து நன்கு சுறுள கிளறி வறுக்கவும்.

ஜெய் ,விமிதா அவர்கள் கொடுத்த விருது.நன்றி ஜெய்,!விமிதா!!
ப்ரியா ,விமிதா மற்றும் ஸ்வர்ணவள்ளி சுரேஷ் அவர்கள் கொடுத்த விருது.மூவருக்கும் மிக்க நன்றி!!

இவ்விருதுகளை சங்கீதா விஜய்,சவீதா,ஷானவி,கல்பனா ,குறிஞ்சி, கிருஷ்ணவேணி ,ஆசியா அக்கா இவர்களுக்கு கொடுக்கிறேன்
Thursday, 9 September 2010 | By: Menaga Sathia

நெத்திலி கருவாடு அவியல் / nethili Karuvadu Aviyal

தே.பொருட்கள்:
நெத்திலி கருவாடு - 250 கிராம்
தேங்காய்த்துருவல் - 1/2 கப்
சின்ன வெங்கயம் - 10
கறிவேப்பிலை - 2 கொத்து
புளி - நெல்லிக்காயளவு
பச்சை மிளகாய் - 2
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்புன்
மல்லித்தூள்-1/4 டீஸ்பூன்
உப்பு +எண்ணெய் = தேவைக்கு

செய்முறை:
*இடிகல்லில் முதலில் சின்ன வெங்காயத்தை ஒன்றிரண்டாக உடைத்து,அதன் பின் தேங்காய்+பச்சை மிளகாய்+தூள் வகைகள்+1 கொத்து கறிவேப்பிலை சேர்த்து லேசாக இடித்து எடுக்கவும்.(மிக்ஸியில் செய்வதாக இருந்தால் எல்லாவற்றையும் விப்பரில் 1 அல்லது 2 முறை சுற்றி எடுக்கவும்).

* ஒரு கடாயில் கருவாடு+இடித்த மசாலா+மீதமுள்ள கருவேப்பிலை+உப்பு சேர்க்கவும்.

*இதனுடன் புளியை கெட்டியாக கரைத்து ஊற்றி மேலும் 1/2 கப் நீர் ஊற்றி 10நிமிடம் மூடி வைக்கவும்.

*எல்லாவற்றையும் சேர்த்த பின்னர் கொதிக்கவிடவும். இடையிடையே கிளறி விடவும்.

*நீர் வற்றியதும் 1 டீஸ்பூன் எண்ணெய் விட்டு கிளறி இறக்கவும்.

*சாம்பார்,ரசம் சாதத்துடன் சாப்பிட நன்றாகயிருக்கும்.
Friday, 12 June 2009 | By: Menaga Sathia

நெத்திலி கருவாடு வறுவல்

தே.பொருட்கள்:

நெத்திலி கருவாடு -100 கிராம்
வெங்காயம் - 1 பெரியது
தக்காளி -2
வரமிளகாய்த்தூள் - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
இஞ்சிபூண்டு விழுது -1 டேபிள்ஸ்பூன்

செய்முறை:

*கருவாட்டை சுத்தம் செய்துக் கொள்ளவும்.வெங்காயம்+தக்காளி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

*கடாயில் எண்ணெயில் ஊற்றி வெங்காயத்தை போட்டு வதக்கவும்,நன்கு வதக்கிய பின் இஞ்சி பூண்டு விழுது+தக்காளி ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.

*நன்கு வதங்கி வரும் போது மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.

*1/2 கப் தன்ணீர்+கருவாடு போட்டு நன்கு வேகவிட்டு நீர் சுண்டும் வரை நன்கு சுருள கிளறி இறக்கவும்.

*ஈஸி நெத்திலி கருவாடு வறுவல் ரெடி.
Wednesday, 6 May 2009 | By: Menaga Sathia

கருவாட்டுக் குழம்பு / Dry Fish khuzhampu


தே.பொருட்கள்:

கருவாடு - சிறிது
மொச்சைக் கொட்டை - 1/2 கப்
முருங்கைகாய் - 1
வாழைக்காய் - 1
புளி - 1 எலுமிச்சை பழ அளவு
சீரகம் - 1 டீஸ்பூன்
வெங்காயம் - 1 சிறியது
தக்காளி - 1
கறிவேப்பில்லை - சிறிது
வடகம் - 1 டேபிள்ஸ்பூன்
கலந்த மிளகாய்த்தூள் - 11/2 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
செய்முறை:

*மொச்சையை முதல்நாள் இரவே வெறும் கடாயில் லேசாக வறுத்து ஊறவைக்கவும்.

*மறுநாள் மொச்சையை சிறிது உப்பு சேர்த்து குக்கரில் 3 விசில் வரும்வரை வேகவைக்கவும்.

*பருப்பை தனியாக வைத்து,அதே நீரில் புளியை ஊறவைத்து 1 கோப்பையளவு கரைத்து உப்பு+தக்காளி+மிளகாய்த்தூள் கலந்து வைக்கவும்.

*கருவாட்டை சுத்தம் செய்யவும்.வெங்காயம்+சீரகம்+கறிவேப்பிலையை நசுக்கவும்.காய்களை பெரிய துண்டுகளாக நறுக்கவும்.

*பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி வடகத்தை போட்டு தாளிக்கவும்.
*பின் நசுக்கிய வெங்காயத்தைப் போட்டு வதக்கி புளி கரைசலை ஊற்றி கொதிக்கவிடவும்.

*கொதிக்கும் போது காய்+கருவாடு+மொச்சை போட்டு இன்னும் நன்கு கொதிக்கவிட்டு,காய் வெந்ததும் இறக்கவும்.

பி.கு:விரும்பினால் குழம்பு கொதிக்கும் போது பல்லாக நறுக்கிய தேங்காயை குழம்பு கொதிக்கும் போடலாம்.இன்னும் சுவையா இருக்கும்.
01 09 10