Showing posts with label சமையல். Show all posts
Showing posts with label சமையல். Show all posts
Wednesday, 19 February 2014 | By: Menaga Sathia

கோவை ஹோட்டல் அங்கனன் ஸ்டைல் சிக்கன் பிரியாணி /Kongu Style Chicken Biryani | Kovai Hotel Anganan Style Chicken Biryani | Restaurant Style Recipes



கோயம்புத்தூரில் வெஜ் ஹோட்டலுக்கு அன்னபூரணா எப்படி பிரபலமோ,நான் -வெஜ் ஹோட்டலுக்கு அங்கனன் மிக பிரபலம்.இங்கு அசைவ பிரியாணி மிக சுவையாக இருக்கும்.

இந்த பிரியாணியின் ஸ்பெஷல் தக்காளி சேர்க்க தேவையில்லை.பூண்டை முழுதாகவும்,இஞ்சியை அரைத்தும் சேர்க்கவேண்டும்.காரத்திற்கு பச்சை மிளகாய் மட்டும் சேர்க்கவேண்டும்.கொத்தமல்லி மற்றும் அதனுடன் சில மசாலா சேர்த்து அரைத்தால் அழகான கலர் இந்த பிரியாணிக்கு கிடைக்கும்.

Recipe Source: Ramyacooks

தே.பொருட்கள்

சிக்கன் -1/2 கிலோ
பாஸ்மதி - 3 கப்
வெங்காயம் -2 பெரியது
கீறிய பச்சை மிளகாய் -3
முந்திரி -10
பூண்டுப்பல் -15
புதினா -1 கைப்பிடி
தயிர் - 2 டேபிள்ஸ்பூன்
நெய் -5 டேபிள்ஸ்பூன்
எலுமிச்சை சாறு -2 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் -2 டீஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

அரைக்க

இஞ்சி - 1 அங்குலத்துண்டு
பச்சை மிளகாய் - 4
பட்டை -1சிறுதுண்டு
கிராம்பு -3
ஏலக்காய் -3
கசகசா -1 டீஸ்பூன்
நறுக்கிய வெங்காயம் - 1 கைப்பிடி
கொத்தமல்லித்தழை - 1/4 கப்

செய்முறை

* அரைக்க கொடுத்துள்ளவைகலை மைய அரைக்கவும்.அரிசியை கழுவி 20 நிமிடம் ஊறவைக்கவும்.

*பாத்திரத்தில் நெய்+எண்ணெய் விட்டு முந்திரி+பூண்டுப்பல்+வெங்காயம் +புதினா என ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வதக்கவும்.

*பின் தயிர்+அரைத்த விழுதினை சேர்த்து நன்கு வதக்கவும்.
*சிக்கன்+மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும்.
*இதனுடன் ஊறவைத்த அரிசியை நன்கு வடிகட்டி இதனுடன் சேர்த்து கிளறி 4 1/2 நீர் +உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.
*அரிசி முக்கால் பாகம் வெந்து வரும் போது  கீறிய பச்சை மிளகாய் +எலுமிச்சை சாறு சேர்க்கவும்.
*குக்கரில் 3 விசில் வரை வேகவைத்து எடுக்கவும் அல்லது 20 நிமிடம் தம் போடவும்.

*சாதம் வெந்ததும் மீதமுள்ள நெய் சேர்த்து கிளறி ராய்த்தாவுடன் பரிமாறவும்.

பி.கு
*காரம் அதிகம் வேண்டுமெனில் பச்சை மிளகாயை கூடுதலாக சேர்க்கவும்.

Tuesday, 22 January 2013 | By: Menaga Sathia

தோசை உப்புமா / Dosa Upma

தே.பொருட்கள்:

தோசை - 4
மஞ்சள்தூள் - 1 சிட்டிகை
நெய் - 2 டீஸ்பூன்
சர்க்கரை - 1 டீஸ்பூன்
பொடியாக அரிந்த வெங்காயம் - 1
பொடியாக அரிந்த பச்சை மிளகாய் -1
இட்லிபொடி - 1 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு

தாளிக்க:

கடுகு - 1/4 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/4டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
தேங்காய் எண்ணெய் - 1 டீஸ்பூன்

செய்முறை :

*தோசையை ப்ரிட்ஜில் 3 மணிநேரம் வைத்து எடுத்து நன்கு  உதிர்த்துக்கொள்ளவும்.

*கடாயில் எண்ணெய்+நெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப் போட்டு தாளித்து மஞ்சள்தூள்+வெங்காயம்+பச்சை மிளகாய் +உப்பு+சர்க்கரை என ஒன்றன் பின் ஒன்றாக  சேர்த்து வதக்கவும்.

*நன்கு வதங்கியதும் உதிர்த்த இட்லி சேர்த்து கிளறி இட்லிப்பொடி தூவி கிளறி எலுமிச்சை சாறு சேர்த்து இறக்கவும்.

*இனிப்பு+புளிப்பு+காரம் நிறைந்த சுவையில் இருக்கும் இந்த உப்புமா.

பி.கு

*இந்த உப்புமா செய்வதற்கு இட்லி / தோசையை ப்ரிட்ஜில் வைத்து எடுத்தால் உதிர்க்க சுலபமாக இருக்கும்.

Wednesday, 3 October 2012 | By: Menaga Sathia

எலுமிச்சை பழரசம் /Lemon Rasam

 தே.பொருட்கள்:

எலுமிச்சை பழம் - 1
தக்காளி - 4
வேக வைத்த துவரம்பருப்பு - 1/4 கப்
மஞ்சள்தூள் -1 சிட்டிகை
கொத்தமல்லித்தழை -சிறிது
ரசப்பொடி - 2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
 
தாளிக்க:

கடுகு - 1/4 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/4டீஸ்பூன்
கறிவேப்பில்லை - சிறிது
கீறிய பச்சை மிளகாய் - 2
பெருங்காயத்தூள் - வாசனைக்கு
நெய் - 1 1/2  டீஸ்பூன்
 
செய்முறை :

*பாத்திரத்தில் தக்காளியை பொடியாக அரிந்து 2 கப் நீரில் உப்பு+மஞ்சள்தூள் சேர்த்து வேகவிடவும்.

*வெந்ததும் ரசப்பொடியை தூவி 5 நிமிடம் வெந்த பருப்பை கொட்டி 1 கொதி வந்ததும் கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.

*ரசம் லேசாக ஆறியதும் எலுமிச்சைசாறு பிழிந்து கலக்கவும்.சூட்டோடு சாறு பிழிந்து விட்டால் ரசம் கசக்கும்.

*கடைசியில் தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து கொட்டவும்.
Thursday, 29 March 2012 | By: Menaga Sathia

பருப்பு ரசம் / Tuvar Dhal Rasam

தே.பொருட்கள்:
வேகவைத்த துவரம்பருப்பு - 1/2 கப்
தக்காளி - 1
புளிகரைசல் - 1 கப்
கொத்தமல்லித்தழை - சிறிது
ரசப்பொடி - 1 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

பொடிக்க:
மிளகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
பூண்டு - 3 பல்
பச்சை மிளகாய் - 1
சின்ன வெங்காயம் - 1

தாளிக்க:
கடுகு - 1/4 டீஸ்பூன்
பெருங்காயம் - வாசனைக்கு
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை:
*பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தக்காளியை துண்டுகளாகி போட்டு வதக்கவும்.இதனுடன் பொடிக்க கொடுத்துள்ளவைகளை கரகரப்பாக பொடித்து போட்டு லேசாக வதக்கி மஞ்சள்தூள்+உப்பு+புளிகரைசலை ஊற்றி கொதிக்க விடவும்.


*பச்சை வாசனை போனதும் ரசப்பொடி+வேகவைத்த துவரம்பருப்பு சேர்க்கவும்.


*நுரை வரும் போது மல்லித்தழைதூவி இறக்கி தாளிக்க கொடுத்துள்ளவைகளைப் போட்டு தாளித்து சேர்க்கவும்.
Thursday, 12 January 2012 | By: Menaga Sathia

பொங்கல் குழம்பு/Pongal Khuzhambu | Pongal Recipes

இந்த குழம்பிற்க்கு மஞ்சள் பூசணிக்காய்,சக்கரை வள்ளிக்கிழங்கு,அவரைக்காய்,வாழைக்காய் கொத்தவரை,செப்பகிழங்கு,சேனைக்கிழங்கு,உருளை,பச்சை மொச்சை (அ)கொண்டைக்கடலை,வெள்ளை பூசணி ,கத்திரிக்காய் என நாட்டுக்காய்கறிகள் சேர்த்து செய்வார்கள்.

தே.பொருட்கள்
காய்கள் - 1 கப்
வேகவைத்த துவரம்பருப்பு -1/4 கப்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
புளிகரைசல் - 1 கப்
கடுகு- 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

எண்ணெயில் வறுத்து பொடிக்க

காய்ந்த மிளகாய் - 4
தனியா - 1 டீஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
தேங்காய்த்துறுவல் - 1 டேபிள்ஸ்பூன்

செய்முறை

*பாத்திரத்தில் காய்கள் போட்டு முழ்குமளவு நீர் விட்டு உப்பு+மஞ்சள்தூள் சேர்த்து வேகவைக்கவும்.

*பொடிக்க கொடுத்துள்ளவைகளை நைசாக பொடிக்கவும்.

*காய்கள் வெந்ததும் புளிகரைசல்+பொடித்த பொடி +வேகவைத்த துவரம்பருப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.

*பச்சை வாசனை அடங்கியதும் தாளித்துக் கொட்டவும்.

*பால்பொங்கலுடன் இந்த குழம்பு சாப்பிட சூப்பர்ர்!!



Tuesday, 27 December 2011 | By: Menaga Sathia

கொள்ளு பொடி / Horsegram (Kollu) Podi


இந்த கொள்ளு பொடி கொங்குநாட்டு ஸ்பெஷல்.நன்றி தெய்வசுகந்தி!!

தே.பொருட்கள்:

கொள்ளு - 1 கப்
சின்ன வெங்காயம் - 6 பொடியாக நறுக்கியது
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிதளவு
பூண்டுப்பல் - 1
கடுகு - 1/4 டீஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
சீரகம் - 1/2 டீஸ்பூன்
தனியா - 1/2 டீஸ்பூன்

செய்முறை :
*கொள்ளை சுத்தம் செய்து 4 கப் நீர் விட்டு குக்கரில் 5 விசில் வரை வேகவிடவும்.

*பின் நீரை வடிகட்டி (அந்த நீரை கொள்ளு ரசத்திற்கு பயன்படுத்தலாம் )கொள்ளை நன்கு உலரவிடவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு தனியா+சீரகம் போட்டு தாளித்து சின்ன வெங்காயத்தில் பாதியையும்+மிளகாய்+கறிவேப்பிலை+பூண்டுப்பல் சேர்த்து வதக்கி எடுக்கவும்.

*வதக்கிய பொருளுடன் உலர வைத்த கொள்ளு+மீதியுள்ள சின்ன வெங்காயம்+உப்பு சேர்த்து சின்ன இடிப்பானில் இடித்து எடுக்கவும்.

*இடிப்பான் இல்லையெனில் இவற்றை மிக்ஸியில் நீர்விடாமல் அரைத்தெடுக்கவும்.

*சாததுடன் நெய் விட்டு இந்த பொடி சாப்பிட அருமை....
Monday, 12 December 2011 | By: Menaga Sathia

KFC ஸ்டைல் ப்ரைடு சிக்கன் / KFC Style Fried Chicken

 கீதாவின் குறிப்பை பார்த்து செய்தது.நன்றி கீதா!!

சிக்கனை 2-3 மணிநேரம் ஊறவைக்க நேரம் இல்லையெனில் மிதமான சுடுநீரில் ஊறவைக்கவும்.அதற்குமேல் வேண்டாம்.அதிகநேரம் சுடுநீரில் சிக்கன் ஊறினால் நல்லதில்லை.

தே.பொருட்கள்

சிக்கன் லெக் பீஸ் - 4
எண்ணெய் - பொரிப்பதற்க்கு

சிக்கனில் ஊறவைக்க

மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன்
உப்பு - 3 டீஸ்பூன்
கொத்தமல்லித்தழை - சிறிது விரும்பினால்

முட்டை கலவை

முட்டையின் வெள்ளைக் கரு - 2
மிளகாய்த்தூள்/மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - 1/4 டீஸ்பூன்

மைதா கலவை

மைதா - 1 கப்
ப்ரெட் க்ரம்ஸ் - 1/2 கப்
உப்பு - 1/2 டீஸ்பூன்

செய்முறை

*சிக்கனை சுத்தம் செய்து அங்கங்கே கீறி விடவும்.

*ஒரு பாத்திரத்தில் சிக்கனைப் போட்டு அது முழ்குமளவு நீர் விட்டு சிக்கனில் ஊறவைக்க கொடுத்துள்ள பொருட்களைப் போட்டு 2-3 மணிநேரம் ஊறவைக்கவும்.
 *முட்டைக் கலவையில் கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாக கலந்து வைக்கவும்.

*மைதா கலவையில் கொடுத்துள்ள பொருட்களையும் கலந்து வைக்கவும்.

*சிக்கன் 2-3 மணிநேரம் ஊறிய பிறகு எடுத்து முட்டை கலவையில் நனைத்து பின் மைதா கலவையில் நன்கு பிரட்டவும்.

*பின் கடாயில் எண்ணெய் காயவைத்து மிதமான தீயில் 8-10 நிமிடங்கள் வரை பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

Tuesday, 22 November 2011 | By: Menaga Sathia

தேங்காய்ப்பால் சாதம்/ Coconut Milk Rice

இந்த சாதத்தின் சிறப்பே கறிவேப்பிலை சேர்ப்பது தான்.நன்றி ஆமினா!!

தே.பொருட்கள்

பாஸ்மதி - 2 கப்
கெட்டி தேங்காய்ப்பால் - 3 கப்
நெய் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு

தாளிக்க

பிரிஞ்சி இலை - 2
கிராம்பு - 2
பட்டை -சிறுதுண்டு
ஏலக்காய் - 3
கறிவேப்பிலை - 2 கொத்து

செய்முறை

*அரிசியைக் கழுவி நீரை வடிகட்டவும்.

*குக்கரில் நெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப் போட்டு தாளித்து அரிசி+உப்பு+தேங்காய்ப்பால் சேர்த்து 3 விசில் வரை வேக வைத்து எடுக்கவும்.

*ராய்த்தா,சிக்கன்,மட்டன் குழம்பு,வெஜ் குருமாவுடன் சாப்பிட செம சூப்பர்ர்!!
Tuesday, 15 November 2011 | By: Menaga Sathia

கீமா மட்டர் மசாலா / Keema Mattar Masala

தே.பொருட்கள்:
கீமா - 1/4 கிலோ
ப்ரோசன் பட்டாணி - 1/4 கப்
அரிந்த வெங்காயம் - 1
அரிந்த தக்காளி - 1
இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்
பொடியாக அரிந்த பச்சை மிளகாய் - 2
கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
தனியாத்தூள் - 1/2 டேபிள்ஸ்பூன்
வரமிளகாய்த்தூள் - 1/2 டேபிள்ஸ்பூன்
பொடியாக அரிந்த கொத்தமல்லித்தழை - சிறிதளவு
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:
பிரியாணி இலை - 2
கிராம்பு - 3
பட்டை - 1 துண்டு
ஏலக்காய் - 2
 
செய்முறை :

*கீமாவை சுத்தம் செய்து நீரை நன்கு வடிக்கட்டிக் கொள்ளவும்.

*குக்கரில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப் போட்டு தாளித்து வெங்காயம்+பச்சை மிளகாய்+இஞ்சி பூண்டு விழுது+தக்காளி+தூள்வகைகள் அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு நன்கு வதக்கவும்.

*பின் கீமாவை சேர்த்து நன்கு வதக்கி உப்பு + தேவைக்கேற்ப நீர்+பட்டாணி சேர்த்து 3 விசில் வரை வேகவிடவும்.

*ப்ரெஷர் அடங்கியதும் குக்கரை திறந்து நீரை வற்றவிட்டு கொத்தமல்லித்தழை சேர்த்து இறக்கவும்.

*சப்பாத்தி,நாண்,பரோட்டக்களுக்கு ஏற்றது.
Wednesday, 19 October 2011 | By: Menaga Sathia

காரா பூந்தி / Kara Bhoondhi

தே.பொருட்கள்:

கடலைமாவு - 1 கப்
அரிசி மாவு - 1/4 கப்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
பேக்கிங் சோடா - 1/4 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் -1/2 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை,முந்திரிவேர்க்கடலை- சிறிதளவு
நசுக்கிய பூண்டுப்பல் ‍-  2
உப்பு +எண்ணெய் = தேவைக்கு

செய்முறை:
*ஒரு பாத்திரத்தில் கடலைமாவு+அரிசி மாவு உப்பு+மஞ்சள்தூள்+பேக்கிங் சோடா+மிளகாய்த்தூள் அனைத்தையும் ஒன்றாக கலந்து தேவையான நீர் விட்டு கரைக்கவும்.



*பூந்தியாக விழும் பதத்தில் கரைத்துக் கொள்ளவும்.



*எண்ணெய் காயவைத்து பூந்தி அல்லது கண்கரண்டியில் மாவை கொஞ்ச கொஞ்சமாக ஊற்றி பொரித்தெடுக்கவும்.


*ஒவ்வொரு முறையும் பூந்தி ஊற்றியதும் பேப்பரால் கண்கரண்டியை நன்கு துடைக்கவும்.




*கறிவேப்பிலை+வேர்க்க‌டலை+முந்திரி+பூண்டுப்பல் இவற்றை தனித்தனியாக எண்ணெயில் வறுத்து பூந்தியில் கலந்து பரிமாறவும்.

பி.கு
* பூந்தியை தேய்ப்பதற்க்கு முன் சிறிய கரண்டியின் பின்புறத்தை மாவில் நனைத்து எண்ணெயில் ஊற்றவும்,அதில் வால் போல நீண்டு வந்தால் மாவு பதம் கெட்டியாக இருக்கிறது என்று அர்த்தம்.1 டேபிள்ஸ்பூன் அளவு நீர் ஊற்றி கரைக்கவும்.

*பூந்தி அமுங்கியது போல் வந்தால் மாவு பதம் நீர்க்க இருக்கிறது என்று அர்த்தம்.1 டீஸ்பூன் அளவு கடலைமாவு சேர்த்து கரைத்துக் கொள்ளவும்.

*விரும்பினால் மாவு கரைக்கும் போது மிளகுத்தூளை சேர்த்துக் கொண்டு மிளகாய்த்தூளை தவிர்க்கலாம்.
Sunday, 18 September 2011 | By: Menaga Sathia

காராமணி புடலங்காய் பொரியல்/ Snake gourd &Cow Peas Poriyal


தே.பொருட்கள்:
பொடியாக நறுக்கிய புடலங்காய் - 1 கப்
உப்பு சேர்த்து வேகவைத்த காராமணி - 1/2 கப்
தேங்காய்த்துறுவல் - 1/2 கப்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:
கடுகு - 1/4 டீஸ்பூன்
உளுத்த பருப்பு - 1/2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிதளவு

செய்முறை:
* கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப் போட்டு தாளித்து புடலங்காய் + உப்பு சேர்த்து தேவையானளவு நீர் சேர்த்து வேகவிடவும்.

*புடலங்காய் பாதியளவு வெந்ததும் காராமணி சேர்த்து வேகவிடவும்.

*பின் புடலங்காய் வெந்ததும் தேங்காய்த்துறுவல் சேர்த்து கிளறி இறக்கவும்.
Monday, 8 August 2011 | By: Menaga Sathia

ஒட்ஸ் சின்னாமன் ரோல்ஸ் / Oats Cinnaman Rolls

தே.பொருட்கள்:

பப்ஸ் ஷீட் - 1
ஒட்ஸ் - 1/4 கப்
பட்டைத்தூள் - 1 டீஸ்பூன்
ப்ரவுன் சர்க்கரை - 1 டேபிள்ஸ்பூன்
காய்ந்த திராட்சை - 10
நெய் - 1/2 டீஸ்பூன்
வெண்ணெய் - 1 டீஸ்பூன்
முட்டை - 1

செய்முறை:

*ஒட்ஸை நெய் விட்டு லேசாக வறுக்கவும்.ஆறியதும் இதனுடன் சர்க்கரை+திராட்சை+பட்டைத்தூள் அனைத்தையும் ஒன்றாக கலக்கவும்.

*பப்ஸ் ஷீட்டில் வெண்ணையை உருக்கி தடவும்.அதன் மேல் ஒட்ஸ் கலவையை பரவலாக தூவி ஓரத்தில் கடைசிவரை மெதுவாக சுருட்டவும்.

*இதனை க்ளியர் ராப் கவரில் சுருட்டி ப்ரீசரில் 15 நிமிடம் வைத்தெடுத்து துண்டுகளாக வெட்டவும்.முட்டையை ஒரு கிண்ணத்தில் நன்கு கலந்து வைக்கவும்.

*அவன் டிரேயில் அடுக்கி முட்டை ப்ரஷ்ஷால் தடவி,210 °C முற்சூடு செய்த அவனில் பேக் செய்து எடுக்கவும்.

Monday, 11 July 2011 | By: Menaga Sathia

சுர்ரோஸ் /Churrose - Spanish Fritters

தே.பொருட்கள்

மைதா - 1 கப்
ஐசிங் சுகர் - மேலே தூவ
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

செய்முறை
*ஒரு பாத்திரத்தில் தேவையானளவு நீர்+உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும்.

*கொதி நீரை மைதா மாவில் ஊற்றி மரக்கரண்டியால் கெட்டியாக பிசையவும்.

*முறுக்கு 1 ஸ்டார் அச்சில் மாவை கொஞ்சமா போட்டு எண்ணெயில் நேரடியாக நீளமாக பிழிந்து பொன்னிறமாக சுட்டெடுக்கவும்.

*பின் அதன்மேல் ஐசிங் சுகர் தூவி சூடாக சாப்பிட சூப்பராகயிருக்கும்.

Sending to Priyas Flavours of Spain started by simply.food
Tuesday, 5 July 2011 | By: Menaga Sathia

கத்திரிக்காய் வறுவல்- 2 / Eggplant Fry - 2

தே.பொருட்கள்

பெரிய கத்திரிக்காய் - 1
சிக்கன் 65 மசாலா - 2 டேபிள்ஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 1/2 டீஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

செய்முறை

*கத்திரிக்காயை சிறிது தடிமனாக வட்டமாக நறுக்கவும்.

*ஒரு பவுலில் சிக்கன் மசாலா+எலுமிச்சை சாறு+உப்பு+இஞ்சி பூண்டு விழுது+எண்ணெய் 2 டீஸ்பூன் என் அனைத்தையும் ஒன்றாக கலந்து கத்திரிக்காயில் தடவி 10 நிமிடம் வைக்கவும்.

*நான் ஸ்டிக் கடாயில் சிறுதீயில் 2புறமும் வேகவைத்து எடுக்கவும்.ஏற்கனவே எண்ணெய் சேர்த்து பிசைந்திருப்பதால் தேவையானால் மட்டும் எண்ணெய் விட்டு வேகவைக்கவும்.

*சாம்பார்,தயிர்,ரசம் சாதமுடன் சாப்பிட நன்றாகயிருக்கும். 

Monday, 20 June 2011 | By: Menaga Sathia

பாகற்காய் வறுவல் / Bittergourd Varuval

தே.பொருட்கள்:
பாகற்காய் - 1/4 கிலோ
வெங்காயம் - 1
மிளகாய்த்தூள் -1 டேபிள்ஸ்பூன்
உப்பு +எண்ணெய் = தேவைக்கு

வறுத்து பொடிக்க:
கடலைப்பருப்பு - 1/2 டேபிள்ஸ்பூன்
வேர்க்கடலை - 1 டேபிள்ஸ்பூன்

செய்முறை:
*பாகற்காய்+வெங்காயத்தை நறுக்கவும்.வறுத்து பொடிக்க கொடுத்துள்ளவைகளை கரகரப்பாக பொடிக்கவும்.

*கடாயில் நறுக்கிய பாகற்காய்+வெங்காயம்+உப்பு+மிளகாய்த்தூள் சேர்த்து தேவையானளவு நீர் சேர்த்து வேகவைக்கவும்.

*பாகற்காய் வெந்ததும் நன்கு சுருள கிளறி பொடித்த பொடியை தூவி இறக்கவும்.
Wednesday, 8 June 2011 | By: Menaga Sathia

தால் மக்கானி / Dhal Makkani

தே.பொருட்கள்:

கடலைப்பருப்பு,ராஜ்மா - தலா 1/4 கப்
கறுப்பு உளுந்து - 1/4 கப்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1
பொடியாக நறுக்கிய தக்காளி - 1
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2
பொடியாக நறுக்கிய இஞ்சி+பூண்டு = சிறிதளவு
மிளகாய்த்தூள் - 1 டேபிள்ஸ்பூன்
சீரகத்தூள் - 1/2 டீஸ்பூன்
ப்ரெஷ் க்ரீம் - 1/4 கப்
உப்பு+ எண்ணெய் = தேவைக்கு

செய்முறை:

*பருப்பு வகைகளை ஒன்றாக 6 மணிநேரம் ஊறவைத்து நன்கு கழுவி உப்பு+பச்சை மிளகாய்+இஞ்சி பூண்டு + நீர் சேர்த்து குக்கரில் குழைய வேகவைக்கவும்.

*பாத்திரத்தில் எண்ணெய் விட்டு வெங்காயம்+தக்காளி சேர்த்து நன்கு குழைய வதக்கவும்.

* பின் மிளகாய்த்தூள் + சீரகத்தூள்+சிறிதளவு ப்ரெஷ் க்ரீம் சேர்த்து நன்கு வதக்கி வேகவைத்த பருப்புகளை சேர்த்து சிறிது நேரம் கொதிக்கவிட்டு இறக்கவும்.

*பரிமாறும் போது ப்ரெஷ் க்ரீம் விட்டு பரிமாறவும்.சப்பாத்தி+நாணுடன் சாப்பிட நன்றாகயிருக்கும்.
Friday, 27 May 2011 | By: Menaga Sathia

நவரத்ன சுண்டல் / Navaratna Sundal

தே.பொருட்கள்:
சென்னா,கறுப்புக்கடலை,காராமணி,ராஜ்மா,மொச்சை - தலா 1/4 கப்

வெள்ளைப்பட்டாணி,பச்சை பட்டாணி,கொள்ளு,தோல் பாசிப்பருப்பு - தலா 1/4 கப்
தேங்காய்த்துறுவல் - 1/2 கப்
உப்பு +எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:
கடுகு - 1/4 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/2 டீஸ்பூன்
ஓமம் - 1/4 டீஸ்பூன்
பெருங்காயம் - வாசனைக்கு
காய்ந்த மிளகாய் - 3
கறிவேப்பிலை - சிறிது
 
செய்முறை:

* சென்னா+கறுப்புக்கடலை+காராமணி+ராஜ்மா+மொச்சை இவைகளை முதல்நாள் இரவே ஒன்றாக ஊறவைத்து உப்பு சேர்த்து குக்கரில் 3 விசில் வரை வேகவிடவும்.

*வெள்ளைப்பட்டாணி+பச்சைப்பட்டாணி+கொள்ளு+பாசிப்பருப்பு இவைகளை ஊறவைத்து,தோல் பாசிப்பருப்பை மட்டும் தனியாக உப்பு சேர்த்தும் மற்றவைகளை ஒன்றாக போட்டு உப்பு சேர்த்தும் பாத்திரத்தில் வேகவைத்து நீரை வடிக்கட்டவும்.

*பின் அனைத்தையும் ஒன்றாக கலந்து தாளிக்க கொடுத்துள்ளவைகளைப்போட்டு தாளித்து தேங்காய்த்துறுவல் சேர்த்துக் கலக்கவும்.

பி.கு:சோயா பீன்ஸ்,டபுள் பீன்ஸ் சேர்த்தும் செய்யலாம்.
Tuesday, 24 May 2011 | By: Menaga Sathia

எலுமிச்சை சாதம் (கர்நாடகா ஸ்டைல்)/ Karnataka Style Lemon Rice

மகியின் குறிப்பை பார்த்து செய்தது.வித்தியாசமா நன்றாகயிருந்தது.நன்றி மகி!!

தே.பொருட்கள்
உதிராக வடித்த சாதம் -2 கப்
எலுமிச்சை பழம் - 1
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க

கடுகு,உ.பருப்பு - தலா1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
மஞ்சள்தூள் - சிறிது
கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
வேர்க்கடலை - 1 கைப்பிடி

அரைக்க
கொத்தமல்லி - 1/4 கட்டு
பச்சை மிளகாய் - 3
இஞ்சி - சிறுதுண்டு

செய்முறை

*அரைக்க கொடுத்துள்ளவைகளை ஒன்றிரண்டாக பல்ஸ் போடில் கொரகொரப்பாக அரைக்கவும்.எலுமிச்சை பழத்தில் சாறு பிழியவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப் போட்டு தாளித்து அரைத்த விழுதை சேர்த்து சில நிமிடங்கள் வதக்கவும்.

*பின் சாதம்+உப்பு சேர்த்து கிளறவும்.

*கடைசியாக எலுமிச்சை சாறு சேர்த்து கிளறி இறக்கவும்.

01 09 10