PRINT IT
கேரளாவின் மிக பிரபலமான சுவையான மீன் சமையல் இது.மீனை லேசாக தேங்காய் எண்ணெயில் பொரித்த பின் வாழையிலையில் மசாலா வைத்து அதன் மேல் பொரித்த மீனை வைத்து தவாவில் சூடு செய்து பரிமாறுவது தான் மீன் பொளிச்சது.
இதற்கு கறிமீன் மட்டுமே பயன்படுத்துவாங்க,அதற்கு பதில் நான் சாதராண மீனிலேயே செய்துள்ளேன்,சுவை அபாரம்...
பரிமாறும் அளவு - 2
தயாரிக்கும் நேரம் -20 நிமிடங்கள்
தே.பொருட்கள்
மீன் துண்டுகள்- 4
உப்பு -தேவைக்கு
தேங்காய் எண்ணெய்- 2 1/2 டேபிள்ஸ்பூன்
வாழையிலை துண்டுகள்- 4
மீனில் ஊறவைக்க
மிளகாய்த்தூள் -1 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள்- 1/4 டீஸ்பூன்
உப்பு -தேவைக்கு
எலுமிச்சை சாறு- 1 டீஸ்பூன்
மசாலா செய்ய
பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம்- 1/3 கப்
பொடியாக நறுக்கிய தக்காளி- 1/4 கப்
கெட்டி தேங்காய்ப்பால்- 1/4 கப்
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய்- 2
பொடியாக நறுக்கிய பூண்டுப்பல்- 3
பொடியாக நறுக்கிய இஞ்சி - 1 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை- 1 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள்+கரம் மசாலா -தலா 1/4 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் -1 1/2 டீஸ்பூன்
தனியாத்தூள்- 1 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு- 1 டீஸ்பூன்
தாளிக்க
கடுகு- 1/2 டீஸ்பூன்
சீரகம்+வெந்தயம் -தலா 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை- 1 கொத்து
செய்முறை
*மீனில் ஊறவைக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து 1/2 மணிநேரம் ஊறவைக்கவும்.
*பின் கடாயில் 2 டேபிள்ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஊற்றி மீனை லேசாக வறுத்து தனியாக வைக்கவும்.
*மீன் பொரித்த அதே எண்ணெயில் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளிக்கவும்.
*பின் இஞ்சி+பூண்டுப்பல்+பச்சை மிளகாய்+சின்ன வெங்காயம் என இந்த வரிசையில் சேர்த்து வதக்கவும்.
*வதங்கியம் தக்காளி+உப்பு சேர்த்து குழைய வதக்கவும்.பின் தூள் வகைகள் சேர்த்து பச்சை வாசனை சேர்த்து வதக்கவும்.
*கடைசியாக தேங்காய்ப்பால் ஊற்றி ,மசாலா கெட்டியாக வற்றும்வரை கொதிக்கவிடவும்.
*கெட்டியானதும் எலுமிச்சை சாறு+கொத்தமல்லித்தழை சேர்த்து இறக்கவும்.
*வாழையிலையில் சிறிதளவு மசாலா வைத்து அதன் மேல் பொரித்த 1 மீன் துண்டினை வைக்கவும்.
*விரும்பினால் மீன் மேலேயும் மசாலா வைக்கவும்.
*அப்படியே 4 பக்கமும் சுருட்டி வைக்கவும்.
*கடாயில் மீதமுள்ள 1/2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி வாழையிலை வைக்கவும்.இலையில் நிறம் மாறி வாசனை வரும் போது இருபக்கமும் பிரட்டி எடுக்கவும்.
*இதனை அப்படியே இலையோடு பரிமாறவும்.சாம்பார் சாதத்திற்கு
நன்றாக இருக்கும்.
பி.கு
*இதனை தேங்காய் எண்ணெயிலேயே சமைக்கவும்.பாராம்பரிய சுவையோடு இருக்கும்.
*மீனை மொறுமொறுப்பாக பொரிக்க வேண்டாம்,லேசாக வறுத்து எடுத்தாலே போதும்.
*வாழையிலைக்கு பதில் அலுமினியம் பாயிலில் கூட செய்யலாம்,ஆனால் சுவை நிச்சயம் மாறுபடும்.
*மசாலாவில் சேர்க்கபடும் தக்காளி புளிப்பாக இருந்தால் எலுமிச்சை சாறு சேர்க்கவேண்டாம்.