கொழுக்கட்டையை நாம் அரிசிமாவில் தான் செய்வோம்.அதே மாதிரி ரவையில் செய்தால் ரொம்ப நல்லாயிருக்கும்.இந்த குறிப்பு என் அத்தையிடம் (அண்ணியின் அம்மா) கற்றுக்கொண்டது.
தே.பொருட்கள்:
ரவை - 1/2 கப்
சர்க்கரை - 1/2 கப்
ஏலக்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன்
எள் - 1டேபிள்ஸ்பூன்
பாசிப்பருப்பு - 1 1/2 டேபிள்ஸ்பூன்
தேங்காய்த்துறுவல் - 1/4 கப்
செய்முறை :
*சர்க்கரை,ஏலக்காய்த்தூளை தவிர அனைத்தையும் வெறும் கடாயில் வாசனைவறும் வரை வறுக்கவும்.
*பின் அதனுடன் சர்க்கரை+ஏலக்காய்த்தூள் கலந்து வெந்நீர் தெளித்து கொழுக்கட்டைபிடிக்கும் பதத்துக்கு பிசையும்.
*லேசாக நீர் தெளித்து பிசையவும்.தண்ணீர் தெளித்து பிசையும் போது சர்க்கரை இளகி நீர்த்துவிடும்.கவனமாக பிசையவும்.
*பிசைந்தமாவை கொழுக்கட்டைகளாக பிடித்து ஆவியில் வேகவைத்து எடுத்து பரிமாறவும்.