Wednesday 30 March 2011 | By: Menaga Sathia

பட்டூரா & சன்னா மசாலா / Batura & Channa Masala

தே.பொருட்கள்:
பட்டூரா செய்ய
மைதா - 2 கப்
பேக்கிங் சோடா - 1 டீஸ்பூன்
தயிர் - 1/4 கப்
ரவை - 1/2 கப்
சர்க்கரை - 1 டீஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

செய்முறை:*மைதா+பேக்கிங்சோடா+உப்பு+சர்க்கரை நன்கு கலக்கவும்.பின் ரவை+தயிர் சேர்த்து கலந்து தேவையானளவு நீர் சேர்த்து கெட்டியாக பிசையவும்.

*பின் எண்ணெய் ஊற்றி நன்கு பிசைந்து 2 மணிநேரம் ஊறவைக்கவும்.

*ஊறியதும் நடுத்தர உருண்டையாக எடுத்து மெலிதாக இல்லாமலும்,மிகவும் தடிமனாக இல்லாமலும் தேய்த்து எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

சன்னா மசாலாவுக்கு
சன்னா - 1 கப்
நீளவாக்கில் அரிந்த வெங்காயம் - 1
நீளவாக்கில் அரிந்த தக்காளி - 1
இஞ்சி பூண்டு - 1/2 டேபிள்ஸ்பூன்
சன்னா மசாலா பவுடர் - 1 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
பொடியாக அரிந்த கொத்தமல்லித்தழை - சிறிதளவு
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:
பட்டை - 1 துண்டு
கிராம்பு - 3
பிரியாணி இலை - 2
ஏலக்காய் -2

செய்முறை:
*சன்னாவை 8 மணிநேரம் ஊறவைத்து உப்பு சேர்த்து வேகவைக்கவும்.1 கைப்பிடி வேகவைத்த சன்னாவை நீர்விடாமல் அரைத்து வைக்கவும்.

*பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப்போட்டு தாளித்து வெங்காயம்+இஞ்சி பூண்டு விழுது+தக்காளி+மஞ்சள்தூள்+சன்னா மசாலா அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு நன்கு வதக்கவும்.

*வதங்கியதும் சன்னா வேகவைத்த நீர்+அரைத்த சன்னா+மீதமுள்ள வேகவைத்த சன்னா+உப்பு சேர்த்து 10 நிமிடம் கொதிக்கவைக்கவும்.

*பின் மல்லித்தழைதூவி இறக்கவும்.
Tuesday 29 March 2011 | By: Menaga Sathia

ரோஸ்டட் பூண்டு குட்டி உருளை வருவல்/ Oven Roasted Garlic Baby Potatoes

தே.பொருட்கள்

குட்டி உருளை - 25
வரமிளகாய்த்தூள் - 1/2 டேபிள்ஸ்பூன்
துருவிய பூண்டு - 3பல்
எண்ணெய் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு

செய்முறை
*உருளையை தோல் சீவவும்.முள்கரண்டியால் உருளையை அங்கங்கே குத்தி விடவும்.

*அதனுடன் மேற்கூறிய அனைத்து பொருட்களும் ஒன்றாக கலந்து 15 நிமிடம் வைக்கவும்.

*அவன் டிரேயில் உருளையை வைத்து,220°C முற்சூடு செய்த அவனில் 20 நிமிடங்கள் பேக் செய்யவும்.இடையிடையே திருப்பி விடவும்.
Sunday 27 March 2011 | By: Menaga Sathia

காளான் கட்லட் / Mushroom Cutlet

தே.பொருட்கள்
காளான் - 100 கிராம்
வேக வைத்த உருளைக்கிழங்கு - 1 பெரியது
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
மைதா - 1 டேபிள்ஸ்பூன்
பிரட் க்ரம்ஸ் - பிரட்டுவதற்க்கு
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

செய்முறை
*காளான்+வெங்காயம்+பச்சை மிளகாய்+கொத்தமல்லி அனைத்தையும் மிக பொடியாக நறுக்கவும்.

*காளானை மட்டும் கடாயில் போட்டு எண்ணெய் ஊற்றாமல் நீர் வற்றும் வரை வதக்கவும்.

*அதனுடன் மசித்த உருளை மற்றும் எண்ணெய் நீங்கலாக அனைத்து பொருட்களும் ஒன்றாக சேர்த்து பிசையவும்.

*மைதாவில் சிறிது உப்பு சேர்த்து நீர் விட்டு கெட்டியாக கரைக்கவும்.

*சிறு உருண்டைகலாக எடுத்து விரும்பிய வடிவில் செய்து மைதாவில் நனைத்து பிரெட் க்ரம்ஸில் பிரட்டி 15 நிமிடம் ப்ரிட்ஜில் வைத்திருந்து எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

பி.கு
*காளானை வதக்காமல் அப்படியே போட்டால் கட்லட் வேகும்போது காளான் நீர்விட்டு சரியாக வராது.

Thursday 24 March 2011 | By: Menaga Sathia

வெஜ் தாள்ச்சா/ Veg Thalchaa

தே.பொருட்கள்

வேகவைத்த துவரம்பருப்பு - 1 கப்
நறுக்கிய வெங்காயம்,தக்காளி - 1
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
மிளகுத்தூள்,சீரகத்தூள்,சோம்புத்தூள் - தலா 1/4 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1 சிட்டிகை
மிளகாய்த்தூள்,தனியாத்தூள் - தலா 1/2 டீஸ்பூன்
முருங்கைக்காய் - 1
மாங்காய் -1
கத்திரிக்காய் - 3
தேங்காய் விழுது - 1/4 கப்
புளிகரைசல் - 1/4 கப்
கறிவேப்பிலை,கொத்தமல்லி - சிறிது
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க

பட்டை - 1 சிறுதுண்டு
கிராம்பு - 3
பிரியாணி இலை - 3

செய்முறை
*பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளை போட்டு தாளிக்கவும்.
*பின் வெங்காயம்+இஞ்சி பூண்டு விழுது+தக்காளி+கரம் மசாலா+தனியாத்தூள்+மிளகாய்த்தூள்+மஞ்சள்தூள்+நறுக்கிய முருங்கை,கத்திரிக்காய் என அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.
*வதங்கியதும் சிறிதளவு நீர்+உப்பு சேர்த்து காய்களை வேகவைக்கவும்.
*காய்கள் வெந்ததும் புளிகரைசல்+மாங்காய் சேர்க்கவும்.
*மாங்காய் வெந்ததும் தேங்காய் விழுது+மிளகுத்தூள்+சோம்புத்தூள்+சீரகத்தூள் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.
*கடைசியாக வேகவைத்த துவரம்பருப்பு சேர்க்கவும்.
*பின் கறிவேப்பிலை கொத்தமல்லி சேர்க்கவும்.

*நெய் சாதத்துடன் சாப்பிட நன்றாகயிருக்கும்.

*இதனுடன் மட்டன் எலும்பு சேர்த்து செய்தால் மட்டன் தாள்ச்சா ரெடி!!
Wednesday 23 March 2011 | By: Menaga Sathia

இறால் வடை / Prawn Vadai


தே.பொருட்கள்:

குட்டி இறால் - 100 கிராம்
கடலைப்பருப்பு - 1 கப்
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2
பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை,கொத்தமல்லித்தழை - சிறிதளவு
பூண்டுப்பல் - 2
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1
உப்பு+எண்ணெய் = தேவைக்கு


செய்முறை :

*கடலைப்பருப்பை 1/2 மணிநேரம் ஊறவைத்து சோம்பு+பூண்டுப்பல் சேர்த்து கொரகொரப்பாக கெட்டியாக அரைக்கவும்.

*இறாலை சுத்தம் செய்து மஞ்சள்தூள்+உப்பு சேர்த்து வெறும் கடாயில் வதக்கிக்கொள்ளவும்.

*அரைத்த கடலைப்பருப்பில் உப்பு+வெங்காயம்+பச்சை மிளகாய்+கறி.கொத்தமல்லி+வதக்கிய இறால் அனைத்தையும் ஒன்றாக கலந்து வடைகளாக தட்டி எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
Tuesday 22 March 2011 | By: Menaga Sathia

பாவ் பன் & பாவ் பாஜி மசாலா / Pav Bun &Pav Bhaji Masala

பன் செய்ய
தே.பொருட்கள்:
மைதா - 4 கப்
பட்டர் - 1/2 கப்
பால் - 3/4 கப்
ஈஸ்ட் - 1 டேபிள்ஸ்பூன்
சர்க்கரை - 1/2 டேபிள்ஸ்பூன்
வெதுவெதுப்பான நீர் - 2 கப்
உப்பு - தேவைக்கு

செய்முறை:*வெதுவெதுப்பான 2 கப் நீரில் சர்க்கரை+ஈஸ்ட் சேர்த்து 5 நிமிடம் மூடி வைக்கவும்.பின் கலவை நன்கு பொங்கியிருக்கும்.

*ஒரு பவுலில் மாவு+உருக்கிய பட்டர்+ஈஸ்ட் கலந்த நீர்+பால்+உப்பு சேர்த்து நன்கு பிசைந்து ஈரத்துணியால் மூடி வெப்பமான் இடத்தில் வைக்கவும்.

*1 மணிநேரம் கழித்து மாவு 2மடங்காக உப்பியிருக்கும்.மறுபடியும் நன்கு பிசைந்து 1 மணிநேரம் வைக்கவும்.

*பின் மாவை சிறு உருண்டைகளாக தேவையானளவில் எடுக்கவும்.இந்த அளவில் 8 உருண்டைகள் வரும்.

*அவைகளை அவன் டிரேயில் ஒன்றோடு ஒன்று ஒட்டுமாறு வைத்து ஈரத்துணியால் மூடி 45 நிமிஷம் வைக்கவும்.

*190°C டிகிரி முற்சூடு செய்த அவனில் 25-30 நிமிடங்கள் பேக் செய்யவும்.வெந்ததும் அவனில் இருந்து எடுத்து உருக்கிய பட்டரை ப்ரெஷ்ஷால் தடவி விடவும்.
பாவ் பாஜி மசாலா
தே.பொருட்கள்:
பாவ் பன் - 8
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1
பொடியாக நறுக்கிய தக்காளி - 1
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை -சிறிதளவு
பாவ் பாஜி மசாலா - 1 டேபிள்ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1டீஸ்பூன்
தோலெடுத்து துண்டாக்கிய உருளை - 3
காலிபிளவர் - 1/4 கப்
பட்டாணி - 1/4 கப்
துருவிய கேரட் - 1/4 கப்
பட்டர் - தேவைக்கு
எலுமிச்சை சாறு - 1/2 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

செய்முறை:
*குக்கரில் காய்களை தேவையான் நீர் சேர்த்து வேகவைத்து நன்கு மசித்து வைக்கவும்.
*கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம்+இஞ்சி பூண்டு விழுது+தக்காளி+உப்பு+மிளகாய்த்தூள்+பாவ் மசாலா+மஞ்சள்தூள் சேர்த்து நன்கு வதக்கி மசித்த காய்களை சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.
*நன்கு கொதிததும் எலுமிச்சை சாறு சேர்த்து இறக்கவும்.

*கடாயில் பட்டர் விட்டு பாவ் பன்னை 2ஆக கட் செய்து 2 பக்கமும் பொன்னிறமாக டேஸ்ட் செய்து மசாலாவுடன் பரிமாறவும்.
Sunday 20 March 2011 | By: Menaga Sathia

போட்டி(ஆட்டுக்குடல்)குருமா/ Aattu Kudal(Potti) Kurma

தே.பொருட்கள்

போட்டி - 1
கத்திரிக்காய் - 5 சிறியது
அரிந்த வெங்காயம் - 1
அரிந்த தக்காளி - 2
இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 கைப்பிடி
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
தனியாத்தூள்,வரமிளகாய்த்தூள் - தலா 1/2 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

அரைக்க
தேங்காய்த்துறுவல் - 1/2 கப்
சோம்பு - 1 டீஸ்பூன்

தாளிக்க
பட்டை - 1 சிறுதுண்டு
பிரியாணி இலை - 2
கிராம்பு - 4
கறிவேப்பிலை- சிறிது

செய்முறை
* போட்டியை சுத்தம் செய்து சுடுநீரில் நன்கு அலசவும்.தேங்காயை நன்கு மைய அரைக்கவும்.

*குக்கரில் போட்டி+கடலைப்பருப்பு+சிறிது உப்பு+சிறிது இஞ்சி பூண்டு விழுது+சிறிது நீர் சேர்த்து 4 விசில் வரை வேகவைக்கவும்.

*ஆறியதும் போட்டி வேகவைத்த நீரை ஊற்றிவிட்டு கடலைப்பருப்பை எடுத்து வைக்கவும்.கறியை சிறுதுண்டுகளாக வெட்டவும்.கத்திரிக்காயை பொடியாக வெட்டவும்.

*பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப்போட்டு தாளித்து வெங்காயம்+தக்காளி+மீதமுள்ள இஞ்சி பூண்டு விழுது+தூள் வகைகள்+கத்திரிக்காய்+வேகவைத்த கறி+உப்பு அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.

*பின் தேவையான நீர் சேர்த்து கொதிக்கவிடவும்.கத்திரிக்காய் வெந்ததும் தேங்காய் விழுது சேர்த்து மேலும் சிறிது நேரம் கொதிக்கவைத்து இறக்கவும்.

*இட்லி,தோசைக்கு பெஸ்ட்  காம்பினேஷன்...

Thursday 17 March 2011 | By: Menaga Sathia

ஆரஞ்சுபழ கேசரி/ Orange Rava Kesari


தே.பொருட்கள்

ரவை - 1 கப்
ஆரஞ்ச் ஜூஸ் - 3/4 கப்
சர்க்கரை - 3/4 கப்
துருவிய ஆரஞ்ச் தோல் -1/4 டீஸ்பூன்
(அ)
ஆரஞ்சு எசன்ஸ் - 2 துளி
ஏலக்காய்த்தூள் - சிறிது
நெய்யில் வறுத்த முந்திரி,திராட்சை - தேவைக்கு
நெய் - 1 டேபிள்ஸ்பூன்
கேசரி கலர் - 1 சிட்டிகை

செய்முறை
* ரவையை சிறிது நெய்யில் வறுத்துக் கொள்ளவும்.

*ஒரு பாத்திரத்தில் 2 கப் நீர் ஊற்றி கொதிக்கவிடவும்.அதில் கேசரிக்கலர்,ஆரஞ்ச் தோல் சேர்க்கவும்.

*தண்ணீர் கொதித்ததும் ரவையை கொட்டி கட்டி விழாமல் கிளறவும்,வெந்ததும் சர்க்கரை+ஆரஞ்ச் ஜூஸ் சேர்த்து கிளறவும்.

*கெட்டியாக வரும் போது மீதமுள்ள நெய்+முந்திரி திராட்சை,ஏலக்காய் சேர்த்து கிளறி இறக்கவும்.

எள்ளோதரை(எள் சாதம்) / Sesame Rice

தே.பொருட்கள்:
உதிராக வடித்த சாதம் - 1 கப்
உப்பு+நல்லெண்ணெய் = தேவைக்கு
 
தாளிக்க:
கடுகு - 1/4 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/2 டீஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
வேர்க்கடலை - 1 கைப்பிடி
கறிவேப்பிலை - சிறிது

வறுத்துப் பொடிக்க:
எள் - 1 டேபிள்ஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/2 டேபிள்ஸ்பூன்
காய்ந்தமிளகாய் - 3
பெருங்காயம் - 1 சிறுகட்டி

செய்முறை:
*வறுக்க கொடுத்துள்ள பொருட்களில் எள்+உளுத்தம்பருப்பு வெறும் கடாயில் வறுத்தும்,காய்ந்த மிளகாய்+பெருங்காயம் எண்ணெயிலும் வறுக்கவும்.

*முதலில் காய்ந்த மிளகாய்+பெருங்காயம்+உப்பு சேர்த்து பொடிக்கவும்.மிளகாயுடன் உப்பு சேர்த்து பொடித்தால் சீக்கிரம் அரைபடும்.பின் உளுத்தம்பருப்பு+எள் சேர்த்து நைசாக பொடிக்கவும்.

*சாதத்தை ஆறவைத்து நல்லெண்ணெய் கலக்கவும்.அதனுடன் பொடித்த பொடி+தேவையான உப்பு+தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து கொட்டி ஒன்றாக கலக்கவும்.
Tuesday 15 March 2011 | By: Menaga Sathia

பாகற்காய் சாம்பார் / Bitter gourd Sambhar

தே.பொருட்கள்

பாகற்காய் - 100 கிரம்
வேகவைத்த துவரம்பருப்பு - 1 கப்
புளி கரைசல் - 1/2 கப்
மஞ்சள்தூள் - 1 சிட்டிகை
சாம்பார் பொடி - 1/2 டேபிள்ஸ்பூன்
தேங்காய்த்துறுவல் - 1/4 கப்
வெல்லம் -சிறுதுண்டு(விரும்பினால்)
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க
கடுகு - 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை

*பாகற்காயை விதைகளை நீக்கி வட்டமாக நறுக்கவும்.அதனை சிறிது நேரம் உப்பு சேர்த்து பிசைந்து அரிசி கழுவிய நீரில் கழுவவும்.இப்படி செய்தால் கசப்பு தெரியாது.

*ஒரு பாத்திரத்தில் பாகற்காயை போட்டு முழ்குமளவு நீர்+உப்பு சேர்த்து வேகவைக்கவும்.

*வெந்ததும் புளித்தண்ணீர்+சாம்பார் பொடி சேர்க்கவும்.நன்கு கொதித்த பின் வேகவைத்த பருப்பு+தேங்காய்த்துறுவல் சேர்க்கவும்.

*சிறிது நேரம் கொதிக்கவைத்து விரும்பினால் வெல்லம் சேர்த்து இறக்கவும்.கொஞ்சம்கூட கசப்பே தெரியாது.
 
Sunday 13 March 2011 | By: Menaga Sathia

பட்டாணி சுண்டல் /White Peas Sundal

தே.பொருட்கள்:

காய்ந்த வெள்ளை பட்டாணி - 1 கப்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1
பொடியாக நறுக்கிய மாங்காய் - 2 டேபிள்ஸ்பூன்
பொடியாக நறுக்கிய கேரட் - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு

செய்முறை :

*பட்டாணியை முதல்நாள் இரவே ஊறவைத்து உப்பு சேர்த்து வேகவைத்து நீரை வடிகட்டவும்.

*பட்டாணியுடன் வெங்காயம்+மாங்காய்+கேரட் அனைத்தையும் ஒன்றாக கலந்து பறிமாறவும்.
Friday 11 March 2011 | By: Menaga Sathia

கறிவேப்பிலை குழம்பு /Curry leaves Kuzhampu


வெளியூருக்கு வந்து இருக்குற நாலுமுடியும் கொட்டியதால் கறிவேப்பிலையின் அருமை இப்பதான் தெரியுது.இப்பலாம் அதை சாப்பாட்டில் தூக்கி போடுவதேயில்லை...
தே.பொருட்கள்:

சின்ன வெங்காயம் - 10
நறுக்கிய பூண்டுப்பல் - 5
புளிகரைசல் - 1 1/2 கப்
சாம்பார்பொடி - 1 டேபிள்ஸ்பூன்
வடகம் - 3/4 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

வறுத்து அரைக்க:மிளகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 4 கொத்து
 
செய்முறை :
*அரைக்க கொடுத்துள்ளவைகளை மைய அரைக்கவும்.

*பாத்திரத்தில் எண்ணெய் விட்டு வடகத்தை போட்டு தாளித்து வெங்காயம்+பூண்டுப்பல்+சாம்பார்பொடி+உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.

*பின் புளிகரைசலை ஊற்றி கொதிக்கவிடவும்.கொதித்த பின் அரைத்த விழுதை சேர்த்து நன்கு கொதித்ததும் இறக்கவும்.
Wednesday 9 March 2011 | By: Menaga Sathia

மன்னார்குடி கொஸ்து/ Mannargudi Kostu

புவனேஸ்வரி அவர்களின் குறிப்பை பார்த்து கத்திரிக்காய்+உருளையுடன் சேர்த்து செய்தேன்.மிகவும் அருமையாக இருந்தது.நன்றி புவனேஸ்வரி!!. எங்கம்மா உருளை சேர்க்காமல் கத்திரியுடன் வெங்காயம்,தக்காளி சிலபொருட்கள் சேர்த்து ஒன்றாக வேகவைத்து கடைந்து இட்லிமாவு சேர்த்து கொதிக்க வைத்து,கடைசியாக தாளிப்பாங்க.எனக்கு ரொம்ப பிடிக்கும் அந்த கத்திரிக்காய் கடைசல்.இந்த குறிப்பும் வித்தியாசமா நன்றாகயிருந்தது.

தே.பொருட்கள்:
கத்திரிக்காய் - 1 பெரியது
உருளைக்கிழங்கு - 1 சிறியது
பொடியாக அரிந்த வெங்காயம் - 1 பெரியது
பொடியாக அரிந்த தக்காளி - 4 புளிப்பிற்கேற்ப சேர்க்கவும்
கீறிய பச்சை மிளகாய் - 3
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
சாம்பார் பொடி - 3/4 டேபிள்ஸ்பூன்
இட்லி மாவு - 1 கரண்டி
பொடியாக அரிந்த கொத்தமல்லித்தழை - சிறிதளவு
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:
கடுகு - 1/4 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/2 டீஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
பெருங்காயம் - வாசனைக்கு
கறிவேபிலை - சிறிது

செய்முறை:
*கத்திரிக்காயை பொடியாகவும்,உருளையை தோல் சீவி பொடியாக நறுக்கவும்.

*பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப்போட்டு தாளித்து வெங்காயம்+தக்காளி +கீறிய பச்சை மிளகாய்+காய்கள் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு நன்கு வதக்கவும்.

*பின் தேவையானளவு நீர்+உப்பு+மஞ்சள்தூள்+சாம்பார் பொடி சேர்த்து கொதிக்கவிடவும்.

*காய்கள் வெந்ததும் கரண்டியால் மசித்துவிட்டு இட்லிமாவு சேர்த்து 5 நிமிடம் கொதிக்கவிட்டு மல்லித்தழை தூவி இறக்கவும்.

*சூடான இட்லி தோசையுடன் இந்த கொஸ்துவை சாப்பிட செம ஜோர்!!
Tuesday 8 March 2011 | By: Menaga Sathia

ஈஸி மட்டன் வறுவல் /Easy Mutton Varuval

இந்த குறிப்பை டிவியில் பார்த்து செய்தேன்.சூப்பராக இருந்தது.அதுமட்டுமில்லாமல் எண்ணெயும் குறைவாகவே செலவாகும்.
தே.பொருட்கள்:
மட்டன் - 1/2 கிலோ
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
வரமிளகாய்தூள் - 3/4 டேபிள்ஸ்பூன்
கரம் மசாலா -1/4 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்
சீரகத்தூள் - 1 டீஸ்பூன்
அரைத்த சின்ன வெங்காய விழுது - 2 டேபிள்ஸ்பூன்
அரைத்த பச்சை மிளகாய் விழுது - 2 டீஸ்பூன்
பொடியாக அரிந்த புதினா, கொத்தமல்லி - தலா 1 கைப்பிடி
உப்பு + எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:
கறிவேப்பிலை - சிறிதளவு
சோம்பு - 1 டீஸ்பூன்

செய்முறை :
* குக்கரில் மட்டனுடன் சிறிதளவு புதினா கொத்தமல்லி மற்றும் எண்ணெய் நீங்கலாக அனைத்து பொருட்கள் + 1 கப் நீர் சேர்த்து 3 விசில் வரை வேகவிடவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு சோம்பு+கறிவேப்பிலை சேர்த்து தாளித்து வெந்த கறி+மீதமுள்ள புதினா கொத்தமல்லியை சேர்த்து நன்கு நீர் சுண்டும் வரை சுருள கிளறி இறக்கவும்.
Monday 7 March 2011 | By: Menaga Sathia

கோஸ் ஊறுகாய் / Cabbage Pickle

தே.பொருட்கள்

துருவிய கோஸ் - 1 கப்
வரமிளகாய்த்தூள் - 1 டேபிள்ஸ்பூன்
புளி - 1நெல்லிக்காயளவு
உப்பு+நல்லெண்ணெய் = தேவைக்கு

வறுத்து பொடிக்க
கடுகு - 1/4 டீஸ்பூன்
வெந்தயம் - 1/4 டீஸ்பூன்

தாளிக்க
கடுகு - 1/4 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்

செய்முறை
*வறுத்து பொடிக்க கொடுத்துள்ளவைகளை வெறும் கடாயில் வறுத்துப் நைசாக பொடிக்கவும்.

*கடாயில் 1 டீஸ்பூன் எண்ணெய் விட்டு துருவிய கோஸை நன்கு பச்சை வாசனைப் போக வதக்கவும்.

*ஆறியதும் இதனுடன் புளி+உப்பு+பொடித்த பொடி சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.

*பின் கடாயில் எண்ணெய்விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப் போட்டு தாளித்து மிளகாய்த்தூள்+அரைத்த விழுது சேர்த்து நன்கு வதக்கி எடுக்கவும்.

*வித்தியாசமான சுவையில் இருக்கும்.


Sunday 6 March 2011 | By: Menaga Sathia

சுட்ட கத்திரிக்காய் சட்னி /Smoked Brinjal Chutney

இதற்க்கு விதையில்லாத பெரிய கத்திரிக்காய்தான் நன்றாகயிருக்கும்.

தே.பொருட்கள்

பெரிய கத்திரிக்காய் - 2
புளி - 1 நெல்லிக்காயளவு
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

வறுத்து பொடிக்க

தனியா - 1/2 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 5
கடுகு - 1 டீஸ்பூன்
பெருங்காயம் - 1சிறுகட்டி
தேங்காய்த்துறுவல்+உளுத்தம்பருப்பு - தலா 2 டேபிள்ஸ்பூன்

தாளிக்க

கடுகு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது

 செய்முறை

*கத்திரிக்காயில் எண்ணெய் தடவி அடுப்பில் சுடவும்.ஒவ்வொரு பக்கமும் நன்கு திருப்பிவிட்டு சுடவும்.

*கத்திரிக்காய் நன்கு வெந்திருந்தால்தான் தோல் எடுக்க வரும்.

*தோல் எடுத்து சிறுதுண்டுகளாக வெட்டவும்.

*வறுத்து பொடிக்க கொடுத்துள்ளவைகளை வெறும் கடாயில் வறுத்து பொடிக்கவும்.

*இதனுடன் புளி+கத்திரிக்காய் +உப்பு சேர்த்து நைசாக அரைத்து தாளித்துக் கொட்டவும்.

*இட்லி,தோசை,சப்பாத்தியுடன் சாப்பிட நன்றாகயிருக்கும்.


Friday 4 March 2011 | By: Menaga Sathia

கார்லிக் ரோல்ஸ் / Garlic Rolls

சுகைனாவின் குறிப்பில் பார்த்து செய்தது.மிகவும் அருமையாக இருந்தது.நன்றி சுகைனா!!
தே.பொருட்கள்
ஆல் பர்பஸ் மாவு - 3 கப்
ஈஸ்ட் - 1 டேபிள்ஸ்பூன்
சர்க்கரை - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - 1டீஸ்பூன்
ஆலிவ் ஆயில் - 2 டேபிள்ஸ்பூன்
எள் - மேலே தூவ
பால் - 1/4 கப்

ஸ்டப் செய்ய
வெண்ணெய் - 50 கிராம்(அறை வெப்பநிலை)
உப்பு - 1 டீஸ்பூன்
துருவிய பூண்டுப்பல் - 3
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - 2 டேபிள்ஸ்பூன்

செய்முறை
*1 கப் மிதமான வெந்நீரில் சர்க்கரை+ஈஸ்ட் கலந்து 10 நிமிடம் வைத்திருக்கவும்.

*ஒரு பவுலில் ஈஸ்ட் கலவை+உப்பு+மாவு அனைத்தையும் ஒன்றாக கலக்கவும்.பின் ஆலிவ் ஆயில் சேர்த்து பிசைந்து வெப்பமான இடத்தில் 1 மணிநேரம் வைக்கவும்.
* பொங்கிய மாவை மிருதுவாக பிசையவும்.
*ஸ்டப் செய்ய கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாக கலக்கவும்.
 *மாவை இரண்டு பெரிய உருண்டையாக எடுக்கவும்.ஒரு உருண்டையை சதுரமாக உருட்டவும்.
 *அதன்மேல் ஸ்டப்பிங் சமமாக தடவி பாய் போல சுருட்டவும்.
 *முதலில் 2ஆக வெட்டி,பின் வெட்டியவைகளை மீண்டும் 2ஆக வெட்டவும்.இதேபோல் அடுத்த உருண்டையையும் செய்துக் கொள்ளவும்.

 *பேக்கிங் டிரேயில் வெண்ணெய் தடவி வெட்டியவைகளை ஒன்றோடு ஒண்ரு ஒட்டுமாறு வைத்து அதன்மேல் பால்(அ)முட்டை தடவி எள் தூவி விடவும்.
*பின் மீண்டும் இந்த உருண்டைகளை 1/2 மணிநேரம் வைத்திருந்து 200°C டிகிரி முற்சூடு செய்த அவனில் 25 நிமிடம் பேக் செய்து எடுக்கவும்.

பி.கு

*ஸ்டப்பிங் மீதமானால் ப்ரிட்ஜில் 1 வாரம் வரை வைத்திருந்து உபயோக்கிக்கலாம்.

*ப்ரெட் டோஸ்ட் செய்யும் போது தடவி டோஸ்ட் செய்தால் அருமையாக இருக்கும்.

*இந்த ரோல் பேக் செய்யும் போது வீடே மணமாக இருக்கும்.
Wednesday 2 March 2011 | By: Menaga Sathia

ஷாஹி பனீர் / Shahi Paneer

தே.பொருட்கள்:
பனீர் - 100 கிராம்
வெங்காயம் - 1 சிறியது
தக்காளி - 1 பெரியது
மஞ்சள்தூள் - 1 சிட்டிகை
வரமிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 1
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
காய்ந்த வெந்தயக்கீரை - 1 டீஸ்பூன்
வெண்ணெய் - 1 டீஸ்பூன்
உப்பு +எண்ணெய் = தேவைக்கு
 
செய்முறை:
*பனீரை சதுர துண்டங்களாக நறுக்கி எண்ணெயில் பொரித்து உப்பு கலந்த குளிர்ந்த நீரில் 10 நிமிடம் போட்டு நீரை வடிகட்டி வைக்கவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம்,தக்காளி+பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி மைய அரைக்கவும்.

*அதே கடாயில் வெண்ணெய்+எண்ணெய் விட்டு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி வரமிளகாய்த்தூளை சேர்க்கவும்.

*உடனே அரைத்த வெங்காய விழுது+உப்பு+மஞ்சள்தூள்+காய்ந்த வெந்தயக்கீரை சேர்த்து வதக்கி தேவையான நீரை சேர்த்து கொதிக்க விடவும்.

*பின் பனீரை துண்டுகளை சேர்த்து 5 நிமிடம் கழித்து இறக்கவும்.

*சப்பாத்தியுடன் சாப்பிட நன்றாகயிருக்கும்..

01 09 10