Thursday 17 March 2011 | By: Menaga Sathia

எள்ளோதரை(எள் சாதம்) / Sesame Rice

தே.பொருட்கள்:
உதிராக வடித்த சாதம் - 1 கப்
உப்பு+நல்லெண்ணெய் = தேவைக்கு
 
தாளிக்க:
கடுகு - 1/4 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/2 டீஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
வேர்க்கடலை - 1 கைப்பிடி
கறிவேப்பிலை - சிறிது

வறுத்துப் பொடிக்க:
எள் - 1 டேபிள்ஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/2 டேபிள்ஸ்பூன்
காய்ந்தமிளகாய் - 3
பெருங்காயம் - 1 சிறுகட்டி

செய்முறை:
*வறுக்க கொடுத்துள்ள பொருட்களில் எள்+உளுத்தம்பருப்பு வெறும் கடாயில் வறுத்தும்,காய்ந்த மிளகாய்+பெருங்காயம் எண்ணெயிலும் வறுக்கவும்.

*முதலில் காய்ந்த மிளகாய்+பெருங்காயம்+உப்பு சேர்த்து பொடிக்கவும்.மிளகாயுடன் உப்பு சேர்த்து பொடித்தால் சீக்கிரம் அரைபடும்.பின் உளுத்தம்பருப்பு+எள் சேர்த்து நைசாக பொடிக்கவும்.

*சாதத்தை ஆறவைத்து நல்லெண்ணெய் கலக்கவும்.அதனுடன் பொடித்த பொடி+தேவையான உப்பு+தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து கொட்டி ஒன்றாக கலக்கவும்.

24 பேர் ருசி பார்த்தவர்கள்:

எல் கே said...

நல்லா இருக்குங்க மேனகா

ராமலக்ஷ்மி said...

பிடித்த ஒன்று. நன்றி மேனகா.

Prema said...

delicious rice,i too make almost like the same method...

ஸாதிகா said...

ம்ம்..சுவையான எள்ளோதரை.நான் இன்னும் சற்ரு மாற்றமாக செய்வேன்.அருமையான சாதம் இது.

துளசி கோபால் said...

டைம்லி போஸ்ட். நன்றிப்பா.

ஒரு கிலோ போல எள்ளு வீட்டுலே கிடக்கு. எப்படிடா ஒழிச்சுக்கட்டுறதுன்னு பார்த்தேன்:-)))))

திரும்ப நியூஸிக்குக் கொண்டு போகமுடியாது:(

இன்னும் சில எள்ளு ரெஸிபி போடுங்கப்பா.

Lifewithspices said...

My fav lunch box item..i prepare the same way..

புவனேஸ்வரி ராமநாதன் said...

எள் ஒரு ரத்த விருத்தி.
எள்ளைக் கொண்டு
ஒரு சாதம் செய்து காண்பித்தது மிக நன்று.

'பரிவை' சே.குமார் said...

Puliyotharai pola ellotharai...
mmm... tasta irukkum pola...

சசிகுமார் said...

வழக்கம் போல நல்ல பதிவு.

Asiya Omar said...

புளி சேர்க்காமல் எள்ளோதரை சூப்பர்.எள்ளூப்பொடி அருமை.

Priya Suresh said...

One of my fav rice, Menaga thanks for letting me know about the pop windows, just changed the template,hope its ok now,do let me know..

Priya Sreeram said...

lovely it looks !

Thenammai Lakshmanan said...

ரொம்ப சூப்பரா இருக்கே. மேனகா..:)

Akila said...

ellu saatham romba nalla iruku...

DNSW: F Roundup
Dish Name Starts with G
Learning-to-cook
Regards,
Akila

Sarah Naveen said...

Such a comfort food ..looks so flavorful n yumm!!

Menaga Sathia said...

நன்றி எல்கே!!

நன்றி ராமலஷ்மி அக்கா!!

நன்றி பிரேமலதா!!

நன்றி ஸாதிகா அக்கா!! உங்க செய்முறையும் சொல்லுங்க...

Menaga Sathia said...

நன்றி துளசி அக்கா!! எள்ளுருண்டை,சாலட் மேலே தூவலாம்,கத்திரிக்காய் பொரியல்,பேக்கிங் என செய்து அசத்துங்க...

நன்றி கல்பனா!!

நன்றி புவனேஸ்வரி!!

நன்றி சகோ!!

Menaga Sathia said...

நன்றி சசி!!

நன்றி ஆசியா அக்கா!!

நன்றி ப்ரியா!!

நன்றி ப்ரியா!!

Menaga Sathia said...

நன்றி தேனக்கா!!

நன்றி அகிலா!!

நன்றி சாரா!!

Unknown said...

Love the flavour and taste of ellu always.Ellu rice is very new to me.thank for sharing.

Vimitha Durai said...

Suvaiyo Suvai... Apdiye saapiduven :)

vanathy said...

looking delicious!

Mahi said...

நன்றாக இருக்கிறது,செய்து பார்க்கிறேன்..இதற்கு சைட் டிஷ் ஏதாவது செய்யணும் இல்ல மேனகா?

Menaga Sathia said...

நன்றி சவீதா!!

நன்றி விமிதா!!

நன்றி வானதி!!

நன்றி மகி!! இதற்கு சிப்ஸ்,உருளை வறுவல் நல்லாயிருக்கும்...

01 09 10