Thursday 30 July 2015 | By: Menaga Sathia

மொளகூட்டல் / Molagootal | Avarakkai (Broad Beans ) Molakootal | Side Dish For Rice & Roti

print this page PRINT IT 
இதற்கு புடலங்காய்,அவரைக்காய்,கீரை,கீரைத்தண்டு,பூசணிக்காய் மட்டுமே நன்றாக இருக்கும்.

அவரையில் செய்தால் தனி ருசி,நான் அவரைக்காயில் தான் செய்துருக்கேன்.

குழம்பு வகைகளுக்கும்,சப்பாத்திக்கும் தொட்டுக் கொள்ள அருமையான சைட் டிஷ் !!

காய்களை வதக்க நல்லெண்ணெய் பயன்படுத்தினால் நிறம் மாறாது.

அதே போல் இதில் தேங்காய் மணம் தான் முக்கியம்,அதனால் நிறையவே சேர்க்க வேண்டும்.

Recipe Source :
Here

தே.பொருட்கள்

அவரைக்காய் -1/4 கிலோ
வேகவைத்த பாசிப்பருப்பு- 1/4 கப்
மஞ்சள்தூல் -1 சிட்டிகை
உப்பு -தேவைக்கு
நல்லெண்ணெய் -1 டீஸ்பூன்

அரைக்க‌
தேங்காய்த்துறுவல் -1/3 கப்
மிளகாய் வற்றல்- 3
சீரகம்- 2 டீஸ்பூன்

தாளிக்க‌

தேங்காய் எண்ணெய்- 1 டீஸ்பூன்
கடுகு+உளுத்தம்பருப்பு- தலா 1/4 டீஸ்பூன்
சீரகம் -1/4 டீஸ்பூன்
கரிவேப்பிலை- 1கொத்து
காய்ந்த மிளகாய்- 1

செய்முறை

*அவரைக்காயை பொடியாக நறுக்கி நல்லெண்ணெய்+மஞ்சள்தூள் சேர்த்து வதக்கி நீர் ஊற்றி வேகவிடவும்.



*அரைக்க கொடுத்துள்ள பொருட்களை அரைக்கவும்.

*காய் வெந்ததும் அரைத்த மசாலா +பாசிப்பருப்பு+உப்பு சேர்த்து மேலும் சிறிது நேரம் கொதிக்கவிடவும்.



*பின் தேங்காய் எண்ணெயில் தாளித்து சேர்க்கவும்.

Monday 27 July 2015 | By: Menaga Sathia

சோள இட்லி / SORGHUM(JOWAR) IDLI | MILLETS RECIPE


print this page PRINT IT
தே.பொருட்கள்

சோளம் -1 கப்
புழுங்கலரிசி- 1 கப்
உளுந்து- 1/2 கப்
வெந்தயம்- 1/4 டீஸ்பூன்
உப்பு- தேவைக்கு


செய்முறை

*சோளம்+அரிசி இவற்றை ஒன்றாக கலந்து குறைந்தது 8 மனிநேரம் ஊறவைக்கவும்.

*உளுந்து+வெந்தயம் இவற்றை 1 மணிநேரம் ஊறவைக்கவும்.


*முதலில் உளுந்தினை நன்றாக பொங்க அரைத்தபின் சோளத்தினை அரைக்கவும்


*இட்லிக்கு அரைப்பது போல மாவினை அரைக்கவும்.

*2யும் ஒன்றாக கலந்து உப்பு சேர்த்து கரைத்து 8 மணிநேரம் புளிக்கவைத்து இட்லிகளாக சுட்டெடுக்கவும்.

*தோசையும் நன்கு முறுகலாக வரும்.
Saturday 25 July 2015 | By: Menaga Sathia

ஹரியாலி சிக்கன் கபாப் /Hariyali Chicken Kabab | Chicken Recipes


print this page PRINT IT 
இது ஒரு பஞ்சாபி உணவு வகை.இதனை க்ரில் செய்து முடித்ததும் வெண்ணெய்/எண்ணெய் தடவி பரிமாறலாம்.நான் எண்ணெய்/வெண்ணெய் தடவாமல் பரிமாறியுள்ளேன்.எல்லாம் நம் விருப்பம்தான்

தே.பொருட்கள்
எலும்பில்லாத சிக்கன்-1/4 கிலோ
தயிர்- 2 டேபிள்ஸ்பூன்
உப்பு -தேவைக்கு
எலுமிச்சை சாறு -2 டீஸ்பூன்

அரைக்க‌

புதினா +கொத்தமல்லி- தலா 1 கைப்பிடி
பச்சை மிளகாய்- 2 (அ) காரத்திற்கேற்ப‌
இஞ்சி -சிறிய துண்டு
பூண்டுப்பல்- 2
மிளகு- 3

செய்முறை

*சிக்கனை சுத்தம் செய்து நடுத்தர துண்டுகளாகி,நீரில்லாமல் வடிக்கவும்.

*அரைக்க கொடுத்துள்ள பொருட்களை நன்கு அரைக்கவும்.



*க்ரில் செய்வதற்கு முன் சிக்கனை ப்ரிட்ஜிலிருந்து 1/2 மணிநேரத்திற்கு முன்பாக எடுத்து வைக்கவும்.
*அவனை 210°C முற்சூடு செய்யவும்.

*மூங்கில் குச்சியினை 1 மணிநேரம் ஊறவைத்த பின் சிக்கனை மூங்கில் குச்சியில் சொருகி 20 நிமிடங்கள் பேக் செய்து எடுக்கவும்.

*இதனை சாலட் / டிப்(Dip) உடனோ அல்லது அப்படியே கூட பரிமாறலாம்.
Thursday 23 July 2015 | By: Menaga Sathia

மிக்ஸட் ப்ரூட் கேசரி/MIXED FRUIT KESARI

print this page PRINT IT 
தே.பொருட்கள்
ரவை- 1/2 கப்
சர்க்கரை -1/2 கப்+2 டேபிள்ஸ்பூன்
நீர்- 1 1/2 கப்
முந்திரி,திராட்சை -தேவைக்கு
பைனாப்பிள் எசன்ஸ்- 2 துளி
கேசரி கலர் -1சிட்டிகை
பொடியாக நறுக்கிய ஆப்பிள்+பைனாப்பிள் -தலா 1/4 கப்
நெய்- 1/4 கப்
எண்ணெய்- 1 டேபிள்ஸ்பூன்

செய்முறை
*ஆப்பிள் மற்றும் பைனாப்பிளில் 2 டேபிள்ஸ்பூன் சர்க்கரை கலந்து வைக்கவும்.

*ஒரு பாத்திரத்தில் நீரினை கொதிக்கவிடவும்.

*கடாயில் 1 டேபிள்ஸ்பூன் நெய் விட்டு முந்திரி+திராட்சை சேர்த்து வறுக்கவும்.

*பின் ரவை சேர்த்து வறுக்கவும்.நன்றாக வறுபட்டதும் கொதிநிரினை ஊற்றி கிளறவும்.

*ரவை வெந்ததும் சர்க்கரை+கேசரிகலர் சேர்த்து கிளறவும்.

*சர்க்கரை கரைந்து கெட்டியாகி வரும் போது ஊறவைத்த பழக்கலவையினை சேர்த்து கிளறி இறக்கவும்.
*மீதமுள்ள நெய்+எண்ணெய் மற்றும் எசன்ஸ் சேர்த்து கிளறி பரிமாறவும்.
பி.கு

*இதில் விரும்பினால் விதையில்லாத கறுப்பு திராட்சை சேர்க்கலாம்.

*பழக் கேசரியில் ஏலக்காய்த்தூள் சேர்க்கவேண்டாம்.
Wednesday 8 July 2015 | By: Menaga Sathia

தினை அதிரசம் / Thinai (Foxtail Millet ) Adhirasam | Millet Recipes


print this page PRINT IT 
தினைக்கு பதில் மற்ற சிறுதானியங்களிலும் செய்யலாம்.ஆனால் தினையில் செய்தால் மற்ற சிறுதானியங்களில் செய்ததை விட சுவையாக இருக்கும்.

தே.பொருட்கள்
தினை- 1 1/4 கப்
துருவிய வெல்லம்- 3/4 கப்
ஏலக்காய்த்தூள் -1/2 டீஸ்பூன்
சுக்குபொடி -1/4 டீஸ்பூன்
நெய்- 1 டீஸ்பூன்
எண்ணெய் -பொரிக்க‌

செய்முறை
*தினையை கழுவி 1 மணிநேரம் ஊறவைக்கவும்.

*ஊறியதும் நீரை வடிகட்டி துணியில் பரப்பி நிழலில் ஈரம் போக உலர்த்தவும்.

*உலர்ந்ததும் மிக்ஸியில் நைசாக பொடிக்கவும்.

*பாத்திரத்தில் வெல்லம் சேர்த்து 1/4 கப் நீர் ஊற்றி கொதிக்கவைத்து வடிகட்டவும்.

*வடிகட்டிய வெல்லநீரை மீண்டும் கொதிக்கவைத்து உருண்டை பாகு எடுக்கவும்.

*கிண்ணத்தில் நீரை ஊற்றி,வெல்ல பாகினை ஊற்றினால் உருண்டையாக எடுக்கும் பதத்தில் வரவேண்டும்.

*பாகுபதம் வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி ஏலக்காய்பொடி+சுக்குபொடி+பொடித்த மாவு சேர்த்து கிளறவும்.

*நன்றாக கிளறிய பின் நெய் சேர்த்து கிளறி ஒர் இரவு முழுவதும் மாவினை ஊற‌ வைக்கவும்.

*மறுநாள் சம உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.

*எண்ணெய் தடவி ப்ளாஸ்டிக் கவரில் உருண்டை வைத்து மிக மெலிதாக இல்லாமலும் ,தடிமனாக இல்லாமலும் தட்டவும்.

*எண்ணெய் காயவைத்து பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.பொரிக்கும் போது உப்பலாக வரும்.

*பொரித்த அதிரசத்தின் மேலே கிண்ணத்தை வைத்து ஔத்தினால் தட்டையாகவும்,அதிகபடியான எண்ணெயும் வந்துவிடும்.

*ஆறியதும் காற்றுப்புகாத டப்பாவில் வைத்திருந்து பயன்படுத்தவும்.

பி.கு

அதிரசம் செய்வதற்கு பாகு வெல்லம் சிறந்தது.சுவையாகவும்,கலராகவும் இருக்கும்.
01 09 10