Monday 22 October 2018 | By: Menaga Sathia

சோளமாவு அல்வா | Microwave Cornflour Halwa / Bombay Karachi Halwa | Diwali Recipes


சோளமாவு அல்வா மிக எளிதாக செய்ய கூடியது.நான் மைக்ரோவேவ் அவனில் சுலபமாக செய்துள்ளேன்.இதனை பாம்பே கராச்சி அல்வா என்றும் சொல்வார்கள்.

மைக்ரோவேவ் அவனின் ஹை பவரில் செய்ய வேண்டும்.

சோளமாவு :சர்க்கரை :நீர் இம்மூன்றும் 1:3:4 என்ற விகிததிதில் இருக்கவேண்டும்.எந்த கப்பில் அளக்கிறமோ அதே கப்பில் அனைத்தையும் எடுக்க வேண்டும்.

தே.பொருட்கள்
சோளமாவு- 1/2 கப்
சர்க்கரை- 1+ 1/2 கப்
நீர் -2 கப்
கேசரி கலர் -2 துளி
ஏலக்காய்த்தூள்- 1/4 டீஸ்பூன்
நெய்யில் வறுத்த முந்திரி- 10,பொடியாக உடைத்தது
நெய்- 1 டீஸ்பூன்

செய்முறை

*மைக்ரோவேவ் கண்ணாடி பாத்திரத்தில் சோளமாவு,நீர்,சர்க்கரை இவற்றை கட்டியில்லாமல் நன்கு கரைத்துக் கொள்ளவும்.பின் கேசரிகலர் சேர்த்து கலக்கவும்.


*இப்பொழுது ஹை பவரில் 6 நிமிடங்கள் பாத்திரத்தை அவனில் வைக்கவும்.ஒவ்வொரு 2 நிமிடங்களுக்கு இடையில் கலந்து விடவும்.

*பின் வறுத்த முந்திரி,நெய்,ஏலக்காய்தூள் சேர்த்து மேலும் 6 நிமிடங்கள் வைக்கவும்.மீண்டும் ஒவ்வொரு 2 நிமிடங்களுக்கு இடையே கலக்கி விடவும்.

*நெய் தடவில் தட்டில் ஊற்றி சமபடுத்தவும்.


*ஆறியதும் துண்டுகளாக போடவும்.

பி.கு
*சர்க்கரையின் அளவை குறைத்தால் அல்வா தன்மையும்,சுவையும் வராது.
Thursday 11 October 2018 | By: Menaga Sathia

ஊட்டி வர்க்கி /Ooty Varkey | Tea Time Snacks

 வர்க்கி செய்வதற்கு ப்ரெஷ் ஈஸ்ட் முக்கியம் .வர்க்கியில் பாரம்,இனிப்பு,மசாலா,சதுர வடிவம் என பல வகைகள் உண்டு,இதில் நான் இனிப்பு வர்க்கி செய்து உள்ளேன்.எப்படி செய்றதுனு இந்த வீடியோவை பார்த்து செய்தேன்.

தே.பொருட்கள்
மைதா - 1 கப்+1/4 கப்
ப்ரெஷ் ஈஸ்ட் -2 டேபிள்ஸ்பூன்
உப்பு -1/2 டீஸ்பூன்
சர்க்கரை -2 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் -1 டேபிள்ஸ்பூன்
வெண்ணெய் -2 டேபிள்ஸ்பூன் +1/4 கப்

ப்ரெஷ் ஈஸ்ட் செய்ய
மைதா -1/4 கப்
தயிர் -1டேபிள்ஸ்பூன்
சர்க்கரை -1 டேபிள்ஸ்பூன்
நீர் -1/3 கப்

செய்முறை

*முதலில் ஈஸ்ட் செய்ய கொடுக்கபட்ட பொருட்களை கலந்து ,காற்றுபுகாத டப்பாவில் வெப்பமான இடத்தில் ,2 நாட்கள் வரை வைக்கவும்.

*பின் மாவு பொங்கி ப்ரெஷ் ஈஸ்ட் தயார்.

*ஒரு பாத்திரத்தில் 1 கப் மைதா,உப்பு,சர்க்கரை,எண்ணெய்,ப்ரெஷ் ஈஸ்ட் 2 டேபிள்ஸ்பூன்,வெண்ணெய் 1 டேபிள்ஸ்பூன் இவற்றை ஒன்றாக கலக்கவும்.
 *பின் தேவைக்கு நீர் கலந்து மாவினை கொஞ்சம் இளக்கமாக பிசைந்து ,ஈரத்துணியால் மூடி வெப்பமான இடத்தில் 1/2 மணிநேரம் வைக்கவும்.
 *பின் மாவினை மிக மெல்லியதா உருட்டவோ அல்லது பரோட்டாவுக்கு செய்வது போல் அடிக்கவும்.அதன் மீது சிறிது வெண்ணெய் தடவி,கொஞ்சம் மாவினை தூவி தடவவும்.
 *வலது,இடது ஒரங்களை மடத்து அதன்மீது மீண்டும் வெண்ணெய்,மைதா தடவவும்.
 *இதேபோல் 4 முறை செய்யவும்.நாம் எத்தனை முறை மடிக்கிறோமோ அத்தனை லேயர் வரும்.
 *அதன் பின் 1 இஞ்ச் தடிமன் அளவுக்கு தேய்த்து நீளவாக்கில் வெட்டவும்.வெட்டிய ஒரு நீளதுண்டை எடுத்து சிறிது சிறிதாக பிய்த்து வைக்கலாம் அல்லது சதுர துண்டுகளாக வெட்டி வைக்கலாம்.

*அவனை 180 டிகிரி செல்சியஸில் முற்சூடு செய்யவும்.

*பேகிங் டிரேயில் பட்டர் பேப்பர் வைத்து  வர்க்கிகளை அடுக்கி,25-30 நிமிடங்கள் பேக் செய்து எடுக்கவும்.

*பார்க்கும் போது வேகாத மாதிரி இருக்கும்,ஆறியதும் க்ரிஸ்பியாக இருக்கும்.

*நன்கு ஆறியதும் காற்றுபுகாத டப்பாவில் வைத்து பயன்படுத்தவும்.
Wednesday 3 October 2018 | By: Menaga Sathia

ராமசேரி இட்லி / How To Make Ramaserry Idli

மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த பதிவு..
கேரளாவில்,பாலக்காட்டில் இருக்கும் ராமசேரி இட்லி மிக பிரபலமானது.ரொம்ப நாளா செய்யனும்னு ஆசை.ஆனா என்னிடம் இடியாப்ப ஸ்டீமர் இல்லாததால் எப்படி செய்றதுனு தெரியல. யூடிபில் ஒரு விடியோவை பார்த்தபிறகு ஒரு ஐடியா கிடைத்தது.

ஒரு குட்டி/பெரிய பானையில் ,சுற்றளவில் கயிறு கட்டி,பின் பானையின் மேலே குறுக்கும்,நெடுக்குமாக கயிரினை கட்டி ,கழுத்தில் கட்டியிருக்கும் கயிற்றில் முடிச்சுவிட்டால் ரெடி!!

பானையின் மேல் பாகத்திற்கு ஏற்ப துணியினை வெட்டவும் மற்றும் மேலே மூடுவதற்கு ஏற்ற பாத்திரம் இருந்தால் செய்யலாம்.

இது சிறிய ஊத்தாப்பம் போல இருக்கும்,ஸ்டீமர் இருந்தால் ஒரே நேரத்தில் நிறைய இட்லி செய்யலாம்.

இட்லி மாவு எப்படி செய்வதுனு இங்கே பார்க்கவும்.

எப்படி செய்றதுனு பார்க்கலாம்..

தே.பொருட்கள்:

இட்லி மாவு ‍-தேவைக்கு

செய்முறை

*படத்தில் காட்டியுள்ளவாறு தயார் படுத்திக் கொள்ளவும்.

*பானையில் தண்ணீர் ஊற்றி நன்கு கொதித்ததும்,துணியை நனைத்து அதன் மேல் ஒரு கரண்டி மாவை ஊற்றி லேசாக தேய்க்கவும்.

*பின் அதன்மேல் மூடி வேகவைத்து எடுத்தால் இட்லி ரெடி..


காரசட்னி செய்ய :

தே.பொருட்கள் :

சின்ன வெங்காயம் -15
காய்ந்த மிளகாய்- 6
உப்பு -தேவைக்கு
புளி -சிறிது
தேங்காய் எண்ணெய் -தேவைக்கு

செய்முறை:
*எண்ணெய் தவிர அனைத்தையும் பச்சையாக அரைத்து எண்ணெய் கலக்கவும்.

இட்லியை தேங்காய் சட்னி,கார சட்னியுடன் பரிமாறவும்.

Saturday 21 April 2018 | By: Menaga Sathia

பில்டர் காபி போடுவது எப்படி ?? /How To Make Filter Coffee |South Indian Filter Kaapi recipe

 தென் இந்தியாவில் பில்டர் காபியை பற்றி தெரியாதவர்களே இருக்கமுடியாது.அதுவும் கும்பகோணம் பில்டர் காபி மிக பிரபலம்.
சில்வர் / பித்தளை டபாரா செட் உடன் இதனை பரிமாறுவது வழக்கம்.ஒட்டல்களில் சென்றால் பில்டர் காபியை குடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது.

இதனை சரியான விகிதத்தில் செய்தால் தான் காபி சுவையாக இருக்கும்.கறந்த பாலில் தண்ணீர் விடாமல் காய்ச்சி டிகாஷனை கலந்து சுவைப்பதே தனி சுவை.

இங்கு பிரபலமான நரசுஸ் காபித்தூளை பயன்படுத்தி இருக்கேன்.நம்ம ஊரு கறந்தபாலில் செய்த சுவை வரவில்லை .படத்தில் நான் 2 வித பில்டர் செட்டினை காட்டியுள்ளேன்.வலப்பக்கம் இருப்பது பழைய மாடல்.இடப்பக்கம் இருப்பது புதுமாடல்..மறக்காம பின் குறிப்பு பகுதியை படிங்க...

கடையில் எப்பவும் காபிதூளை தான் விற்பாங்க,நாம தான் சிக்கரியை தனியாக கேட்டு வாங்கனும். 200 கிராம் காபிதூளுக்கு 50 கிராம் சிக்கரி சரியான அளவு.சிக்கரி சேர்ப்பது காபிக்கு நிறத்தினை கொடுக்கும்.எப்போழுதும் இந்த அளவிலயே வாங்கி கலந்து கொண்டால் காபித்தூள் ப்ரெஷ்ஷாக இருக்கும்.

பில்டர் செட் நான்கு பகுதியை கொண்டிருக்கும்.அடியில் இருப்பது டிகாஷன் சேகரிக்கும் பாத்திரம்.மேல் பாத்திரத்தின் அடியில் டிகாஷன் இறங்க சிறு புள்ளிகளை கொண்டிருக்கும்.அதன் உள்ளே காபித்தூளை  போட்ட பின் ஒரு கம்பி போல ஒன்று இருக்கும்.

அதனை காபித்தூளை போட்டபின் அதன் மேலை வைத்து சுடுநீரை ஊற்றி மேல் மூடியை ஊற்றினால் டிகாஷன் ரெடி !!

2 நபர்கள் குடிக்கும் அளவு இது...

தே.பொருட்கள்

கொழுப்புள்ள பால் -1 1/2 கப்
காபிதூள் -2 டேபிள்ஸ்பூன்
சர்க்கரை -2 டீஸ்பூன்
உப்பு -1 சிட்டிகை


செய்முறை :

*கீழே இருக்கும் படத்தில் இருப்பது 2 வகை பில்டர்கள்களும்,காபிதூளும்...
^
 *பாத்திரத்தில் தண்ணியை நன்கு கொதிக்கவைக்கவும்.பில்டர் மேல் பாத்திரத்தில் அடியில் உப்பு சேர்த்த பின் காபிதூளை சேர்க்கவும்.
 *அதன் மேல் நீண்ட கம்பிபோல இருப்பதை வைத்து அதனை அப்படியே அழுத்தி பிடித்து கொதிக்கும் தண்ணியை  ஊற்றி மூடி போட்டு மூடினால் 3 நிமிடத்தில் டிகாஷன் ரெடி.
 *தண்ணி கொதிக்கும் போது இன்னொரு அடுப்பில் பாலை ஊற்றி நன்கு காய்ச்சவும்.டிகாஷன்+சர்க்கரையை ஒரு பாத்திரத்தில் ஊற்றி காய்ச்சிய பாலினை வடிகட்டி டிகாஷனில் சேர்க்கவும்.
*இப்போழுது நன்கு நுரை பொங்க ஆற்றி டபாரா செட்டில்  ஊற்றி பருக வேண்டியது தான்.

பி.கு

*எப்போழுதும் பாலும்,டிகாஷனும் சூடாக இருக்க வேண்டும்.டிகாஷன் அவரவர் விருப்பத்துக்கு சேர்க்கவும்.

*மறுபடியும் அதே டிகாஷனில் நீரை கொதிக்க வைத்து ஊற்றினால் 2வது டிகாஷன் ரெடி !!

*முதல் டிகாஷன் திக்காகவும் சுவையாகவும் இருக்கும்.2வது டிகாஷன் வெளிர் நிறத்தில் இருக்கும்.

*பில்டர் எப்போழுதும் காய்ந்து இருக்கவேண்டும்,ஈரமிருந்தால் டிகாஷன் இறங்காது.

*காபிதூள் போடும் பாத்திரம் சிலநேரம்  அடைத்துக்கொள்ளும் அப்போழுது ஊசியால் குத்தினால் டிகாஷன் சீக்கிரம் இறங்கும்.

*கொழுப்புள்ள பாலையே பயன்படுத்தவும்.
Tuesday 27 March 2018 | By: Menaga Sathia

நீர் தோசை / Neer Dosa | Breakfast Recipe

 நீர் தோசை மங்களூரில் மிக பிரபலமான காலை சிற்றுண்டி.அரைத்த உடனே சுட்டுவிடலாம்.காலையில் சுடுவதாக இருந்தால்  அரிசியை இரவே ஊறவைக்கவும்.
இதற்கு காரசட்னி/தேங்காய் சட்னி/ சிக்கன் குழம்பு ஏற்றது.

தே.பொருட்கள்
பச்சரிசி -1 கப்
துருவிய தேங்காய் - 1/2 கப்
உப்பு- தேவைக்கு

செய்முறை
*அரிசியை 2 மணிநேரம் ஊறவைத்து தேங்காய் சேர்த்து மிக நைசாக உப்பு சேர்த்து அரைக்கவும்.
 *இதற்கு மாவு நீர்க்க இருக்க வேண்டும்.அரைத்த மாவில் மேலும் 1 கப் நீர் ஊற்றி கரைக்கவும்.
 *இரும்பு தோசைகல்லை காயவைத்து எண்ணெய் ஊற்றி நன்கு தேய்த்த பின் மாவினை கல்லின் ஓரத்திலிருந்து ஊற்றி நடுவில் முடிக்கவும்.ரவா தோசைக்கு சுடுவது போல் மாவினை ஊற்றவும்.
 *மூடி போட்டு வேகவைக்கவும்.ஓரங்கள் வெந்து வரும் போது மடித்து எடுக்கவும்.
*காரமான சட்னியுடன் பரிமாறவும்.

பி.கு
*மாவு நன்கு நீர்க்க இருக்கவேண்டும்.

*ஒவ்வொரு முறையும் ஊற்றும் போது மாவினை நன்கு கலக்கி ஊற்றவும்.

*பச்சரிசி மட்டுமே உபயோகிக்கவும்.

*அரைத்த உடனே மாவினை சுடவும்
Thursday 1 February 2018 | By: Menaga Sathia

சிகப்பு முளைகீரை கடையல் / Red Amaranth Leaves Kadaiyal

 முளைகீரையில் பச்சை,சிகப்பு என 2வகை இருக்கிறது.அதில் சிகப்பு கீரை நன்கு சுவையாக இருக்கும்.முளைகீரையில் பொரியல்,கடையல் என செய்யலாம்.ஏற்கனவே பொரியல் குறிப்பு போட்டுள்ளேன்.

முளைகீரையில் தக்காளி அல்லது புளி போட்டு கடையலாம்.இதில் தக்காளி மட்டுமே சேர்த்து செய்துருக்கேன்.

தே.பொருட்கள்
முளைகீரை -1 கட்டு
பச்சை மிளகாய் -2
பூண்டுப்பல் -10
தக்காளி -1 பெரியது
உப்பு -தேவைக்கு

தாளிக்க
எண்ணெய் -2 டீஸ்பூன்
வடகம் -1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் -1

செய்முறை
*கீரையை ஆய்ந்து மண்ணில்லாமல் கழுவி நீரை வடிகட்டவும்.முற்றிய தண்டாக இருந்தால் தனியாக சாம்பார் செய்யலாம்.இளசாக இருந்தால் கீரையுடனே சேர்த்து கடையலாம்.

*பாத்திரத்தில் கீரை+தக்காளி+பூண்டு+பச்சை மிளகாய் தேவைக்கு நீர் சேர்த்து வேகவைக்கவும்.
 *வெந்ததும் கீரை கடையும் சட்டியில் ஊற்றி,நீரை வடி கட்டி உப்பு சேர்த்து கடையவும்.
*தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து  தாளித்து,கீரையில் சேர்த்து மீண்டும் நன்கு கடைந்து,கீரை வேக வைத்த நீரை கலந்து பரிமாறவும். 
Friday 26 January 2018 | By: Menaga Sathia

கரும்பு ஜூஸ் / Sugarcane (Karumpu ) Juice

தை மாதத்தில் பொங்கல் திருநாளுக்கு கரும்புகள் அறுவடை செய்யப்பட்டு  நிறைய கிடைக்கும் .கரும்பினை அப்படியே ஜூஸ் செய்து குடித்தால் நாக்கு அரிக்கும்.

அதில் சிறிதளவு எலுமிச்சையும்,இஞ்சியும் சேர்த்து செய்தால் மிக சுவையாக இருக்கும்.

தே.பொருட்கள்
கரும்பு - 2 அங்குலத்துண்டு
இஞ்சி -சிறிய துண்டு
எலுமிச்சை சாறு -1 டேபிள்ஸ்பூன்

செய்முறை

*கரும்பின் மேல் தோலை சீவி விட்டு சிறிய துண்டுகளாக நறுக்கவும்.

*அதனுடன் தோல் சீவிய இஞ்சி மற்ரும் நீர் சேர்த்து அரைக்கவும்.
*அதனை வடிகட்டு எலுமிச்சை சாறு சேர்த்து பரிமாறவும்.
Thursday 18 January 2018 | By: Menaga Sathia

டாங்கர் பச்சடி/ Dangar Pachadi(Urad Dal ) Raita

வறுத்த  உளுத்தமாவு இருந்தால் இந்த பச்சடியை உடனடியாக செய்துவிடலாம்.காரகுழம்பிற்கு இந்த பச்சடி பொருத்தமாக இருக்கும்.

தே.பொருட்கள்
வறுத்த உளுத்தமாவு -1 டேபிள்ஸ்பூன்
தயிர் -1 கப்
உப்பு-தேவைக்கு

தாளிக்க
எண்ணெய் -1 டீஸ்பூன்
கடுகு -1/4 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் -1/8 டீஸ்பூன்
கறிவேப்பிலை-சிறிது

செய்முறை

*தயிரை உப்பு ,உளுத்தமாவு சேர்த்து கட்டியில்லாமல் கடைந்து வைக்கவும்.

*தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து சேர்த்து பரிமாறவும்.
01 09 10