தே.பொருட்கள்:
பாஸ்மதி அரிசி - 4 கப்
மட்டன் - 1/2 கிலோ
வெங்காயம் - 3 பெரியது
தக்காளி - 4
பச்சை மிளகாய் - 4
இஞ்சி பூண்டு விழுது - 4 மேஜைகரண்டி
கொத்தமல்லித்தழை - 1 கட்டு
புதினா - 1 கட்டு
தயிர் - 250 கிராம்
எலுமிச்சைப் பழம் - 1
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
கலந்த மிளகாய்த்தூள் - 1 டேபிள்ஸ்பூன்
வரமிளகாய்த்தூள் - 1/2 டேபிள்ஸ்பூன்
பட்டர் - 100 கிராம்
உப்பு+எண்ணெய் = தேவைக்கேற்ப
பட்டை - 1 துண்டு
கிராம்பு - 5
ஏலக்காய் - 2
பிரிஞ்சி இலை - 3
மேலேதூவ:
ஏலக்காய் - 5 (பொடித்துக் கொள்ளவும்)
ஜாதிக்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன்
காய்ந்த வறுத்த வெங்காயம் - 1 டேபிள்ஸ்பூன்
செய்முறை:
*அரிசியைக் கழுவி 20 நிமிடம் ஊற வைத்து தண்ணீயை வடித்துக் கொள்ளவும்.
*வெங்காயம்+தக்காளி +கொத்தமல்லிதழை+புதினா இவற்றை அரிந்துக் கொள்ளவும்.பச்சை மிளகாயைக் கீறவும்.
*மட்டனை சுத்தம் செய்து 1 மேஜைக்கரண்டிஇஞ்சிபூண்டு விழுது+கரம் மசாலா+125 கிராம் தயிர்+1/2 டேபிள்ஸ்பூன் கலந்த மிளகாய்த்தூள் +1 கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் 3 விசில் வரும்வரை வேகவிடவும்.
*பாத்திரத்தில் பட்டர்+எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தாளிக்க குடுத்துள்ள பொருட்களைப் போட்டு தாளித்து வெங்காயம் செர்த்து வதக்கவும்.
*பின் இஞ்சி பூண்டு விழுது+தக்காளி+பச்சை மிளகாய்+புதினா கொத்தமல்லி+தயிர்+மீதமிருக்கும் தூள் வகைகள் இவை அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து நன்றாக வதக்கவும்.
*குக்கரைத் திறந்து கறியைத் தனியாக வைத்து,தண்ணீயை அளந்துக் கொள்ளவும்.
*மசாலா நன்கு வதங்கியதும்,1 கப் அரிசிக்கு 1 1/2 கப் தண்ணீர் விகிதம் மொத்தம் 6 கப் தண்ணீர் சேர்க்கவும்[கறி வேக வைத்த தண்ணீர்+தண்ணீர்].
*நன்கு கொதித்ததும் எலுமிச்சை சாறு+உப்பு+கறி+அரிசி சேர்க்கவும்.
*அவனை 190 டிகிரிக்கு முற்சூடு செய்யவும்.
*தண்ணீர் நன்கு சுண்டி வந்ததும் 10 நிமிடம் பிரியாணியை அவனில் வைக்கவும்.
*அரிசி நன்கு வெந்து பொலபொலவென இருக்கும் போது சமபடுத்தி மேலேதூவ சொன்ன பொருட்களை தூவி 5 நிமிடம் கழித்து பரிமாறலாம்.
பி.கு:அவரவர் அவனுக்கு ஏற்ப டைம் மாறலாம்