Wednesday 29 September 2010 | By: Menaga Sathia

பேஸன்(கடலைமாவு) லட்டு


இது என் 400வது பதிவு!! அனைவருக்கும் மனமார்ந்த நன்றி!!

தே.பொருட்கள்:

கடலைமாவு - 1 கப்
சர்க்கரை - 3/4 கப்
நெய் - 3/4 கப்
ஏலக்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன்
முந்திரி,திராட்சை - தேவைக்கு
 
செய்முறை :

*கடாயில் சிறிது நெய் விட்டு கடலை மாவை லேசாக வாசனை வரும் வரை வறுக்கவும்.முந்திரி,திரட்சை வறுக்கவும்.

*வறுக்கும் போது நடுவில் சிறிது சிறிதாக நெய்விட்டு வறுக்கவும்.

*பின் சர்க்கரை சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கி ஏலக்காய்தூள்+மீதமிருக்கும் நெய்+முந்திரி திராட்சை சேர்த்து கிளறி லட்டுகளாக பிடிக்கவும்.

லட்டு
Sending those recipes to Celebrate Sweets - Ladoo Event By Nithu Started By Nivedita.

Tuesday 28 September 2010 | By: Menaga Sathia

காயல் ஸ்பெஷல் ரசம்(புளியாணம்)

தே.பொருட்கள்:
புளி - 1 எலுமிச்சை பழளவு
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
தக்காளி - 1
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
கடுகு - 1/2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு+எண்ணெய் =தேவைக்கு

பொடிக்க:
சீரகம் - 3/4 டீஸ்பூன்
மிளகு - 3/4 டீஸ்பூன்
சோம்பு - 1/2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 1
காய்ந்த மிளகாய் - 1
பூண்டுப்பல் - 4
சின்ன வெங்காயம் - 2
கறிவேப்பிலை - 1 இனுக்கு
தேங்காய்த்துறுவல் - 3/4 டேபிள்ஸ்பூன்

செய்முறை:
*பொடிக்க கொடுத்துள்ளவைகளை இடிப்பானில் போட்டு கரகரப்பாக பொடிக்கவும்.புளியை 1 1/2 கப் அளவில் கரைத்து மஞ்சள்தூள்+உப்பு கலந்து வைக்கவும்.

*பத்திரத்தில் எண்ணெய் விட்டு கடுகு போட்டு தாளித்து தக்காளியை வெட்டி போட்டு வதக்கவும்.தக்காளி மசிந்ததும் பொடித்த பொடிகளைப்போட்டு லேசாக வதக்கி புளிக்கரைசலை ஊற்றவும்.

*நுரை வரும் போது பெருங்கயத்தூள்+கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.
Monday 27 September 2010 | By: Menaga Sathia

அருநெல்லிக்காய் சாதம்

தே.பொருட்கள்:
உதிராக வடித்த சாதம் ‍‍‍‍-1 கப்
சின்ன வெங்காயம் -10
அருநெல்லிக்காய்- 4
வேர்க்கடலை-1 கைப்பிடி
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:
கடுகு -1/4 டீஸ்பூன்
உளுத்த பருப்பு -1/2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய்-2
கறிவேப்பிலை -சிறிது
கடலைப்பருப்பு -1/2 டேபிள்ஸ்பூன்

செய்முறை:

*வெங்காயத்தை நறுக்கவும்.நெல்லிக்காயை கொட்டை நீக்கி துருவவும்.
*கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப் போட்டு தாளித்து வேர்க்கடலையை வறுக்கவும்.
*பின் வெங்காயம்+துருவிய நெல்லிக்காய் சேர்த்து நன்கு வதக்கவும்.
*நெல்லிக்காய் நன்கு வெந்த பின்(நீர் ஊற்றக்கூடாது,நெல்லிக்காய் விடும் நீரிலயே வேகும்)ஆறவைத்து உப்பு+சாதம் சேர்த்து கிளறி பரிமாறவும்.

பி.கு:
இந்த சாதம் எலுமிச்சை சாதம் போல் இருக்கும்.
Sunday 26 September 2010 | By: Menaga Sathia

கினோவா(Quinoa) கோதுமைரவை இட்லி

தே.பொருட்கள்:
கினோவா - 1 கப்
கோதுமைரவை - 1 கப்
வெ.உளுந்து - 1/2 கப்
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
பிரவுன் அரிசி- 1/4 கப்
உப்பு - தேவைக்கு
 
செய்முறை:
*மேற்கூறிய பொருட்களில் கோதுமைரவை +உப்பை தவிர அனைத்தையும் 2 மணிநேரம் ஊறவைக்கவும்.

*பொருட்கள் ஊறியதும் மைய அரைக்கவும்.

*அதனுடன் கோதுமைரவை+உப்பு சேர்த்து கரைத்து 8 மணிநேரம் ஊறவைக்கவும்.

*மாவு நன்கு புளித்ததும் இட்லியாக ஊற்றி சுட்டெடுக்கவும்.
 
பி.கு:
மாவு நன்கு புளித்தால்தான் இட்லி நன்றாகயிருக்கும்.தோசையும் நன்கு மெலிதாக வரும்.இந்த இட்லிக்கு இட்லி பொடி+கார சட்னி பெஸ்ட் காம்பினேஷன்.
Friday 24 September 2010 | By: Menaga Sathia

தக்காளி சட்னி - 3/Tomato Chutney -3

தே.பொருட்கள்:

தக்காளி - 3 பெரியது
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் -1
பொடியா நறுக்கிய இஞ்சி - சிறிது
சோம்புத்தூள் - 1/4 டீஸ்பூன்
வரமிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு
உப்பு +எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:
கடுகு - 1/4 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
 
செய்முறை:
*தக்காளியை கொதிநீரில் 10 நிமிடம் போட்டு தோலுரித்து அரைக்கவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப்போட்டு தாளித்து வெங்கயம்+பச்சை மிளகாய்+இஞ்சி சேர்த்து நன்கு வதக்கவும்.

*பின் சோம்புத்தூள்+வரமிளகாய்த்தூள் சேர்த்து 5 நிமிடம் வதக்கிய பின் அரைத்த தக்காளியை ஊற்றி உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.

*10 நிமிடம் கழித்து கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.

*இட்லி,தோசை,சப்பாத்தியுடன் சாப்பிட நன்றாகயிருக்கும்.
Thursday 23 September 2010 | By: Menaga Sathia

ப்ரெட் இனிப்பு கொழுக்கட்டை

தே.பொருட்கள்:

ப்ரெட் ஸ்லைஸ் - 8
கடலைப்பருப்பு - 1/2 கப்
தேங்காய்த்துறுவல் - 1/4 கப்
ஏலக்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன்
வெல்லம் - 1/4 கப்
நெய் - 1 டீஸ்பூன்

செய்முறை:
*கடலைப்பருப்பை 3/4 பதமாக வேகவைத்து நீரை வடிக்கட்டவும்.ஒன்றும் பாதியுமாக அரைக்கவும்.

*வெல்லத்தில் சிறிது நீர் விட்டு பிசுபிசுப்பு பதம் வந்ததும் வடிகட்டவும்.

*வெறும் கடாயில் நுணுக்கிய கடலைப்பருப்பு+தேங்காய்த்துறுவல் வறுக்கவும்.அதனுடன் ஏலக்காய்த்தூள்+நெய்+கரைத்த வெல்லம் சேர்த்து கெட்டியாக கிளறி இறக்கவும்.பூரணம் ரெடி!!

*ப்ரெட்டின் ஓரங்களை நீக்கி நீரில் நனைத்து நன்கு பிழிந்து பிசைந்துக் கொள்ளவும்.

*சிறு உருண்டையாக எடுத்து கிண்ணம் போல் செய்து அதனுள் பூரணத்தை வைத்து மூடவும்.

*ஆவியில் 5 நிமிடம் வேகவைத்து எடுக்கவும். ஈசியாக உடனே செய்து விடலாம்.

*பூரணம் அவரவர் விருப்பம் போல் செய்து கொள்ளலாம்.
Wednesday 22 September 2010 | By: Menaga Sathia

காலாஜாமூன்(கோவா செய்முறையில்)

மகளின் பிறந்தநாள் ஸ்பெஷல் ரெசிபி..
 
தே.பொருட்கள்:
இனிப்பில்லாத கோவா - 1 கப்
மைதா - 1/2 கப்
பேக்கிங் சோடா - 1 சிட்டிகை
பச்சை கலர் - 1 சிட்டிகை
சர்க்கரை - 1 1/4 கப்
தண்ணீர் - 1 1/4 கப்
ஏலக்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன்
நெய் - 1/2 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - பொரிக்க

செய்முறை:
*கோவா செய்முறையினை காண இங்கே க்ளிக் செய்யவும்.கோவாவை மிருதுவாக பிசைந்துக் கொள்ளவும்.

*மைதா+பேக்கிங் சோடா கலந்து சலித்துக் கொள்ளவும்.

*இதனுடன் கோவா சேர்த்து மிருதுவாக கலந்து மாவை 2 பங்காக சமமாக பிரிக்கவும்.

*1 பங்கில் தேவைக்கு நீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து விரும்பிய வடிவத்தில் செய்துக் கொள்ளவும்.
*இன்னொரு பங்கில் பச்சைக் கலர் கலந்து நீர் தெளித்து கெட்டியாக பிசைந்து விரும்பிய வடிவத்தில் செய்யவும்.

*வெள்ளைக் கலர் மாவில் உள்ளே பச்சைக் கலர் ஸ்டப்பிங் செய்து கொள்ளவும். இரு கலர் உருண்டைகளும் சமமாக இருக்குமாறு செய்யவும்.
*எண்ணெய் காயவைத்து உருண்டைகளை ப்ரவுன் நிறத்தில் பொரித்தெடுக்கவும்.
*மறுபடியும் காயும் எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.
*இன்னொரு பாத்திரத்தில் சர்க்கரை+நீர் வைத்து பிசுபிசுப்பு பதம் வரும் போது இறக்கி ஏலக்காய்த்தூள்+நெய்+பொரித்த உருண்டைகளை சேர்த்து கலக்கவும்.
பி.கு:
*நாமே வீட்டில் செய்யும் கோவாவில் செய்வதால் ஜாமூன்கள் மிக அருமையாக இருக்கும்.உருண்டைகளை இருமுறை பொரித்தெடுத்தால் தான் உள்ளேயிருக்கும் உருண்டைகளும் வேகும்.
Tuesday 21 September 2010 | By: Menaga Sathia

ஷிவானிக்கு பிறந்தநாள்

இன்று 3 வது வயதில் காலடி எடுத்து வைக்கும் என் செல்லக்குட்டிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!
அனைவரும் ஸ்வீட் எடுத்துக்குங்க...ரெசிபி அடுத்த பதிவில்....
Birthday Graphics


Sunday 19 September 2010 | By: Menaga Sathia

கோவா தயாரிக்கும் முறை/ How To Prepare Khoya??

கோவா என்றதும் இந்தியாவிலுள்ள சிறிய மாநிலம்+சினிமா பெயரும் தான் ஞாபகம் வரும்.கோவா என்பது சுண்டக்காய்ச்சிய பாலில் இருந்து செய்யப்படும் பொருள்.இனிப்பு வகைகளுக்கு சேர்த்து செய்யும் போது சுவையாக இருக்கும்.

தே.பொருட்கள்:
கொழுப்புள்ள பால் - 1 லிட்டர்
செய்முறை:
* நான் ஸ்டிக் பாத்திரம் அல்லது பெரிய கடாயில் பாலை ஊற்றவும்.நான் ஸ்டிக் பாத்திரத்தில் ஊற்றி செய்வது மிக எளிதாக இருக்கும்,தீய்ந்து போகாமல் இருக்கும்.
*மிதமான தீயில் கொதிக்க விடவும்.
*இடையிடையே மரக்கரண்டியால் கிளறி விடவும்.
*நன்கு சுண்டி வரும் வரை கிளறி விடவும்.
*பால் முழுவதும் கெட்டியாக சுண்டி வரும் போது இறக்கவும்.
பி.கு:பால் கொதிக்கும் போது சர்க்கரை சேர்த்து கிளறினால் இனிப்பு கோவா ரெடி.ஆனால் இனிப்பில்லாத கோவா தான் நல்லது.4 நாட்கள் வரை ப்ரிட்ஜில் வைத்திருந்து பயன்படுத்தலாம்.காரட் அல்வா செய்யும் போது கோவா சேர்த்து செய்தால் மிக அருமையாக இருக்கும்.
Friday 17 September 2010 | By: Menaga Sathia

நெய் காய்ச்சுவது எப்படி?? How to prepare homemade ghee??

நெய் காய்ச்சும் போது நாம் முருங்கை கீரையை உபயோகப்படுத்துவோம்.அதற்க்கு பதில் கறிவேப்பிலை,காய்ந்த மிளகாய் சேர்த்து செய்தால் வாசனை தூக்கலாக இருக்கும்..

தே.பொருட்கள்:
உப்பில்லாத வெண்ணெய் - 250 கிராம்
கறிவேப்பிலை - 2 இனுக்கு
காய்ந்த மிளகாய்- 1
கல் உப்பு - 5

செய்முறை:
*வெண்ணெயை ஒரு பாத்திரத்தில் போட்டு உருக்கவும்.
*உருகியதும் நன்கு கொதிக்க ஆரம்பிக்கும் போது கல் உப்பு+காய்ந்த மிளகாய்+கறிவேப்பிலை சேர்க்கவும்.

*பின் நுரைபோல் வரும் அதை கரண்டியால் மேலோடு எடுத்து கீழே ஊற்றி விடவும்.

*பின் நன்றாக தெளிந்து வாசனை வரும் போது இறக்கி ஆறவைத்து வடிகட்டி பாட்டிலில் ஊற்றி பயன்படுத்தவும்.

*இந்த முறையில் காய்ச்சும் பொது வீடே மணமாக இருக்கும்....

Wednesday 15 September 2010 | By: Menaga Sathia

ப்ரெட் / Bread

தே.பொருட்கள்:
ஆல் பர்பஸ் மாவு - 2 கப்
சர்க்கரை(அ)தேன் - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு - 1/2 டீஸ்பூன்
ஈஸ்ட் - 1 1/2 டீஸ்பூன்
பால் - 1/4 கப்
வெண்ணெய் - 1 டீஸ்பூன்
நீர் - 1/2 கப்
 
செய்முறை:
*வெதுவெதுப்பான பாலில் ஈஸ்ட் + சர்க்கரை கலந்து 10 நிமிடம் வைத்திருந்தால் பொங்கியிருக்கும்.

*ஒரு பவுலில் மாவு+வெண்ணெய்+உப்பு+ஈஸ்ட் கலவை ஊற்றி ,தேவைப்பட்டால் நீர் தெளித்து கெட்டியாக பிசையவும்.

*ஈரத்துணியால் மூடி வெப்பமான இடத்தில் 1 மனிநேரம் வைக்கவும்.

*2 மடங்காக பொங்கியிருக்கும் மாவை நன்கு கைகளால் 10 நிமிடம் மிருதுவாக பிசையவும்.

*ப்ரெட் பானின் நீளம் அகலத்திற்கேற்ப மாவை RECTANGLE ஷேப்பில் உருட்டி ப்ரெட் பானில் வைத்து ஒரு துணியால் 3/4 மணிநேரம் மூடி வைக்கவும்.மாவு 2 மடங்காக உப்பியிருக்கும்.
*முற்சூடு செய்த அவனில் 200°C க்கு 25-30 நிமிடம் பேக் செய்து ஆறியபின் துண்டுகள் போடவும்.

Tuesday 14 September 2010 | By: Menaga Sathia

ஒட்ஸ் உப்புமா/ Oats Upma

நொடியில் செய்து சாப்பிடலாம்..
தே.பொருட்கள்:ஒட்ஸ் -1 கப்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய்- 1
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க‌:
கடுகு -1/4 டீஸ்பூன்
உளுத்த பருப்பு -1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை ‍-சிறிது
கடலைப்பருப்பு- 1/2 டீஸ்பூன்

செய்முறை:
*ஒட்ஸை வெறும் க‌டாயில் வ‌றுத்து ஆற‌விட‌வும்.

*பின் உப்பு க‌ல‌ந்து நீர் தெளித்து புட்டு மாவு பிசைவ‌து போல‌ உதிராக‌ பிசைய‌வும்.

*க‌டாயில் எண்ணெய் விட்டு தாளிக்க‌ கொடுத்துள்ள‌வைக‌ளைப் போட்டு வெங்காய‌ம்+ப‌ச்சை மிள‌காய் சேர்த்து வ‌த‌க்க‌வும்.

*வ‌த‌ங்கிய‌ பின் உதிராக‌ பிசைந்த‌ ஒட்ஸை போட்டு கிள‌றி இற‌க்க‌வும்.

Monday 13 September 2010 | By: Menaga Sathia

உளுந்து பூரண‌ கொழுக்கட்டை / Ulundu Poorana Kozhukattai


விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்..நேரமில்லாததால் இந்த பதிவு லேட்டாகிவிட்டது...

மேல் மாவுக்கு:அரிசி மாவு ‍_ 2 கப்
நல்லெண்ணெய் _ 1 டேபிள்ஸ்பூன்
உப்பு _ தேவைக்கு

பூரணம் செய்வதற்க்கு:
வெள்ளை முழு உளுந்து ‍_ 3/4 கப்
தேங்காய்த்துறுவல் _ 1/4 கப்
பெருங்காயம் - சிறிதளவு
பச்சை மிளகாய் _ 2

தாளிக்க‌:
கடுகு _ 1/4 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு _ 1/2 டீஸ்பூன்

செய்முறை:
*முழு உளுந்தை 1/2 ம‌ணிநேர‌ம் ஊற‌வைத்து நீரை வ‌டிக‌ட்டி அத‌னுட‌ன் உப்பு+தேங்காய்த்துறுவ‌ல்+ப‌ச்சை மிள‌காய்+பெருங்காயம் சேர்த்து நீர் விடாம‌ல் கொர‌கொர‌ப்பாக‌ அரைக்க‌வும்.

*அத‌னை ஆவியில் வேக‌வைத்து உதிர்த்துக் கொள்ள‌வும்.



*பின் கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க‌ கொடுத்துள்ள‌வைக‌ளை தாளித்து உதிர்த்த‌ உளுந்து பூர‌ண‌த்தை சேர்த்து  கிளறி தேங்காய்த்துறுவல் சேர்த்து இறக்கவும்.



*இப்பொழுது பூர‌ண‌ம் ரெடி!!


*ஒரு பாத்திர‌த்தில் 3 க‌ப் நீர் விட்டு ந‌ல்லெண்ணெய்+உப்பு சேர்த்து ந‌ன்கு கொதிக்க‌ விட‌வும்.

*நீர் ந‌ன்கு கொதிக்கும் போது மாவை தூவி க‌ட்டியில்லாம‌ல் கெட்டியாக‌  கிளறி 10 நிமிடங்கள் ஈரத்துணியால் மூடி வைக்கவும்.



*கைபொறுக்கும் சூட்டில் மாவை சிறு உருண்டையாக‌ எடுத்து த‌ட்டி அத‌னுள் பூர‌ண‌த்தை வைத்து மூட‌வும்.



*அத‌னை ஆவியில்  10 நிமிடங்கள்  வேக‌ வைத்து எடுக்க‌வும்.

Friday 10 September 2010 | By: Menaga Sathia

இட்லி பொடி /Idli Podi

தே.பொருட்கள்:
பொட்டுக்கடலை - 1/2 கப்
உளுத்தம்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
காய்ந்த மிளகாய் - 5
மிளகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
பெருங்காயம் - 1 சிறிய கட்டி
உப்பு +எண்ணெய் = தேவைக்கு

செய்முறை:
*மேற்கூறிய அனைத்து பொருட்களில் உப்பு+பெருங்காயத்தை தவிர அனைத்தையும் லேசாக வாசனை வரும் வரை வெறும் கடாயில் வறுக்கவும்.
*பெருங்காயத்தை மட்டும் என்ணெயில் பொரித்து அதனுடன் வறுத்த பொருட்கள்+உப்பு சேர்த்து மைய அரைத்தெடுக்கவும்.

*கடைசியாக எடுக்கும் போது சிறுதுண்டு வெல்லம் சேர்த்து அரைத்தால் நன்றாகயிருக்கும்.ஆறியதும் காற்று புகாத டப்பாவில் போட்டு பயன்படுத்தவும்.
Thursday 9 September 2010 | By: Menaga Sathia

நெத்திலி கருவாடு அவியல் / nethili Karuvadu Aviyal

தே.பொருட்கள்:
நெத்திலி கருவாடு - 250 கிராம்
தேங்காய்த்துருவல் - 1/2 கப்
சின்ன வெங்கயம் - 10
கறிவேப்பிலை - 2 கொத்து
புளி - நெல்லிக்காயளவு
பச்சை மிளகாய் - 2
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்புன்
மல்லித்தூள்-1/4 டீஸ்பூன்
உப்பு +எண்ணெய் = தேவைக்கு

செய்முறை:
*இடிகல்லில் முதலில் சின்ன வெங்காயத்தை ஒன்றிரண்டாக உடைத்து,அதன் பின் தேங்காய்+பச்சை மிளகாய்+தூள் வகைகள்+1 கொத்து கறிவேப்பிலை சேர்த்து லேசாக இடித்து எடுக்கவும்.(மிக்ஸியில் செய்வதாக இருந்தால் எல்லாவற்றையும் விப்பரில் 1 அல்லது 2 முறை சுற்றி எடுக்கவும்).

* ஒரு கடாயில் கருவாடு+இடித்த மசாலா+மீதமுள்ள கருவேப்பிலை+உப்பு சேர்க்கவும்.

*இதனுடன் புளியை கெட்டியாக கரைத்து ஊற்றி மேலும் 1/2 கப் நீர் ஊற்றி 10நிமிடம் மூடி வைக்கவும்.

*எல்லாவற்றையும் சேர்த்த பின்னர் கொதிக்கவிடவும். இடையிடையே கிளறி விடவும்.

*நீர் வற்றியதும் 1 டீஸ்பூன் எண்ணெய் விட்டு கிளறி இறக்கவும்.

*சாம்பார்,ரசம் சாதத்துடன் சாப்பிட நன்றாகயிருக்கும்.
01 09 10