Monday 13 September 2010 | By: Menaga Sathia

உளுந்து பூரண‌ கொழுக்கட்டை / Ulundu Poorana Kozhukattai


விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்..நேரமில்லாததால் இந்த பதிவு லேட்டாகிவிட்டது...

மேல் மாவுக்கு:அரிசி மாவு ‍_ 2 கப்
நல்லெண்ணெய் _ 1 டேபிள்ஸ்பூன்
உப்பு _ தேவைக்கு

பூரணம் செய்வதற்க்கு:
வெள்ளை முழு உளுந்து ‍_ 3/4 கப்
தேங்காய்த்துறுவல் _ 1/4 கப்
பெருங்காயம் - சிறிதளவு
பச்சை மிளகாய் _ 2

தாளிக்க‌:
கடுகு _ 1/4 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு _ 1/2 டீஸ்பூன்

செய்முறை:
*முழு உளுந்தை 1/2 ம‌ணிநேர‌ம் ஊற‌வைத்து நீரை வ‌டிக‌ட்டி அத‌னுட‌ன் உப்பு+தேங்காய்த்துறுவ‌ல்+ப‌ச்சை மிள‌காய்+பெருங்காயம் சேர்த்து நீர் விடாம‌ல் கொர‌கொர‌ப்பாக‌ அரைக்க‌வும்.

*அத‌னை ஆவியில் வேக‌வைத்து உதிர்த்துக் கொள்ள‌வும்.



*பின் கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க‌ கொடுத்துள்ள‌வைக‌ளை தாளித்து உதிர்த்த‌ உளுந்து பூர‌ண‌த்தை சேர்த்து  கிளறி தேங்காய்த்துறுவல் சேர்த்து இறக்கவும்.



*இப்பொழுது பூர‌ண‌ம் ரெடி!!


*ஒரு பாத்திர‌த்தில் 3 க‌ப் நீர் விட்டு ந‌ல்லெண்ணெய்+உப்பு சேர்த்து ந‌ன்கு கொதிக்க‌ விட‌வும்.

*நீர் ந‌ன்கு கொதிக்கும் போது மாவை தூவி க‌ட்டியில்லாம‌ல் கெட்டியாக‌  கிளறி 10 நிமிடங்கள் ஈரத்துணியால் மூடி வைக்கவும்.



*கைபொறுக்கும் சூட்டில் மாவை சிறு உருண்டையாக‌ எடுத்து த‌ட்டி அத‌னுள் பூர‌ண‌த்தை வைத்து மூட‌வும்.



*அத‌னை ஆவியில்  10 நிமிடங்கள்  வேக‌ வைத்து எடுக்க‌வும்.

29 பேர் ருசி பார்த்தவர்கள்:

புவனேஸ்வரி ராமநாதன் said...

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் ரொம்ப நல்லாயிருக்கு.

Padhu Sankar said...

Looks lovely and yummy!!

Jaleela Kamal said...

சிம்பிலாகவும் ஈசியாகவும் இருக்கு

Asiya Omar said...

புதுசாக இருக்கு.மேனு.விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்.

Jayanthy Kumaran said...

wow..this kozhukatai looks so tempting and healthy...!

Menaga Sathia said...

நன்றி புவனேஸ்வரி!!

நன்றி பது!!

நன்றி ஜலிலாக்கா!!

வாழ்த்துக்கும்,கருத்துக்கும் நன்றி ஆசியாக்கா!!

நன்றி ஜெய்!!

ஜீவா said...

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் சூப்பர்,
இந்த கொழுக்கட்டையை என் அம்மா செய்து, நான் சாப்பிட்டிருக்கிறேன்.
நன்றி வாழ்த்துக்கள்
ஜீவா

ஜீவா said...

இந்த கொழுக்கட்டையை நாங்க நீர் கொழுக்கட்டை என்று சொல்லுவோம், சூப்பரா இருக்கும்.
இதை சாப்பிட்டு ரொம்ப வருசமாகிபோச்சி (நான் திருவாரூர்தான்)
மிக்க நன்றி
ஜீவா

GEETHA ACHAL said...

புதுசாக இருக்கின்றது...அருமை...

ஸாதிகா said...
This comment has been removed by the author.
எல் கே said...

intha murai veetla pannalai antha kuraya neenga theerthu vachiteenga

vanathy said...

super recipe!

Chitra said...

நல்லா இருக்குதுங்க.... நன்றி.

Kanchana Radhakrishnan said...

super.

ஸாதிகா said...

பிள்ளையார் சதுர்த்தி கொழுக்கட்டையா?பேஷ் பேஷ்

பித்தனின் வாக்கு said...

supera irukku. rendu plate parcel please. iffa kalpakkathulathan irukken. kolukkataikka kilambi vanthalum varuvom.
kutti ponnu effadi irukka?. padathil ilaithu vittal. sappida adam pikkinrala?.

'பரிவை' சே.குமார் said...

புதுசாக இருக்கு.

Nithya said...

Idhu enakku romba pudhusa irukku :) superah irukku paakave :)

Krishnaveni said...

super kozhukatai, romba nalla irukku menaga

Priya Suresh said...

Yen paatiyoda kozhukattais ellame ulundhu poornama than irrukum..Ippo nalla irruken Menaga, but still fulla recover aagala..thanks pa..

Menaga Sathia said...

நன்றி கீதா!!

நன்றி எல்கே!!

நன்றி வானதி!!

நன்றி சித்ரா!!

Menaga Sathia said...

நன்றி காஞ்சனா!!

நன்றி ஸாதிகாக்கா!!

நன்றி சுதாண்ணா!! எப்படி இருக்கிங்க,குட்டி பொண்ணு நலம்.அப்போ இந்தியாவில்தான் இருக்கிங்களா..கொழுக்கட்டைக்கு நீங்க பிரான்ஸ்க்குதான் வரணும்..

Menaga Sathia said...

நன்றி சகோ!!

நன்றி நித்யா!!

நன்றி கிருஷ்ணவேணி!!

நன்றி ப்ரியா!! விரைவில் உடல்நலம் குணமாகிடும்...

E Valavan said...

Easy 1...2...3. Read and write your own article. A new collabrative dimension - www.jeejix.com

சிங்கக்குட்டி said...

புதுசா விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் சூப்பர்.

Anonymous said...

ரொம்ப நல்லா இருக்கு மேனகா ஜி

Menaga Sathia said...

//இந்த கொழுக்கட்டையை நாங்க நீர் கொழுக்கட்டை என்று சொல்லுவோம், சூப்பரா இருக்கும்.
இதை சாப்பிட்டு ரொம்ப வருசமாகிபோச்சி (நான் திருவாரூர்தான்) //நன்றி சகோ!! நீங்க திருவாரூர்ரா?? எனக்கு மிகவும் பிடித்த ஊர்...

நன்றி வளவன்!!

நன்றி சிங்கக்குட்டி!!

நன்றி சந்தியா!!

ராமலக்ஷ்மி said...

செய்து பார்த்தேன். நன்றாக வந்தது. நன்றி:)!

Menaga Sathia said...

செய்து பார்த்து பின்னூட்டம் அளித்ததில் சந்தோஷம்+நன்றி அக்கா!!

01 09 10