Wednesday 1 September 2010 | By: Menaga Sathia

பூசணிக்காய் மோர் குழம்பு

தே.பொருட்கள்:
வெள்ளை பூசணிக்காய் துண்டுகள்- 1 கப்
தயிர் - 1 கப்
எலுமிச்சை சாறு - 1 டேபிள்ஸ்பூன்
தக்காளி - 1
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
துவரம்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
பச்சரிசி - 1 டேபிள்ஸ்பூன்
தனியா- 1 டேபிள்ஸ்பூன்
தேங்காய்த்துறுவல் - 1/4 கப்
பச்சை மிளகாய் - 2
காய்ந்த மிளகாய் - 2
இஞ்சி -1 சிறுதுண்டு
சீரகம் - 1 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு +எண்ணெய் = தேவைக்கு
 
செய்முறை:
*துவரம்பருப்பு+பச்சரிசியை 1/2 மணிநேரம் ஊறவைக்கவும்.தயிரில் உப்பு+எலுமிச்சை சாறு சேர்த்து கடைந்து வைக்கவும்.

*கடாயில் எண்ணெய்விட்டு தனியா+காய்ந்த மிளகாய்+பச்சை மிளகாய்+இஞ்சி+ஊறவைத்த அரிசி பருப்பு இவைகளை வறுத்து இதனுடன் தேங்காய்+சீரகம் சேர்த்து மைய அரைக்கவும்.

*பாத்திரத்தில் பூசணிக்காய்+துண்டுகளாகிய தக்காளி போட்டு முழ்குமளவு நீர்விட்டு மஞ்சள்தூள் சேர்த்து வேகவிடவும்.

*வெந்ததும் அரைத்தவிழுது சேர்த்து பச்சை வாசனை போக கொதிக்கவிடவும்.நன்கு கொதித்ததும் கடைந்த தயிரை ஊற்றி நுரைவரும் போது இறக்கி கடுகு+கறிவேப்பிலை தாளித்து கொட்டவும்.

27 பேர் ருசி பார்த்தவர்கள்:

ஸ்ரீ.கிருஷ்ணா said...

பூசணிக்காய் மோர் குழம்பு மணம் வீசுது இங்கே அக்கா

'பரிவை' சே.குமார் said...

பூசணிக்காய் மோர்க்குழம்பு பார்க்கவே நல்லாயிருக்கே... சாப்பிட்டா...
அக்கா வீட்டுக்கு வரலாமா?

ஸாதிகா said...

கமகமக்குது பூசணிக்காய் மோர்க்குழம்பு.

பொன் மாலை பொழுது said...

எனக்கு மிகவும் பிடித்த ஒன்று இது. அதுவும் அம்மா கையினால் செய்து சாப்பிட......

ஜீவா said...

அரபு நாட்டில் உள்ள எங்களுக்கு இப்ப சூடு சமயம், இந்த பூசணிக்காய் மோர்குழம்பு மிகவும் குளிர்ச்சியானது,
சரியான நேரதில் இதை தந்த உங்களுக்கு மிக்க நன்றி,

வத்தல் குழம்பு வைப்பது எப்படி? மற்றும் சாம்பார்பொடி, மற்ற பொடிவகைகள் தயாரிப்பு முறை பற்றி தயவுசெய்து எழுதவும்
அன்புடன் ஜீவா

Jayanthy Kumaran said...

Authentic n tasty kuzhambu...well done with your special touch...!

Chef.Palani Murugan, said...

அழ‌கான‌Presentation ந‌ல்லாயிருக்கு

Jey said...

ம்ம்ம்ம்..

Asiya Omar said...

நல்லாயிருக்கு மேனகா.

Nithu Bala said...

Menaga, enakku eppovey sapdanum pola irukku..

Chitra said...

மோர் குழம்பில், துவரம் பருப்பையும் பச்சரிசியையும் ஊற வைத்து அரைத்து செய்ததில்லை. அடுத்த முறை, அசத்தி விட வேண்டியதுதான்.

Prema said...

moor khuzhambu super! delicious...

புவனேஸ்வரி ராமநாதன் said...

சூப்பராயிருக்கு.

Unknown said...

Wow site romba nala iruku...poosanikai moor kulambu looks so tasty and delicious

மனோ சாமிநாதன் said...

மோர்க்குழம்பு மிக நன்றாக இருக்கிறது மேனகா! எலுமிச்சை சாறு சேர்த்து இருப்பது வித்தியாசமாக இருக்கிறது. ஆனால் எலுமிச்சை சாறின் அளவைப் பற்றி நீங்கள் எழுதவில்லையே?

சசிகுமார் said...

அக்கா எனக்கு மோர் குழம்பு என்றால் மிகவும் பிடிக்கும், ஆனால் பூசணிக்காயில் சாப்பிட்டதில்லை வித்தியாசமாக உள்ளது பிரிண்ட் எடுத்தாச்சு

Menaga Sathia said...

நன்றி புதிய மனிதா!!

நன்றி சகோ!! தாராளமாக வீட்டுக்கு வரலாம்...

நன்றி ஸாதிகாக்கா!!

நன்றி சகோ!!

Menaga Sathia said...

நன்றி சகோ!! குழம்பு லேபிளில் பாருங்கள்..பொடி வகைகள் எனக்கு தெரிந்ததை போடுகிறேன்...

நன்றி ஜெய்!!

நன்றி செஃப்!!

நன்றி ஜெய்!!

Menaga Sathia said...

நன்றி ஆசியாக்கா!!

நன்றி நிது!!

நன்றி சித்ரா!! செய்து பார்த்து சொல்லுங்கள்..

நன்றி பிரேமலதா!!

Menaga Sathia said...

நன்றி புவனேஸ்வரி!!

நன்றி ஷர்மிலி!!

நன்றி மனோ அம்மா!! தவறுக்கு மன்னிக்கவும்.இப்போழுது திருத்திவிட்டேன்.இங்கு விற்கும் தயிர் புளிப்பு இருக்காது அதனால் எலுமிச்சைசாறு சேர்ப்பேன்....

நன்றி சசி!! பூசணிக்காயில் ரொம்ப நல்லாயிருக்கும்,செய்து பாருங்கள்...

Mahi said...

சூப்பரா இருக்கு குழம்பு..தனியா சேர்த்து இதுவரை செய்ததில்லை.சீக்கிரமா செஞ்சு பாத்து சொல்லறேன் மேனகா!

Priya Suresh said...

Delicious looking moor kuzhambu, romba naal achu saapitu..

vanathy said...

super & yummy!

Menaga Sathia said...

நன்றி மகி!! தனியா சேர்த்து செய்து பாருங்கள்,நன்றாகயிருக்கும்...

நன்றி ப்ரியா!!

நன்றி வானதி!!

Poonam said...

i dont understand the language, but looks like korma

Menaga Sathia said...

hai Kishmeesh,it's tamil samaiyal blog..this post is white pumpkin moor kuzhumpu not kurma..thxs for ur loving comeent...

Unknown said...

நாளில் மோர் குழம்பு ஊறவைக்கிறது

01 09 10