Sunday 19 September 2010 | By: Menaga Sathia

கோவா தயாரிக்கும் முறை/ How To Prepare Khoya??

கோவா என்றதும் இந்தியாவிலுள்ள சிறிய மாநிலம்+சினிமா பெயரும் தான் ஞாபகம் வரும்.கோவா என்பது சுண்டக்காய்ச்சிய பாலில் இருந்து செய்யப்படும் பொருள்.இனிப்பு வகைகளுக்கு சேர்த்து செய்யும் போது சுவையாக இருக்கும்.

தே.பொருட்கள்:
கொழுப்புள்ள பால் - 1 லிட்டர்
செய்முறை:
* நான் ஸ்டிக் பாத்திரம் அல்லது பெரிய கடாயில் பாலை ஊற்றவும்.நான் ஸ்டிக் பாத்திரத்தில் ஊற்றி செய்வது மிக எளிதாக இருக்கும்,தீய்ந்து போகாமல் இருக்கும்.
*மிதமான தீயில் கொதிக்க விடவும்.
*இடையிடையே மரக்கரண்டியால் கிளறி விடவும்.
*நன்கு சுண்டி வரும் வரை கிளறி விடவும்.
*பால் முழுவதும் கெட்டியாக சுண்டி வரும் போது இறக்கவும்.
பி.கு:பால் கொதிக்கும் போது சர்க்கரை சேர்த்து கிளறினால் இனிப்பு கோவா ரெடி.ஆனால் இனிப்பில்லாத கோவா தான் நல்லது.4 நாட்கள் வரை ப்ரிட்ஜில் வைத்திருந்து பயன்படுத்தலாம்.காரட் அல்வா செய்யும் போது கோவா சேர்த்து செய்தால் மிக அருமையாக இருக்கும்.

35 பேர் ருசி பார்த்தவர்கள்:

GEETHA ACHAL said...

superb menaga...

Jerry Eshananda said...

பெயரெல்லாம் நீங்களே வைக்கிறீங்களா சகோ.

புவனேஸ்வரி ராமநாதன் said...

//காரட் அல்வா செய்யும் போது கோவா சேர்த்து செய்தால் மிக அருமையாக இருக்கும்.//
ட்ரை பண்ணனும். கோவா சூப்பர்.

துளசி கோபால் said...

மேனகா,

சோம்பேறிகளுக்கான கோவா தயாரிப்பு ஒன்னு சொல்லவா?

Menaga Sathia said...

நன்றி கீதா!!

நன்றி சகோ!! அப்ப்டிலாம் இல்லைங்க,உண்மையிலேயே இதன் பெயர் கோவாதான்..

நன்றி புவனேஸ்வரி!! செய்து பாருங்கள் ரொம்ப நல்லாயிருக்கும்...

நன்றி துளசி அக்கா!! ஓ அப்ப்டி ஒன்னு இருக்கா,சீக்கிரம் சொல்லுங்க,எப்படி செய்றதுன்னு...

துளசி கோபால் said...

மேனகா,

பெரிய அளவுலே இனிப்பு செய்யணுமுன்னா நீங்க சொல்லும் முறைதான் நல்லது. ரெண்டே பேர் இருக்கும் குடும்பத்தில், இல்லை சட்னு இனிப்பு ஏதாவது அவசரத்துக்குச் செய்யணுமுன்னா இது உதவும்.

ஃபுல் க்ரீம் மில்க் பவுடர் உங்களுக்குத் தேவையான அளவு எடுத்துக்கிட்டு, கொஞ்சமாப் பாலைத் தெளிச்சு கட்டியா பிசைஞ்சு உருண்டையா உருட்டிக்குங்க. அந்த உருண்டையை 3 இல்லை 4 நிமிஷம் நீராவியில் ஸ்டீம் செஞ்சுட்டுக் கொஞ்சம் ஆறினதும் உருண்டைக் கட்டியை உடைச்சு விட்டு கையால் உதிர்த்துக்கலாம்.

கோவா ரெடி!

சுவையில் ஒரு மாறுதலும் இருக்காது.

ஸாதிகா said...

சூப்பர்

Umm Mymoonah said...

Very useful post Menaga.

Unknown said...

நல்லா விளக்கம் மேனகா

Asiya Omar said...

பார்க்கவே சூப்பர்.

Sujaa Sriram said...

மேனகா.... அற்புதம்.... ரொம்ப நல்லா இருக்கு ... பால் கோவாக்கு என்ன செய்யனும்...

Priya Suresh said...

Awesome khoya, naanume ippadi than pannuven..Ithula seiyura gulab jamun taste'ee thani than..

Chitra said...

Super! Sometimes, I use "evaporated milk" from the can for a quicker version. :-)

Prema said...

wounderful recipe,thanks for sharing.

Nithu said...

Nice instructions for preparing khoya.

சசிகுமார் said...

அக்கா நான் பயந்தே போயிட்டேன் என்னடா கோவா தாயரிக்கராங்களா
அப்புறம் தான் தெரிஞ்சுது பால் கோவான்னு அருமை அக்கா.

பாலகுமாரன், வத்திராயிருப்பு. said...

//"கோவா என்றதும் சிலருக்கு நாடு"//

is it a country?

:-)
nice post!!!

Unknown said...

ரொம்ப நல்லா இருக்கு..ட்ரை பண்ணனும்.

மனோ சாமிநாதன் said...

அன்புள்ள மேனகா!

கோவா தயாரிக்கும் முறை அருமை!
உங்களை தொடர் பதிவிற்கு அழைத்துள்ளேன். இதில் சென்று பார்க்கவும்.
http://www.muthusidharal.blogspot.com/

சிநேகிதன் அக்பர் said...

அட இப்படித்தான் செய்யனுமா.

கடையில மட்டுமே வாங்கி சாப்பிட்டது.

Menaga Sathia said...

ஓஓ இவ்வளவு ஈசியா இருக்குதே...நிச்சயம் செய்து பார்க்கிறேன்.நன்றி துளசிக்கா!!

நன்றி ஸாதிகாக்கா!!

நன்றி ஆயிஷா!!

நன்றி சிநேகிதி!!

Menaga Sathia said...

நன்றி ஆசியாக்கா!!

நன்றி ப்ரீத்தி!!பால் நன்கு சுண்டக்காய்ச்சி சர்க்கரை சேர்த்து திரண்டு வரும் போது ஏலக்காய்த்தூள் தூவி+நெய் சேர்த்து இறக்கவும்.இதான் பால்கோவா செய்முறை.முடிந்தால் போடுகிறேன் ரெசிபியை...

நன்றி ப்ரியா!! ஆமாம்பா குலோப்ஜாமூன், செய்தால் இதன் சுவையே சூப்பர்தான்..

Menaga Sathia said...

நன்றி சித்ரா!!

நன்றி பிரேமலதா!!

நன்றி நிது!!

நன்றி சசி!! அதான் ஆரம்பத்திலேயே விளக்கம் கொடுத்துட்டேன்...

Menaga Sathia said...

தவறை சுட்டிக்காட்டியதற்க்கு நன்றி,இந்தியாவிலுள்ள மாநிலம் என்று எழுதுவதற்க்கு பதில் நாடு என்று எழுதிட்டேன்..நன்றி சகோ!!

நன்றி ஜிஜி!! செய்து பாருங்கள்,கொஞ்சம் பொறுமை வேணும்...

நன்றி மனோஅம்மா!!தங்கள் அழைப்புக்கு மிக்க மகிழ்ச்சி,ஏற்கனேவே இத்தொடரை எழுதிவிட்டேன்..

நன்றி அக்பர்!!

பாலகுமாரன், வத்திராயிருப்பு. said...

only thanks?

plz send me some KOVA...

நட்புடன் ஜமால் said...

சமீபத்தில் தான் ஜலீலாக்கா ப்லாக்கில் கோவான்ன என்னன்னே தெரிஞ்சிகிட்டேன்

இப்போ செய்முறையும்

நன்றிங்கோ ...

ஜீவா said...

பால் கோவா செய்வதை மிகவும் தெளிவாக விளக்கியுள்ளீர்கள் , மிகவும் நன்றி, எங்கள் மாமா பால் வியாபாரிதான், பால் மீந்து போனால் பால் கோவாதான் செய்து விற்பார்,
நான் அதை சுட,சுட சாப்பிட்டிருக்கிறேன்,அருமையா இருக்கும், Brown colour-லிருக்கும்.

Niloufer Riyaz said...

thanks for sharing this recipe. naver thoght could make kova at home

Akila said...

romba naala kova epdi panrathunnu theiryama irunthen. thanks for sharing dear....

http://akilaskitchen.blogspot.com

Krishnaveni said...

thanks for this useful recipe menaga, great

Mahi said...

இது ரெடிமேடா கிடைக்குமான்னு தேடிட்டு இருந்தேன்..இதுவரை இந்த கோவா போட்டு எதுவுமே செஞ்சதில்லை மேனகா.குலாப்ஜாமூன் செய்யலாம்னு சொல்லிருக்கீங்க,ரெசிப்பியா குடுத்திருக்கீங்களா?? இல்லைன்னா குடுங்களேன்!யூஸ்புல்லா இருக்கும்!
நன்றி மேனகா!

Menaga Sathia said...

கோவா தானே பார்சல் செய்துட்டா போச்சு...நன்றி சகோ!!

நன்றி சகோ!! செய்முரையும் அறிந்ததில் சந்தோஷம்...

நன்றி சகோ!! நானும் ரொம்ப நாள் தெரியாமல் இருந்தேன்,1 முறை செய்த போது சரியா வரலை.இது 2 வது முறையாக செய்த போது நன்றாக வந்தது...

Menaga Sathia said...

நன்றி நிலோபர்!!

நன்றி அகிலா!!

நன்றி கிருஷ்ணவேணி!!

நன்றி மகி!!கோவாவில் குலோப்ஜாமூன் ரெசிபி இன்னும் 2 நாளில் போடுகிறேன்.மிக மிக அருமையாக இருக்கும்..நீங்களும் இதில் செய்து பார்த்தால் அப்புறம் ரெடிமிக்ஸ் பவுடர் வாங்க மாட்டீங்க...

Jaleela Kamal said...

கோவா ஜமால் கேட்டதுக்கு நான் போடலாம் என்று இருந்தேன்.சின்ன வயதில் இருக்கும் போது வெயில் காலங்களில் அடிக்கடி பால் திரியும் அதை வடிகட்டி சர்க்காரை சேர்த்து கோவா தாயாரித்து எல்லாம் சாப்பிடுவோம்.

எங்க வீடுகளில் ஸ்வீட் வகைகளுக்கு அதும் கேரட், பிட்ரூட், மிட்டாகானாவுக்கு கோவா இல்லாமல் தயாரிக்க மாட்டார்கள்.

Senthiil said...

பால்கோவா சூப்பர் சகோதரி மிக்க நன்றி.

01 09 10