Thursday 7 October 2010 | By: Menaga Sathia

ஜாங்கிரி /Jangri

தே.பொருட்கள்:
வெள்ளை முழு உளுத்தம் பருப்பு - 1 கப்
அரிசி மாவு - 1 டேபிள்ஸ்பூன்
ஆரஞ்சு கலர் - 1 சிட்டிகை
உப்பு - 1 சிட்டிகை
எண்ணெய் - பொரிக்க

பாகு செய்ய:
சர்க்கரை - 1 கப்
தண்ணீர் - 1 கப்
ரோஸ் எசன்ஸ் - 2 துளி
எலுமிச்சை சாறு - 1/2 டேபிஸ்பூன்

செய்முறை:
*உளுந்தை 1 மனிநேரம் ஊறவைத்து நன்கு வெண்ணெய் போல் சிறிது நீர் விட்டு உப்பு சேர்த்து கெட்டியாக அரைக்கவும்.

*அதனுடன் அரிசிமாவு+சிறிது நீரில் புட்கலர் கலக்கவும்.மாவு ஒட்டையில் விழும் பதமாக இருக்க வேண்டும்.
*ஒரு ஜிப்லாக் கவரில், ஒரு கம்பி எடுத்து லேசாக சூடு செய்து ஒட்டையை மெலிதாக போடவும்.

*ஒட்டை போட்ட கவரில் மாவை நிரப்பி படத்தில் உள்ளவாறு பிழியவும்.முதலில் 2 வட்டங்கள் போட்டு அதன்மேல் குட்டி குட்டி வளையங்கள் போல் பிழியவும்.2,3 முறை போட்டவுடன் அழகாக வரும்.
*எண்ணெய் காயவைத்து நேரடியாக மாவை பிழியவும்.ஒரு புறம் வெந்ததும்,மறுபுறம் திருப்பி வேகவிடவும்.ரொம்பவும் முறுகலாக எடுக்ககூடாது.
*இன்னொரு அடுப்பில்,பாத்திரத்தில் சர்க்கரை+தண்ணீர் வைத்து கொதிக்க விடவும்.பிசுபிசுப்பு பதம் வந்தவுடன் எலுமிச்சை சாறு+ரோஸ் எசன்ஸ் சேர்த்து அடுப்பை அணைக்கவும்.
*பொரித்த ஜாங்கிரிகளை சூடான சர்க்கரை பாகில் 2 நிமிடம் போட்டு எடுக்கவும்.

*1/2 மணிநேரம் கழித்து பரிமாற அனைவருக்கும் பிடித்த சுவையான ஜாங்கிரி ரெடி!!
பி.கு:
*ஒட்டையை மிக மெலிதாக போடவும்.மாவு சரியாக பிழிய வரவில்லையெனில் சிறிதளவு நீர் சேர்த்து கலக்கவும்.

*சர்க்கரை பாகு தண்ணீயாக இல்லாமலும்,கெட்டியாக இல்லாமலும் இருக்கனும்.

*பொரித்த ஜாங்கிரியும்,சர்க்கரை பாகும் சூடாக இருக்கனும்.

42 பேர் ருசி பார்த்தவர்கள்:

Asiya Omar said...

super tasty jangiri,yummy yummy..

Unknown said...

Aiyyo...amma...ennakku konjam annupunga...

Yummy yumm...

Dr.Sameena@

www.myeasytocookrecipes.blogspot.com

துளசி கோபால் said...

எனக்குப் பிடிச்ச ஸ்வீட்!

நானும் செஞ்சுருக்கேன். ஆனால் எலுமிச்சம் ஜூஸ் சக்கரைப்பாகில் விடலை.

ஃப்ளாட் பாட்டம் ஃப்ரை பேனில் செஞ்சால் சூப்பரா வருது.

Vidhya Chandrasekaran said...

slurpppp:))

ஸாதிகா said...

கலர் புல் ஜாங்கிரி..சூப்பர்.

புவனேஸ்வரி ராமநாதன் said...

அருமையா வந்திருக்கு. எனக்கு மிகவும் பிடித்தது.

சசிகுமார் said...

இனிப்பு தான் கொஞ்சம் அதிகம் ஹி ஹி ஹி

சாருஸ்ரீராஜ் said...

நல்லா இருக்கு மேனகா , எங்க வீட்ல கட்டாயம் இந்த தீபாவளிக்கு ஜாங்கிரி உண்டு ,

Umm Mymoonah said...

Romba alaga iruku Menaga, epadi ivalavu alaga sutri irukeenga. Super super...

Chitra said...

அப்படியே அந்த plate - எனக்கு பார்சல் பண்ணிடுங்க.

Jaleela Kamal said...

சஞ்சீவ் கபூர் ரெசிபி ரொமப் நல்ல இருக்குமே , முன்பு டீவியில்பார்த்துள்ளேன்.

ஜாங்கிரி ரொம்ப பிடித்தது.
தலைவலிக்கு சுட சுட ஜங்கிரி சாப்பிடா சரியாகும் என்று படித்து இருகேன்.
இங்கு சரவன பவனில்வெள்ளி கிழமை, நுழைவாயிலிலேயே கிரைண்டரில் பிரெஷா அரைத்து நம் கண் முண்ணே சுட சுட சுட்டு தருவாங்க , எனக்கும்செய்து பார்க்கனும் என்று ஆசை

Nithu Bala said...

superb Menaga..nan orey oru murai seidhen..taste ellam nalla irundhathu..aana shape varey illai:-(

nenka superba suthi irukeenga..nenga solli irukara matiri seidhu parkaren..illana nenga anupidunga..

San said...

Love those orange colored jangiri ,you have done a wonderful job here .Great going.

koini said...

mmmmmm........jaangiri superb menaga.....yummyyyy...

தெய்வசுகந்தி said...

super jangiri!!!!!!

Unknown said...

சூப்பராக இருக்கு... எனக்கு ரொம்ப பிடித்த ஜாங்கிரி

Kanchana Radhakrishnan said...

super jangiri.

Mahi said...

ஜாங்கிரி சூப்பரா இருக்கு மேனகா! நான் ஒருமுறை கடைல விற்கும் மிக்ஸ் வாங்கி ட்ரை பண்ணேன்.சுமாரா வந்தது.

உளுந்து அரைத்து செய்யும் உளுந்துவடை செய்யறதுக்கே கான்பிடன்ஸ் வரமாட்டேன்னுது. இதுல நான் எப்ப ஜாங்கிரி செய்ய?? ஹும்..சீக்கிரமா செஞ்சுடுவோம்.;) :)

Mahi said...

மேனகா,உங்களுடன் ஒரு விருதைப் பகிர்ந்துகொண்டிருக்கிறேன்.விருதினைப் பெற்றுக்கொள்ள அன்புடன் அழைக்கிறேன்.
http://mahikitchen.blogspot.com/2010/10/blog-post_07.html

Unknown said...

படங்களைப் பார்க்கும்போதே சூப்பரா இருக்கு.செஞ்சு பாக்கணும்.

ராமலக்ஷ்மி said...

மகனுக்குப் பிடிக்கும். வீட்டில் முயன்றதில்லை. செய்து பார்க்கிறேன் மேனகா. நன்றி.

Nithya said...

Super super.. arumaya irukku paaka :) Naan kooda oru dharavai try pannen.. padangal paakumbothu marubadiyum seidhu paakanumnu thonudhu :)

Suni said...

vow very nice. super

sunitha @ http://tamiltospokenenglish.blogspot.com/

Menaga Sathia said...

நன்றி ஆசியாக்கா!!

நன்றி ஷமினா!!உங்களுக்கு செய்து அனுப்பிட்டா போச்சு...

நன்றி துளசிக்கா!! எலுமிச்சை சாறு சேர்ப்பதால் பாகு சீக்கிரம் இறுகிவிடாது..

நன்றி வித்யா!!

Menaga Sathia said...

நன்றி ஸாதிகாக்கா!!

நன்றி புவனேஸ்வரி!!

நன்றி சசி!!

நன்றி சாரு அக்கா!! தீபாவளிக்கு செய்து அசத்துங்க...

Menaga Sathia said...

நன்றி ஆயிஷா!! 2,3 முறை சுற்றி பார்த்து பிறகு நேரடியாக எண்ணெயில் பிழிந்தேன்...

நன்றி சித்ரா!! ஓஓ தாராளமா பார்சல் செய்துவிடுகிறேன்...

நன்றி ஜலிலாக்கா!! உண்மையாகவா அக்கா ஜாங்கிரி சாப்பிடால் தலைவலி நல்ல போகுமா...ஆச்சரியமா இருக்கு...செய்து பாருங்க ரொமப் ஈஸியாகதான் இருந்தது.நானும் ரொமப் கஷ்டம் போல் என்று செய்யாமல் இருந்தேன்,செய்து பார்த்தவுடன் ரொமப் ஈசின்னு தோனுச்சு...

Menaga Sathia said...

நன்றி நிது!! நான் சொல்லியபடி சுற்றி பாருங்க,நல்லா வரும்.நானே செய்து உங்களுக்கு அனுப்பி விடுகிறேன்..

நன்றி சான்!!

நன்றி கொயினி!!

நன்றி தெய்வசுகந்தி!!

Menaga Sathia said...

நன்றி சிநேகிதி!!

நன்றி காஞ்சனா!!

நன்றி மகி!!ஜாங்கிரி மிக்ஸ் கூட ரெடிமேடாக விற்குதா?? இப்போதான் கேள்விபடுகிறேன்..ஒரு முறை செய்யும்போதே பின அழகா வந்துடும்..செஞ்சு பார்த்துட்டு சொல்லுங்கள்..விருதுக்கு மிக்க நன்றி மகி,நான் ஏற்கனவே இவ்விருதை வாங்கி பகிர்ந்தளித்துவிட்டேன்...

Menaga Sathia said...

நன்றி ஜிஜி!! செய்து பாருங்கள்,மிக சுலபம் தான்...

நன்றி ராமலஷ்மி அக்கா!!செய்து பார்த்து சொல்லுங்கள்...

நன்றி நித்யா!! ம்ம் அப்போ சீக்கிரம் செய்து அசத்துங்க...

நன்றி சுனிதா!!

The cost of enterprise mobility solutions said...

The jangiri here gives a virtual smell and taste..

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

Wow...கலக்கறீங்க சசிகா... சூப்பர்

Mahi said...

மேனகா,இங்கே ரெடிமேட் குலாப்ஜாமூன் மிக்ஸ் மாதிரியே ஜாங்கிரி மிக்ஸ்-னு இண்டியன் ஸ்டோர்ல கிடைக்குது.அதான் ட்ரை பண்ணேன்.

/நான் ஏற்கனவே இவ்விருதை வாங்கி பகிர்ந்தளித்துவிட்டேன்.../:) எனக்கும் தெரியும் மேனகா.பகிர்ந்துகொள்ள ஆசைப்பட்டு கொடுத்திட்டேன்.அவ்ளோதான்.:):)

GEETHA ACHAL said...

மேனகா...கடைசியாக ஜாங்கிரி செய்தாச்சு...சூப்பராக இருக்கே...அருமை..வாழ்த்துகள்...

Mrs.Mano Saminathan said...

ஜாங்கிரி செய்யும் விளக்கக் குறிப்புகள் அருமை! முதல் முறையிலேயே நன்றாகச் செய்திருப்பதற்கு என் பாராட்டுக்கள் மேனகா! பொதுவாய் நம் ஊரில் இதற்கென்றே துளை போட்டு சுற்றிலும் கெட்டியாக ஓரம் தைத்த துணியை எல்லா சமையல்காரர்களும் வைத்திருப்பார்கள். எங்கள் ஹோட்டலிலும் எங்கள் சமையல்காரர் மிக அருமையாக இதைச் செய்வார்.

'பரிவை' சே.குமார் said...

பிடித்த் ஜாங்கிரி படத்தை அழகழகாப் போட்டு நாக்கில் எச்சில் ஊறுது... ஒரு பார்சல் ப்ளீஸ்.

Krishnaveni said...

super recipe Menaga, looks great, delicious

Priya Suresh said...

Kalakitinga Menaga, jangiri pakkurathuku rendu yeduthu saapidanam pola irruku..

ஹுஸைனம்மா said...

ஜாங்கிரி உளுந்துலதான் செய்றதுங்கிறது புது நியூஸ் எனக்கு. (கடலைமாவுன்னு நினைச்சிகிட்டிருந்தேன்) ரொம்ப ஈஸியா இருக்கு. ஒருநாள் செய்யணும்.. (எல்லாம் இப்படி சேத்துவச்சுகிட்டிருகேன்..)

Menaga Sathia said...

நன்றி The cost of enterprise mobility solutions !!

நன்றி புவனா!!

மிக்க நன்றி மகி!! ஓ ஜாங்கிரி ரெடிமிக்ஸ் நான் இங்கு பார்த்ததில்லைப்பா..

நன்றி கீதா!!

Menaga Sathia said...

நன்றி மனோ அம்மா!!ஜிப்லாக் கவரில் துளை போட்டு செய்வதும் ஈசியாக இருக்கும்மா...

நன்றி சகோ!!

நன்றி கிருஷ்ணவேணி!!

நன்றி ப்ரியா!!

நன்றி ஹூசைனம்மா!! ஒரு நாள் பொறுமைய செய்து பாருங்க..உளுத்தமாவில் தான் ஜாங்கிரி செய்வாங்க...

சிவபார்கவி said...

படம் நல்லாருக்கு நெசத்தில் செய்தாலும் கடையில் செய்வுது போல் ருசியாக இருக்கும்...

Menaga Sathia said...

நன்றி சிவபார்கவி!!

01 09 10