Thursday 5 February 2015 | By: Menaga Sathia

ஹோட்டல் சரவணபவன் கார சட்னி / HOTEL SARAVANABHAVAN KARA CHUTNEY | SIDE DISH FOR IDLI & DOSA


print this page PRINT IT
ஒரு முறை சரவணபவனில் சாப்பிடும் போது கார சட்னி எப்படி செய்வதுன்னு கேட்ட போது பரிமாருபவர் என்னை ஒரு மாதிரி பார்த்துவிட்டு அதெல்லாம் செய்முறைலாம் சொல்ல முடியாதுங்கன்னு சொன்னார்.

நானும் விடாம திருப்பி கேட்டபொழுது மேலோட்டமாக பொருட்களை மட்டும் சொன்னார்.நானும தன் படி வீட்டில் செய்த போது அளவுகளை ஒவ்வொரு முறை மாற்றி போட்டு செய்தாலும் அதன் சுவை வரவில்லை.கடைசியாக   செய்யும் போது அதே சுவை வந்தது.

தே.பொருட்கள்

நறுக்கிய வெங்காயம் - 1/2 கப்
நறுக்கிய தக்காளி -1/4 கப்
காய்ந்த மிளகாய் -5 அல்லது 6
புளி  -ப்ளுபெர்ரி பழளவு
உளுத்தம் பருப்பு- 1டீஸ்பூன்
கடலைப்பருப்பு- 1 டீஸ்பூன்
உப்பு -தேவைக்கு

தாளிக்க‌

எண்ணெய்- 2 டீஸ்பூன்
கடுகு+உளுத்தம் பருப்பு -தலா 1/2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள்- 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை- 1 கொத்து

செய்முறை
*வெறும் கடாயில் உளுத்தம்பருப்பு+கடலைப்பருப்பு இவற்றை தனித்தனியாக வறுக்கவும்.

*பின் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி நறுக்கிய வெங்கயம்+தக்காளி+காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கி ஆறவிடவும்.

*மிக்ஸியில் முதலில் பருப்புகளை பொடிக்கவும்,பின் வதக்கிய வெங்காய கலவை மற்றும் புளி+உப்பு சேர்த்து நீர் விடாமல் அரைக்கவும்.


*பின் தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து சேர்க்கவும்.

பி.கு

*அரைக்கும் போது நீர் சேர்க்க தேவையில்லை தேவையெனில் 2 டேபிள்ஸ்பூன் நீர் சேர்த்து அரைக்கவும்.


20 பேர் ருசி பார்த்தவர்கள்:

Unknown said...

wow thats an yummy chutney :) I always love saravana bhavan chutney , looks lip smacking :)

Hema said...

Love this chutney, I make it this way too..

திண்டுக்கல் தனபாலன் said...

இன்றே செய்து பார்க்கிறோம்... நன்றி...

Priya said...

ungaluku thairiyam than avunga te recipe ketu irukeenga.Seithu parka vendiya chutney

Jaleela Kamal said...

ஹா ஹா ஒரு வழியா அவர்கிட்ட கேட்டு செய்துட்டீஙக்.
ரொம்ப நல்ல இருக்கு எனக்கு ரொம்ப பிடிக்கும்.
நான் திண்டிவனம் போகிற வழியில் பூண்டு சட்னி கேட்டேன் ஆனால் பிளாக் ல போட என்றது எல்லாரும் ஆர்வமாக சொன்னார்கள்,

Vijiskitchencreations said...

Luv it. Tasty recipe.

mullaimadavan said...

Luv the hotel style red chutney! Idli kuda supera irrukum!

Priya dharshini said...

Very nice and tasty chutney , geetha

துரை செல்வராஜூ said...

இந்த கார சட்னியின் செய்முறையத் தானா சொல்ல மாட்டேன் என்றார்கள்?..

எங்கள் ஊர் பக்கம் எல்லா வீடுகளிலும் உணவகங்களிலும் - இது தானே சிறப்பு!..

நீங்கள் தஞ்சை ரயிலடி சுப்பையா மெஸ்ஸில் சாப்பிட்டுப் பாருங்கள்!..

இனிய பதிவு கண்டு மகிழ்ச்சி..

Unknown said...

இன்னைக்கு இந்த சட்னி செய்து பார்த்தேன், சூப்பரா இருந்தது. தேங்க்ஸ் அக்கா !

Menaga Sathia said...

செய்து பார்த்து கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி சரண்யா !!

Unknown said...

My wife was went to her house...I'm trying this recipe..wow..sema.. thanks lot dear sister

Unknown said...

My wife was went to her house..today I am trying this recipe.. wow..sema.. thanks lot dear sister.. Jesus Christ is bless u

Menaga Sathia said...

@ Judy thimotheu

thxs a lot for trying it sago,glad u liked it ...

Unknown said...

செமயா இருக்கும்....
இதே செய்முறைய்ல...பார்த்திருக்கேன்...
டேஸட் சூப்பர்வ்

Unknown said...

செமயா இருக்கும்....
இதே செய்முறைய்ல...பார்த்திருக்கேன்...
டேஸட் சூப்பர்வ்

Unknown said...

செய்தேன் ருசித்தேன் ரசித்தேன்

v.s.panneerselvam said...

மிகவும் சுவையான சட்னி. நாலு இட்லி அதிகமா சாப்பிட்டேன. நீங்கள் மாறி மாறி செய்து பார்த்து இறுதியில் சரியான செய்முறை மற்றும்iingrediants ஐ கண்டுபிடித்து publish செய்ததற்கு நன்றி. தொடரட்டும் உங்கள் பணி

Unknown said...

நான் இன்று இந்த சட்னி செய்து பார்த்தேன். சட்னி மிகவும் சுவையாக இருந்தது. மிக்க நன்றி.

Unknown said...

ம் சூப்பர்

01 09 10