Wednesday 29 April 2015 | By: Menaga Sathia

கோதுமை & சோள ப்ரெட் | Wheat & Sorghum (Jowar) Bread | Millet Recipes



print this page PRINT IT 
இதில் கோதுமை மாவில் ஈஸ்ட் கலந்து முதல் நாள் இரவு புளிக்க வைத்து மறுநாள் சோளமாவு கலந்து செய்துள்ளேன்.

முதல் நாள் செய்ய‌

கோதுமை மாவு -1 1/2 கப்
ஈஸ்ட் -2 டீஸ்பூன்
சர்க்கரை -1 டீஸ்பூன்
உப்பு -1/2 டீஸ்பூன்

மறுநாள் மாவில் கலக்க‌

சோளமாவு -1 1/2 கப்
தேன் -3 டேபிள்ஸ்பூன்
எண்ணெய்- 1 டேபிள்ஸ்பூன்

செய்முறை

*வெதுவெதுப்பான நீரில் ஈஸ்ட்+சர்க்கரை கலந்து 5 நிமிடம் பொங்க வைக்கவும்.

*ஈஸ்ட் கலவை பொங்கியதும் கோதுமைமாவில்  கலந்து தேவைக்கு நீர் சேர்த்து,அதன் மேல் எண்ணெய் தடவி க்ளியர் ராப் கவரில் சுற்றவும்.

*வெப்பமான இடத்தில் ஒர் இரவு முழுக்க வைக்கவும்.

*மறுநாள் புளித்த மாவில் சோளமாவு+தேன் +உப்புகலந்து பிசையவும்.

*அப்படி பிசையும் போது நீர் தேவைபடாது,தேவைப்பட்டால் மட்டுமே நீர் சேர்த்து பிசையவும்.

*இப்போழுது இந்த மாவு கலவையினை 1 மணிநேரம் பொங்க வைக்கவும்.

*பின் மாவினை பிசைந்து,எண்ணெய் தடவி பேக்கிங் பானில் வைத்து கத்தியால் கீறி மீண்டும் ப்ரூப் செய்யவும்.

*அவனை 200°C டிகிரி 10 நிமிடங்கள் முற்சூடு செய்தபின் ப்ரெட் பானை வைத்து 15- 20 நிமிடம் பேக் செய்து எடுக்கவும்.

*ஆறியதும் துண்டுகள் போடவும்.

பி.கு

*இதில் சோளமாவுக்கு பதில் மற்ற சிறுதாணிய மாவுகள் சேர்த்தும் செய்யலாம்.

*ப்ரெட்டினை எத்தனை முறை ப்ரூப் செய்கிறோமோ அத்தனைக்கும் ப்ரெட் மிக மிருதுவாக இருக்கும்.
Monday 27 April 2015 | By: Menaga Sathia

கோதுமை வடாம் /Wheat Vadam(Godhumai Vathal ) | Summer Spl | Diabetic Recipes



print this page PRINT IT 
இது வட இந்தியர்கள் செய்யும் குறிப்பு.சென்றமாதத்தில் முகநூல் CAL குரூப்பில் பார்த்து செய்தது.அவர்கள் காரம் எதுவும் போடாமல் செய்துருந்தாங்க.இதில் என் சுவைக்கேற்ப நாம் எப்போழுதும் செய்வது போல பச்சை மிளகாய்+சீரகம்ச் ஏர்த்து செய்துருக்கேன்.

இதில் கோதுமை ஊறவைத்து அரைத்து மாவினை புளிக்க வைத்து செய்வது.நான் இந்த மாவிலேயே பாதி கூழ் வத்தலும்,கஞ்சி வத்தலும் செய்தேன்.சுவை மிக அருமை.

வத்தலை பொரிக்கும் போது மிதமான சூட்டில் பொரிக்கவும்,இல்லையெனில் சிவந்துவிடும்.நான் கொஞ்சம் அதிக சூட்டில் காயவைத்து பொரித்ததால் கொஞ்சம் சிவந்து விட்டது.

அதே போல் வத்தல் பொரிக்கும் போது 2மடங்காக உப்பி வரும்,அதனல் எண்ணெய் கொஞ்சம் தாளராமாக ஊற்றி பொரிக்கவும்.

ஊறவைக்கும் நேரம் -8 மணிநேரங்கள்
தயாரிக்கும் நேரம் -15 நிமிடங்கள்
அளவு -3 கப்

தே.பொருட்கள்

முழு கோதுமை- 1 கப்
உப்பு -தேவைக்கு
பச்சை மிளகாய் -3
சீரகம் -1/2 டீஸ்பூன்
பெருங்காயப்பொடி -1/4 டீஸ்பூன்

செய்முறை

*கோதுமையை 8 மணிநேரம் ஊறவைக்கவும்.


*அதனை அரைத்து மூன்று முறை பால் எடுக்கவும்.

*அரைத்த பாலினை ஒர் இரவு முழுக்க புளிக்க வைத்து மேலோடு இருக்கும் நீரினை ஊற்றி விடவும்.

*கெட்டி பாலை அளக்கவும்.1 கப்ப்பிற்கு 3 கப் தண்ணீர் வைக்கவும்.

*குக்கரில் 3 கப் நீரினை ஊற்றிஉப்பு சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.பின் கோதுமை பாலை ஊற்றி கைவிடாமல் கிளறவும்.

*நன்கு வெந்து கண்ணாடி போல் மாவு பதம் வரும் போது பச்சை மிளகாய் விழுது+பெருங்காயப்பொடி+சீரகம் சேர்த்து கலக்கவும்.

*கெட்டியாக மாவு வந்து கையில் ஒட்டாமல் வரும் பதத்தில் இறக்கவும்.

*இதில் பாதி கெட்டியான மாவு கூழ் வத்தல் செய்ய தனியாக எடுத்துக் கொண்டேன்.

*பின் மீதி இருக்கும் மாவில் நன்கு கொதித்த நீரை ஊற்றி ஸ்பூனால் எடுத்து ஊற்றும் பதத்தில் கலக்கவும்.

*ஈரமான துணியில் கெட்டிமாவு முறுக்கு அச்சியில் பிழிந்தும்,நீர்க்க மாவை ஸ்பூனால் ஊற்றியும் வெயிலில் காயவைத்து எடுக்கவும்.

*பின் மறுநாள் துணியின் மறுபக்கத்தில் நீரை தெளித்து வற்றலை எடுத்து 2 -3 நாட்கள் வரை வெயிலில் காயவைத்து எடுக்கவும்.

Thursday 23 April 2015 | By: Menaga Sathia

மோர் மிளகாய் / MOR MILAGAI | SUN DRIED CHILLIES | SUMMER SPL

print this page PRINT IT

மோர் மிளகாய் தயிர் சாதம் மற்றும் பழைய சாதத்திற்கு ஏற்ற பக்கஉணவு.மிளகாயை சாதம் வடித்த தண்ணியில் சூடாக ஊற்றி 10 நிமிடம் வைத்திருந்து பின் நாம் செய்தால் மிளகாயின் நிறம் மாறாது மற்றும் காரமும் குறைவாக இருக்கும்.

இதனை பொதுவாக தஞ்சாவூர் குடமிளகாயில் செய்வாங்க.அதில் காரம் குறைவு,சுவையும் சூப்பர்.நான் சாதரண ஊசிமிளகாயில் செய்துருக்கேன்.

தே.பொருட்கள்

பச்சை மிளகாய் -30
நன்கு புளித்த மோர் -2 கப்
உப்பு -தேவைக்கு

செய்முறை

*மிளகாயின் காம்போடு பயன்படுத்தலாம்.மிளகாயின் நடுவில் கம்பியால் குத்தவும் அல்லது மூங்கில் குச்சியில் கூட குத்தலாம்.

*அதனை சாதம் வடித்த தண்ணியில் சூடாக ஊற்றி 10 நிமிடம் வைக்கவும்.

*வேறொரு பாத்திரத்தில் மோரினை உப்பு சேர்த்து கடைந்து வைக்கவும்.மிளகாயை சாதம் வடித்த தண்ணியிலிருந்து எடுத்து மோரில் 1 நாள் முழுக்க ஊறவைக்கவும்.
*ஊறியன் பின் தட்டில் மிளகாயை மட்டும் எடுத்து வெயிலில் காயவைக்கவும்.

*மாலையில் திரும்பவும் மோரில் போட்டு வைக்கவும்.

*இதே போல் மோர் வர்றும் வரை செய்த பின் திரும்பவும் 1 நாள் முழுக்க காயவைக்கவும்.

*இது வருடம் முழுக்க வைத்திருந்து பயன்படுத்தலாம்.

*உபயோகிக்கும் போது எண்ணெய் நன்கு காயவைத்து மிளகாயை வறுத்து பயன்படுத்தவும்.


பி.கு

*மிளகாய் வறுக்கும் போது நன்கு பொன்னிறமாக வறுத்தால் தான் சாப்பிடும் போது காரம் தெரியாது.

*மிளகாயை மோரிலிருந்த எடுத்து காயவைக்கும் போது மோரினை வெயிலில் காயவைக்ககூடாது.
Monday 20 April 2015 | By: Menaga Sathia

சோள முட்டை ஆப்பம்/ Jowar (Sorghum ) Egg Appam | Millet Recipes

print this page PRINT IT
அரிசிக்கு பதில் சிறுதானியத்தில் செய்துள்ளேன்.இதில் முட்டை+ஆப்பமாவு இரண்டையும் கலந்து ஆப்பம் செய்துருக்கேன்.இல்லையெனில் ஒவ்வொரு ஆப்பத்திலும் ஒரு முட்டையை உடைத்து ஊற்றி மிளகுத்தூள் தூவி செய்யலாம்.

தே.பொருட்கள்

சோளம் -1 கப்
வரகரிசி- 1 கப்
வேகவைத்த வரகு சாதம் -1/4 கப்
உப்பு -தேவைக்கு

ஆப்பமாவில் கலக்க‌

கெட்டி தேங்காய்ப்பால் -1/4 கப்
சர்க்கரை- 1/2 டீஸ்பூன்
பேக்கிங் சோடா -1/4 டீஸ்பூன்

முட்டை ஆப்பத்திற்கு

முட்டை- 2
மஞ்சள்தூள்- 1/4 டீஸ்பூன்
உப்பு- 1 சிட்டிகை
சோம்புத்தூள்- 1/2 டீஸ்பூன்

செய்முறை

*சோளம்+வரகரிசி இரண்டையும் ஒன்றாக குறைந்தது 6 மணிநேரம் ஊறவைக்கவும்.சோளம் ஊற நேரமாகும்.


*ஊறியதும் உப்பு+வரகரிசி சாதத்துடன் மிக நைசாக அரைத்து புளிக்கவைக்கவும்.

*மாவு புளித்ததும் தேவையான ஆப்பமாவில் தேங்காய்ப்பால்+பேக்கிங் சோடா+சர்க்கரை கலந்து 5 நிமிடம் வைக்கவும்.

*வேறொரு பாத்திரத்தில் முட்டை+மஞ்சள்தூள்+உப்பு+சோம்புத்தூள் சேர்த்து நன்கு கலக்கவும்.
*இதனுடன் தேங்காய்ப்பால் கலந்த ஆப்பமாவை சேர்த்து நன்கு கலக்கவும்.


*ஆப்பசட்டியில் ஒருகுழிக்கரண்டி மாவை ஊற்றி,ஆப்பசட்டியை லேசாக சுற்றவும்.பின் மூடி போட்டு வேகவைக்கவும்.


*வெந்ததும் அதன் மீது சர்க்கரை தூவி தேங்காய்பாலுடன் பரிமாறலாம்.

*அல்லது சர்க்கரை தூவாமல் இடியாப்ப குருமாவுடன் பரிமாறலாம்.

*இது முட்டை சேர்க்காமல் செய்த சாதா ஆப்பம்.

பி.கு

*தேங்காய்ப்பாலை ஒரேடியாக மாவில் ஊற்றிவிட்டால் அதை உடனே சுட்டிவிடவேண்டும்.

*இதே ஆப்பமாவில் சர்க்கரை(அ) வெல்லம் சேர்த்து ஒலையாப்பம் செய்யலாம்.
Friday 17 April 2015 | By: Menaga Sathia

இலை வடாம் / ILA VADAM | SUMMER SPL | VADAM RECIPES

print this page PRINT IT
இலை வடாம் போடுவதற்கு வெயிலில் காய வைக்க அவசியமில்லை..வீட்டினுள்ளே வெயில் படும் இடத்தில் காற்றோட்டமாக உலரவைத்த பின் 1 நாள் முழுக்க வெயிலில் காயவைத்து பயன்படுத்தலாம்.

இதற்கு தனியாக அச்சு இருக்கு,ஆனால் நான் சிறிய தட்டுகளில் ஊற்றி ஆவியில் வேகவைத்து எடுத்தேன்.தட்டு அல்லது வாழையிலை பயன்படுத்தலாம்.

சிறிய தட்டுகளில் மாவினை உற்றும் போது எண்ணெய்+தண்ணீர் கலந்து தடவி ஊற்றவும்.எண்ணெய் மட்டும் தடவி மாவு ஊற்றினால் தேய்க்க முடியாது.

அதே போல் மாவு பதம் தோசை மாவினை விட தண்ணியாக இருக்க வேண்டும்.மாவினை தட்டில் ஊற்றும் போது மெலிதாக தேய்க்கவேண்டும்.தடினமாக மாவினை உற்றினால் காய்வதற்கு லேட்டாக ஆகும்.

ஆவியில் வேக வைத்தபின் துணியில் வைத்து இடைவெளி விட்டு உலரவிடவும்.பின் 4 மணிநேரத்திற்கு பிறகு மறுபக்கம் திருப்பி உலரவிடவும்.

ஜவ்வரிசி சேர்த்தும்,சேர்க்காமலும் செய்யலாம்.இந்த வடாம் எண்ணெயில் பொரிக்கும் போது மிக பெரிதாக இருக்கும்.அதனால் சிறிய தட்டுகளில் உற்றி செய்யலாம்.

நான் மொத்தம் 6 சிறிய தட்டுகளில் செய்தேன்.3 தட்டு ஊற்றி எடுத்த பின் மற்ற 3 தட்டுகளில் ஊற்றி எடுத்தேன்,அதற்குள் முதலில் ஊற்றிய தட்டுகளில் இருந்து வடாம் ஆறி அழகாக எடுக்க வரும்.

மாவு சரியாக வேகவில்லை எனில் வடாம் எடுக்க வராது,பிய்த்துக் கொள்ளும்.

எப்போழுதும் வடாமிற்கு உப்பினை குறைவாக சேர்க்கவும்,எண்ணெயில் பொரித்து சாப்பிடும் போது சரியாக இருக்கும்.

தே.பொருட்கள்

பச்சரிசி -1 கப்
ஜவ்வரிசி- 2 டேபிள்ஸ்பூன்
சீரகம்- 1/2 டீஸ்பூன்
பச்சை மிளகாய்- 4 (அ) காரத்திற்கேற்ப‌
உப்பு -தேவைக்கு
பெருங்காயத்தூள்- 1/4 டீஸ்பூன்
எலுமிச்சைசாறு -1 டேபிள்ஸ்பூன்

செய்முறை

*பச்சரிசி+ஜவ்வரிசியை ஊறவைத்து நைசாக அரைக்கவும்.

*அதனுடன் அரைத்த பச்சை மிளகாய் விழுது+உப்பு+பெருங்காயத்தூள்+சீரகம் +எலுமிச்சைசாறு சேர்த்து தோசைமாவினை விட நீர்க்க
கரைக்கவும்.

*எண்ணெய்+நீர் சேர்த்து கலந்து கிண்ணத்தில் வைக்கவும்.

*இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதித்ததும் இட்லி தட்டு வைக்கவும்.

*அதன்மீது எண்ணெய் தடவிய சிறிய தட்டுகளில் மாவினை ஊற்றி ஆவியில் 1- 2 நிமிடங்கள் வேகவைக்கவும்.

*ஆறியதும் எடுத்து துணியில் உலரவைக்கவும்.

*வீட்டிலயே வெயில் படும் இடம் அல்லது பேன் காற்றில் 2 -3 காயவைத்து எடுக்கலாம்.ஆனால் இடையிடயே திருப்பி விட்டு உலரவிடவும்.

*பின் நன்றாக வெயிலில் 1 நாள் காயவைத்து பயன்படுத்தலாம்.

பி.கு
*ஒவ்வொரு முறையும் மாவினை தட்டில் ஊற்றும் பொது எணெய் தடவ அவசியமில்லை.

*எலுமிச்சை சாறுக்கு பதில் மாவினை முதல்நாளே அரைத்து புளிக்கவைத்து பயன்படுத்தலாம்.
*மிதமான சூட்டில் எண்ணெய் காயவைத்து வடாமை பொரிக்கவும்,இல்லையெனில் சிவந்து விடும்.



Tuesday 14 April 2015 | By: Menaga Sathia

தமிழ் புதுவருட தாளி மெனு / 30 Days Veg Lunch Menu # 30



print this page PRINT IT

அனைவருக்கும் மன்மத வருட தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!!

இன்றுடன் வெஜ் லஞ்ச் மெனு பதிவு நிறைவடைகிறது.

7 காய் சாம்பார்
தக்காளி ரசம்
உருளை வறுவல்
இனிப்பு பொங்கல்
மாங்காய் பச்சடி
பாசிபருப்பு பாயாசம்
மெதுவடை
அப்பளம்

  *கத்திரிக்காய்,முருங்கைகாய்,மாங்காய்,வெண்டைக்காய்,புடலங்காய்,கொத்தவரங்காய்,அவரைக்காய் என சேர்த்து செய்துருக்கேன்,இதில் ஏதாவது ஒருகாய் மட்டும் சேர்த்தும் செய்யலாம் புடலங்காய் தவிர...

*மாங்காய் பச்சடியிலயே வேப்பம்பூ சிறிது நெய்யில் வறுத்து சேர்த்துருக்கேன்.









Monday 13 April 2015 | By: Menaga Sathia

தமிழ் புது வருட ரெசிபிகள் / Tamil New Year Recipes | Collection Of Recipes


Tamil New Year Recipes

Sweet Pongal
Sweet Pongal
Medhu Vada
Medhu Vada
Arisi Thenga Payasam
Arisi Thenga Payasam

Sago Payasam
Sago Payasam
Mango Pachadi
Mango Pachadi
Avarakkai Sambar
Avarakkai Sambar

Vepampoo Rasam
Vepampoo Rasam
BitterGourd Varuval
Bittergourd Varuval
Potato Peas Varuval
Potato peas Varuval

Carrot Cabbage Thoran
Carrot Cabbage Thoran
Cabbage Peas Poriyal
Cabbage Peas Poriyal
Vazhaipoo Thoran
Vazhaipoo Thoran

01 09 10