Friday 31 July 2009 | By: Menaga Sathia

வரலஷ்மி விரதம்

இன்று 31.07.09 வரலஷிமி விரதம்.இந்த விரதத்தை நான் 2006 ம் வருடத்திலிருந்து கடைப் பிடிக்கிறேன்.இந்த விரதத்தினால் நான் அடைந்த பலன் ஏராளம்.லஷ்மிதேவியை நினைத்து இந்த விரதம் கடைப்பிடிக்கபடுகிறது.அஷ்டலஷ்மிகளை (வித்யாலஷ்மி -- கல்வியைத் தருபவர்,தனலஷ்மி -- செல்வத்தை தருபவர்,தான்யலஷ்மி -- உணவுகளை கொடுப்பவர்,சந்தானலஷ்மி-- குடும்பம் மற்றும் குழந்தைகளை கொடுப்பவர்,கெஜலஷ்மி -- பலத்தை தருபவர்,விஜயலஷ்மி -- வெற்றியைத் தருபவர்,பாக்யலஷ்மி -- சொத்துகளைத் தருபவர்,தைரியலஷ்மி -- தைரியத்தை தருபவர் )சகல சவுபாக்கிய செல்வங்களும் தரவேண்டி, நினைத்து இந்த பூஜை அனுஷ்டிக்கபடுகிறது.

ஆடி அல்லது ஆவணி மாத பௌர்ணமிக்கு முந்திய வெள்ளிக்கிழமையில் வரலஷ்மிபூஜை கடைப்பிடிக்கபடுகிறது.தவிர்க்க முடியாத சூழ்நிலையானால் அடுத்த வெள்ளிக்கிழமையில் செய்யலாம்.


முதல்நாள் வியாழக்கிழமையன்று பூஜை அறையை சுத்தம் செய்து மாக்கோலம் போட்டு மண்டபம் அமைக்க வேண்டும்.அவரவர் வசதிக்கு,சூழ்நிலைக்கேற்ப அமைத்துக்கொள்ளலாம்.கலசம் அமைக்க வேண்டும்.அந்த பாத்திரம் தங்கம்,செம்பு,வெள்ளி இவற்றுள் ஏதாவது ஒன்றாக இருக்கணும்.கலத்திற்க்கு மஞ்சள்,குங்குமம் வைத்து அதனுள் தண்ணீர் அல்லது பச்சரிசி,தங்கம்.காசு,வெற்றிவேர்,எலுமிச்சைபழம்,வெற்றிலை,பாக்கு,பூ,மஞ்சள்,குங்குமம் போடவேண்டும்.அதன் மேல் மாவிலை வைத்து தேங்காய் வைக்கவும்.அதன் மேல் வஸ்திரம்,பூ, வைக்கவும்.லஷ்மி முகம் அல்லது படம் வைக்கவும்.கலசம் வைத்த பின் விளக்கேத்தி பால் நைவேத்தியம் செய்யவும்
மறுநாள் காலையில் பொங்கல்,அப்பம்,சுண்டல்,புட்டு,உளுந்து வடை,கொழுக்கட்டை,இட்லி,தேங்காய்,பூ,பழங்கள்,வாழையிலை அனைத்தையும் ரெடிபண்ணவும்.காலை 9-10.30 மணிக்குள் பூஜையை முடிக்கவும்.விளக்கேத்தி லஷ்மி படத்தின் முன் வாழையிலை போட்டு அதில் பச்சரிசியை பரப்பி கலசத்தை வைக்கவும்.மஞ்சள் பிள்ளையார் பிடித்து அவருக்கு பூஜை செய்தபின் கலசத்துக்கு பூ அட்சதை தூவி மந்திரம் படித்து கற்பூர ஆரத்தி காட்டி அம்மனை நினைத்து பிரார்த்தனை செய்யவும்.

ஒன்பது இழை நூல் எடுத்து மஞ்சள் நனைத்து 9 முடிச்சு போடவும்.நடு முடிச்சில் பூ வைக்கவும்.பூஜை முடிந்து மஞ்சள் கயிற்றை வலதுகையில் கட்டவும்அதன்பின் மஞ்சள்+குங்குமம் கரைத்து ஆரத்தி எடுக்கவும்.

வரலஷ்மி விரதம் புக்கில் அனைத்து மந்திரங்களும் இருக்கும்.அதை படிக்கவும்.பூஜை முடிந்தபின் சுமங்கலிபெண்களுக்கு மஞ்சள்,குங்குமம்,வெற்றிலை,பாக்கு,பழம்,வள்ஐயல் அல்லது ரவிக்கை குடுக்கவேண்டும்.இந்த பூஜையினால் அம்மன் அருளில் அனைத்து காரியங்களும் நடக்கும்.

மாலையிலும் ஏதாவது நைவேத்தியம் செய்து கற்பூரம் காட்டவும்.மறுநாள் சனிக்கிழமை காலை அல்லது மாலையில் புனர்பூஜை செய்யவும்.கலசத்தை வடக்கு பக்கம் திருப்பி வைத்து நைவேத்தியம் செய்து பூஜையை முடிக்கவும்.அம்மனுக்கு எடுக்கும் ஆரத்தியை செடியில் ஊற்றவும்.

அரிசியை எடுத்து அரிசிப்பானையில் அவைக்கவும்.கலசநீரை செடியில் அல்லது நீட்டில் தெளிக்கலாம்.யாரும் இவ்விரதத்தை கடைப்பிடிக்கலாம்.நீங்களும் கடைபிடித்து அம்மன் அருளை பெறுக...

தேங்காய்ப்பால் சர்க்கரைப் பொங்கல்

தே.பொருட்கள்:

பச்சரிசி - 1 கப்
தேங்காய்ப்பால் - 3/4 கப்
சர்க்கரை - 3/4 கப்
உப்பு - 1 சிட்டிகை
நெய் - 3 டீஸ்பூன்
முந்திரி திராட்சை - தேவைக்கு
ஏலக்காய் - 2

செய்முறை:

*அரிசியைக் கழுவி 11/2 கப் தண்ணீரில் ஒரு பாத்திரத்தில் வேகவைக்கவும்.

* தண்ணீர் சுண்டி வரும் போது தேங்காய்ப்பால் ஊற்றவும்.

*அரிசி வேகாமல் இருந்தால் மேலும் சிறிது நீர் சேர்த்து வேகவைக்கவும்.

*அரிசி வெந்ததும் சர்க்கரை+உப்பு சேர்க்கவும்.

*நன்கு நீர் சுண்டி வரும் போது ஏலக்காய்ப்பொடி+நெய்யில் வறுத்த முந்திரி திராட்டை+மீதமிருக்கும் நெய் சேர்த்து இறக்கவும்.

பி.கு:

இந்த பொங்கல் மிகவும் சுவையாக இருக்கும்.
Thursday 30 July 2009 | By: Menaga Sathia

காளான் மசாலா

தே.பொருட்கள்:

காளான் - 500கிராம்
வெங்காயம் - 1
தக்காளி - 1
இஞ்சி பூண்டு விழுது - 1/2 டேபிள்ஸ்பூன்
மிளகாய்த்தூள் -1 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய்= தேவைக்கு
சீரகம் - 1 டீஸ்பூன்

செய்முறை:

*காளானை வெதுப்வெதுப்பான நீரில் 1 டேபிள்ஸ்பூன் எலுமிச்சைசாறு விட்டு 10 நிமிடம் வைத்து,கழுவி கட் செய்யவும்.

*வெங்காயம்+தக்காளியை நறுக்கவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு சீரகத்தைப் போட்டு தாளித்து வெங்காயம்+இஞ்சி பூண்டு விழுது+தக்காளியை ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.

*நன்கு வதங்கியதும் மிளகாய்த்தூளை போட்டு லேசாக வதக்கி காளான்+உப்பு சேர்த்து மூடி வேகவிடவும்.

*தண்ணீர் ஊற்றவேண்டாம்,காளான் நீர் விடும்.

*நீர் சுண்டும் வரை கிளறி இறக்கவும்.

பி.கு:

ரொட்டி,சப்பாத்தியுடன் சாப்பிட நன்றாகயிருக்கும்.விருப்பப்பட்டால் இதனுடன் குடமிளகாயும் சேர்க்கலாம் வாசனையாக இருக்கும்.
Tuesday 28 July 2009 | By: Menaga Sathia

நட்பு விருது

சகோதரர் வசந்த் எனக்கு நேத்து என்னையும் ஒரு தோழியா ஏத்துக்கிட்டு நட்பு விருது குடுத்தார்.கம்ப்யூட்டர் ப்ரச்சனையால் நேத்து போஸ்ட் போட முடியல.அவருக்கு என் மனமார்ந்த நன்றி.இந்த விருதின் விதிமுறைப்படி 10 நபர்களுக்கு குடுக்கனுமாம்.

நான் இந்த விருதை தரவிரும்பும் நபர்கள்

1.பாயிஷாகாதர்
2.கீதா ஆச்சல்
3.சுகைனா
4.ஹர்ஷினி அம்மா
5.ராஜ்குமார்
6.சம்பத்குமார்
7.சூர்யா கண்ணன்
8.பொன்மலர்
9.திருமதி.கண்ணா
10.சந்ரு

இந்த விருது பெற்றவர்கள் உங்களின் மற்ற நட்புகளுக்கு குடுங்கள்.நான் தராதவங்களுக்கெல்லாம் நீங்க குடுத்துடுங்க அவங்களும் எனக்கு ப்ரெண்ட்ஸ் தான்!!
Monday 27 July 2009 | By: Menaga Sathia

வெஜ் பிரியாணி(லேயர் செய்முறை)

தே.பொருட்கள்:

பாஸ்மதி அரிசி - 4 கப்
வெங்காயம்- 2
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 3
பிரியாணி மசாலாப் பொடி - 1டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 3/4 டேபிள்ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 1டேபிள்ஸ்பூன்
ரெட்கலர் - 1சிட்டிகை
மஞ்சள்கலர் - 1 சிட்டிகை
தயிர் - 125 கிராம்
உப்பு + எண்ணெய் = தேவைக்கு
நெய் - 4 டேபிள்ஸ்பூன்
புதினா - 1 கைப்பிடி
கொத்தமல்லி -1 கைப்பிடி
எலுமிச்சை சாறு - 1 டேபிள்ஸ்பூன்
பட்டன் காளான் - 6
கேரட் - 2
பீன்ஸ் -100 கிராம்
ப்ரோசன் பட்டாணி- 1 கப்
குடமிளகாய் - 1 சிறியது

தாளிக்க:

பட்டை - 2 துண்டு
கிராம்பு - 3+3
பிரியாணி இலை - 3
ஏலக்காய் - 2


தாளிக்க:

பட்டை - 2 துண்டு
கிராம்பு - 3+3
பிரியாணி இலை - 3
ஏலக்காய் - 2


செய்முறை:

*வெங்காயம்+தக்காளியை நீளவாக்கில் அரியவும்,பச்சை மிளகாயை கீறவும்.

*காய்களை நடுத்தர சைசில் நறுக்கவும்,புதினா கொத்தமல்லியை நறுக்கவும்.

*ஒரு பாத்திரத்தில் சாதம் வடிக்கும் அளவு நீர் ஊற்றவும்.அதில் 3 கிராம்பு+ஏலக்காய்+1 பட்டை துண்டு+சிறிது புதினா கொத்தமல்லி+எலுமிச்சைசாறு+சிறிது உப்பு சேர்த்து அரிசியை 3/4பாகம் வெந்ததும் வடித்து ஆறவைக்கவும்.

*வேறொரு பாத்திரத்தில் எண்ணெய்+3 டேபிள்ஸ்பூன் நெய் விட்டு தாளிக்க குடுத்துள்ள மீதமுள்ள பொருட்களைப் போட்டு தாளிக்கவும்.

*வெங்காயம்+இஞ்சிபூண்டு விழுது+தக்காளி+பச்சை மிளகாய்+பிரியாணி மசாலாப் பொடி+மிளகாய்த்தூள் அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.

*பின் கேரட்+பீன்ஸ் போட்டு நன்கு வதக்கவும்.பின் உப்பு+தயிர்+1 கப் தண்ணீர் ஊற்றி வேகவிடவும்.

*காய் வெந்ததும் காளானை போட்டு மூடவும்.தன்ணீர் ஊற்ற வேண்டாம் காளான் நீர் விடும்.

*5 நிமிடம் கழித்து பட்டாணி+குடமிளகாய் போட்டு 5நிமிடம் வேகவிடவும்.

*காய்கள் அனைத்தும் வெந்ததும் இறக்கி ஆறவிடவும்.

*ஒரு பெரிய பாத்திரத்தில் 1/2 டேபிள்ஸ்பூன் நெய் தடவி கொஞ்சம் சாதம்+க்ரேவி என மாறி மாறி போடவும்.கடைசியாக சாதம் வரும் படி போட்டு 2 கலர்களையும் ஊற்றி மீதமிருக்கும் நெய்யும் ஊற்றவும்.


*190 டிகிரி முற்சூடு செய்த அவனில் 10 நிமிடம் வைக்கவும்.

*சிறிது நேரம் கழித்து சாதத்தை ஒன்றாக உடையாமல் கிளறிவிட்டு பரிமாறவும்.

பி.கு:

அவரவர் அவனுக்கேற்ப டைம் மாறலாம்.
Friday 24 July 2009 | By: Menaga Sathia

சன்னா வாழைப்பூ வடை

தே.பொருட்கள்:

சன்னா(கொண்டைக்கடலை) - 1 கப்
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 3
பூண்டுப்பல் - 5
சோம்பு - 1 டீஸ்பூன்
வாழைப்பூ - 1 சிறியது
தயிர் - 1/2 கப்
உப்பு - தேவைக்கு
எண்ணெய் -பொரிக்க


செய்முறை :

*சன்னாவை குறைந்தது 3 மணிநேரம் ஊறவைக்கவும்.

*வெங்காயம்+பச்சை மிளகாயை பொடியாக அரியவும்.

*வாழைப்பூவை சுத்தம் செய்து தயிரில்(அதில் போட்டால் தான் பூ கறுக்காது)அரிந்து போட்டு அலசி வைக்கவும்.
*கடாயில் 1 டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு வெங்காயம்+சோம்பு+பச்சை மிளகாய்+வாழைப்பூ அனைத்தையும் லேசாக வதக்கி ஆறவைக்கவும்.

*ஆறியதும் இதனுடன் ஊறவைத்த சன்னாவை உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

*அரைத்த மாவை வடைகளாக தட்டி எண்ணெயில் பொரிக்கவும்.

பி.கு:

சன்னாவில் செய்வதால் இந்த வடை மொறுமொறுப்பாக இருக்கும்.
Thursday 23 July 2009 | By: Menaga Sathia

குடமிளகாய்த் தொக்கு

தே.பொருட்கள்:

பச்சை கலர் குடமிளகாய் - 1 பெரியது
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
மிளகாய்த்தூள் - 1/4 டேபிள்ஸ்பூன்
கெட்டி புளிசாறு - 1 டேபிள்ஸ்பூன்

தாளிக்க:

கடுகு+உளுத்தம்பருப்பு = 1 டீஸ்பூன்
கறிவேப்பில்லை - சிறிது


செய்முறை:

*குடமிளகாயை விதைகளை நீக்கி நறுக்கவும்.

*அதை லேசாக எண்ணெய் விட்டு வதக்கி,ஆறியதும் மிக்ஸியில் நீர்விடாமல் அரைக்கவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க குடுத்துள்ளவைகளை போட்டு தாளித்து மிளகாய்த்தூளை போடவும்.

*உடனே அரைத்த மிளகாய் விழுதைப் போட்டு நன்கு வதக்கவும்.

*நீர் சுண்டியதும் உப்பு+புளிசாரு சேர்த்து எண்ணெய் பிரியும்வரை வதக்கி இறக்கவும்.


பி.கு:

ரசம்,சாம்பார்,தயிர் சாதத்துக்கு மிகநன்றாக இருக்கும்.விருப்பப்பட்டால் சிறிது வெல்லம் சேர்க்கலாம்.
Tuesday 21 July 2009 | By: Menaga Sathia

மேலும் ஒரு அவார்ட்


இன்னிக்கு எனக்கு இன்னொரு அவார்ட் கிடைத்திருக்கு.என் தோழி கீதாவிடமிருந்து யம்மி ப்ளாக் அவார்ட் (Yummy Blog Award) கிடைத்ததில் ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கு.நன்றி கீதா!!
Monday 20 July 2009 | By: Menaga Sathia

தேங்காய் சாதம்

தே.பொருட்கள்:

உதிராக வடித்த சாதம் - 1 கப்
தேங்காய்த்துறுவல் - 1/2 கப்
பொரித்தஅப்பளப்பூ - 10
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:

கடுகு+உளுத்தம்பருப்பு = 1 டீஸ்பூன்
கடலைப்பருப்பு - 3/4 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பில்லை - சிறிது
காய்ந்த மிளகாய்- 3
முந்திரிப்பருப்பு - விருப்பத்துக்கு

செய்முறை:

*பொரித்த அப்பளப்பூவை நொறுக்கவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க குடுத்துள்ள பொருட்களைப் போட்டு தாளித்து தேங்காய்த்துருவலை போட்டு நன்கு வதக்கவும்.

*அதனுடன் உப்பு+நொறுக்கிய அப்பளப்பூவை போட்டு கிளறி இறக்கவும்.

*ஆறியதும் சாதத்தை போட்டு கிளறி பரிமாறவும்.

பி.கு:

இது செய்வதற்க்கும் ரொம்ப ஈஸி.வறுவலுடன் சாப்பிட நன்றாக இருக்கும்.
Sunday 19 July 2009 | By: Menaga Sathia

எனக்கும் அவார்ட் கிடைச்சிருக்கு


இன்னிக்கு காலைல குறை ஒன்றும் இல்லை (அட,அவர் பெயரே அதாங்க,நிஜப்பெயர் ராஜ்குமார் சின்னசாமி ) தம்பி எனக்கு அவார்ட் குடுத்திருப்பதாக பின்னுட்டம் போட்டிருந்தார்.படித்ததும் ஒரே மகிழ்ச்சி.நான் ப்ளாக் ஆரம்பித்ததே ஒரு ஆச்சர்யம் தான்.என் ப்ரெண்ட்காக ஒரு ப்ளாக் ஆரம்பித்தேன் அப்புறம் அப்படியே விட்டாச்சு.சாட்டிங்ல தோழி ஹர்ஷினி அம்மா கிட்ட இதப்பத்தி சொன்னபோது அவங்கதான் சொன்னாங்க.எதுவேணும்னாலும் எழுதலாம்,உங்க சமையல் குறிப்புகூட எழுதுங்கன்னு சொன்னாங்க.அதான் எனக்கு கிடைத்த ஆரம்பமும்,ஒரு இன்ஸ்ப்ரேஷ்னும் கூட.நான் ஆரம்பித்து 7 மாதமாகுது,கிட்டத்தக்க 73 இடுகையும்,51 பாலோவர்ஸும் பெற்றிருக்கேன்.அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்!!நான் வாங்கிய விருதை 6 பேருக்கு மட்டும் தான் குடுக்கனும்மாம்.ஆகவே நான் இந்த விருதை அளிக்க விரும்பும் நபர்கள்....


1.சம்பத்குமார் : இவருடைய அனைத்து இடுகைகளும் ரொம்ப நல்லாயிருக்கும்.ப்ளாக் பத்தி தெரியாதவங்க அவர் ப்ளாக்கிலிருந்து நிறைய தெரிந்துக் கொள்ளலாம்.தற்போது அவர் பிஸின்னு நினைக்கிறேன்.

2.பாயிஷாகாதர்: இவங்களின் கைவேலைப்பாடுகள் அனைத்தும் எனக்கு ரொம்ப பிடிக்கும்.தற்போது அவங்களின் குறிப்புகள் லேடீஸ் ஸ்பெஷல் புக்ல கூட வருது.3 ப்ளாக் வைத்திருக்காங்க கைவேலைப்பாடு,இனிய இல்லம்,அழுகு குறிப்புகள்.எல்லாமே பயனுள்ளதாவும்,எளிமையாவும் இருக்கும்.

3.ஹர்ஷினி அம்மா : இவங்க சமையல்லையும்,கைவேலைப்பாடுகளிலும் எக்ஸ்பர்ட்.அவங்களின் ஹர்ஷினிக்காக ப்ளாக்கிலிருந்து தான் கிட்ஸ் பாட்டுகள் கத்துக்கிட்டு என் பொண்ணுக்கு பாடிக்கட்டுறேன்.

4.சுகைனா: இவங்க எல்லாத்திலயும் டாப்.ஹஜ் கட்டுரை படித்து இவங்களின் ஞாபகசக்தி கண்டு வியந்திருக்கேன்.அதோடு சிறுகதை,தொழில்நுட்பம்,உண்மைக் கதைன்னு எல்லாம் எழுதி கலக்குறாங்க.

5 சூர்யா கண்ணன்:இவரின் தொழில்நுட்ப போஸ்ட் எல்லாம் அருமை.எளிதில் புரியும் படி இருக்கும்.தற்போது CAD கற்றுக்கொள்வோம் என்னும் இடுகை ரொம்ப நல்லா புரியும்படி போட்டிருக்கிரார்.எனக்கு இந்த போஸ்ட் ரொம்ப பிடிக்கும்.

6.கீதா ஆச்சல் : இவங்களும் சமையல்+க்ராப்ட் ஒர்க் எல்லாத்திலயும் சூப்பர்.இவங்க சமையல் ரொம்ப ஈஸியாவும்,குழந்தைகலுக்கான குறிப்பாகவும் இருக்கும்.


லிஸ்ட்ல இன்னும் நிறைய பேர் இருக்காங்க.ஆனா 6 பேர் மட்டும் என்பதால் இட்துடன் முடித்துக் கொள்கிறேன்.மற்றவர்களும் அவங்க விருப்பபட்ட 6 பேருக்கு இவ்விருதினை வழங்கவும்.
Friday 17 July 2009 | By: Menaga Sathia

32 கேள்விகளும் பதில்களும்

32 கேள்விகள் - தொடர்ப்பதிவு

இந்த தொடர் பதிவு எழுத அழைத்த எனதருமைத் தோழி பாயிஷாகாதருக்கு நன்றி,நன்றி!!


1.உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?

எங்கப்பா வைத்த பெயர் மேனகா,அதனால் இந்த பெயர் பிடிக்கும் (சின்ன வயசுல இந்த பெயர் பிடிக்காது,அப்போ அப்பாகிட்ட அழுத காலமும் உண்டு.இப்போ தான் இந்த பெயரின் அருமை தெரியுது)

2.கடைசியாக அழுதது எப்பொழுது?

15 வருடத்துக்கு முன் என் தந்தை இறந்த போது,இப்போழுதும் அழுதேன் நேற்று..

3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

ரொம்ப பிடிக்கும்..

4.பிடித்த மதிய உணவு என்ன?

கல்யாண கேசரி,வத்தக்குழம்பு,ரசகுல்லா.....லிஸ்ட்ல இன்னும் நிறைய இருக்கு..

5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?

கிடைத்த நட்பை பத்திரமா வச்சிருப்பேன், புதிதாக என்றால் யோசிப்பேன்..

6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?

அருவியில் பிடிக்கும்...

7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

கண்கள்..

8.உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?

பிடித்தது மற்றவர்களிடம் அன்பாய் இருப்பது – பிடிக்காதது கோபம்

9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?

பிடித்தது: கோபப்பட்டு 10 நிமிடத்தில் என்னிடம் பேசுவார் (நான் எப்படின்னு மட்டும் கேட்கக்கூடாது)

பிடிக்காதது: அதேகோபம் தான்


10.யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?

அம்மா,அப்பா..

11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?

ரோஸ் கலர்

12.என்ன பார்த்து//கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?

என் தோழி ஹர்ஷினி அம்மா ப்ளாக்கிலிருந்து கிட்ஸ் பாட்டு என் மகளுக்காக கேட்கிறேன்.

13.வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?

நீலம்,கருப்பு

14.பிடித்த மணம் ?

மண்ணென்ணெய்,மல்லிக்கைப்பூ வாசனை,

15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?

* சுகைனா சிறுகதைகள்,ப்ளாக் பத்தி இடுகை என அனைத்தும் பிடிக்கும்..

* கீதா ஆச்சல் இவங்களின் சமையல் குழந்தைகளுக்கு பிடித்தமானதகாவும்,ஈஸியாகவும் இருக்கும்.

*சம்பத்குமார் இவரின் அனைத்து இடுகைகளும் பிடிக்கும்.


16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப்பிடித்த பதிவு ?

பாயிஷாகாதர்,அவங்களின் அனைத்து கைவேலைப்பாடுகள்,டிப்ஸ்கள் ரொம்ப பிடிக்கும்.

17. பிடித்த விளையாட்டு?

சுடோகு,கண்ணாமூச்சி..

18.கண்ணாடி அணிபவரா?

இல்லை

19.எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?

நகைச்சுவை+த்ரில்லர் திரைப்படங்கள்.

20.கடைசியாகப் பார்த்த படம்?

வாமணன்

21.பிடித்த பருவ காலம் எது?

மழை காலம்.

22.என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?

நெட்ல ரமணிசந்திரன் கதை..

23.உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?

வாரம் ஒரு தடவையாவது.

24.பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?

மனதுக்கு பிடித்த மெல்லிசை. அதிக சத்தம் பிடிக்காது.

25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?

ப்ரான்ஸ்.

26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

நன்றாக கணக்கு போடுவது.

27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

நம்பிக்கை துரோகம்.

28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

அழுகை

29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?

மைசூர்,தாஜ்மகால்

30.எப்படி இருக்கணும்னு ஆசை?

நான் நானாகவே இருக்க ஆசை

31.கனவன் இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?

எதுவுமில்லை

32.வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?

"Demain Demain Ne Viendrais Jamais". இது ஒரு ப்ரெஞ்ச் பழமொழி.நாளை நாளை என்பது இல்லை என்றே அர்த்தம்.அதனால் இன்னிக்கு என்ன நினைக்கிறோமோ அதன்படி செய்து வாழனும்.
Thursday 16 July 2009 | By: Menaga Sathia

வெந்தய சாம்பார்

தே.பொருட்கள்:

துவரம் பருப்பு - 1/2 கப்
வெந்தயம் - 1 1/2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
புளி - 1கோலிகுண்டளவு
கொத்தமல்லித்தழை - சிறிது
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
சாம்பார் வெங்காயம் - 15
தக்காளி - 2
பூண்டுப்பல் - 5
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:

கடுகு -1 டீஸ்பூன்
வெ.உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பில்லை - சிறிது
பெருங்காயம் - வாசனைக்கு
காய்ந்த மிளகாய் - 2

செய்முறை:

*பருப்பை 20 நிமிடம் ஊறவைத்து,அதனுடன் வெந்தயம்+மஞ்சள்தூள்+பூண்டு+தக்காளி சேர்த்து வேகவைக்கவும்.

*வெங்காயத்தை பொடியாக நறுக்கவும்.பச்சை மிளகாயை கீறவும்.புளியை 1/4 கப் அளவில் கரைத்து வைக்கவும்.

*பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தாளிக்க குடுத்துள்ளவைகளை போட்டு தாளித்து வெங்காயம்+பச்சை மிளகாயை போட்டு வதக்கவும்.

*வதங்கியதும் புளிகரைசல்+உப்பு+வெந்த பருப்பு சேர்த்து 10 நிமிடம் கொதிக்க வைத்து கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.
Monday 13 July 2009 | By: Menaga Sathia

பேல் பூரி(Bhel poori)

தே.பொருட்கள்:

பூரி - 5
வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு - 1
வெங்காயம் - 1 சிறியது
தக்காளி - 1 சிறியது
ஓமப்பொடி - 1/4 கப்
துருவிய மாங்காய் - 2 டேபிள்ஸ்பூன்
துருவிய கேரட் - 2 டேபிள்ஸ்பூன்
துருவிய வெள்ளரி - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு
இனிப்பு சட்னி - 2 டேபிள்ஸ்பூன்
புதினா சட்னி - 2 டேபிள்ஸ்பூன்
புதினா சட்னி :

புதினா - 1 கைப்பிடி
கொத்தமல்லி - 1 கைப்பிடி
வெல்லம் - 1 சிறுகட்டி
பச்சை மிளகாய் - 1
எலுமிச்சை சாறு - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு

* இவை அனைத்தும் மிக்ஸியில் அரைக்கவும்.

இனிப்பு சட்னி:

பேரிச்சை பழம் - 5
உலர் திராட்சை - 5
புளி - 1 கொட்டைபாக்களவு
மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
வெல்லம் - 1 சிறு கட்டி

* இவை அனைத்தும் 1/2 கப் தண்ணீர் விட்டு குக்கரில் 3 விசில் வரும் வரை வேகவைத்து,அரைத்து வடிக்கட்டவும்.

செய்முறை:

*பூரியை நொறுக்கிக் கொள்ளவும்.வெங்காயம்+தக்காளியை விதை நீக்கி பொடியாக அரியவும்.

*அனைத்தையும் ஒன்றாக கலந்து பறிமாறவும்.

பி.கு:

இதில் 1/4 கப் பொரி சேர்க்கவும்.எனக்கு கிடைக்காததால் சேர்க்கவில்லை.விருப்பப்பட்டால் பொடியாக அரிந்த கொத்தமல்லித்தழையும் சேர்க்கலாம்.
Thursday 9 July 2009 | By: Menaga Sathia

தக்காளித் தொக்கு

தே.பொருட்கள்:

தக்காளி - 6 பெரியது
உப்பு - தேவைக்கு
புளி - 1 சின்ன உருண்டை
வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
வரமிளகாய்த்தூள் - 1/2 டேபிள்ஸ்பூன்

தாளிக்க:

கடுகு - 1/2 டீஸ்பூன்
பெருங்காயம் - வாசனைக்கு
நல்லெண்ணெய் - 1 குழிக்கரண்டி

செய்முறை:

* தக்காளியை 4ஆக அரிந்து ஒரு பாத்திரத்தில் உப்பை கரிக்கும் அளவிற்க்கு போடவும்.

*அதனுடன் புளியை கொட்டையில்லாமல் தக்காளியின் நடுவில் அமுங்குவது போல் போடவும்.

*மறுநாள் காலையில் மூடியை திறந்தால் ஒரு வாசனை வரும்,அதனால் பரவாயில்லை.தக்காளியை மட்டும் தனியாக எடுத்து ஒரு தட்டில் போட்டு வெயிலில் காயவைக்கவும்.

*2 நாள் காய்ந்ததும் மிக்ஸியில் மைய அரைக்கவும்.

*வெரும் கடாயில் வெந்தயத்தை வறுத்துப் பொடிக்கவும்.

*கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க குடுத்துள்ளவைகளைப் போட்டு தாளித்து மிளகாய்த்தூளைப்போடவும்।

*உடனே அரைத்த தக்காளி விழுதைப் போட்டு நன்கு கிளறவும்.

*நன்கு சுருண்டு வரும் போது வெந்தயப்பொடி போட்டு இறக்கவும்.

பி.கு:

*விருப்பப்பட்டால் சிறுதுண்டு வெல்லம் சேர்க்கலாம்.

*இட்லி,தோசை,சாதம் என அனைத்திற்க்கும் நன்றாக இருக்கும்.
Monday 6 July 2009 | By: Menaga Sathia

பால் கொழுக்கட்டை

இந்த இனிப்பை முதன்முதலில் பல் முளையும் குழந்தைகளுக்கு செய்து குடுப்பாங்க.என் பொண்ணுக்கு முதல் பல் வந்து நான் செய்து குடுத்த பால் கொழுக்கட்டை!!

தே.பொருட்கள்:

அரிசிமாவு -3/4 கப்+2 டேபிள்ஸ்பூன்
சக்கரை - 1/4 கப் +1 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு
முந்திரி - விருப்பத்துக்கு
நெய் - 1 டேபிள்ஸ்பூன்
கெட்டி தேங்காய்ப்பால் - 1/2 கப்


செய்முறை:

*3/4 கப் அரிசிமாவில் உப்பு+1டேபிள்ஸ்பூன் சர்க்கரை சேர்த்து கெட்டியாக பிசைந்து படத்தில் உள்ளவாறு உருட்டிக் கொள்ளவும்.

*அதை 5 நிமிடம் உலர வைத்து ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.

*பின் 2 டேபிள்ஸ்பூன் அரிசி மாவை 1 கப் தண்ணீரில் நன்கு நீர்க்க கரைத்து அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்.

*கட்டி விழாமல் தொடர்ந்து மாவை கலக்கி கொண்டே இருக்கனும்,மாவு வெந்துவிட்டதா என பார்க்க கையால் தொட்டுப் பார்த்தால் ஒட்டக்கூடாது.

*ஒட்டாமல் வரும் போது மீதமுள்ள சர்க்கரை+சிறிது உப்பு+வெந்த கொழுக்கட்டை சேர்த்துக் கிளறவும்.

*பின் தேங்காய்ப்பாலை உற்றி 2 நிமிடத்தில் இறக்கி,முந்திரியை நெய்யில் வறுத்து சேர்க்கவும்.

பி.கு:

இந்த இனிப்பு அவ்வளவு சுவையாக இருக்கும்.
Thursday 2 July 2009 | By: Menaga Sathia

கோஸ் இறால் பொரியல்

தே.பொருட்கள்:

கோஸ் - 1/4 கிலோ
குட்டி இறால் - 100 கிராம்
முட்டை - 2
மிளகாய்த்தூள் -3/4 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
வெங்காயம் - 1 சிறியது
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:

கடுகு -1 டீஸ்பூன்
வெ.உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பில்லை - சிறிது

செய்முறை:

*கோஸ்+வெங்காயம் பொடியாக நறுக்கவும்,இறாலை சுத்தம் செய்யவும்.

*இறாலை கடாயில் எண்ணெய் விட்டு உப்பு+சிறிது மஞ்சல்தூள் சேர்த்து வதக்கி தனியாக வைக்கவும்.

*கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க குடுத்துள்ள பொருட்களைப் போட்டு தாளித்து வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.

*பின் கோஸ்+உப்பு+மஞ்சள்தூள்+மிளகாய்த்தூள் சேர்த்து தேவையானளவு நீர் விட்டு வேகவிடவும்.

*வெந்ததும் வதக்கிய இறாலை போடவும்,நீர் நன்றாக சுண்டியதும் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு கிளறி வெந்ததும் இறக்கவும்.
01 09 10