Thursday 9 July 2009 | By: Menaga Sathia

தக்காளித் தொக்கு

தே.பொருட்கள்:

தக்காளி - 6 பெரியது
உப்பு - தேவைக்கு
புளி - 1 சின்ன உருண்டை
வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
வரமிளகாய்த்தூள் - 1/2 டேபிள்ஸ்பூன்

தாளிக்க:

கடுகு - 1/2 டீஸ்பூன்
பெருங்காயம் - வாசனைக்கு
நல்லெண்ணெய் - 1 குழிக்கரண்டி

செய்முறை:

* தக்காளியை 4ஆக அரிந்து ஒரு பாத்திரத்தில் உப்பை கரிக்கும் அளவிற்க்கு போடவும்.

*அதனுடன் புளியை கொட்டையில்லாமல் தக்காளியின் நடுவில் அமுங்குவது போல் போடவும்.

*மறுநாள் காலையில் மூடியை திறந்தால் ஒரு வாசனை வரும்,அதனால் பரவாயில்லை.தக்காளியை மட்டும் தனியாக எடுத்து ஒரு தட்டில் போட்டு வெயிலில் காயவைக்கவும்.

*2 நாள் காய்ந்ததும் மிக்ஸியில் மைய அரைக்கவும்.

*வெரும் கடாயில் வெந்தயத்தை வறுத்துப் பொடிக்கவும்.

*கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க குடுத்துள்ளவைகளைப் போட்டு தாளித்து மிளகாய்த்தூளைப்போடவும்।

*உடனே அரைத்த தக்காளி விழுதைப் போட்டு நன்கு கிளறவும்.

*நன்கு சுருண்டு வரும் போது வெந்தயப்பொடி போட்டு இறக்கவும்.

பி.கு:

*விருப்பப்பட்டால் சிறுதுண்டு வெல்லம் சேர்க்கலாம்.

*இட்லி,தோசை,சாதம் என அனைத்திற்க்கும் நன்றாக இருக்கும்.

19 பேர் ருசி பார்த்தவர்கள்:

GEETHA ACHAL said...

மிகவும் அருமையாக வித்தியசமாக இருக்கின்றது. இப்படியா மேனகா ஆசையை துண்டுகின்றது...

ரவி said...

சூப்பர்...முயற்சி செய்யவேண்டியதுதான்...

Unknown said...

மாமி வீகெண்ட் ட்ரை பண்ணி பார்க்கிறேன்..பார்க்க அழகா இருக்கு!!!!

Admin said...

ஆஹா அசத்துறிங்க.... நல்ல சுவையாக இருக்கிறது.... உங்கள் வலைப்பதிவு.....

நம்ம வலைப்பக்கமும் வந்து பாருங்க பிடிச்சிருந்தா அடிக்கடி வாங்க...

குறை ஒன்றும் இல்லை !!! said...

HI Ka..I think u have double tallent...
other is photography :)

பொன் மாலை பொழுது said...

இந்த இன்டர்நெட் சமுத்திரத்தில் மனதுக்கும் கண்ணுக்கும் இதமாக இருப்பவைகள் இதுபோன்ற Recipe வகைகளும் அவைகளின் அழகான படங்களுமே. உங்கள் பிளாக் வித்யாசமானது உபயோகமானது.மற்றவைகள் எல்லாம் ஏதோ ஒரு வகையில் மனதில் வன்மத்தை வளர்க்கும் விதமாக இருக்க உங்கள் பிளாக் தனித்து நின்று ஒளிவீசு கிறது.
வளர்க உங்களின் இந்த சேவை.

SN said...

its really nice. I think , this is the very nice combination to chappathi.


I am waiting for ur next receipe

Menaga Sathia said...

தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி கீதா!!.டயட்லாம் மூட்டை கட்டுங்க,செய்து பாருங்க.

Menaga Sathia said...

தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி செந்தழல் ரவி.நிச்சயம் செய்து பாருங்க நன்றாக இருக்கும்.

Menaga Sathia said...

ட்ரை பண்ணுங்க மாமி,தங்கள் கருத்துக்கு மிக்க நன்றிப்பா!!

Menaga Sathia said...

தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி சந்ரு!!.

உங்களின் வலைப்பக்கமும் வந்தேன் பார்த்தேன்.கவிதை,புகைப்படங்கள் என மிக அழகாக இருக்கு.

Menaga Sathia said...

நிசமாதான் சொல்றிங்களா நான் எடுக்கும் போட்டோஸ்லாம் அழகாவா இருக்கு,உண்மையா சொல்லுங்க ராஜ்.தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி தம்பி!!

Menaga Sathia said...

தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி மாணிக்கம்!!
உங்களின் பின்னுட்டம் மிக்க மகிழ்ச்சியாக இருக்கு.

Menaga Sathia said...

தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி SN !! ஆமாம் நீங்கள் சொல்வது போல் சப்பாத்திக்கும் ரொம்ப ஜோராயிருக்கும்.

kavi.s said...

மேனகா பார்க்கவே சூப்பரா இருக்கு.எனக்கு 2 சந்தேகம்,எதுக்கு முன்னாடி நாளே புளியை தக்காளியின் நடுவில் வைக்க வேண்டும்?

எதுக்கு 2 நாள் தக்காளியை காய வைக்கணும்.
நாங்க தக்காளியை அப்பவே அரச்சு அப்பவே செய்வோம்,அதனாலதான் கேட்டேன்.

Menaga Sathia said...

தக்காளியும் புளியையும் ஊறவைப்பது இன்னும் நல்ல சுவை தரும்,அரைப்பதற்க்கும் ரொம்ப ஈஸியா இருக்கும் கவி.அப்பவே தக்காளியை அரைத்து செய்வதும் நல்லாயிருக்கும் அது ஒரு டேஸ்டும்,இப்படி செய்வது ஒரு டேஸ்டும் வேறுவிதமா நல்லா இருக்கும்.தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி கவி!!

ஸ்ரீ.கிருஷ்ணா said...

தக்காளித் தொக்கு அசத்தல்....

சத்ரியன் said...

ஆஹா..! சூப்பர் சமையல் குறிப்புகளா இருக்கே உங்க வலைப்பக்கத்துல!

இனி சமைக்கறதுக்கு முன்னாடி, ஒரு 5 நிமிஷம் உங்க வலைப்பக்கத்தைப் புரட்டி பாத்துட்டு என்ன சமைக்கலாம்னு முடிவு பண்ணிக்கலாம்.

Menaga Sathia said...

நன்றி புதிய மனிதா!!

நன்றி சத்ரியன்!!

01 09 10