Monday 6 July 2009 | By: Menaga Sathia

பால் கொழுக்கட்டை

இந்த இனிப்பை முதன்முதலில் பல் முளையும் குழந்தைகளுக்கு செய்து குடுப்பாங்க.என் பொண்ணுக்கு முதல் பல் வந்து நான் செய்து குடுத்த பால் கொழுக்கட்டை!!

தே.பொருட்கள்:

அரிசிமாவு -3/4 கப்+2 டேபிள்ஸ்பூன்
சக்கரை - 1/4 கப் +1 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு
முந்திரி - விருப்பத்துக்கு
நெய் - 1 டேபிள்ஸ்பூன்
கெட்டி தேங்காய்ப்பால் - 1/2 கப்


செய்முறை:

*3/4 கப் அரிசிமாவில் உப்பு+1டேபிள்ஸ்பூன் சர்க்கரை சேர்த்து கெட்டியாக பிசைந்து படத்தில் உள்ளவாறு உருட்டிக் கொள்ளவும்.

*அதை 5 நிமிடம் உலர வைத்து ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.

*பின் 2 டேபிள்ஸ்பூன் அரிசி மாவை 1 கப் தண்ணீரில் நன்கு நீர்க்க கரைத்து அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்.

*கட்டி விழாமல் தொடர்ந்து மாவை கலக்கி கொண்டே இருக்கனும்,மாவு வெந்துவிட்டதா என பார்க்க கையால் தொட்டுப் பார்த்தால் ஒட்டக்கூடாது.

*ஒட்டாமல் வரும் போது மீதமுள்ள சர்க்கரை+சிறிது உப்பு+வெந்த கொழுக்கட்டை சேர்த்துக் கிளறவும்.

*பின் தேங்காய்ப்பாலை உற்றி 2 நிமிடத்தில் இறக்கி,முந்திரியை நெய்யில் வறுத்து சேர்க்கவும்.

பி.கு:

இந்த இனிப்பு அவ்வளவு சுவையாக இருக்கும்.

16 பேர் ருசி பார்த்தவர்கள்:

Jaleela Kamal said...

மேனகா பால் கொழுக்கட்டை அருமை. நாங்களும் வேறு விதமாக செய்வோம்.

அதே இரண்டு முன்று வகை இருக்கு, அதில் ஒன்று கூட tk vil ஸ்வீட் தக்குடி என்று கொடுத்தேனே..

GEETHA ACHAL said...

எங்கள் வீட்டிலும் அம்மா செய்யும் ஸ்வீட் வகைகளில் எனக்கு மிகவும் விருப்பமான ஒன்று இந்த பால் கொழுகட்டை.
எங்கள் வீட்டில் அவ்வளவு பேருக்கு செய்வது என்பதால் அம்மா அதனை முருக்கு பிழியும் அச்சில் போட்டு பிழிந்து வேகவைத்துவிடுவாங்க...இதனால் நேரமும் மிச்சம்...
மிகவும் பொருமையாக உருட்டி இருக்கின்றிங்க.....

Malini's Signature said...

பால் கொழுக்கட்டை சுப்பர்... ஆனா எங்க வீட்லே வேற மாதிரி அம்மா பன்னுவாங்க.

சிவானி குட்டிக்கு பல் முளைச்சுடுச்சா!!!! வாழ்த்துகள் சிவானிகுட்டி.

ஹர்ஷினி பல் முளைத்ததும் முருக்குதான் விரும்பி சாபுடுவா!! :-)

dsfs said...

see it useful post


உங்கள் வலைப்பக்கத்திற்கு Favicon அல்லது லோகோ சேர்ப்பது எப்படி ?

சூர்யா ௧ண்ணன் said...

http://suryakannan.blogspot.com/2009/07/cad-2.html

Menaga Sathia said...

tk ல உங்க ஸ்வீட் தக்கடி குறிப்பு பார்த்திருக்கேனக்கா!!தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!!

Menaga Sathia said...

//எங்கள் வீட்டில் அவ்வளவு பேருக்கு செய்வது என்பதால் அம்மா அதனை முருக்கு பிழியும் அச்சில் போட்டு பிழிந்து வேகவைத்துவிடுவாங்க...இதனால் நேரமும் மிச்சம்...//
இந்த ஐடியாவும் நல்லாயிருக்குப்பா.இது உருட்டி செய்யும் போது பொருமை போய்டுச்சு.நன்றி கீதா!!

Menaga Sathia said...

நீங்க செய்யும் முறையும் உங்க ப்ளாக்கில் போடுங்க ஹர்ஷினி அம்மா.
//சிவானி குட்டிக்கு பல் முளைச்சுடுச்சா!!!! வாழ்த்துகள் சிவானிகுட்டி.// தங்கள் வாழ்த்திற்க்கும் குறிப்புக்கும் நன்றிப்பா!!.
என் பொண்ணுக்கு முறுக்கு குடுத்தால் அப்படியே முழுங்க பாக்குறாங்க பயமா இருக்கு.

Menaga Sathia said...

தங்கள் கருத்திற்க்கு மிக்க நன்றி பொன்மலர்!!

Menaga Sathia said...

உங்கள் பதிவைப் பார்த்தேன் சூர்யா கண்ணன்.பதில் கண்டிப்பாக போடுகிறேன்.

Unknown said...

நானும் வேற மாதிரி தான் செய்வேன்,ஆனால் நான் பண்றதவிட இது வித்தியாசமா நல்லா இருக்கும்போல தெரியுது, செய்துபார்க்கனும் மாமி! ஆனால் உங்க மருமகனுக்கு சுத்தமா பிடிக்கிறதில்ல,பல் வரும்போது கொடுப்பாங்களா?எனக்கு தெரியாது இல்லன்னா அப்பவே கொடுத்து பழக்கி இருக்கலாம்..

Menaga Sathia said...

செய்து பாருங்க,ரொம்ப நல்லாயிருக்கும் மாமி.ஆமாம்பா இந்த இனிப்பை பல் வரும் போது குடுங்க.இப்பவும் செய்து குடுக்கலாம்.தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி மாமி!!

நாமக்கல் சிபி said...

படிக்கும்போதே எச்சில் ஊறுதே!

தட்டை ரொம்ப லாங் ஷாட்ல வெச்சி படம் பிடிச்சீங்களோ!

பல்லி மிட்டாய் சைஸுக்கு தெரியுது கொழுக்கட்டைகள்!

Menaga Sathia said...

//தட்டை ரொம்ப லாங் ஷாட்ல வெச்சி படம் பிடிச்சீங்களோ!

பல்லி மிட்டாய் சைஸுக்கு தெரியுது கொழுக்கட்டைகள்!//

இந்த குறிப்பிற்க்கு கொழுக்கட்டைகள் பல்லி மிட்டாய் சைஸில் தான் போடுவாங்க சகோதரரே.தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி சகோதரரே!!

Nithu Bala said...

wow! thank you dear..entha recipe different ta irukku..book marked..

Menaga Sathia said...

மிக்க நன்றி நிது!!

01 09 10