Thursday 2 July 2009 | By: Menaga Sathia

கோஸ் இறால் பொரியல்

தே.பொருட்கள்:

கோஸ் - 1/4 கிலோ
குட்டி இறால் - 100 கிராம்
முட்டை - 2
மிளகாய்த்தூள் -3/4 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
வெங்காயம் - 1 சிறியது
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:

கடுகு -1 டீஸ்பூன்
வெ.உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பில்லை - சிறிது

செய்முறை:

*கோஸ்+வெங்காயம் பொடியாக நறுக்கவும்,இறாலை சுத்தம் செய்யவும்.

*இறாலை கடாயில் எண்ணெய் விட்டு உப்பு+சிறிது மஞ்சல்தூள் சேர்த்து வதக்கி தனியாக வைக்கவும்.

*கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க குடுத்துள்ள பொருட்களைப் போட்டு தாளித்து வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.

*பின் கோஸ்+உப்பு+மஞ்சள்தூள்+மிளகாய்த்தூள் சேர்த்து தேவையானளவு நீர் விட்டு வேகவிடவும்.

*வெந்ததும் வதக்கிய இறாலை போடவும்,நீர் நன்றாக சுண்டியதும் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு கிளறி வெந்ததும் இறக்கவும்.

7 பேர் ருசி பார்த்தவர்கள்:

சென்ஷி said...

:((

செய்முறையை எழுதறதோட மாத்திரம் நிறுத்தியிருந்தா பரவால்ல.இப்படி போட்டோவும் போட்டு ஆசைய தூண்டி விட்டுடறீங்க!

Menaga Sathia said...

வாங்க சென்ஷி தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!!

Jaleela Kamal said...

கோஸ் இறால் மேனகா நீஙக எப்போதும் குட்டி இறாலில் தான் செய்கிறீர்கள், அங்கு பிரெஷ் பெரிய இறால் கிடைக்குதா?

நல்ல அருமையான குறிப்பு, இதே போல் கொத்துகறியில் செய்து பூரணம் போல் உள்ளே வைத்தாலும், எக் பரோட்டா செய்தாலும் நல்ல இருக்கும்.

Menaga Sathia said...

பொரியலுக்கு எப்போழுதும் குட்டி இறால் தான் யூஸ் செய்வேன்.பெரிய இராலும் இங்கு கிடைக்குதுக்கா.கொத்துக்கறியிலும்,பரோட்டாவிலும் செய்து பார்க்கனும் நீங்க சொன்ன மாதிரி.நன்றி ஜலிலாக்கா!!

Unknown said...

நஅன் கொஞ்சம் விதியாசமாக செய்வேன்.. இந்த முறை நல்லா இருக்கு.. செய்து பார்க்கிறேன் மேனகா

Starjan (ஸ்டார்ஜன்) said...

இறால் கறி நான் விரும்பி சாப்பிடுவேன். கோஸ்ஸுடன் சேர்த்து சாப்பிட்டால் ரொம்ப நல்லாருக்கும்.. செய்திட வேண்டியதுதான்.

Menaga Sathia said...

நன்றி சிநேகிதி!! செய்து பார்த்து சொல்லுங்கள்..உங்கள் செய்முறையும் போடுங்கள்..

நன்றி சகோ!! செய்து பார்த்து சொல்லுங்கள்...

01 09 10