Monday 29 June 2009 | By: Menaga Sathia

பருப்பு சாதம்


தே.பொருட்கள்:

பொன்னி அரிசி - 11/2 கப்
துவரம் பருப்பு - 1/2 கப்
சாம்பார் வெங்காயம் - 10
தக்காளி - 1
பூண்டுப் பல் - 4
பச்சை மிளகாய் - 3
மஞ்சள்தூள் - 1 சிட்டிகை
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
பட்டர் - 1 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பில்லை,கொத்தமல்லி - சிறிது

தாளிக்க:

பட்டை - 1 சிறு துண்டு
கிராம்பு - 3
சீரகம் - 1 டீஸ்பூன்
வெந்தயம் - 1/4 டீஸ்பூன்



செய்முறை:

*பருப்பை 20 நிமிடம் ஊறவைக்கவும்.

*வெங்காயம்+பூண்டு+தக்காளி+பச்சை மிளகாயை அரியவும்.

*குக்கரில் பட்டர்+எண்ணெய் ஊற்றி தாளிக்க குடுத்துள்ள பொருட்களைப் போட்டு தாளிக்கவும்.

*பின் வெங்காயம்+தக்காளி+பூண்டு+பச்சை மிளகாய்+கறிவேப்பில்லை,கொத்தமல்லி போட்டு வதக்கவும்.

*பொன்னி அரிசிக்கு 1 கப்=2 கப் தண்ணீர் அளவு,ஆக 11/2 கப் அரிசிக்கு=3 கப் தண்ணீர் மற்றும் 1/2 கப் துவரம்பருப்புக்கு 1 கப் தண்ணீர் அளவு.

*வதங்கியதும் அரிசி+துவரம்பருப்பு+உப்பு+மஞ்சள்தூள்+4 கப் தண்ணீர் வைத்து குக்கரை மூடவும்.

*ஆவி வந்ததும் வெயிட் போட்டு 3 விசில் அல்லது 10 நிமிடம் கழித்து இறக்கவும்.

*ப்ரெஷர் அடங்கியதும் சாதத்தை உடையாமல் கிளறவும்.

பி.கு:

இதற்க்கு தொட்டுக் கொள்ள அப்பளம்,ஊறுகாய் இருந்தாலே போதும்,ரொம்ப நல்லாயிருக்கும்.

19 பேர் ருசி பார்த்தவர்கள்:

GEETHA ACHAL said...

நன்றாக இருக்கின்றது. என்னுடைய பொன்னுக்கு இப்படி தான் செய்து தருவேன். விரும்பி சாப்பிடுவாள். ஆனால் இதுநாள் வரை பட்டை, கிராம்பு இதில் சேர்த்தது இல்லை..அடுத்த முறை செய்யும் பொழுது அப்படி செய்து பார்கிறேன்.

Jaleela Kamal said...

அருமையான பருப்பு சாதம் பார்க்கவே நல்ல இருக்கு. நாங்களும் இப்படி தான் செய்வோம், நீங்கள் சாம்பார் வெங்காயம் சேர்த்து இருக்கீங்க, உடம்புக்கு ரொம்ப நல்லது. குழந்தைகளுக்கு கொடுப்பதாக இருந்தால் சிறுபருப்பில் செய்து கொடுக்கலாம்.

Menaga Sathia said...

பட்டை,கிராம்பு போட்டு செய்துபாருங்க கீதா நல்லா வாசனையா சூப்பராக இருக்கும்.நன்றி கீதா!!

Menaga Sathia said...

சிறுபருப்பில் நான் செய்ததில்லைக்கா,அடுத்த முறை செய்யும் போது அப்படி செய்கிறேன்.சாம்பார் வெங்காயம் இருந்ததால் அதை யூஸ் பண்ணேன்,இல்லைன்னா சாதா வெங்காயம் தான் சேர்த்திருப்பேன்.தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி ஜலிலாக்கா!!

SUMAZLA/சுமஜ்லா said...

வந்தாச்சு, sashiga.tk மூலம். இந்த பருப்பு சாதம் எனக்கு தெரியுமே!

Menaga Sathia said...

மிக்க நன்றி சுகைனா,இந்த சாதம் எனக்கு ரொம்ப பிடிக்கும் நொடியில் செய்து விடலாம்.

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
kavi.s said...

மேனகா சாதம் பார்க்கவே சூப்பரா இருக்கு.ஒருநாள் செய்து பார்த்து சொல்றேன்.

\\உங்களுக்கு பிடிச்சிருந்தா உங்க கருத்தை மறக்காம சொல்லிட்டு போங்க..//

நேத்துதான் உங்க‌ பிளாக்கை பார்த்தேன்,நேத்து சொல்ல‌ ம‌ற‌ந்துட்டேன் அதுதான் இன்னைக்கு வ‌ந்து சொல்லிட்டு போக‌லாம்னு வ‌ந்தேன்:)

kavi.s said...

மேனகா சாதம் பார்க்கவே சூப்பரா இருக்கு.ஒருநாள் செய்து பார்த்து சொல்றேன்.

\\உங்களுக்கு பிடிச்சிருந்தா உங்க கருத்தை மறக்காம சொல்லிட்டு போங்க..//

நேத்துதான் உங்க‌ பிளாக்கை பார்த்தேன்,நேத்து சொல்ல‌ ம‌ற‌ந்துட்டேன் அதுதான் இன்னைக்கு வ‌ந்து சொல்லிட்டு போக‌லாம்னு வ‌ந்தேன்:)

Menaga Sathia said...

வாங்க கவி,செய்து பாருங்க மசாலா வாசனையுடன் நன்றாக இருக்கும்.
//\\உங்களுக்கு பிடிச்சிருந்தா உங்க கருத்தை மறக்காம சொல்லிட்டு போங்க..//

நேத்துதான் உங்க‌ பிளாக்கை பார்த்தேன்,நேத்து சொல்ல‌ ம‌ற‌ந்துட்டேன் அதுதான் இன்னைக்கு வ‌ந்து சொல்லிட்டு போக‌லாம்னு வ‌ந்தேன்:)//
உங்களுக்கே உரிய குறும்புடன் அழகா சொல்லிருக்கிங்க.தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி கவி.அடிக்கடி வந்து கருத்து சொல்லுங்க...

GEETHA ACHAL said...

Really Nice

Malini's Signature said...

woww சிவானி குட்டி சுப்பர் ;-)

இந்த பருப்பு சாதம் எனக்கு ரொம்ப பிடிக்கும்... ஆனா என் அம்மா பாசிபருப்பு போட்டு பன்னுவாங்க அதில் நெய்விட்டு சாப்பிட்டா.....ம்ம்ம்ம்.

சரி மேனகா இன்னைக்கே உங்க வீட்டுக்கு வரவேண்டியதுதான் . :-)

Menaga Sathia said...

//woww சிவானி குட்டி சுப்பர் ;-)// நன்றி ஹர்ஷினி அம்மா!!
ஜலிலாக்கா கூட சொன்னாங்க சிறுபருப்பில் செய்தால் நன்றாக் இருக்கும்னு,அடுத்த முறை அப்படிதான் செய்யபோறேன்.
//சரி மேனகா இன்னைக்கே உங்க வீட்டுக்கு வரவேண்டியதுதான் . :-)//வாங்க வாங்க எப்போ வர்றீங்க சொல்லுங்க?

Malini's Signature said...

/வாங்க வாங்க எப்போ வர்றீங்க சொல்லுங்க?/

கண்டிப்பா ஒரு நாள் வருவேன்பா :-)

ஆனா இன்னைக்கு பருப்பு சாதம் சாப்புட்டாச்சு.

Jaleela Kamal said...

மேனகா ஷிவானி குட்டி சூப்பர், அதை விட அந்த குடிமி ரொம்ப நல்ல இருக்கு, இது போல் குழந்தைகள் குடுமி போட்டு வந்தா ஹை கொத்து மல்லி கட்டு சூப்பரா இருக்கே என்று கிண்டல் செய்வோம்.

Menaga Sathia said...

கண்டிப்பா வீட்டுக்கு வாங்க ஹர்ஷினி அம்மா எதிர்ப்பர்க்கிறேன்.பருப்பு சாதம் நீங்க சிறு பருப்பில் செய்தீங்களா?

Menaga Sathia said...

தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி ஜலிலாக்கா.//இது போல் குழந்தைகள் குடுமி போட்டு வந்தா ஹை கொத்து மல்லி கட்டு சூப்பரா இருக்கே என்று கிண்டல் செய்வோம்.// ஹா ஹா சிரிப்பு வருது எனக்கு.

Anonymous said...

ஹாய் மேனகா,

இன்னிக்கி உங்களின் பருப்பு சாதம் தான் செய்தேன்..ரொம்ப நன்றாக இருந்தது..கலக்குங்கோ...

Menaga Sathia said...

ஹாய் அம்மு செய்து பார்த்து பின்னுட்டம் அளித்ததற்க்கு சந்தோஷம்பா,தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி!!

01 09 10