Wednesday 10 June 2009 | By: Menaga Sathia

மிளகு சீரக இட்லி

தே.பொருட்கள்:
இட்லி - 5
வெங்காயம் - 1 சிறியது
பூண்டுப்பல் - 3
கெட்டியான புளிச்சாறு - 1 1/2 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

அரைக்க:
மிளகு - 2 டீஸ்பூன்
சீரகம் - 1 1/2 டீஸ்பூன்
பூண்டுப்பல் - 3

தாளிக்க:
கடுகு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பில்லை - சிறிது
மஞ்சள்தூள் - 1 சிட்டிகை

செய்முறை:
*இட்லியை நடுத்தரமாக கட் செய்யவும்,வெங்காயம்+பூண்டு பொடியாக நறுக்கவும்.

*மிளகு சீரகத்தை அரைக்கவும்,எடுக்கும் போது உரித்த பூண்டை போட்டு ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க குடுத்துள்ள பொருட்களைப் போட்டு தாளித்து வெங்காயம்+பூண்டு போட்டு வதக்கவும்.

*வதங்கியதும் அரைத்த விழுது சேர்த்து நன்கு கிளறி புளிசாறு+தேவையான உப்பு சேர்க்கவும்.

*பச்சை வாசனை அடங்கியதும் இட்லிகளை சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.

பி.கு:
புளிப்பு+காரம் சேர்த்து சாப்பிட இந்த இட்லி சூப்பரா இருக்கும்.மாலை நேர ஸ்நாக்ஸாகவும் சாப்பிடலாம்.15 நிமிடம் கழித்து சாப்பிட்டால் புளிசாறு நன்கு ஊறி சாப்பிட நன்றாகயிருக்கும்.

11 பேர் ருசி பார்த்தவர்கள்:

Jaleela Kamal said...

மேனகா பார்க்கவே நல்ல இருக்கு, இட்லி சிலருக்கு பிடிக்காது, அதை இப்படி உங்கள் மன்ஞ்சூரியன், மிளகு சீரக இட்லி இது போல் செய்யலாம் போல இருக்கே..

Malini's Signature said...

பாக்கவே நல்ல காரசாரமா இருக்கும் போல இருக்கு மேனகா.

Menaga Sathia said...

இட்லி பிடிக்காதவர்கள் கூட இப்படி செய்தால் சாப்பிடுவாங்க.தங்கள் கருத்துக்கு நன்றி ஜலிலாக்கா!!

Menaga Sathia said...

ஆமாம் ஹர்ஷினி காரம்+புளிப்பு சுவையுடன் நன்றாக இருக்கும்.நன்றி!!

சிறகுகள் said...

இட்லியை கண்டாலே வெருப்பவர்களுக்கு, இது ஒரு நல்ல மாற்றம் தான்..
தங்களின் விருந்து அருமை..

Menaga Sathia said...

தங்கள் கருத்துக்கும்,வருகைக்கும் மிக்க நன்றி சிறகுகள்!!

'பரிவை' சே.குமார் said...

இட்லியை வெருப்பவர்களுக்கு, இது ஒரு நல்ல மாற்றம் தான்..

ஸாதிகா said...

இட்லி மிஞ்சி விட்டால் இனி வேஸ்டாகாது.

Menaga Sathia said...

நன்றி சகோ மற்றும் ஸாதிகா அக்கா..எனக்கே சிலசமயம் இட்லி சாப்பிட போரடித்தால் இப்படி செய்து சாப்பிடுவேன்.ரொம்ப நல்லாயிருக்கும்..

Suni said...

நல்ல குறிப்பு. இதில் எப்பொழுது புளிச்சாறு சேர்ப்பது. புளிக்கு பதிலாக தக்காளி சேர்க்கலாமா?

sunitha @ http://tamiltospokenenglish.blogspot.com/

Menaga Sathia said...

இப்போழுது சரி செய்து விட்டேன்.பாருங்கள்.தக்காளி சேர்த்து செய்ததில்லை.புளிசேர்த்து செய்தால்தான் நன்றாகயிருக்கும்.நன்றி சுனிதா!!

01 09 10