ஆஹா என்ன ருசியில் பார்த்து செய்தது..
தே.பொருட்கள்
சுத்தம் செய்த நண்டு - 1 கிலோ
நறுக்கிய வெங்காயம் -1 பெரியது
நறுக்கிய தக்காளி -1 பெரியது
புளி -சிறிய எலுமிச்சை பழளவு
மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லித்தூள் -1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் -2 டீஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
எண்ணெயில் வதக்கி அரைக்க
தேங்காய்த்துறுவல் -1/4 கப்
மிளகு -1/2 டீஸ்பூன்
சீரகம் + சோம்பு = தலா 3/4 டீஸ்பூன்
கசகசா - 1/2 டீஸ்பூன்
தாளிக்க
சோம்பு -1 டீஸ்பூன்
கறிவேப்பிலை 1 கொத்து
பட்டை -1 சிறுதுண்டு
பிரியாணி இலை - 2
செய்முறை
*அரைக்க கொடுத்துள்ளவைகளை நைசாக அரைக்கவும்.
*கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளை சேர்த்து தாளிக்கவும்.
*பின் வெங்காயம்+தக்காளி+உப்பு என ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வதக்கவும்.
* நண்டு+தூள் வகைகள் சேர்த்து வதக்கி 1 கப் நீர் சேர்த்து கொதிக்கவைக்கவும்.
*நன்றாக கொதித்ததும் புளியை 1/2 கப் அளவில் கரைத்து ஊற்றி கொதிக்கவிடவும்.
*பின் அரைத்த மசாலா சேர்த்து கொதிக்க வைத்து 10 நிமிடங்கள் கழித்து இறக்கவும்.