Saturday 1 March 2014 | By: Menaga Sathia

பூரி /Poori | 7 Days Breakfast Menu # 7






தே.பொருட்கள்

கோதுமைமாவு - 2 கப்
ரவை - 2டேபிள்ஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன்
சர்க்கரை - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - பொரிக்க

செய்முறை
*பாத்திரத்தில் மேற்கூறிய பொருட்களில் எண்ணெய் தவிர மீதி பொருட்களை ஒன்றாக கலந்து நேர் சேர்த்து கெட்டியாக பிசையவும்.

*10 நிமிடங்கள் ஊறவைத்த பிறகு சம உருண்டைகளாக எடுத்து  மெலிதாக இல்லாமலும் தடிமனமாக இல்லாமலும் தேய்க்க வேண்டும்.

*கடாயில் எண்ணெய் ஊற்றி காயவைக்கவும். சிறு உருண்டை மாவை எடுத்து எண்ணெயில் போட்ட உடனே மேலே மிதந்து வந்தால் அதுவே சரியான பதம்
*உடனே தேய்த்த மாவை எடுத்து எண்ணெயில் போட்டதும் மேலே உப்பி வரும்.

*மறுபுறம் மெதுவாக திருப்பி வேக வைத்து எடுக்கவும்.
பி.கு

*எண்ணெய் நன்கு காயவில்லையெனில் பூரி எண்ணெய் குடித்து விடும்.

*பூரியை மெலிதாக தேய்த்தால் மொறுமொறுப்பாகிவிடும்,தடிமனமாக தேய்த்தால் ரப்பர் போல இருக்கும்.

* பூரிக்கு மாவு பிசைந்து 10 நிமிடம் ஆனதும் சுட்டெடுக்கவும் இல்லையெனில் பூரி எண்ணெய் குடிக்கும்.

*சர்க்கரை சேர்ப்பது பூரி பொன்னிறமாக வருவதற்க்கும் மற்றும் ரவை சேர்ப்பது பூரி உப்பலாக வருவதற்கும் சேர்க்கபடுகிறது.
print this page

7 பேர் ருசி பார்த்தவர்கள்:

திண்டுக்கல் தனபாலன் said...

சூப்பரா இருக்குங்க...!

ADHI VENKAT said...

கலக்கறீங்க..

Unknown said...

Fluffy soft poori's...yummy !!

Jaleela Kamal said...

பூரி புசு புசுன்னு இருக்கு

nandoos kitchen said...

soft and fluffy poori yumm..

Magees kitchenworld said...

Semma! Love it

sangeetha senthil said...

arumai ...arumai...

01 09 10