Friday 17 September 2010 | By: Menaga Sathia

நெய் காய்ச்சுவது எப்படி?? How to prepare homemade ghee??

நெய் காய்ச்சும் போது நாம் முருங்கை கீரையை உபயோகப்படுத்துவோம்.அதற்க்கு பதில் கறிவேப்பிலை,காய்ந்த மிளகாய் சேர்த்து செய்தால் வாசனை தூக்கலாக இருக்கும்..

தே.பொருட்கள்:
உப்பில்லாத வெண்ணெய் - 250 கிராம்
கறிவேப்பிலை - 2 இனுக்கு
காய்ந்த மிளகாய்- 1
கல் உப்பு - 5

செய்முறை:
*வெண்ணெயை ஒரு பாத்திரத்தில் போட்டு உருக்கவும்.
*உருகியதும் நன்கு கொதிக்க ஆரம்பிக்கும் போது கல் உப்பு+காய்ந்த மிளகாய்+கறிவேப்பிலை சேர்க்கவும்.

*பின் நுரைபோல் வரும் அதை கரண்டியால் மேலோடு எடுத்து கீழே ஊற்றி விடவும்.

*பின் நன்றாக தெளிந்து வாசனை வரும் போது இறக்கி ஆறவைத்து வடிகட்டி பாட்டிலில் ஊற்றி பயன்படுத்தவும்.

*இந்த முறையில் காய்ச்சும் பொது வீடே மணமாக இருக்கும்....

50 பேர் ருசி பார்த்தவர்கள்:

புவனேஸ்வரி ராமநாதன் said...

குறிப்புக்கு நன்றி.

pichaikaaran said...

tastyyy..

very useful

ஸாதிகா said...

kamakamakkinRathee...

Jayanthy Kumaran said...

Hy Menaga, will add salt ...but red chilly n curry leaves are new to me...sure enhances flavor and taste I think...
Made up my mind to try your version next time...THANK YOU...!

Tasty appetite

ராமலக்ஷ்மி said...

பக்குவத்தை படங்களுடன் அழகாய் விளக்கியுள்ளீர்கள். நன்றி.

Asiya Omar said...

நெய் காய்ச்சும் முறை படங்களுடன் சூப்பர்.நானும் இங்கு பட்டர் வாங்கி தான் உருக்குவேன்,கருவேப்பிலை சேர்த்ததில்லை.இனி சேர்த்திட்டாப்போச்சு.

ராஜ நடராஜன் said...

சும்மா இருக்க மாட்டாம இட்லி பொடி,சட்டினின்னு படங்களை காட்டி வீட்ல வாங்கி கட்டிகிட்டதுதான் மிச்சம்:)

நெய் பதம் அறிய தந்தமைக்கு நன்றி!

Shakthiprabha (Prabha Sridhar) said...

நன்றி. என் அத்தை கறிவேப்பிலை, உப்பு சேர்த்து காய்ச்சுவார்கள். காய்ந்த மிளகாய் புதிது. அடுத்த முறை காய்ந்த மிளகாயும் சேரும்.

GEETHA ACHAL said...

சூப்பர்ப் மேனகா....உப்பு சேர்க்கும் பொழுது நெயில் உப்பு கலந்துவிடாது...

கருவேப்பில்லை சேர்த்து செய்யும் முறை புதிது...சூப்பர்ப்...

Thenammai Lakshmanan said...

நானும் இப்படித்தான் காய்ச்சுவேன் மேனகா..

Unknown said...

Vaasanai inga varuthu :)

வால்பையன் said...

முருங்கைகீரை போட்டு நெய் காய்சுவாங்களே, அது சரிபட்டு வராதா?

சிநேகிதன் அக்பர் said...

வீட்டில் முருங்கை இலை போடுவதை பார்த்திருக்கிறேன். இதுவும் நல்லா இருக்கு.

ஜெய்லானி said...

நான் அங்கேயே பார்த்து (கேட்டு)க்கிறேன்..:-))

ச்சே கமெண்ட் மாறிப்போச்சே..!!..


வாசனை இங்கேயே ஆளை தூக்குதே..!!

Chitra said...

ஆஹா.... நெய் மணம் கமழுதே! காஞ்ச மிளகாய் போடலாம் என்று இதுவரை எனக்கு தெரியாது. குறிப்புக்கு நன்றி.

Unknown said...

முருங்கை கீரை போட்டு தான் செய்வது.. கறிவேப்பிலை போட்டு செய்து பார்க்கிறேன். பலவகையான நெய் கடையில் கிடைத்தாலும் நாமே செய்யும் போழுது வரும் வாசனையே தனி தான் சுத்தமும் கூட..

Mahi said...

ம்ஹூம்..எனக்கு ஒரு போஸ்ட் மிஸ் ஆகிப்போச்சே,மேனகா முந்திகிட்டாங்களே!!!

நல்லாருக்கு மேனகா..நானும் காய்ந்த மிளகா சேர்த்ததில்ல.உப்பு கூட போட மாட்டேன்.இது ரெண்டும் போட்டா ஸ்வீட் செய்ய யூஸ் பண்ணும்போது ஏதாவது வித்யாசம் தெரியுமா?
(அப்பாடா,ஒரு சந்தேகம் கேட்டாச்சு.:))

Krishnaveni said...

great recipe menaga

Unknown said...

thanks for sharing.I will try.

http://kasthuriscreations.blogspot.com

Mahi_Granny said...

முருங்கைகீரை மட்டும் தான் தெரியும் . உங்கள் முறை புதிது. செய்து பார்த்து விடுவோம்.

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

அட நெய் காய்ச்சரதுல கூட இவ்ளோ விஷயம் இருக்கா...? வாவ்...

துளசி கோபால் said...

உப்பு சேர்த்த வெண்ணையையும் இப்படிக் காய்ச்சலாம். நெய்யில் உப்பு சுவை அடியோடு இருக்காது. நான் எல்லா இனிப்புவகைகளுக்கும் இந்த உப்புசேர்த்த வெண்ணையைக் காய்ச்சின நெய்தான் பயன்படுத்தறேன்.

பல சமயங்களில் இது பயங்கர ஸேலில் வரும். 99 செண்டுக்கு 500 கிராம் வெண்ணை கொள்ளை மலிவு இல்லையோ!!!!

சசிகுமார் said...

நல்ல முறையில் நெய் காய்ச்சுவது எப்படி என்று பெயர் வைத்திருந்தால் இன்னும் கொஞ்சம் பொருத்தமாக இருந்திருக்கும். தலைப்பை தேர்வு செய்யும் போது சிறந்த முறையில் தேர்வு செய்தால் நல்லது அக்கா. தவறிருந்தால் மன்னிக்கவும்.

ஹுஸைனம்மா said...

மி.வற்றல் சேர்த்தால் நெய்யில் காரம் இறங்காதா?

Jaleela Kamal said...

தூபாய் வந்த புதிதில் நம்ம ஊரு நெய் கிடைக்காது,

இது போல் தான் கருவேப்பிலை, வெந்தயம் சேர்த்து காய்ச்சி பாட்டிலில் ஊற்றி வைத்து பயன் படுத்துவேன்.
மணமாக நல்ல இருக்கும், க்காஞ்ச மிளகாய் சேர்த்த்தில்லை.
முருக்கு செய்ய நல்ல இருக்கும்

Jaleela Kamal said...

முருங்கை இலை கிடைத்தால் அது சேர்த்து செய்வேன், இப்ப இங்கேயே எல்லா கடை களிலும் நெய் கிடைக்கிறது, ஆனால் எனக்கு சில அயிட்டங்க்ளுக்கு பட்டர் சேர்த்தால் தான் பிடிக்கும்.

Menaga Sathia said...

நன்றி புவனேஸ்வரி!!

நன்றி பார்வையாளன்!!

நன்றி ஸாதிகாக்கா!!

நன்றி ஜெய்!! செய்து பாருங்கள்,அப்புறம் இந்த மாதிரிதான் செய்வீங்க...

Menaga Sathia said...

நன்றி ராமலஷ்மி அக்கா!!

நன்றி ஆசியாக்கா!! சேர்த்து செய்து பாருங்கள்!!

நன்றி சகோ!!

நன்றி சக்திபிரபா!! காய்ந்த மிளகாய் சேர்ப்பதால் நெய் நீண்டநாள் வரை கெடாது...

Menaga Sathia said...

நன்றி கீதா!! உப்பு நெய்யில் கலந்தாலும் ஒன்றும் வேறுபாடு தெரியாது.கறிவேப்பிலை சேர்த்து செய்து பாருங்கள்..

நன்றி தேனக்கா!! நீங்களும் இப்படிதான் செய்வீங்களா..இந்த செய்முறையை ஒரு வடைந்தியரிடம் கற்றுக்கொண்டேன்..

நன்றி ஷர்மிலி!!

நன்றி வால்!! முருங்கைக்கீரையும் போட்டு செய்யலாம்.அதைவிட இந்த முறை நன்றாக இருக்கும்.அதுமட்டுமில்லாமல் எனக்கெல்லாம் இந்தியன் கடைக்கு போனால்தான் முருங்கைக்கீரை கிடைக்கும்..

Menaga Sathia said...

நன்றி அக்பர்!!

நன்றி ஜெய்லானி!!

நன்றி சித்ரா!!கா.மிளகாய் சேர்த்து செய்யுங்கள்,நன்றாகயிருக்கும்..

நன்றி சிநேகிதி!! நாமே வீட்டில் செய்யும் போது தனி சுவையும்,சந்தோஷமும் தான்...

Menaga Sathia said...

நன்றி மகி!! அதனாலென்ன உங்க செய்முறையும் நாங்களும் தெரிந்துப்போம் இல்ல,போடுங்க உங்க குறிப்பையும்..உப்பு+கா.மிளகாய் போடுவதால் ஸ்வீட் செய்யும் போது எந்த வித்தியாசமும் தெரியாது..தாராளமா ஸ்வீட்க்கு உபயோகபடுத்தாலாம்.மிளகாயை முழுதாக போட வேண்டும்..கிள்ளி போடக்கூடாது..

நன்றி கிருஷ்ணவேணி!!

வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி கஸ்தூரி!!

Menaga Sathia said...

நன்றி மகி!! இந்த முறையிலும் ஒரு தடவை செய்து பாருங்கள்..

நன்றி அப்பாவி அக்கா!! ஆமா இட்லி சுடுவதில் எவ்வளவு மேட்டர் இருக்குதோ அதே மாதிரிதான் இதிலயும்..

நன்றி துளசி அக்கா!! உப்பு சேர்த்த வெண்ணையும் பயன்படுத்தலாமா...அப்போ அதையும் உபயோகபடுத்திட வேண்டியதுதான்...

Menaga Sathia said...

நன்றி சசி!! நீங்கள் எதுவும் தவறாக சொல்லவில்லை...அப்படிதான் தலைப்பு வைக்க யோசித்தேன்,பிறகு மாற்றிவிட்டேன்....

நன்றி ஹூசைனம்மா!! மிளகாயை முழுதாக போட வேண்டும்,கிள்ளி போடகூடாது.அதனால் காரம் இருக்காது...

நன்றி ஜலிலாக்கா!! வெந்தயமும் சேர்ப்பிங்களா?? கசப்புத்தன்மை வராதா??..எனக்கு இந்தியன் கடைக்கு போனால்தான் முருங்கை கீரை கிடைக்கும்...

Akila said...

mmmmm want to smell the flavor that comes when it starts melting..... you reminded me that.....

http://akilaskitchen.blogspot.com

Kanchana Radhakrishnan said...

கருவேப்பில்லை சேர்த்து செய்யும் முறை புதிது.

துளசி கோபால் said...

என்னங்க காஞ்சனா,

நீங்க சமையல் மன்னி. உங்களுக்கே கருவேப்பிலை சேர்த்து நெய் காய்ச்சுவது புதிதா!!!!!

நியூஸியில் முருங்கைக்கீரை கிடைக்காது. அங்கே எப்பவுமே கருவேப்பிலை போட்டுதான் காய்ச்சுவேன், அப்புறம் மொறுமொறுன்னு இருக்கும் கருவேப்பிலையைத் தின்னுருவேன்.

என் கூந்தல் அழகுக்கு அதுவே காரணம்:-)))))

மொளகாய்வத்தல் போடுவதுதான் எனக்குப் புதுசு!

Ahamed irshad said...

நாங்களும் தெரிஞ்சிக்கிட்டோம்..நன்றி பகிர்விற்கு..

SUFFIX said...

நெய்யில் பொறித்த கீரைக்கு சிறு வயதில் எங்கள் வீட்டில் ஒரு போரே நடக்கும்:)

'பரிவை' சே.குமார் said...

பக்குவத்தை படங்களுடன் அழகாய் விளக்கியுள்ளீர்கள்.
நன்றி

Gayathri said...

தோழி ஒரு சிறு சதேகம்..மைக்ரோவேவ்வில் லாவா கேக் அல்லது சாதாரண கேக் செய்வது உதவுங்கள்

மிக்க நன்றி

Menaga Sathia said...

நன்றி அகிலா!!

நன்றி காஞ்சனா!!

ஆஹா துளசி அக்கா நெய்யில் காய்ச்சிய கருவேப்பிலையை நான் தூக்கி போட்டுட்டேனே,அந்த ஐடியா கூட எனக்கு தோனலை..அதான் உங்க கூந்தலின் ரகசியமா?? இனி அப்படியே நான் செய்ய போகிறேன்...

Menaga Sathia said...

நன்றி அஹமது!!

நன்றி சகோ!! ஆமாம் அது ரொமப் நல்லாயிருக்கும்..

நன்றி சகோ!!

Menaga Sathia said...

காயத்ரி மன்னிக்கவும்,எனக்கு மைக்ரோவேவ் சமையல் பத்தி தெரியாது...நானும் செய்ததில்லை..உங்க மைக்ரோவேவ் அவன் கன்வெக்‌ஷனல் அவனா இருந்தா தாராளமா பேக்கிங் செய்யலாம். எனக்கு தெரிந்த வரை மைக்ரோவேவில் செய்வதை பேக்கிங்லாம அவனில் செய்வதுதான் பெஸ்ட்...

Sriakila said...

நெய் காய்ச்ச எனக்கு இதுவரைக்கும் தெரியாது. ரிஸ்க் எடுக்காமல் இருந்தேன். இப்போது உங்கள் பதிவைப் பார்த்து தெரிந்து கொண்டேன்..நன்றி!

Gayathri said...

மிக்க நன்றி தோழி..

Priya Suresh said...

Neeraya peruku use aagura post..

vanathy said...

மேனகா, சூப்பரா இருக்கு.

Menaga Sathia said...

நன்றி ஸ்ரீஅகிலா!!

நன்றி ப்ரியா!!

நன்றி வானதி!!

mohana ravi said...



ஹ்ம்! இவ்ளோ விஷயம் இருக்கா!

நெய் காய்ச்சறதுள!

இதெல்லாம் படீச்சு காட்டனும்

‘அவர்’கிட்ட! எங்காத்து

சமையல்கட்டுள அவர்தானே வேலை

செய்வார்!

Menaga Sathia said...

நன்றி மாமி!! ஆத்துல மாமா தான் சமைக்கிறாரா?? ம்ம் கொடுத்து வைச்ச மாமிதான் நீங்க....

01 09 10