Monday 6 September 2010 | By: Menaga Sathia

மேத்தி சிக்கன்

தே.பொருட்கள்:
சிக்கன் - 1/2 கிலோ
வெந்தயக்கீரை - 1/2 கப்
அரிந்த வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2 அரைத்துக் கொள்ளவும்
இஞ்சி பூண்டு விழுது - 1டேபிள்ஸ்பூன்
தக்காளி - 1 அரைத்துக் கொள்ளவும்
தயிர் - 1/4 கப்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
வரமிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்
தனியாத்தூள் - 1/2 டீஸ்பூன்
சீரகப்பொடி - 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
உப்பு +எண்ணெய் = தேவைக்கு
 
செய்முறை:
*வெங்காயத்தை எண்ணெயில் பிரவுன் கலரில் பொரித்து ஆறவைத்து தயிருடன் விழுதாக அரைக்கவும்.

*வெந்தயக்கீரையை உப்பு+சர்க்கரை கலந்த நீரில் 15 நிமிடம் வைத்து நன்கு அலசி வைக்கவும்.

*வெந்தயக்கீரையை ஒரு கடாயில் எண்ணெய் விட்டு நன்கு மொறுமொறுப்பாக பொரித்து தனியாக வைக்கவும்.

*அதே கடாயில் எண்ணெய் விட்டு இஞ்சி பூண்டு விழுது+பச்சை மிளகாய் விழுது சேர்த்து வதக்கவும்.பின் சீரகப்பொடி+எல்லா தூள் வகைகள் சேர்த்து வதக்கி தக்காளி விழுதை சேர்த்து வதக்கவும்.

*பின் அரைத்த வெங்காய விழுதை சேர்த்து 5 நிமிடம் வதக்கிய பின் சிக்கனை சேர்த்து நன்கு வதக்கி மூடி போட்டு வேகவிடவும்.

*வெந்த பின் பொரித்த வெந்தயக்கீரை+கரம் மசாலா+தேவைப்பட்டால் சிறிது நீர் சேர்த்து நன்கு கிரேவி பதத்திற்க்கு வரும் போது இறக்கவும்.

*சாதம்+சப்பாத்தியுடன் சாப்பிட மிகவும் அருமையாக இருக்கும்

18 பேர் ருசி பார்த்தவர்கள்:

எல் கே said...

rightu

நட்புடன் ஜமால் said...

வெந்தையம் ரொம்ப நல்லதாச்சே

கோழி சூட்டை வெந்தையம் குளிர்வித்து விடுமே

நன்றிங்கோ

கொய்னி said...

மேனகா மேதி சிக்கன் நல்லா இருக்கு.....நன்றி.

'பரிவை' சே.குமார் said...

arumaiya kurippu.

nanri akka.

Menaga Sathia said...

நன்றி எல்கே!!

நன்றி சகோ!!


நன்றி கொயினி!!

நன்றி சகோ!!

Akila said...

looks so lovely...

http://akilaskitchen.blogspot.com

Umm Mymoonah said...

Hi Menaga, The award which I have given you is the last one in my list Innovative Chef award, if you already have that it's ok :-)

Asiya Omar said...

அருமை மேனகா.

Chitra said...

looks good and healthy.

சிநேகிதன் அக்பர் said...

ரொம்ப நல்ல ரெஸிப்பி. சிக்கனில் இது புது முறையாக இருக்கிறது.

vanathy said...

super recipe.

GEETHA ACHAL said...

சூப்பராக இருக்கே..

ஸாதிகா said...

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்...யம்ம்ம்ம்ம்ம்ம்மி

அஹமது இர்ஷாத் said...

Nice..

Menaga Sathia said...

நன்றி அகிலா!!

நன்றி ஆயிஷா!!

நன்றி ஆசியாக்கா!!

நன்றி சித்ரா!!

Menaga Sathia said...

நன்றி அக்பர்!!

நன்றி வானதி!!

நன்றி கீதா!!

நன்றி ஸாதிகாக்கா!!

நன்றி அஹமது!!

Priya Suresh said...

Methi chicken looks super tempting..Arumaiya irruku..

Unknown said...

பார்க்கவே சிக்கன் நல்லா இருக்கு மேனகா

01 09 10