Friday, 28 December 2012 | By: Menaga Sathia

கேண்டிட் ஆரஞ்சு தோல்/Homemade Candied Orange Peel

Recipe Source: Gayathris Cook Spot

தே.பொருட்கள்

ஆரஞ்சுப்பழம் -2
சர்க்கரை - 3/4 கப் + 1/4 கப்
நீர் -1 1/4 கப்

செய்முறை

*ஆரஞ்சுப்பழத்தின் மேலும் கீழ்ப்பக்கமும் வெட்டினால் தோலை உரிக்க ஈசியாக இருக்கும்.

*கத்தியால நேராக 5 கோடுகள் போட்டு தோலினை உரித்தெடுக்கவும்.
*2 பழத்திலிருந்து 10 இதழ்கள் வரும்.
*தோலின் கசப்புதன்மை நீங்க கொதிக்கும் நீரில் 10 நிமிடங்கல் போட்டு நீரை வடிக்கட்டவும்.

*இதே மாதிரி 2 அல்லது 3 முறை செய்யவும்.
*பின் தோலின் வெள்ளைப் பகுதியை கத்தியால் கீறி எடுக்கவும்.
*ஒவ்வொரு இதழ்களையும் 2 ஆக நறுக்கவும்.
*3/4 கப் சர்க்கரை+ 1 1/4 கப் நீர் சேர்த்து கொதிக்க வைத்து ஆரஞ்சுத்தோலினை போட்டு 45 நிமிடங்கள் கொதிக்க வைத்தால்  தோல் நன்கு வெந்து கீழேயுள்ள படத்தில் உள்ளது போல் இருக்கும்.
*ஒவ்வொறு தோலையும் தனித்தனியாக காயவைக்கவும்.
*3/4 பாகம் உலர்ந்ததும் மீதமுள்ள சர்க்கரையில் பிரட்டி மீண்டும் உலரவிடவும்.
*ஒர் இரவு முழுக்க உலரவிட்டு காற்றுப்புகாத டப்பாவில் வைத்திருந்து பயன்படுத்தலாம்.
பி.கு

*இதனை கேக்,குக்கீஸ் செய்ய பயன்படுத்தலாம்.

*இதனை பொடியாக நறுக்கியதில் 1/2 கப் அளவு கிடைத்தது.
Wednesday, 26 December 2012 | By: Menaga Sathia

கிறிஸ்துமஸ் ப்ரூட் கேக்/ ப்ளம் கேக் - Alcohol Free Christmas Fruit Cake/ Plum Cake

Recipe Source : Spice -Club

தே.பொருட்கள்

மிக்ஸட் டிரை ப்ரூட்ஸ் - 1 கப் (கருப்பு மற்றும் வெள்ளை திராட்சை,அப்ரிகாட்,செர்ரி,அன்னாச்சிப்பழம்)

மிக்ஸட் நட்ஸ் - 1/2 கப் (முந்திரி,பாதாம்,வால்நட்ஸ் )+ 1/2 டீஸ்பூன் மைதா

ஆரஞ்சு  ஜூஸ் - 3/4 கப்

பாகம் -1

மைதா - 1 கப்

பேக்கிங் சோடா - 1/4 டீஸ்பூன்

பேக்கிங் பவுடர் - 1 டீஸ்பூன்

உப்பு - 1/2 டீஸ்பூன்

சுக்குப்பொடி,பட்டைத்தூள்,கிராம்புபொடி,ஜாதிக்காய்ப்பொடி -தலா1/4டீஸ்பூன்

பாகம் - 2

வெண்ணெய் -1/2 கப்

முட்டை - 3

சர்க்கரை - 3/4 கப்

துருவிய ஆரஞ்சுத்தோல் - 1 டேபிள்ஸ்பூன்( 1 பழத்திலிருந்து)

வெனிலா எசன்ஸ் - 1 டீஸ்பூன்

கேரமல் செய்ய

சர்க்கரை - 1/4 கப்

நீர் - 1 டேபிள்ஸ்பூன்+ 1/4 கப்

ஒரு பாத்திரத்தில் சர்க்கரை+1 டேபிள்ஸ்பூன் நீர் சேர்த்து நன்கு கரைய விடவும்.சர்க்கரையின் கலர் வெளிர் நிறத்திலிருந்து டார்க் கலர் மாறும் போது 1/4 கப்நீரை 1 நிமிடம் மைக்ரோவேவில் வைத்து எடுக்கவும்  1/4 கப் சுடுநீரை  ஊற்றி இறக்கி ஆறவைக்கவும்.ஆறியதும் வெனிலா எசன்ஸ் சேர்த்து கலக்கவும்.

செய்முறை

*ஆரஞ்சு ஜூஸை மைக்ரோவேவில் 1 நிமிடம் சூடு செய்து மிக்ஸட் டிரை ப்ரூட்ஸ் கலந்து ஒர் இரவு முழுக்கவோ அல்லது 2 அல்லது 3 நாள் வரை ஊறவிடவும்.இடையிடையே கிளறி விடவும்.

*அவனை 180°C  முற்சூடு செய்யவும்.

*பாகம் -1ல் கொடுத்துள்ளவைகளை ஒன்றாக கலந்து 2முறை சலிக்கவும்.

*ஒரு பவுலில் வெண்ணெய்+சர்க்கரை செர்த்து சர்க்கரை கரையும் வரை நன்கு கலக்கவும்.

*பின் ஒவ்வொரு முட்டையாக சேர்த்து நன்கு நுரை வரும் வரை பீட்டரால் கலக்கவும்.

*கேரமல் சேர்த்து மீண்டும் நன்கு கலந்து துருவிய ஆரஞ்சுத்தோல்+பாகம் -1ல் கொடுத்த பொருட்களை சேர்க்கவும்.

*டிரை ப்ருட்ஸ்+நட்ஸ் சேர்த்து மிருதுவாக கலந்து கேக் பானில் ஊற்றி 50-55 நிமிடங்கள் செய்து எடுக்கவும்.

பி.கு

*கேக் வெந்ததும் விரும்பினால் ஐசிங் சுகரை தூவலாம்.

*இந்த கேக்கினை செய்த அன்று சாப்பிடுவதை விட மறுநாள் சாப்பிட நன்றாகயிருக்கும்.

*டிரை ப்ரூட்ஸினை ஊறவைக்க ஆரஞ்சு ஜூஸ்க்கு பதில் ரம்/ பிராந்தி பயன்படுத்தலாம்.

Thursday, 20 December 2012 | By: Menaga Sathia

நெல்லிக்காய் ஊறுகாய் /Amla Pickle

இதில் அதிகளவு விட்டமின் சி இருக்கு. 1 ஆம்லா = 2 ஆப்பிளுக்கு சமம்.இதில் எண்ணெய் குறைவாக சேர்ப்பதால் 2 நாட்களுக்குள் பயன்படுத்துவது நல்லது.

தே.பொருட்கள்
பெரிய நெல்லிக்காய் - 5
கடுகு+உளுத்தம்பருப்பு+பெருங்காயத்தூள் - தலா 1/4 டீஸ்பூன்
வறுத்து பொடித்த வெந்தயம்+கடுகு -தலா 1/4 டீஸ்பூன்
நல்லெண்ணெய் - 2டேபிள்ஸ்பூன்
வரமிளகாய்த்தூள் - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு

செய்முறை

*நெல்லிக்காயை ஆவியில் வேகவைத்து,கொட்டைகளை நீக்கி சிறுதுண்டுகளாக்கவும்.

*கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு+உளுத்தம்பருப்பு+பெருங்காயம் போட்டு தாளித்து துண்டுகளாகிய நெல்லிக்காயை போட்டு 2நிமிடங்கள் வதக்கவும்.

*பின் மிளகாய்த்தூள்+உப்பு சேர்த்து மேலும் 5 நிமிடங்கள் வரை கிளறி பொடித்த வெந்தயத்தூள்+கடுகுத்தூள் சேர்த்து கிளறி இறக்கவும்.

Monday, 17 December 2012 | By: Menaga Sathia

முட்டையில்லா செக்கர்போர்ட் & ஜீப்ரா குக்கீஸ் /Eggless Checkerboard & Zebra Cookies

வெனிலா குக்கீஸ் செய்ய தே.பொருட்கள்
மைதா மாவு - 1 1/4 கப்
வெண்ணெய் - 3/4 கப் அறை வெப்ப நிலை
தயிர் -1/4 கப்
சர்க்கரை - 3/4 கப் பொடித்தது
உப்பு - 1/2 டீஸ்பூன்
வெனிலா எசன்ஸ் - 1 1/2 டீஸ்பூன்
பேக்கிங் பவுடர் - 1 டீஸ்பூன்

சாக்லேட் குக்கீஸ் செய்ய தே.பொருட்கள்
மைதா மாவு - 1 1/4 கப்
வெண்ணெய் - 3/4 கப் அறை வெப்ப நிலை
தயிர் -1/4 கப்
சர்க்கரை - 3/4 கப் பொடித்தது
உப்பு - 1/2 டீஸ்பூன்
வெனிலா எசன்ஸ் - 1 1/2 டீஸ்பூன்
பேக்கிங் பவுடர் - 1 டீஸ்பூன்
கோகோ பவுடர் -2 டேபிள்ஸ்பூன்

செய்முறை

*வெனிலா குக்கீஸ் செய்ய மைதா+பேக்கிங் பவுடர்+உப்பு கலந்து 2 முறை சலிக்கவும்.வெண்ணெய்+சர்க்கரை+தயிர் சேர்த்து நன்கு கலக்கவும்.

*சர்க்கரை கரைந்ததும் எசன்ஸ் சேர்த்து கலந்து,மைதா கலவையை சேர்த்து கெட்டியாக பிசையவும்.பிசைந்த மாவை 2 சம உருண்டைகளாக எடுக்கவும். 

*சாக்லேட் குக்கீஸ் செய்ய மைதா+பேக்கிங் பவுடர்+உப்பு+கோகோ பவுடர்  கலந்து 2 முறை சலிக்கவும்.வெண்ணெய்+சர்க்கரை+தயிர் சேர்த்து நன்கு கலக்கவும்.

*சர்க்கரை கரைந்ததும் எசன்ஸ் சேர்த்து கலந்து,மைதா கலவையை சேர்த்து கெட்டியாக பிசையவும்.பிசைந்த மாவை 2 சம உருண்டைகளாக எடுக்கவும். 

செக்கர்போர்ட் குக்கீஸ் செய்ய

*வெனிலா மற்றும் சாக்லேட் கலவையின் 1 உருண்டையை எடுத்து Rectangle ஷேப்பில் உருட்டி க்ளியர் ராப் கவரில் சுருட்டி ப்ரிட்ஜில் 2 மணிநேரம் வைக்கவும்.

*பின் வெனிலா கலவையின் மீது சாக்லேட் கலவையை வைத்து 2 சம பாதியாக வெட்டவும்.

*வெட்டிய பாதியை ஆல்டர்னேட்டாக அதன் மேல் வைத்து 1 இஞ்ச் அளவில் வெட்டவும்.

*ஒவ்வொரு 4 இஞ்சும் ஆல்டர்னேட்டாக இருக்கும்.மேலே உள்ள படத்தில் உள்ளவாறு ஆல்டர்னேட்டாக,பால் தடவி ஒட்டி மீண்டும் க்ளியர் ராப் கவரில் சுருட்டி ப்ரிட்ஜில் 1 மணிநேரம் வைக்கவும்.

*பின் ப்ரிட்ஜிலிருந்து எடுத்து 1 இஞ்ச் அளவில் குறுக்கே வெட்டினால் அழகான செக்கர்போர்ட் குக்கீஸ் ரெடி.

ஜூப்ரா குக்கீஸ் செய்ய

*வெனிலா மற்றும் சாக்லேட் கலவையின் இன்னொரு உருண்டையை Rectangle ஷேப்பில் உருட்டவும்.ஏதாவது ஒன்று,மற்றொன்றை விட அதிகளவில் உருட்டவும்.

*நான் சாக்லேட் கலவையை ,வெனிலா கலவையை விட நீண்ட அளவில் உருட்டியுள்ளேன்.

*உருட்டிய சாக்லேட் கலவையின் உள்ளே வெனிலா கலவையை வைத்து மெதுவாக பாய் சுருட்டுவது போல சுருட்டி கடைசியாக பால் தடவி ஒட்டி கிளியர் ராப் கவரில் சுருட்டி ப்ரிட்ஜில் 1 மணிநேரம் வைத்திருந்து 1 இஞ்ச் அளவில் வெட்டினால் ஜூப்ரா குக்கீஸ் ரெடி.

*அவன் டிரேயில் அலுமினியம் பாயில் வைத்து 2 வகை குக்கீஸ்களை இடைவெளி விட்டு அடுக்கவும்.

*அவனை 170°C டிகிரிக்கு 10 நிமிடம் முற்சூடு செய்யவும்.

*முற்சூடு செய்த அவனில் வைத்து 10-15 நிமிடம் பேக் செய்து எடுக்கவும்.

Thursday, 13 December 2012 | By: Menaga Sathia

செட்டிநாடு உருளை மசாலா /Chettinad Potato Masala

செட்டிநாடு சமையல் என்றாலே தனி சுவைதான்.நன்றி ரம்யா!!

தே.பொருட்கள்

வேகவைத்த உருளை - 2 பெரியது
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1
பொடியாக நறுக்கிய தக்காளி - 1
கறிவேப்பிலை - சிறிது
மஞ்சள்தூள்,கடுகு -தலா 1/4 டீஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

கரகரப்பாக அரைக்க

காய்ந்த மிளகாய் - 7
சின்ன வெங்காயம் - 1
தேங்காய்த்துறுவல் - 1/4 கப்
சீரகம் - 1 டீஸ்பூன்
பெருஞ்சீரகம் - 1 டேபிள்ஸ்பூன்
பூண்டுப்பல் - 3
இஞ்சி - 1 சிறுதுண்டு

செய்முறை
*கடாயில் எண்ணெய் விட்டு கடுகு+கறிவேப்பிலை போட்டு தாளித்து வெங்காயம்+தக்காளி+மஞ்சள்தூள் சேர்த்து நன்கு குழைய வதக்கவும்.

*பின் அரைத்த மசாலா+உப்பு சேர்த்து சிறிது நேரம் வதக்கிய பின் துண்டுகளாகிய உருளையை சேர்த்து வதக்கவும்.

*மசாலா நன்குகலந்த பின் சிறிது நேரம் கிளறி கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.


Monday, 10 December 2012 | By: Menaga Sathia

பாசிபருப்பு தோசை & கார சட்னி /Moong Dhal Dosa & Kara Chutney

 பாசிபருப்பு தோசை

தே.பொருட்கள்
அரிசி - 1 கப்
பாசிபருப்பு - 1 கப்
வெந்தயம் -1/4 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு

செய்முறை
*மேற்கூறிய பொருட்கள் அனைத்தையும் ஒன்றாக கலந்து  2 மணிநேரம் ஊறவைத்து உப்பு சேர்த்து நைசாக அரைக்கவும்.

*மாவை 6 மணிநேரம் புளிக்க வைத்து தோசைகளாக சுட்டெடுக்கவும்.

கார சட்னி
 இந்த சட்னிக்கு வரமிளகாய்த்தூளுக்கு பதில காய்ந்த மிளகாயை ஊறவைத்து அரைத்து சேர்க்கவேண்டும்.நன்றி பிரேமா!!

தே.பொருட்கள்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 3
பொடியாக நறுக்கிய தக்காளி - 5
காய்ந்த மிளகாய் -10 --12
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு

தாளிக்க

கடுகு+உளுத்தம்பருப்பு - தலா 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
நல்லெண்ணெய் - 5 டேபிள்ஸ்பூன்

செய்முறை
 *காய்ந்த மிளகாயை வெந்நீரில் 15 நிமிடங்கள் ஊறவைத்து நைசாக அரைக்கவும்.
 *கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப்  போட்டு தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
 *வதங்கியதும் தக்காளி சேர்த்து நன்கு குழைய வதக்கவும்.
 *நன்றாக வதங்கியதும் உப்பு+மிளகாய் விழுது+மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும்.
 *பச்சை வாசனை அடங்கியதும் எண்ணெய் பிரிந்து வரும் போது இறக்கவும்.
பி.கு

*மிளகாயை அவரவர் காரத்திற்கேற்ப சேர்க்கவும்.

*பாசிபருப்பு தோசைக்கு காரமான சட்னிதான் நன்றாக இருக்கும்.

Thursday, 6 December 2012 | By: Menaga Sathia

குஸ்கா /Khuska

குஸ்கா என்பது ஒருவகை பிரியாணி.இதனை காரசாரமான க்ரேவியுடன் சாப்பிட நன்றாக இருக்கும்.நன்றி சவிதா!!

தே.பொருட்கள்
பாஸ்மதி - 2கப்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1
நறுக்கிய தக்காளி -1 சிறியது
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
கீறிய பச்சை மிளகாய் -4
நெய் - 1 டேபிள்ஸ்பூன்
தயிர் - 1/4 கப்
புதினா,கொத்தமல்லி - தலா 1 கைப்பிடி
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க
கிராம்பு -3
ஏலக்காய் -2
பிரியாணி இலை -2
சோம்பு -1 டீஸ்பூன்

செய்முறை
*அரிசியை கழுவி நீரை வடிகட்டி சிறிது நெய்யில் லேசாக வறுத்து தனியாக வைக்கவும்.

*குக்கரில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ள பொருட்களைப் போட்டு தாளித்து வெங்காயம்+இஞ்சி பூண்டு விழுது+உப்பு+பச்சை மிளகாய் என ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.

*பின் தயிர்+புதினா சேர்த்து வதக்கவும்.

*கடைசியாக தக்காளி சேர்த்து லேசாக கிளறி அரிசி+3 கப் நீர்+கொத்தமல்லிதழை+நெய் சேர்த்து 3 விசில் வரை வேகவைத்தெடுக்கவும்.

பி.கு
*தக்காளியை சேர்த்ததும் குழைய வதக்ககூடாது,சாதத்தின் கலர் மாறிவிடும்.

*பாதிக்கு பாதி தேங்காய்பாலும் சேர்க்கலாம்.


Monday, 3 December 2012 | By: Menaga Sathia

முட்டையில்லாத சோளமாவு ஆரஞ்ச் கேக் /Steamed Eggless Cornflour Orange Cake

தே.பொருட்கள்
ரவை - 1 கப்
மஞ்சள் சோளமாவு -1 கப்
சர்க்கரை - 1 1/4 கப்
ஆரஞ்ச் ஜூஸ் - 1/4 கப்
துருவிய ஆரஞ்ச் தோல் - 1 டேபிள்ஸ்பூன்
பேக்கிங் சோடா+பேக்கிங் பவுடர் - தலா 1/2 டீஸ்பூன்
வெஜிடேபிள் எண்ணெய் -1/2 கப்
வெந்நீர்/ பால் - 1 கப்

செய்முறை
*ரவை+சோளமாவு+பேக்கிங் சோடா+பேக்கிங் பவுடர் அனைத்தையும் ஒன்றாக கலந்து 2 முறை சலிக்கவும்.

*ஒரு பாத்திரத்தில் எண்ணெய்+சர்க்கரை+வெந்நீர் சேர்த்து கலக்கவும்.

*இதனுடன் ரவை கலவை+துருவிய ஆரஞ்ச் தோல்+ஆரஞ்ச் ஜூஸ் சேத்து மிருதுவாக கலக்கி,எண்ணெய் தடவிய கேக் பானில் கலவையை ஊற்றவும்.

*குக்கரை அடுப்பில் வைத்து 5 நிமிடம் சூடு செய்து பேக்கிங் சோடாவை தூவி குக்கர் ஸ்டாண்ட் வைத்து கேக் பாத்திரத்தை வைக்கவும்.

*மீதமான தீயில் 5 நிமிடம் வேகவைத்து பின் குறைந்த தீயில் 25-30 நிமிடங்கள் வேகவைத்து எடுக்கவும்.

*கேக் வேகவில்லை எனில் மேலும் 5-10 நிமிடங்கள் வேகவைத்து எடுக்கவும்.
Thursday, 29 November 2012 | By: Menaga Sathia

கார்த்திகைப் பொரி/Karthigai Pori

தே.பொருட்கள்

அவல்  - 2 கப்
வெல்லம் - 1/2 கப்
எள் - 1 டேபிள்ஸ்பூன்
பாசிப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
தேங்காய்ப்பல் - 1/4 கப்
ஏலக்காய்த்தூள் - 1/2 டீஸ்பூன்

செய்முறை

*அவலை வெறும் கடாயில் நிறம் மாறாமல் பொரியும் வரை வறுக்கவும்.

*எள்+தேங்காய்ப்பல்+பாசிப்பருப்பு இவற்றையும் தனித்தனியாக வெறும் கடாயில் வாசனைவறும் வரை வறுக்கவும்.


*ஒரு பவுலில் வறுத்த பொருட்கள் அனைத்தையும் ஒன்றாக கலந்து வைக்கவும்.

*பாத்திரத்தில் வெல்லம் போட்டு முழ்கும் வரை நீர் விட்டு  கரையவிடவும்.

*வெல்லம் கரைந்ததும் வடிகட்டி மறுபடியும் கொதிக்கவிடவும்.ஏலக்காய்த்தூள் சேர்க்கவும்.

*வெல்லபாகினை தண்ணீரில் விட்டால் உருண்டை கையில் எடுக்கும் பதம் வந்ததும் இறக்கி கலந்து வைத்துள்ள அவல்பொரியில்  ஊற்றி நன்கு கலக்கிவிடவும்.

பி.கு

*இது உதிரியாகதான் இருக்கும்,உருண்டை பிடிக்கமுடியாது.

*நான் சாதாரண அவலில் செய்துள்ளேன்.

*நெற்பொரி/ அவல் பொரி இவை கார்த்திகைதீபத்தன்று மட்டும்தான் கடைகளில் கிடைக்கும்.
Monday, 26 November 2012 | By: Menaga Sathia

பொன்னாங்கண்ணிக் கீரை கடையல் -2/Poonakanni Keerai(Dwarf Copperleaf) Kadaiyal - 2

பொன்னாங்கண்ணி கீரையை புளி போட்டு கடைந்தால்
அண்ணாமலையாருக்கு (சிவன்) அடிநாக்கும் தித்திக்கும் என அம்மாவிடம் எங்க வீட்டு கீரைக்காரம்மா சொல்வாங்க.கார்த்திகை தீபத்தன்று  இக்கீரையை புளிபோட்டு கடைந்து படையல் செய்வது மிக நல்லது.

தே.பொருட்கள்

பொன்னாங்கண்ணி கீரை - 1 கப்
பூண்டுப்பல் - 3
நறுக்கிய வெங்காயம் - 1
பச்சை மிளகாய் -2
புளி - 1 நெல்லிக்காயளவு
உப்பு -தேவைக்கு

தாளிக்க

எண்ணெய் -1/2 டீஸ்பூன்
கடுகு+உளுத்தம்பருப்பு -தலா 1/2 டீஸ்பூன்

செய்முறை

*மேற்கூறிய பொருட்களை ஒன்றாக போட்டு 1/2 கப் நீர் சேர்த்து வேகவைக்கவும்.

*கீரை வெந்ததும் ,ஆறவைத்து நீரைவடிகட்டி மிக்ஸியில் அரைக்கவும்.

*கெட்டியாக இருந்தால் கீரை வேகவைத்த நீர் சேர்த்து ,தாளித்து சேர்க்கவும்.

Thursday, 22 November 2012 | By: Menaga Sathia

காலிபிளவர் மிளகு பொரியல்/Cauliflower Pepper Poriyal

தே.பொருட்கள்

காலிபிளவர் பூக்கள் - 2 கப்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய வெங்காயம் -1
நசுக்கிய பூண்டுப்பல் -4
கடுகு,சீரகம் - தலா 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 1கொத்து
மிளகுத்தூள் - 2 டீஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

செய்முறை

*கடாயில் எண்ணெய் விட்டு கடுகு+சீரகம்+கறிவேப்பிலை போட்டு தாளித்து பூண்டு+வெங்காயம்+மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும்.

*பின் காலிபிளவர் பூக்கள்+உப்பு சேர்த்து மூடி போட்டு 10-15நிமிடங்கள் வேகவிடவும்.இடையிடையே கிளறி விடவும்.தண்ணீர் ஊற்ற தேவையில்லை.

*காய் வெந்ததும் மிளகுத்தூள் சேர்த்து கிளறி இறக்கவும்.
Monday, 19 November 2012 | By: Menaga Sathia

இஞ்சி தொக்கு /Ginger Thokku


தே.பொருட்கள்

தோல் சீவி துண்டுகளாகிய இஞ்சி - 1 கப்
கெட்டி புளிகரைசல் - 1/4 கப்
காய்ந்த மிளகாய் - 4
வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
வெல்லம் - சிறிதளவு
உப்பு+நல்லெண்ணெய் = தேவைக்கு

தாளிக்க

கடுகு - 1/4 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை

*கடாயில் எண்ணெய் விட்டு மிளகாய்+வெந்தயம்+இஞ்சி சேர்த்து வதக்கி உப்பு சேர்த்து நைசாக அரைக்கவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப் போட்டு தாளித்து அரைத்த இஞ்சியை போட்டு நன்கு வதக்கி புளிகரைசலை சேர்க்கவும்.

*எண்ணெய் பிரிந்து மேலே வரும்போது வெல்லம் சேர்த்து இறக்கவும்.

*தயிர் சாதம்,பெசரெட் நல்ல காம்பினேஷன்.

01 09 10