Friday, 29 May 2009 | By: Menaga Sathia

தக்காளி புதினா சட்னி/Tomato Mint Chutney


இது என்னுடைய 50 வது பதிவு!!.தொடர்ந்து பார்த்து ரசித்து,பின்னூட்டம் குடுத்த அனைத்து தோழர்,தோழிகளுக்கும் என் மனமார்ந்த நன்றி!!.

தே.பொருட்கள்:

தக்காளி - 2
தேங்காய்த்துறுவல் - 1/4 கப்
கா.மிளகாய் - 4
பூண்டுப்பல் - 5
இஞ்சி - சிறு துண்டு
புதினா - சிறிது
கொத்தமல்லித்தழை - சிறிது விருப்பப்பட்டால்
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்

தாளிக்க:

கடுகு+உளுத்தம்பருப்பு - 11/2 டீஸ்பூன்
எண்ணெய் - 3/4 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பில்லை - சிறிது
பெருங்காயம் - வாசனைக்கு

செய்முறை:


* புதினா,கொத்தமல்லித்தழைகளை அலசி வைக்கவும்.

*தக்காளி,பூண்டு,இஞ்சி இவைகளை நறுக்கவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்த மிளகாயை வதக்கி தனியாக வைக்கவும்,பின் இஞ்சி+பூண்டு+ தக்காளியை போட்டு 10 நிமிடம் வதக்கவும்.

*வதங்கியதும் புதினா,கொத்தமல்லி தழைகளைப் போட்டு வதக்கி,கடைசியாக தேங்காய்த்துறுவலை சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டி எடுக்கவும்.

*ஆறியதும் மிக்ஸியில் உப்பு சேர்த்து தன்ணீர் விடாமல் அரைக்கவும்.

*பின் தாளிக்க குடுத்துள்ள பொருட்களைப் போட்டு தாளித்து சட்னியில் கொட்டவும்.

பி.கு:புளிப்பு இன்னும் வேண்டுமானால் தக்காளியை அதிகமாக போடலாம்.

Thursday, 28 May 2009 | By: Menaga Sathia

தக்காளி தித்திப்பு

தே.பொருட்கள்:

பெங்களூர் தக்காளி - 1/2 கிலோ
சர்க்கரை - 1 1/4 கப்
ஏலக்காய் - 4
முந்திரி,திராட்சை - விருப்பத்துகேற்ப
உப்பு - 1 சிட்டிகை
நெய் - 2 டேபிள்ஸ்பூன்
செய்முறை:

*தக்காளியை கொதிக்கும் நீரில் 10நிமிடம் போட்டு வைக்கவும்.ஏலக்காயை பொடிக்கவும்.

*பின் அதன் தோலை எடுத்து மிக்ஸியில் அரைக்கவும்.

*கடாயில் 1 டேபிள்ஸ்பூன் நெய்விட்டு முந்திரி,திராட்சையை வறுத்து தனியாக வைக்கவும்.அதே கடாயில் அரைத்த தக்காளியை போட்டு கிளறி விடவும்.

*தீயை சிம்மில் வைக்கவும்,கொதிக்கும் போது மேலே படும்.

*தக்காளி நன்கு வெந்து சுருண்டி வரும் போது உப்பு+சக்கரையை போடவும்.

*சக்கரை கரைந்து நன்கு சுண்டி வரும் சமயத்தில் ஏலக்காய்,வருத்த முந்திரி,திராட்சை மீதமுள்ள நெய் சேர்த்து கிளறி இறக்கவும்.

*சுவையான தக்காளி இனிப்பு ரெடி.

Wednesday, 27 May 2009 | By: Menaga Sathia

மீன் குழம்பு - 2


என் கணவர் எனக்கு வைத்துக் குடுத்த மீன் குழம்பு.அவர் செய்யும் போது ஒரமா ஒரு சேர்ல உட்கார்ந்துக்கிட்டு வேடிக்கைப் பார்த்தேன் எப்படி செய்தார்ன்னு சொல்றேன் கேளுங்க.குழம்பு கொதிக்கும் போது வாசனை நல்லா கமகமன்னு இருந்தது.நல்லா சாப்பிட்டேன்.ரொம்ப ஈஸிதான் நீங்களும் செய்து பாருங்க.

தே.பொருட்கள்:

நாக்கு மீன் - 8 துண்டுகள்
புளி - 1 பெரிய எலுமிச்சையளவு
வெங்காயம் - 1
தக்காளி - 2
பூண்டுப்பல் - 5
கறிவேப்பில்லை - சிறிது
கலந்த மிளகாய்த்தூள் - 1 1/2 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
பச்சை மிளகாய் - 2
வடகம் - 1 டேபிள்ஸ்பூன்

செய்முறை:

*வெங்காயம்+பூண்டு நீளவாக்கில் அரியவும்,பச்சை மிளகாயை கீறவும்.

*புளியை ஒரு கோப்பையளவு கரைத்துக் கொள்ளவும்.அதில் உப்பு+வெங்காயம்+பச்சை மிளகாய்+கறிவேப்பில்லை+தக்காளி+மிளகாய்த்தூள்+பூண்டு அனைத்தையும் போட்டு கரைத்துக் கொள்ளவும்.

*பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி வடகத்தைப் போட்டு தாளித்து புளிகரைசலை ஊற்றி கொதிக்கவிடவும்.

*நன்கு கொதித்ததும் மீனைப் போடவும்.

*15 நிமிடம் கழித்து மறுபடியும் கறிவேப்பில்லை போட்டு இறக்கவும்.

பி.கு:
விருப்பட்டால் கத்திரிக்காய்,மாங்காய் சேர்க்கலாம்.இப்படி செய்ததில் இதுவும் வித்தியாசமான சுவையில் இருந்தது.
Monday, 25 May 2009 | By: Menaga Sathia

தவலை அடை/Thavala Adai

தே.பொருட்கள்:

வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
சோம்பு - 11/2 டீஸ்பூன்
தேங்காய்ப் பல் - 1/4 கப்

ஊறவைக்க:

அரிசி - 1 1/2 கப்
கடலைப் பருப்பு - 3/4 கப்
காய்ந்த மிளகாய் -3

தாளிக்க:

கறிவேப்பில்லை -சிறிது
கடுகு - 1டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவையானளவு

செய்முறை:

*ஊறவைக்க குடுத்துள்ள பொருட்களை 3/4 மணிநேரம் ஊறவைத்து சோம்பு+உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.

*வெங்காயம்+பச்சை மிளகாயை பொடியாக அரியவும்.

*வாணலில் எண்ணெய் ஊற்றி தாளிக்க குடுத்துள்ள பொருட்களைப் போட்டு தாளித்து வெங்காயம்+பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி,அரைத்த மாவில் தேங்காய்ப் பல் சேர்த்து கொட்டி கலக்கவும்.

*கடாயில் எண்ணெய் நிறைய ஊற்றி மாவை அடையாக ஊற்றவும்.ரொம்ப மெல்லியதாக ஊற்றக்கூடாது.

*வெந்ததும் திருப்பி போட்டு இன்னும் நிறைய எண்ணெய் ஊற்றி சுற்றெடுக்கவும்.

*அப்படியேவும் இந்த அடையை சாப்பிடலாம் இல்லையென்றால் தேங்காய் சட்னியுடன் விரும்பினால் சாப்பிடலாம்.

பி.கு:இந்த மாவை அரைத்தவுடன் சுடவும்,புளித்துவிட்டால் நன்றாக இருக்காது.







Thursday, 21 May 2009 | By: Menaga Sathia

திடீர் ரசம்



தே.பொருட்கள்:

புளி - 1 எலுமிச்சைபழளவு
தக்காளி - 1
உப்பு + எண்ணெய்= தேவைக்கு
துவரம்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1 சிட்டிகை
கொத்தமல்லித்தழை - சிறிது


ரசப்பொடிக்கு:

தனியா - 2டீஸ்பூன்
துவரம்பருப்பு - 1 டீஸ்பூன்
மிளகு - 11/2 டீஸ்பூன்
சீரகம் - 1/2டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2

தாளிக்க:
கடுகு - 1/2 டீஸ்பூன்
பெருங்காயம் - வாசனைக்கு
கறிவேப்பில்லை - சிறிது

செய்முறை:

*ரசப்பொடிக்கு குடுத்துள்ளவைகளை வறுக்காமல் பொடிக்கவும்.தக்காளியை பொடியாக நறுக்கவும்.


*புளியை 2 கப் நீர்விட்டு கரைத்துக் கொள்ளவும்.அதில் உப்பு+மஞ்சள்தூள் சேர்க்கவும்.


*பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி தாளிக்க குடுத்துள்ள பொருட்களைப் போட்டு தாளித்து தக்காளியை போட்டு நன்கு மசிக்க வதக்கவும்.


*பின் புளிகரைசலை ஊற்றி கொதிக்கவிடவும்.


*அதில் 1 டேபிள்ஸ்பூன் துவரம்பருப்பை அப்படியே போடவும்.


*நன்கு கொதித்ததும் ரசப் பொடியைப் போட்டு கொதிக்கவிட்டு 10நிமிடம் கழித்து கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.


*இந்த ரசம் மிக அருமையாக வித்தியாசமான சுவையில் இருக்கும்.

Wednesday, 20 May 2009 | By: Menaga Sathia

நண்டு குருமா

தே.பொருட்கள்:

நண்டு - 3/4 கிலோ
வெங்காயம் - 1 பெரியது
தக்காளி - 1 பெரியது
இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்
கத்திரிக்காய் - 4
தனியாதூள் - 1 டேபிள்ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
தேங்காய்ப்பால் - 1 சிறிய டின்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
சோம்பு - 1டீஸ்பூன்
தாளிக்க:
வடகம் - 1 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பில்லை - சிறிது

செய்முறை:

*நண்டை சுத்தம் செய்து ஒரு கட்டையால் லேசாக தட்டவும்.பின் நன்கு நீரில் அலசி வைக்கவும்.அப்போழுது தான் மசாலா நண்டில் கலந்து நல்லாயிருக்கும்.

*வெங்காயம்+தக்காளி+கத்திரிக்காய் நீளவாக்கில் நறுக்கவும்.

*பாத்திரத்தில் எண்ணெய் விட்டு சோம்பு போடவும்,பொரிந்ததும் வெங்கயம்+தக்காளி+இஞ்சி பூண்டு விழுது ஒன்றன் பின் ஒன்றாக போட்டு நன்கு மசிக்க வதக்கவும்.

*வதங்கியதும் அனைத்து தூள்வகைகளை போட்டு வதக்கவும்.

*பச்சை வாசனை போனதும் கத்திரிக்காயை போட்டு வதக்கி தேங்காய்ப்பாலை ஊற்றவும்.தேவையானளவு உப்பு சேர்க்கவும்.

*கொதித்தபின் நண்டை போடவும்.

*கிரேவி நன்கு கொதித்து கெட்டியானதும் இறக்கவும்.

*வேறொரு கடாயில் தாளிக்க குடுத்துள்ள பொருட்களைப் போட்டு தாளித்து நண்டு குருமாவில் கொட்டவும்.

Tuesday, 19 May 2009 | By: Menaga Sathia

சிக்கன் பாஸ்தா

தே.பொருட்கள்:

பாஸ்தா - 2 கப்
வெங்காயம் - 1
தக்காளி - 1
முட்டை - 1
போன்லெஸ் சிக்கன் - 1/4கிலோ
மிளகுத்தூள் - 2 டீஸ்பூன்
உப்பு -தேவைக்கு
பட்டர் - 3 டேபிள்ஸ்பூன்

செய்முறை:

*சிக்கன்+வெங்காயம்+தக்காளி இவைகளை பொடியாக கட் செய்யவும்.

* ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொதிக்க வைத்து பாஸ்தாவை போட்டு சிறிது உப்பு+எண்ணெய் விட்டு 10 நிமிடம் வேகவிடவும்.

*வெந்ததும் வடிகட்டி குளிர்ந்தநீரில் அலசி வைக்கவும்.

*கடாயில் பட்டர் போட்டு உருகியதும் வெங்காயம்+தக்காளியை நன்கு மசிக்க வதக்கி சிக்கனை போட்டு குறைந்த தீயில் தண்ணீர் விடமால் வதக்கவும்.

*சிக்கன் வெந்ததும் மிளகுத்தூள் சேர்த்து லேசா வதக்கவியபின் பாஸ்தாவை போட்டு கிளறவும்.தேவையானால் உப்பு சேர்க்கவும்.

*பின் முட்டையை ஊற்றி நன்கு கிளறி வெந்ததும் இறக்கவும்.

*இப்போழுது சுவையான பாஸ்தா ரெடி.
Monday, 18 May 2009 | By: Menaga Sathia

கத்திரிக்காய் இட்லி சாம்பார்/Brinjal Idli Sambhar

தே.பொருட்கள்:

மைசூர் பருப்பு - 1/2 கப்
கத்திரிக்காய் - 6
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
சின்ன வெங்காயம் - 8
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 1
பூண்டுபல் - 5
கொத்தமல்லித்தழை - சிறிது
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:

கடுகு+உளுத்தம்பருப்பு = 1 டீஸ்பூன்
பெருங்காயம் - வாசைக்கு
காய்ந்த மிளகாய் - 2
சீரகம் - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பில்லை - சிறிது

செய்முறை:

*பருப்பை கழுவி 20 நிமிடம் ஊறவைக்கவும்.

*குக்கரில் பருப்பு+அரிந்த வெங்காயம்+தக்காளி+பச்சை மிளகாய்+பூண்டு+மஞ்சள்தூள்+கத்திரிக்காய்+1 டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து 5 விசில் வரும் வரை வேகவிடவும்.

*வெந்ததும் தாளிக்க குடுத்துள்ள பொருட்களை போட்டு தாளிக்கவும்.

*பின் உப்பு+கொத்தமல்லித்தழை தூவி இறக்கி பரிமாறவும்.

பி.கு:
1 . இட்லி,தோசை,சப்பாத்தி,பூரிக்கு பரிமாறலாம்.
2 . சாம்பார் தண்ணியாக இருந்தால் தோசைமாவோ 1/2 குழிக்கரண்டி அல்லது அரிசிமாவு 1டேபிள்ஸ்பூன் கலந்து கொதிக்கவிட்டால் திக்காக இருக்கும்.
3 . சாப்பிடும் போது சாம்பாரில் 1 ஸ்பூன் நெய்விட்டு கலந்து சாப்பிட்டால் ரொம்ப சூப்பரா இருக்கும்.நெய்யில் தாளிப்பதை விடசாப்பிடும் போது கலந்து சாப்பிட்டால் வாசனை தூக்கலா இருக்கும்.
Friday, 15 May 2009 | By: Menaga Sathia

மீன் அசாது

தே.பொருட்கள்:

மீன் துண்டுகள் - 12
வெங்காயம் - 1 1/2
தக்காளி - 1 பெரியது
தனியாத்தூள் - 1 டேபிள்ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 3 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
தேங்காய்ப்பால் - 400 மி.லி டின்
மஞ்சள்தூள் - 1/4டீஸ்பூன்
பூண்டுப்பல் - 6
சீரகம் - 1 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பில்லை - சிறிது
எலுமிச்சைசாறு - 1டேபிள்ஸ்பூன்
பிரிஞ்சி இலை - 3
செய்முறை:

*மீனை சுத்தம் செய்து அதில் 1 1/2 டேபிள்ஸ்பூன் மிளகாய்த்தூள்+உப்பு சேர்த்து பிசைந்து 15 நிமிடம் ஊறவிடவும்.

*வெங்காயம்+தக்காளி நறுக்கவும்.

*நறுக்கிய வெங்காயத்திலிருந்து சிறிது வெங்காயம்+பூண்டு+சீரகம்+கடுகு+கறிவேப்பில்லை நசுக்கிக் கொள்ளவும்.

*பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி மீனை பொரிக்கவும்,ரொம்ப முறுகலாக பொரிக்ககூடாது.


*அதே எண்ணெயில் பிரிஞ்சி இலை போட்டு தாளித்து வெங்காயம்+நசுக்கிய வெங்காய,சீரகம்+தக்காளி இவைகளைப் போட்டு நன்கு வதக்கவும்.

*பின் எல்லா தூள் வைகளையும் சேர்த்து நன்கு வதங்கியப்பின் உப்பு+தேங்காய்ப்பால் சேர்த்து கொதிக்கவிடவும்.

*குழம்பு கொதித்ததும் பொரித்த மீன்களைப் போட்டு 10 நிமிடம் கொதித்த பின் எலுமிச்சைசாறு சேர்த்து 2 நிமிடம் கழித்து இறக்கவும்.






Thursday, 14 May 2009 | By: Menaga Sathia

சுக்கு குழம்பு Dry Ginger Kuzhambu

தே.பொருட்கள்:

சுக்கு - 1 அங்குலத்துண்டு
சின்ன வெங்காயம் -15
தக்காளி - 1
கறிவேப்பில்லை -சிறிது
புளி - 1 எலுமிச்சை பழ அளவு
தேங்காய்த்துறுவல் - 1/4 கப்
கலந்த மிளகாய்த்தூள் - 11/2 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
வடகம் - 1 டேபிள்ஸ்பூன்
பூண்டுபல் - 10
செய்முறை:

*வெங்காயம்+பூண்டு+ அனைத்தையும் பொடியாக கட் செய்யவும்.சுக்கை நசுக்கிக் கொள்ளவும்.

*புளியை ஒரு கோப்பையளவு கரைத்து உப்பு+தக்காளி+மிளகாய்த்தூள் கலந்து வைக்கவும்.

*ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சுக்கை வறுத்து தனியாக வைக்கவும்.

*வறுத்த சுக்கு+தேங்காய் சேர்த்து மைய அரைக்கவும்.

*பின் வடகம்+கறிவேப்பில்லை போட்டு தாளித்து வெங்காயம்+பூண்டு சேர்த்து வதக்கவும்.

*வதங்கிய பின் புளிக்கரைசலை ஊற்றி கொதிக்கவிடவும்.

*நன்கு கொதித்த பிறகு தேங்காய் விழுது சேர்த்து 5 நிமிடம் கழித்து இறக்கவும்.

பி.கு:
இந்த குழம்பு மறுநாள் சாப்பிட சூப்பரா இருக்கும்.
Wednesday, 13 May 2009 | By: Menaga Sathia

ஜவ்வரிசி கஞ்சி வத்தல் / Sago Kanchi Vathal

தே.பொருட்கள்:

ஜவ்வரிசி - 4 கப்
உப்பு - தேவைக்கு

அரைக்க:

சீரகம் - 3 டேபிள்ஸ்பூன்
பெருங்காயம் - சிறிது
பச்சை மிளகாய் - 7

செய்முறை:

*ஜவ்வரிசியை முதல்நாள் இரவே நீரில் ஊறவைக்கவும்.

*ஒரு கப்=4 கப் தண்ணீர் அளவு,ஒரு பாத்திரத்தில் 16 கப் தன்ணீர் வைத்து கொதிக்கவிடவும்.

*ஜவ்வரிசியை நன்கு கையால் பிசைந்து தண்ணீர் விட்டு கொஞ்சம் கரைத்துக் கொள்ளவும்.

*கொதித்ததும் அரைத்த விழுது+உப்பு+ஜவ்வரிசி சேர்த்து நன்கு துழவி விடவும்.மாவு நன்கு வெந்ததும் இறக்கவும்.

*வெயிலில் ஒரு காட்டன் துணியில் மாவை ஒரு ஸ்பூனால் கொஞ்ச கொஞ்சமா ஊற்றி எடுக்கவும்.

*மாலையில் நன்கு காய்ந்திருக்கும் அதை துணியின் மறுபக்கத்தில் தண்ணீர் தெளித்து வத்தலை எடுத்து காற்றோட்டமாக வைக்கவும்.

*பின் மறுநாள் நன்கு வெயிலில் காயவைத்து எடுக்கவும்.
*தேவையான போது எண்ணெயில் பொரித்து சாப்பிடலாம்.

பி.கு:

1. தண்ணிர் போதுமானதா இல்லையெனில் சிறிது வெந்நீர் சேர்க்கவும்.குளிர்ந்த நீர் சேர்க்ககூடாது,சேர்த்தால் வத்தல் விண்டுபோய்விடும்.
2. மாவு வெந்ததா எனபார்க்க கையில் தண்ணிர் தோட்டு மாவு தொட்டுப் பார்த்தால் கையில் ஒட்டக்கூடாது.
3. வத்தலில் எப்போதும் உப்பு குறைவா போடவும்.வாயில் வைத்து பார்க்கும்போது போதுமானதா இருக்காதமாதிரி இருக்கும்,ஆனால் காய்ந்த பின் எண்ணையில் பொரித்து சாப்பிட்டால் சரியா இருக்கும்.
4. பாதி தண்ணீர்+ பாதி தக்காளி சாறு சேர்த்து செய்தால் தக்காளி ஜவ்வரிசி வத்தலாகும். இன்னும் நல்லாயிருக்கும்.
Monday, 11 May 2009 | By: Menaga Sathia

மீன் பகோடா

தே.பொருட்கள்:

தூனா மீன் - 1 டின்
பொட்டுக்கடலை மாவு - 1 கப்
சோளமாவு - 1 டேபிள்ஸ்பூன்
அரிசிமாவு - 1 டேபிள்ஸ்பூன்
வரமிளகாய்த்தூள் - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு -தேவைக்கு
கொத்தமல்லித்தழை - சிறிது
வெங்காயம் -1
முட்டை - 1
பச்சை மிளகாய் - 2
சோம்புத்தூள் - 1டீஸ்பூன்
எண்ணெய் -பொரிக்க
செய்முறை:

*வெங்காயம்+பச்சை மிளகாய்+கொத்தமல்லித்தழை அனைத்தையும் பொடியாக நறுக்கவும்.

*மீனில் இருக்கும் தண்ணீயை பிழிந்துக் கொள்ளவும்.

*ஒரு பாத்திரத்தில் மீன்+உப்பு+மாவு வகைகள்+மிளகாய்த்தூள்+முட்டை+சோம்புத்தூள்+நறுக்கிய வெங்காயம்+கொத்தமல்லித்தழை+பச்சைமிளகாய் அனைத்தையும் ஒன்றாக பகோடா பதத்திற்க்கு பிசையவும்

*கையில் எடுத்துப் பார்த்தால் கொஞ்சம் பொலபொலனு இருக்கனும்.

*கடாயில் எண்ணெயை காயவைத்து மாவை பகோடாவாக பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.


Saturday, 9 May 2009 | By: Menaga Sathia

கோஸ் வெங்காயத்தாள் பொரியல்

தே.பொருட்கள்:

கோஸ் - 1/4 கிலோ
வெங்காயத்தாள் - 1 கட்டு
பச்சை மிளகாய் - 2
பாசிப்பாருப்பு - 1 கைப்பிடி
உப்பு+எண்ணெய் =தேவைக்கு
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
தேங்காய்த்துருவல் - 1/4 கப்
கறிவேப்பிலை - சிறிது
கடுகு - 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1டீஸ்பூன்
செய்முறை:

*கோஸ்+வெங்காயத்தாள்+பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு தாளிப்பு பொருட்களைப் போட்டு தாளித்து நறுக்கிய காய்களைப் போட்டு உப்பு+மஞ்சள்தூள்+பாசிப்பருப்பு போட்டு காய் வேகுமளவு நீர்விட்டு வேக வைக்கவும்.

*வெந்ததும் தேங்காய்த்துறுவல் சேர்த்து இறக்கவும்.

பி.கு:
இதே மாதிரி வெங்காயத்தாளை கேரட் பொரியலிலும் சேர்த்து செய்யலாம்.
Wednesday, 6 May 2009 | By: Menaga Sathia

கருவாட்டுக் குழம்பு / Dry Fish khuzhampu


தே.பொருட்கள்:

கருவாடு - சிறிது
மொச்சைக் கொட்டை - 1/2 கப்
முருங்கைகாய் - 1
வாழைக்காய் - 1
புளி - 1 எலுமிச்சை பழ அளவு
சீரகம் - 1 டீஸ்பூன்
வெங்காயம் - 1 சிறியது
தக்காளி - 1
கறிவேப்பில்லை - சிறிது
வடகம் - 1 டேபிள்ஸ்பூன்
கலந்த மிளகாய்த்தூள் - 11/2 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
செய்முறை:

*மொச்சையை முதல்நாள் இரவே வெறும் கடாயில் லேசாக வறுத்து ஊறவைக்கவும்.

*மறுநாள் மொச்சையை சிறிது உப்பு சேர்த்து குக்கரில் 3 விசில் வரும்வரை வேகவைக்கவும்.

*பருப்பை தனியாக வைத்து,அதே நீரில் புளியை ஊறவைத்து 1 கோப்பையளவு கரைத்து உப்பு+தக்காளி+மிளகாய்த்தூள் கலந்து வைக்கவும்.

*கருவாட்டை சுத்தம் செய்யவும்.வெங்காயம்+சீரகம்+கறிவேப்பிலையை நசுக்கவும்.காய்களை பெரிய துண்டுகளாக நறுக்கவும்.

*பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி வடகத்தை போட்டு தாளிக்கவும்.
*பின் நசுக்கிய வெங்காயத்தைப் போட்டு வதக்கி புளி கரைசலை ஊற்றி கொதிக்கவிடவும்.

*கொதிக்கும் போது காய்+கருவாடு+மொச்சை போட்டு இன்னும் நன்கு கொதிக்கவிட்டு,காய் வெந்ததும் இறக்கவும்.

பி.கு:விரும்பினால் குழம்பு கொதிக்கும் போது பல்லாக நறுக்கிய தேங்காயை குழம்பு கொதிக்கும் போடலாம்.இன்னும் சுவையா இருக்கும்.
Monday, 4 May 2009 | By: Menaga Sathia

இறால் உருண்டைக் குழம்பு /Eral(Prawn) Urundai Kuzhambu


தே.பொருட்கள்:

உருண்டைக்கு:

குட்டி இறால் - 100 கிராம்
பொட்டுக்கட்லை மாவு - 1 கப்
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
சோம்புத்தூள் - 1 டீஸ்பூன்
முட்டை - 2
தேங்காய் - சிறிது
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
எண்ணெய் - பொரிக்க


க்ரேவிக்கு:

வெங்காயம் - 1
தக்காளி - 1
இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்
தனியாத்தூள் - 1 டேபிள்ஸ்பூன்
வரமிளகாய்த்தூள் - 1டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
தேங்காய்ப்பால் - 1 சிறிய டின்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
எலுமிச்சைசாறு - 1 டேபிள்ஸ்பூன்

தாளிக்க:

பட்டை - 1 துண்டு
கிராம்பு - 2
பிரிஞ்சி இலை - 2
சோம்பு - 1டீஸ்பூன்

செய்முறை:


* இறாலை சிறிது மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும்.

*வெங்காயம்,பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி,வதக்கி ஆறவிடவும்.

* இறால் மற்றும் தேங்காயை அரைக்கவும்.


*அரைத்த இறால்,தேங்காய் விழுது+பொட்டுக்கடலைமாவு+உப்பு+சோம்புத்தூள்+முட்டை+வதக்கிய வெங்காயம்,பச்சை மிளகாய் அனைத்தையும் ஒன்றாக கெட்டியாக கலக்கவும்.

*மாவு தளர்த்தியாக இருந்தால் மேலும் சிறிது பொட்டுக்கடலைமாவு சேர்க்கலாம்.

*பிசைந்தவைகளை உருண்டைகளாக எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.



*க்ரேவிக்கு வெங்காயத்தை நீளவாக்கிலும்,தக்காளியை பொடியாகவும் நறுக்கவும்.

*பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி தாளிக்க குடுத்துள்ள பொருட்களைப் போட்டு தாளிக்கவும்.


*வெங்காயம்+தக்காளி+இஞ்சி பூண்டு விழுது+தூள் வகைகள் அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக வதக்கவும்.

*வதங்கியதும் தேங்காய்ப்பால்,உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும்.


*நன்கு கொதித்ததும் உருண்டைகளைப் போட்டு 5 நிமிடம் கொதிக்கவிட்டு,எலுமிச்சை சாறு சேர்த்து 2 ந்மிடம் கொதித்தபின் இறக்கவும்.






Saturday, 2 May 2009 | By: Menaga Sathia

பீன்ஸ் பொரியல்


தே.பொருட்கள்:

பீன்ஸ் - 1/4 கிலோ
தேங்காய்த் துருவல் - 1/4 கப்
பாசிப்பருப்பு - 1 கைப்பிடி
வெங்காயம் - 1 சிறியது
பச்சை மிளகாய் - 3
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க:

கடுகு+உளுத்தப்பருப்பு - 1டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை:

*பீன்ஸ்+வெங்காயம் பொடியாக நறுக்கவும்.பச்சை மிளகாயை கீறவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க குடுத்துள்ள பொருட்களைப் போட்டு தாளித்து வெங்காயம்,பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

*பின் பீன்ஸ்+ உப்பு+11/2 கப் தண்ணீர்+பாசிப்பருப்பு செர்த்து வேகவிடவும்.

*காய் வெந்ததும் தேங்காய் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.

போண்டா


தே.பொருட்கள்:

முழு வெ.உளுத்தம் பருப்பு - 1 கப்
மிளகு - 1 டீஸ்பூன்
உப்பு - சுவைக்கு
எண்ணெய் - பொரிக்க
தேங்காய்ப் பல் - 1/4 கப்

செய்முறை:

*உளுந்தை 1/2 மணிநேரம் ஊறவைத்து,லேசாக ஐஸ்வாட்டர் தெளித்து பொங்க பொங்க அரைக்கவும்.

*அதில் உப்பு+மிளகு+தேங்காய்ப்பல் செர்த்து நன்கு கலக்கவும்.

* கடாயில் எண்ணெய் விட்டு மாவை
உருண்டைகளாகப் போட்டு பொன்னிறமாக பொரிக்கவும்.

*சட்னி,சாம்பாருடன் சூடாக பரிமாறவும்.
01 09 10