Wednesday 20 May 2009 | By: Menaga Sathia

நண்டு குருமா

தே.பொருட்கள்:

நண்டு - 3/4 கிலோ
வெங்காயம் - 1 பெரியது
தக்காளி - 1 பெரியது
இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்
கத்திரிக்காய் - 4
தனியாதூள் - 1 டேபிள்ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
தேங்காய்ப்பால் - 1 சிறிய டின்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
சோம்பு - 1டீஸ்பூன்
தாளிக்க:
வடகம் - 1 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பில்லை - சிறிது

செய்முறை:

*நண்டை சுத்தம் செய்து ஒரு கட்டையால் லேசாக தட்டவும்.பின் நன்கு நீரில் அலசி வைக்கவும்.அப்போழுது தான் மசாலா நண்டில் கலந்து நல்லாயிருக்கும்.

*வெங்காயம்+தக்காளி+கத்திரிக்காய் நீளவாக்கில் நறுக்கவும்.

*பாத்திரத்தில் எண்ணெய் விட்டு சோம்பு போடவும்,பொரிந்ததும் வெங்கயம்+தக்காளி+இஞ்சி பூண்டு விழுது ஒன்றன் பின் ஒன்றாக போட்டு நன்கு மசிக்க வதக்கவும்.

*வதங்கியதும் அனைத்து தூள்வகைகளை போட்டு வதக்கவும்.

*பச்சை வாசனை போனதும் கத்திரிக்காயை போட்டு வதக்கி தேங்காய்ப்பாலை ஊற்றவும்.தேவையானளவு உப்பு சேர்க்கவும்.

*கொதித்தபின் நண்டை போடவும்.

*கிரேவி நன்கு கொதித்து கெட்டியானதும் இறக்கவும்.

*வேறொரு கடாயில் தாளிக்க குடுத்துள்ள பொருட்களைப் போட்டு தாளித்து நண்டு குருமாவில் கொட்டவும்.

7 பேர் ருசி பார்த்தவர்கள்:

Malini's Signature said...

மேனகா இதுவரை நண்டு சாப்பிட்டது இல்லை ...ஆனா உங்க போட்டோவை பாத்ததும் சாப்பிடனும் போல இருக்குப்பா... ஒரு பார்சல் Plese...:-)

GEETHA ACHAL said...

பார்க்வே ஆசையா இருக்கு...

Unknown said...

நண்டு எனக்கு பிடித்த ஐயிட்டம். நல்ல செய்திருக்கிங்க/ பார்க்கும் பொழுதே நாவில் நீர் ஊறுகிறது

Menaga Sathia said...

வாங்க ஹர்ஷினி உங்களுக்கு இல்லாததா,இங்க வாங்க உங்களுக்கு ப்ரெஷ்ஷாகவே செய்து தரேன்.தங்கள் கருத்துக்கு நன்றி ஹர்ஷினி அம்மா!!

Menaga Sathia said...

தங்கள் கருத்துக்கு நன்றி கீதா!!

Menaga Sathia said...

நண்டு எனக்கும் ரொம்ப பிடிக்கும்பா,அதுவும் ஆத்து நண்டு டேஸ்ட் சொல்லவே தேவையில்லை வாசனை சும்மா ஊரையே தூக்கும்.தங்கள் கருத்துக்கு நன்றி பாயிசா!!

A O L - ama nly said...

தொடர்ச்சியான படைப்புகளுக்கும் வழங்கியமைக்கும் நன்றிகள்

01 09 10