Wednesday 29 June 2011 | By: Menaga Sathia

எங்க ஊரு...அழகான ஊரு.. Pondicherry Spl!!


 ஸாதிகா அக்காவுக்கு மிக்க ந‌ன்றி!!

பாண்டிச்சேரி இதாங்க என் சொந்த ஊர்.2006 லிருந்து புதுச்சேரின்னு மாத்திட்டாங்க.

பிறந்து,வளர்ந்த ஊர் என்பதால் எங்க ஊரை எனக்கு ரொம்ப பிடிக்கும்.இப்பவும் பாண்டிச்சேரியை தாண்டி வேறு ஊருக்கு போனாலும் சொர்க்கமே என்றாலும் எங்க ஊர் போல வருமான்னு பாடல் தான் ஞாபகம் வரும்.

கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த ஊர் என்பதில் மிக பெருமை...
அப்புறம் இங்குள்ள ஒரே வசதி அனைத்து தெருக்களும் பீச் ரோட்டில் முடியும்.
ப்ரெஞ்ச் ஆதிக்கத்தின் கீழ் இருந்த மாநிலம் இது.அதனால் இன்னுக்கும் சில தெருக்களில் ப்ரெஞ்ச் பெயர்கள்தான் தெரு பெயராக இருக்கும்.கட்டிடங்களும் ப்ரெஞ்ச் முறைப்படி உயரமாகவே இருக்கும்.

எனக்கு தெரிஞ்சு இன்னிக்கு வரை எங்க ஊரில் தண்ணீர் பஞ்சமே வந்ததில்லைன்னு சொல்லுவாங்க அதற்க்கு காரணம் இங்கு சித்தர்கள் சமாதி அதிகம்.கடற்கரை பக்கத்திலயே இருப்பதால் இங்கு கடல் உணவுகள் தாராளமா கிடைக்கும்.மொழி
ப்ரெஞ்ச்,தமிழ்,மலையாளம்,தெலுங்கு மொழிகள் அதிகம் பேசப்படுகிறது.பிரான்சில் நடத்தப்படும் பாடத்திட்டங்களைப்போலவே இங்கு ப்ரெஞ்ச் பள்ளிக்கூடங்களும் இருக்கு.

பார்க்க‌வேண்டிய‌ இட‌ங்கள்

புதுச்சேரி க‌ட‌ற்க‌ரை,ஆரோவில்,அர‌விந்த‌ர் ஆசிர‌ம‌ம் ( இங்கு போனாலே ம‌ன‌ம் தானாக‌வே அமைதியாகி விடும்.ரொம்ப  பிடித்த‌ இட‌ம்.ம‌ண‌க்குள‌விநாய‌க‌ர் கோவில் அருகில் இருக்கு),சுண்ணாம்பார் போட் ஹ‌வுஸ்,பார‌தி பார்க்,ரோம‌ன் ரோல‌ண்ட் லைப்ர‌ரி (மிக‌வும் புக‌ழ் பெற்ற‌ நூல‌க‌ம் இது),அருஞ்காட்சிய‌க‌ம்,பொட்ட‌னிக்க‌ல் கார்ட‌ன் (இப்போழுது இந்த‌ இட‌ம் ச‌ரியாக‌ ப‌ராம‌ரிக்க‌ப‌ட‌வில்லை.முன்பெல்லாம் இங்கு பிப்ர‌வ‌ரி மாத‌த்தில் ம‌ல‌ர்  க‌ண்காட்சி ஊட்டியிலிருந்து செடிக‌ள் வ‌ர‌வழைக்க‌ப்ப‌ட்டு ந‌ட‌க்கும்),ஆங்கிலோ‌ ப்ரெஞ்ச் டெக்ஸ்டைல்ஸ் மில்ஸ்.

உண‌வ‌க‌ங்கள்

நிறைய வெஜ்,நான் வெஜ் ஹோட்டல்கள் இருந்தாலும் இந்த ஹோட்டல்கள் எப்போழுதும் என் பேவரிட் லிஸ்டில் இருப்பவை...
இந்திய‌ன் காபி ஹ‌வுஸ் ‍‍( எல்லா வ‌கை டிப‌ன் அயிட்ட‌ங்க‌ளும்,பில்ட‌ர் காபியும் சூப்ப‌ரா இருக்கும்.சாம்பார் இட்லி மாதிரி இந்த‌ ஹோட்ட‌லில் பூரி சாம்பார் ரொம்ப‌ பிடிக்கும்) முன்பு நேரு வீதியில் இருந்த‌து.இப்போழுது இட‌த்தை மாற்றிவிட்டார்க‌ள்.

அரிஸ்டோ ஹோட்ட‌ல் நான் வெஜ் ஐயிட்டங்கள் சூப்பரா இருக்கும்.( இங்கு பிரியாணியும்,ப‌ரோட்டா சால்னாவும் ந‌ன்றாக‌ இருக்கும்..)

ஹோட்ட‌ல் ச‌ற்குரு ( 5 ஸ்டார் ஹோட்ட‌ல்) அனைத்தும் ந‌ன்றாக‌ இருக்கும்.மிஷ‌ன் வீதியில் இருக்கும் கிளையில் இட்லி ரொம்ப‌ சூப்ப‌ரா இருக்கும்.ச‌ர்வீஸும் ந‌ல்லா இருக்கும்.)

துணி,ந‌கை க‌டைக‌ள்

ப‌ட்டுதுணிக‌ள் எடுக்க‌ புக‌ழ் பெற்ற‌ ந‌ம்பிக்கையான‌ க‌டை முத்து சில்க் ஹ‌வுஸ்.இத‌ன‌ருகில் தான் ஹோட்ட‌ல் அரிஸ்டோ இருக்கு.

த‌ங்க‌ மாளிகை ந‌கை க‌டை முன்பு ந‌ன்றாக‌ இருந்த‌து.இப்போ த‌ர‌ம் ச‌ரியில்லை.

அடுத்த‌து ஸ்ரீ ல‌ஷ்மி ஜூவ‌ல்ல‌ரி (இந்த‌ க‌டையின் ஒரு கிளை தான் பிரான்சில் இருக்கு)

ஸ்ரீ வ‌ள்ளி விலாஸ் இங்கும் ந‌கையின் த‌ர‌ம் ந‌ன்றாக‌ இருக்கும்.

புகழ்பெற்ற  ஜிப்மர்(JIPMER) மருத்துவமனையும் இங்குதான் இருக்கு...

கோவில்கள்


ஸ்ரீ ம‌ண‌க்குள‌ விநாய‌க‌ர் கோவில் மிக‌வும் புக‌ழ் பெற்ற‌ கோவில் இது.இந்தியாவிலேயே கோபுரம் முழுக்கவே தங்கத்தால் வேயப்பட்ட ஒரே விநாயகர் கோவில் இது. விநாயகர் தலங்களில் பள்ளியறை இருப்பதும் இங்கு மட்டுமே!!
இக்கோவிலின் கருவறைக் கோபுரம் தற்போது பொன்னால் வேயப்பட்டுள்ளது.
தொழில் தொடங்குவோர், புதுக்கணக்கு எழுதுவோர், திருமண பத்திரிக்கை வைத்து வழிபட விரும்புவோர், புது வாகனங்கள் வாங்குவோர் இத்தலத்துக்கு அதிக அளவில் வருகின்றனர். இந்துக்கள் மட்டுமின்றி பிற மதத்தினரும் இங்கு வந்து வழிபடுவது எங்கும் காண முடியாத அற்புதக் காட்சியாகும்.  


மற்றும் காமாஷி அம்ம‌ன்  கோவில்,ப‌ஞ்ச‌வடி ஆஞ்ச‌நேய‌ர் கோவில்,பிர‌திய‌ங்கிராதேவி கோவில் (இங்கு சாமியை த‌ரிச‌ன‌ம் செய்ய‌ அண்ட‌ர்கிர‌வுண்டில் செல்ல‌ வேண்டும், அம்ம‌ன் சிலையும் மிக‌ பிர‌ம்மாண்டமா இருக்கும்),வேத‌புரீஸ்வ‌ர‌ர் கோவில்,சுப்ரமணிய சுவாமி கோவில்,வ‌ர‌த‌ராஜ‌ப் பெருமாள் கோவில்,செங்க‌ழுநீர‌ம்ம‌ன் கோவில் (இங்கு ஆடிமாத‌ம் 5ம் வெள்ளியில் தேர்த்திருவிழாவும்,6ஆம் வெள்ளியில் முத்துப்ப‌ல்லாக்கும் மிக‌ பிர‌ப‌ல‌மான‌ ஒன்று),சுவாமி சித்தான‌ந்த‌ர் கோவில்.

ஜூம்மா ம‌சூதி இதுவும் புக‌ழ் பெற்ற‌ ம‌சூதி.

தேவால‌ய‌ங்க‌ள்


Immaculate Conception Cathedraல்(ச‌ம்பா கோவில் என்று சொல்வாங்க‌.அன்னை தெரேசா பாண்டிச்சேரி ப‌ய‌ண‌த்தின் போது வ‌ந்துள்ளார்.),தூய‌ இருத‌ய‌ ஆண்ட‌வ‌ர் கோவில் (2007ல் தான் இந்த‌ ச‌ர்ச்சில் நூற்றாண்டு கொண்டாட‌ப்ப‌ட்ட‌து)

வில்லிய‌னூர் லூர்து மாதா கோவில் ( பாண்டிச்சேரியிலிருந்து 8 கிலோ மீட்ட‌ர் தொலைவில் இருக்கு.ப்ரான்சிலிருந்து லூர்து மாதா சிலை கொண்டு வ‌ர‌ப்ப‌ட்ட  லூர்து மாதா கோயில் இது).

இன்னும் நிறைய‌ சொல்லிக்கொண்டே போக‌லாம் எங்க‌ ஊரைப்ப‌ற்றி.....
முன்பெல்லாம் சின்ன‌ வ‌ய‌சுல‌ என் சொந்த‌ ஊர் எதுன்னு கேட்கும் போது பாண்டிச்சேரின்னு சொன்னா என்னை ஒரு மாதிரி பார்ப்பாங்க‌,என‌க்கு அப்போ எதுவும் புரிய‌ல‌.போக‌போக‌தான் புரிந்த‌து.இப்போ புரிந்திருக்குமே உங்க‌ளுக்கெல்லாம்......

படங்கள் உதவி - கூகிள்!!

32 பேர் ருசி பார்த்தவர்கள்:

Lifewithspices said...

Menaga.. enna pondy patthi periya write up i too love this place so much.. ashram, vinayagar kovil n many more.. many new info for me too will take a print of this write up for ref..

Padhu Sankar said...

I have been to Auroville and I love that place

ஹுஸைனம்மா said...

அட, நீங்க புதுவையா? நானும் போன வருஷம் ஒரு வாரம் போய்ட்டு வந்தேன். ரொம்ப நல்ல கிளைமேட். பச்சைப் பசேல்தான்.. எனக்குப் பிடிச்ச மாதிரி.

ஆனா, அந்த பொட்டானிகல் கார்டன் - ஆசையா உள்ள போயிட்டு அதிர்ந்துபோய் ஓடி வந்துட்டேன்!! கும்பல் கும்பலா உக்காந்து குடியும் கூத்தும்..சே!! ரொம்ப வருத்தமா இருந்துது.

//சுண்ணாம்பார் போட் ஹ‌வுஸ், ரோம‌ன் ரோல‌ண்ட் லைப்ர‌ரி, அருஞ்காட்சிய‌க‌ம்,ஆங்கிலோ‌ ப்ரெஞ்ச் டெக்ஸ்டைல்ஸ் மில்ஸ்//

இதெல்லாம் பாக்க மிஸ் பண்ணிட்டேன். இன்ஷா அல்லாஹ், அடுத்த விஸிட்டில் பாத்துடலாம்.

சசிகுமார் said...

ஹே நீங்க பாண்டிச்சேரின்னு கண்டுபுடிச்சிட்டேனே

வரதராஜலு .பூ said...

வாவ், நீங்க பாண்டியா? நானும்தான்.

இப்பவும் பாண்டிலதான் இருக்கிங்கிளா?

//இந்திய‌ன் காபி ஹ‌வுஸ்//

என்னோட ஃபேவோரைட்டும் இதான். செவ்வாய் மற்றும் வெள்ளியில் கிடைக்கும் கடப்பா-விற்கும் நான் அடிமை.

//ஹோட்ட‌ல் ச‌ற்குரு //
இப்போ மணக்குள விநாயகர் பக்கத்திலேயும் ஒரு பிராஞ்ச திறந்து இருக்காங்க.

//பொட்டானிக்கல் கார்டன் // - :(

முற்றும் அறிந்த அதிரா said...

ஆ... மேனகா நீங்களும் பாண்டிச்சேரியோ?:). இப்பத்தான் எனக்குத் தெரியும் பாண்டிச்சேரிதான் புதுச்சேரி/ புதுவை என்பதெல்லாம் ஒன்றென்று. நான் நினைத்திருந்தேன், பாண்டிச்சேரியில் உள்ள ஒரு ஊர்தான் புசுச்சேரி என.

சோட் அண்ட் சுவீட்டாகச் சொல்லி முடிச்சிட்டீங்க.

மணக்குழ விநாயகர் கேள்விப்பட்டேன், இன்னும் நல்ல படம் போட்டிருக்கலாம்.

ஆனா எல்லோரும் ஊரைப் பற்றிக் கேட்டா, மாவட்டம் பற்றிச் சொல்லி முடிக்கிறீங்க, நானும் வான்ஸும் மட்டும்தான் ஊர்பற்றி மட்டும் சொன்னோம்....அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)).

பாண்டிச்சேரி என்பது மாவட்டம் தானே? கோவைமாதிரி?

Angel said...
This comment has been removed by the author.
வரதராஜலு .பூ said...

// athira said...
பாண்டிச்சேரி என்பது மாவட்டம் தானே? கோவைமாதிரி?//

இல்லிங்க. இது தனி மாநிலம். யூனியன் டெரிடரி.

Priya Suresh said...

Nama ooru madhri varuma, attagasama irruku,super ponga..

Angel said...

அழகா பாண்டிசேரி பற்றி எழுதி இருக்கீங்க மேனகா .நான் நிறையதரம் அங்கே வந்திருக்கேன் ..திண்டிவனம் போனா கண்டிப்பா அங்கே விசிட் செய்யாமல் வருவதில்லை .அந்த பிஸ்கட் செய்ற இடம் அங்கும் படிக்கும் போது போயிருக்கேன் .எவ்ளோ பேசினாலும் எழுத இடம் போறாது அவளவு இருக்கு .botanical கார்டன் அப்ப அழகா இருந்தது .அடுத்த வருடம் போகணும் கணவர் மகளோடு ஒரு பெரிய ட்ரிப் .அரவிந்தர் ஆஷ்ரம் உண்மையிலேயே அருமையான இடம் .பீச்ல இன்னும் அந்த weeds பாசி மணி விக்கறாங்களா.

Aruna Manikandan said...

happy to read this post
nanum pondicherry than :)

vanathy said...

supera solli irukkereenga.
Now a days very hard to open some blogs and add comments. Your blog is one of them. I really do not know why?

ஆனா எல்லோரும் ஊரைப் பற்றிக் கேட்டா, மாவட்டம் பற்றிச் சொல்லி முடிக்கிறீங்க, நானும் வான்ஸும் மட்டும்தான் ஊர்பற்றி மட்டும் சொன்னோம்....அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)).//
correctta solliteenga athees!!

MANO நாஞ்சில் மனோ said...

பாண்டிச்சேரி சுற்றுலா வரணும் பார்ப்போம்....

Menaga Sathia said...

@வரதராஜலு.பூ

//இப்பவும் பாண்டிலதான் இருக்கிங்கிளா?
// இல்லைங்க,தற்போது பிரான்சில் வசிக்கிறேன்.நீங்களும் நம்மூர்க்கரார் என்பதில் மிக்க மகிழ்ச்சி...

@அதிரா
பாண்டிச்சேரி இது ஒரு தனி மாநிலம்!!

@ஏஞ்சலின்

இப்பவும் பாசிமணிலாம் விற்கிறாங்கப்பா

@அருணா
நீங்களும் நம்ம ஊர்தானா,ரொம்ப சந்தோஷம்.

Mahi said...

நான் UG படிக்கும்போது NCC-கேம்புக்கு பத்துநாள் பாண்டிச்சேரி வந்திருக்கேன் மேனகா.ஆரோவில்-அரவிந்தர் ஆசிரமம் போனோம்,வேறெங்கும் போகலை. பீச்ல காந்திசிலை இருக்கும் என்பது மட்டும் நினைவிருக்கு.

நல்ல பதிவு-நகைக்கடை பத்தியெல்லாம் தெளிவாச் சொல்லிட்டீங்க!:)

//ஆனா எல்லோரும் ஊரைப் பற்றிக் கேட்டா, மாவட்டம் பற்றிச் சொல்லி முடிக்கிறீங்க, நானும் வான்ஸும் மட்டும்தான் ஊர்பற்றி மட்டும் சொன்னோம்....//கர்ர்ர்ர்ர்ர்ர்!

//எல்லோரும்//னு பொதுவா சொல்லிட்டீங்க அதிரா..அதுல நானும் வரதால சொல்லறேன். கோவை மாவட்டமே கொஞ்சம் பெரிய சைஸ் கிராமம்,அதிலே எங்கூர் கடுகு சைஸ் கிராமம். நுட்பமா சொல்லுமளவுக்கு கிணறு-ப.தண்ணி-செம்பு போல இன்ட்ரஸ்டிங் விஷயங்கள் அங்கே இல்லை.ஹிஹி! ;);)


வானதி சொன்னது போல எனக்கும் மேனகா ப்ளாக் ஓபன் ஆக ரொம்ப நேரமாகுது! என்னன்னு தெரியல.

சிநேகிதன் அக்பர் said...

ஆஹா, உங்க ஊரை பற்றி சொல்லும் போதே சுற்றிப்பார்க்கணும்னு ஆசை வருதே.

Good citizen said...

எல்லாம் சரி மேடம்,நம்ம பாண்டிச்சேரியோட முக்கியமான ஒரு அயிட்டத்தை விட்டுவிட்ட உங்களை நான் மிக வன்மையாக கண்டிக்கிறேன்

என்ன புரியுதுங்களா ?,,புரியாம என்ன ?
நீங்கள் உண்மையான புதுவை வாசி என்றால் தண்ணியை மறந்திருப்பீர்களா ?

ஆமாங்க மக்கா,,
The most cheapest place in India for alcohalic drinks

மற்றபடி இங்கெ பல்கலைகழகம் உள்ளது தாகூர் கலைகல்லூரி,பாரதி தாசன் பெண்கள் கல்லூரி,சட்டக் கல்லூரி மற்றும் பொறியியல் கல்லூரி
உள்ளது,மற்றும் புகழ் வாய்ந்த ஜிப்மர்
மருத்துவமனை உள்லது

எம் அப்துல் காதர் said...

உங்க ஊரின் அழகை சுவையாய் விவரித்த விதம் அருமை!! நாங்க எங்க ஊருக்கு போகும் போதும் திரும்ப சென்னை வரும்போதும் உங்க ஊரை கடந்து தான் போகணும். ஆனாலும் ஒரு தடவை ஒரு நாளாவது தங்கி இருந்து நீங்க சொன்ன இடங்களையும் ரசித்து அனுபவிக்கனும்.

எம் அப்துல் காதர் said...

// ஆனா எல்லோரும் ஊரைப் பற்றிக் கேட்டா, மாவட்டம் பற்றிச் சொல்லி முடிக்கிறீங்க, நானும் வான்ஸும் மட்டும்தான் ஊர்பற்றி மட்டும் சொன்னோம்....அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. :)) // correctta solliteenga athees!! //

ஒரு குக்கிராமத்தை ஊர் என்று சொல்லி இப்படி வேற பெருமையா?? தங்க முடியலைடா...!! அவங்க மாவட்டம் என்று சொன்னது பாண்டி சேரிய தான். அது ஒரு யூனியன் டெரிட்டரி என்று சொல்லுவாங்க. (காரைக்கால், டி.ஆர்.பட்டினம் திருநள்ளார் etc இவைகளும் அந்த மாவட்டத்தோடு அடங்கும். இந்த ஊருகளுக்கும் தனி தனி கதைகள் உண்டு. அதை சொன்னா பதிவு பத்தாது) இப்ப என்ன சொல்றீங்க பூஸ், வான்ஸ்!!

எம் அப்துல் காதர் said...

அதுசரி மேனகா ஒரு முக்கியமான விஷயத்தை விட்டுட்டீங்களே! மிகப் பெரிய கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த ஊர் என்று சொல்ல மறந்துட்டீங்களே! இதைப் பற்றி பதிவில் உங்களுக்கு தெரிந்த விஷயங்களை அவசியம் சேர்த்து விடுங்கள். வாழ்த்துகள்!!

Mouthayen Mathivoli said...

நானும் Pondicherry காரன் தான்! கடந்த 16 ஆண்டுகளாக சிங்கப்பூர் இல் [குடியுரிமைப் பெற்று] வசிக்கிறேன். எங்கள் ஊரைப் பற்றி [ஏற்கனவே தெரிந்திருந்தாலும்] படிக்கும் போதே மனம் மகிழ்ச்சி அடைந்தது. நன்றி! முத்தையன் மதிவொளி

சாந்தி மாரியப்பன் said...

எக்கச்சக்க விவரங்கள்..அருமை மேனகா.

//ஜோட்டலில்//

எங்கூர்லல்லாம் ஹோட்டல்ல டிபன் கிடைக்கும் மேனகா :-))))

ஸாதிகா said...

அழைப்பை ஏற்று பதிவிட்ட மேனகாவுக்கு நன்றி.இதோ சில கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் பாண்டிச்சேரிக்கு போக முடியவில்லை.தோழியின் தொடர் அழைப்பை நிறைவெற்ற முடியவில்லை.உங்கள் பதிவைப்பார்த்ததும் கண்டிப்பா சீக்கிரம் போயாகணும் என்ற உந்துதல் வர ஆரம்பித்து விட்டது மேனகா,

Menaga Sathia said...

@moulefrite
//என்ன புரியுதுங்களா ?,,புரியாம என்ன ?
நீங்கள் உண்மையான புதுவை வாசி என்றால் தண்ணியை மறந்திருப்பீர்களா ?

ஆமாங்க மக்கா,,
The most cheapest place in India for alcohalic drinks//

நீங்க முழுமையாக பதிவை படிக்கவில்லைனு நினைக்கிறேன்.அதைதாங்க பதிவின் கடைசியில் மறைமுகமாக குறிப்பிட்டுள்ளேன்.

@எம்.அப்துல் காதர்
//அதுசரி மேனகா ஒரு முக்கியமான விஷயத்தை விட்டுட்டீங்களே! மிகப் பெரிய கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த ஊர் என்று சொல்ல மறந்துட்டீங்களே! இதைப் பற்றி பதிவில் உங்களுக்கு தெரிந்த விஷயங்களை அவசியம் சேர்த்து விடுங்கள். வாழ்த்துகள்!! // மிக்க நன்றிங்க.எழுதும்போது ஏதோ விடுபட்ட மாதிரி இருந்தது.ஞாபகபடுத்திட்டீங்க.குறிப்பில் சேர்த்து விட்டேன்.அவசியம் ஒருமுறை வந்து சுற்றி பாருங்கள்....

@முத்தையன் மதிவொளி
சந்தோஷம்+வருகைக்கு மிக்க நன்றிங்க...

@ அமைதிசாரல்
ஏதோ ஸ்பெல்லிங் மிஸ்டேக் ஆகிடுச்சு,அதுக்காக என்னை இப்படி காமெடி பண்ணிட்டீங்களே....

Shanavi said...

Romba sooper Menaga..

ஸ்ரீகாந்த் said...

வணக்கம் மேனகா
கிட்ட தட்ட 6 வருடங்களாக நானும் ப்ளாக் -ல் இருக்கிறேன்
http://kanthakadavul.blogspot.com/
ஆனாலும் புதுவையை இப்படி அழகாக சொல்ல வந்தது இல்லை ......என்றாலும் உங்களுக்கு என்னுடைய பணிவான நன்றிகள்

நாடோடிப் பையன் said...

Back in the early 90s, I lived in Pondicherry for two years during my masters. It is a lovely town.

I would add the beach resort by the Pondi Engineering Collage and the Ravine within the University campus to your list. Taking a walk inside the ravine is a great experience.

GEETHA ACHAL said...

இன்னும் நிறைய தெரிந்து கொண்டேன்...அம்மாவிடம் சொல்ல வேண்டும்...

சி.பி.செந்தில்குமார் said...

உங்க ஊர்ப்புராணம் அழகு.. நீங்கள் சொல்லாமல் விட்ட சில சங்கதிகள்

1. பாண்டிச்சேரியின் வீடுகள் ஒரே மாடலில் இருக்கும். உதாரணமாக ஒரு வீட்டின் வாசலில் நின்று பார்த்தால் கிட்டத்தட்ட ஒரு கிமீ தூரம் ஒரே வரிசையில் அனைத்து வீடுகளீன் வாசலும் இருக்கும்

2. சாலைகள் மிக அகலம். எல்லா சாலைகளூம் ஒன்றைப்போலவே இருக்கும். புது ஆட்கள் வழி தவறினால் சிரமம்

3. பெண்கள் வாசலில் போடும் கோலங்கள் பிரமாதமாக இருக்கும், கடனுக்குப்போடாமல் பிரம்மாண்டமாய் ரசிச்சுப்போடுவாங்க

Menaga Sathia said...

@சி.பி செந்தில்குமார்

நீங்கள் சொன்னதும் அனைத்தும் சரி..
// புது ஆட்கள் வழி தவறினால் சிரமம்
// உங்க சொந்த அனுபவம் போல இருக்கு ஹா ஹா....

Priya said...

ஹைய்யா, நம்ம ஊரை பற்றி சொல்லியிருக்கீங்கன்னு ஆவலா இரண்டு நாளா வந்து வந்து போறேன்;சரியா பக்கம் ஓபன் ஆகல. கமெண்ட் கூட போஸ்ட் பண்ண முடியாம இருந்தது.

நல்ல விளக்கமாக எழுதி இருக்கிங்க! நம் ஊரில் இருக்கும்போது எனக்கும் கூட எந்த ஊர் போனாலும் எப்போ பாண்டிக்கு திரும்புவோம்ன்னு இருக்கும். அழகான அமைதியான‌ ஊர் நம் ஊர்! இப்போதுதான் தெரிஞ்சிக்கிட்டேன் நீங்களும் புதுவைதான்னு. எந்த பகுதியில் இருந்தீங்கன்னு விருப்பம் இருந்தால் எனக்கு மெயில் பண்ணுங்க மேனகா!

மாய உலகம் said...

பாண்டிச்சேரியில் காட்டுகொப்பத்தில் ஒரு படத்தின் கதை விவாதத்திற்கு வந்து தங்கியிருந்தோம்... கிட்ட தட்ட 4 மாசம் எழுதினோம்..ஆனால் இயக்குனர் பணம் தராமல் ஏமாற்றியது மட்டுமல்ல சூட்டிங் ஆரம்பித்தவுடன் என்னை நீக்கிவிட்டார்... பாண்டிச்சேரி என்றாலே எனக்கு அந்த ஞாபகம் தான் வருகிறது...

01 09 10